சிலப்பதிகாரம் என்றால் சிலப்ப அதிகாரம்!

”என்ன சார், நான் எழுதின புஸ்தகம் வரப் போகுது, வரப் போகுதுன்னு சொல்லிகிட்டிருந்தீங்க வந்துடிச்சு போலிருக்கே?”

“ஆமாம். சிலப்பதிகாரத்தோட நாவல் வடிவம். கிழக்கு பதிப்பகம் வெளியீடு”

 “மச்சம்தான் உங்களுக்கு. முதல் படமே சங்கர், மணிரத்னம், பாலச்சந்தர் படமா அமையற ஹீரோ மாதிரி முதல் புஸ்தகமே கிழக்கு பதிப்பகம் வழியா வருது”

 “பெருமையாத்தான் இருக்கு. மச்சம் மட்டும்தான் என்னுது. மிச்சம் நிறைய இருக்கு”

 “என்னது?”

 “நான் முதல்ல நன்றி சொல்ல வேண்டியது நம்ம நண்பர், பிளாக்கர் என். சொக்கன் அவர்களுக்கு”

 “யாரு, கிழக்கு பதிப்பகத்திலே ஏகப்பட்ட புஸ்தகங்கள் எழுதியிருக்காரே அவரா?”

 “அவரேதான்”

 “ஏன்?”

 “ஏணியில ஏறி உன்னதமான இடத்துக்கு வந்திருக்கிற அவர் ஏணியை எடுத்து கக்கத்தில இடுக்கிகிட்டு ஓடாம என்னையும் கை நீட்டி ஏத்தி விடணும்ன்னு நினைச்சாரே அதுக்கு”

 “ஏற்கனவே சொல்லியிருக்கீங்க”

 “இன்னும் நிறைய தடவை சொல்வேன். அவசரமான உலகம். போட்டி உலகம். அதுல இந்த மாதிரி மனசு இருக்கிறவங்களைப் பாக்கவே முடியாது. அவர்தான் என்னை ஒரு மாமனிதருக்கு அறிமுகம் பண்ணாரு”

 ”யாரு அந்த மாமனிதர்?”

 “கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் திரு.பா.ராகவன்”

 ”அடேங்கப்பா, பா.ரா. வோட எல்லாம் பழக்கமா உங்களுக்கு?”

 “உண்மைல புஸ்தகம் வெளிவந்ததை விட பா.ரா. ஃபிரண்டுன்னு சொல்லிக்கிறதிலேதான் எனக்கு அதிகப் பெருமை. நான் சொன்னதும் என் நண்பர்கள், சொந்தக்காரங்க எல்லாம் பாராவா? பாராவா? ந்னு அதிர்ச்சிப் பைத்தியம் மாதிரி கேட்டுகிட்டே இருந்தாங்க”

 “பெரிய ஆளாச்சே… ரொம்ப ரிசர்வ்டா பழகுவாரோ?”

 “பா.ரா பத்தி சொல்றதுன்னா பாரா பாராவா எழுதலாம். ஒரே ஒரு பாரா சொல்றேன். பார்த்த உடனே பதினஞ்சு வருஷம் பழகின மாதிரி பேசறாரு. பெரிய எழுத்தாளர், தேசிய விருது வாங்கினவர், பத்திரிகைகள்ள எழுதறவர், சீரியல் சினிமாவுக்கெல்லாம் எழுதறவர்ன்னு ஒரு பந்தாவே கிடையாது. நான் எழுதறதை எல்லாம் நுணுக்கமா சுட்டிக்காட்டிப் பாராட்டினார்! அப்பதான் தெரிஞ்சது மணுஷன் இத்தனை நாளா நான் எழுதறதை எல்லாம் படிச்சிருக்கார்ன்னு! இந்த மாதிரி ஒருத்தர் நான் எழுதறதைப் படிக்கிறார்ங்கிறதே எனக்கு சாகித்ய அகாடமி வாங்கின மாதிரி இருந்தது. பாராட்டினதும் ஞானபீட விருது கிடைச்ச மாதிரி இருந்தது.”

 “உங்களை நல்லா கைட் பண்ணாரா?”

 “ஆமாம். ஆனா நறுக்குன்னு சுருக்கமா சொல்றார். அது ரொம்ப எஃபெக்டிவா இருக்கு. சில சமயம் கொஞ்சம் காரமா கூட சொல்வார். ஆனாலும் அது மொளகா பஜ்ஜி காரம் மாதிரி ரசனையா இருக்கும்”

 “உதாரணத்துக்கு?”

 “ஒரு கதாசிரியனோட ஸ்ட்ரெங்த்தே நேரேஷன் பண்ற சாமர்த்தியம்தான். நாம சொல்ல வர்ரதை நேரா சொல்லக் கூடாது. சொல்ற வாக்கியத்தைப் படிக்கிற போது சொல்ல நினைச்சது படிக்கிறவனுக்கு கம்யூனிகேட் ஆகணும்ன்னார்”

 “அப்படி ஒரு வாக்கியம் சொல்லுங்க?”

 “மழை பெய்யறப்போ ரெண்டு ரெண்டு தூறலுக்கு இடையில் பூந்து நனையாமயே வீட்டுக்கு வந்துட முடியும் அந்த ஆளாலே ந்னு சொன்னா உங்களுக்கு என்ன தோணும்?”

 “அந்தாளு ரொம்ப ஒல்லின்னு”

 “அதேதான் அவர் சொன்னது”

 “சூப்பரா சொல்லியிருக்காரே”

 “உனக்கே புரியுதுன்னா எவ்வளவு எஃபெக்டிவா சொல்றாருன்னு பாரு”

 “காலை வார்ரீங்க பாத்தீங்களா? ஏதோ காரம்ன்னீங்களே.. அது என்ன?”

 “விட மாட்டியே… இப்படி டிப்ளமேட்டிக்கா எழுதாத இடங்களைப் பத்தி ஒரு காமெண்ட் சொன்னாரு. அது சிக்ஸ் சிக்மால வர்ர வாய்ஸ் ஆஃப் கஸ்டமர் மாதிரி வெடுக்குன்னு இருந்தது”

 “அதான் என்னன்னு கேட்டேன்”

 “இந்த இடம் தினத்தந்தி தலைப்புச் செய்தி மாதிரி இருக்குன்னார்!”

 “பட்டப்பகலில் விபச்சாரம். அழகி கைது ங்கிற மாதிரியா?”

 “அடப்பாவி… அவரும் இதே உதாரணம்தான் சொன்னாரு”

 “இல்லையா பின்னே, குடிகாரனுக்கு வழி சொல்றவங்க டாஸ்மாக்கைத்தானே லேண்ட் மார்க்கா சொல்வாங்க”

 “ஏய்… இது கொஞ்சம் ஜாஸ்தி”

 “சரி.. சரி விடுங்க… அப்புறம்?”

 “அப்புறம் என்ன, கிழக்கு பத்ரி சார் எவ்வளவு பெரிய ஆள்…. அவர் நேரா வந்து ‘ஹாய்… ஐயாம் பத்ரி’ ந்னு சிம்ப்பிளா அறிமுகப்படுத்திகிட்டு கேஷுவலா ஒரு ஸ்டூல்ல உட்கார்ந்துகிட்டு பேசறாரு! அவர் ஒரு ஐஐடி ப்ராடக்ட். அதனாலே ஒரு எஞ்சினியர்ங்கிற வகைலயும் எனக்குப் பெருமையா இருந்தது”

 “சரி அதை விடுங்க. சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் எழுதினது. அதை ரீ-மேக்தானே பண்ணியிருக்கீங்க?”

 ”இல்லை நிச்சயம் வித்யாசமா இருக்கும். அப்படி இல்லைன்னா கிழக்கு பதிப்பகம் பிரசுரமே பண்ண மாட்டாங்க”

 “என்ன வித்யாசம்?”

 “அதை நீ வாங்கிப் படிச்சிட்டு சொல்லு”

 “திட்டறதுக்காகவாவது வாங்கிப் படிப்பேன். அப்ப இனிமே உங்களை சிலப்பதிகார ஜவர்லால்ன்னு கூப்பிடற அளவுக்கு இருக்குமா?”

 “இல்லைன்னாலும் அப்படி கூப்பிடலாம். பொருத்தமாத்தான் இருக்கும்”

 “எப்படி?”

 “எப்பவும் என் இல்லத்தரசிதான் அதிகாரம் பண்ணுவாங்க. நான் அடங்கிப் போயிடுவேன். சிலப்ப நான் அதிகாரம் பண்ணுவேன். அதனாலே சிலப்ப அதிகார ஜவர்லால்ன்னு சொல்லலாம்”

 “என்ன கொடுமை சரவணன் இது. சரி…சரி… அது என்ன அதிகாரம் நீங்க சிலப்ப பண்றது?”

 “இந்த வீட்டில பாத்திரம் தேய்க்க மட்டும்தான் நான் இருக்கேனா? புடவைங்களையும் நாந்தான் துவைப்பேன்னு குரலை உசத்தி அதிகாரமா நான் சொன்னேன்னா அவங்க பெட்டிப் பாம்பா அடங்கிப் போயிடுவாங்க”

 “கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை அம்மணமா ஆடிச்சாம். முதல் கொடுமையோடவே நான் நிறுத்திகிட்டிருக்கணும். எனக்கு இது வேண்டியதுதான்”

விலை : ரூ.75/=

முகவரி : கிழக்கு பதிப்பகம்

எண்:33/15, எல்டாம்ஸ் சாலை

ஆழ்வார்பேட்டை –  சென்னை 600 018

தொலைபேசி : 044 – 43009701

வலைத்தளம் : www.nhm.in

இந்த நூல் பற்றிய வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

96 comments

 1. பாராட்ட வார்த்தைகள் இல்லை ஜவஹர்ஜி… மனமார்ந்த வாழ்த்துக்கள்… தங்களுக்கு பிரத்தியேகமாக அனுப்பியுள்ள மெயிலையும் காண்க…

  1. ஜெய்சங்கர், எப்படி நடிகர்கள் எல்லாம் திருட்டு விசிடியை எதிர்த்துப் போராடராங்களோ அது மாதிரி எழுத்தாளர்கள் எல்லாம் பிடிஎஃப் ஃபைல்களை எதிர்த்துப் போராடப் போறோம்!

   1. உங்க புக்க pdf ஆ உங்களுக்கே அனுப்புறேன் இன்னும் 2 நாள்ல. நீங்க பிரபலம் ஆகப்போறீங்க. ஆனா அதுக்கு புக்க காசு குடுத்து வாங்க வேண்டுமேன்னு பாக்குறேன் வரட்டா

   2. //உங்க புக்க pdf ஆ உங்களுக்கே அனுப்புறேன் இன்னும் 2 நாள்ல. நீங்க பிரபலம் ஆகப்போறீங்க. ஆனா அதுக்கு புக்க காசு குடுத்து வாங்க வேண்டுமேன்னு பாக்குறேன் வரட்டா//\/
    இது ஒரு தமாஷ்ஷான சவால். ஆனா நிஜமில்லை சும்மா.நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டு இதுக்கு ஒரு பதிவு போடாதீங்க

  2. சார் ஒரு நார்த் இண்டியனா இருந்துகிட்டு உங்களுக்கு இருக்கும் தமிழ் பற்று ஆச்சரியமா இருக்கு.

   ஜவர்லால்ன்னா காஷ்மீர் பண்டிட் தானே

 2. வாழ்த்துக்கள் ஜவ(ஹ)ர் சார்… கதாபாத்திரங்களின் அறிமுகமே , புத்தகத்தை விரைவில் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது ….புத்தக உலகிலும் வெற்றிகள் தொடர நல் வாழ்த்துக்கள்..

  1. நன்றி பத்பனாபன். உங்கள் மாதிரி ரசிகர்களும் வெல்விஷர்களும் இருக்கிறப்ப என்னால் இதைவிட பெரிய உயரங்களைத் தொட முடியும்!

 3. எடுத்தவுடன் 5th கியர்ல போறீங்க. காரணம் கிழக்கு பதிப்பகம் என்ற சூப்பர் ஹைவே . வாழ்த்துக்கள் சார். அடுத்தென்ன கம்ப ராமாயணமா ?

 4. தலைவரே ,வாழ்த்துக்கள்,பாத்திரங்களின் அறிமுகத்தை பெரிது படுத்தி படித்து பார்த்தேன்,புத்தகம் வாங்கனும் போலிருக்கு,இன்னும் சிறப்பாய் பல நூல்கள் எழுதி வெளியிடனும்,நான் படிச்சுகிட்டு தான் இருக்கேன்,பதிவுகளில் பின்னுகிறீர்கள்,

 5. வாழ்த்துக்கள் மார்கண்டேயன் சார்!

  வேற என்னல்லாம் எழுதல்லாம்னு இருக்கீங்க?

  கூடிய சீக்கிரம் அலை பேசியில் தொடர்பு கொள்கிறேன்!
  சுப்புவின் சார்பிலும் வாழ்த்துக்கள். (அவர் வந்த போது மியூசிக் லாம் போட்டு அசத்திட்டீங்க போல ! இப்போல்லாம் ஒரே ஜவர்லால் புராணம் தான்! சுப்புவிடம் இருந்து! )

 6. அசகாய் சூரர் ஐயா நீர்!

  சிலப்பதிகாரம் எல்லாம் இன்ன மாறி மேட்டரு…

  சீரங்கத்து தேவதைங்கோ மேறி மேட்டர் மட்டுமில்லை…படா எலக்கிய ஜில்பான்ஸ் கூட வாத்தியார் மேறியே எளுதுவேன்றீங்கோ! ஓ.கே!

  கிளக்கு மாஸ்டர்! சூடா ஒரு புக் பெங்களூருக்கு பார்சல்!

  1. நன்றி நம்பி சார். உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்த மூத்தவர்கள் ஆசிர்வாதம் பண்ணா அப்படியே நடக்கும்!

 7. எங்கள் வாழ்த்துகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கூகிள் பஸ் ல கூட இந்தப் பதிவுக்கு ஒரு சீட் போட்டிருக்கோம். பஸ் பயணிகளும் பயன் அடையவேண்டும் என்று.

 8. வாழ்த்துகள் அண்ணே,

  தமிழ் இலக்கியம் சார்ந்து எழுதப்படும் நூல்கள் குறைவு. உங்களது நூல் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது.

  பாராட்டுகள்

  1. ரொம்ப நன்றி கண்ணன்ஜி, எளிய மொழி நடைல, சுவாரஸ்யமும் கெடாம எழுதணும்ன்னு பாரா சார் சொன்னாரு. ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா எடிட் பண்ணாரு. நல்லா கைட் பண்ணி எழுத வெச்சாரு. இப்பப் பாருன்னு கடைசீல புஸ்தகத்தை என் கிட்ட அவர் குடுத்தப்போ எழுதினது நாந்தானான்னு எனக்கே ஆச்சரியமா இருந்தது!

 9. Sir, Congrats! I expect that you will come with the Six Sigma book, with a story format.

  But you should tell more why you chose that particular publisher? What was the process of decision making?

  Why that Himalaya “Ice” on them ( P. Raghavan and Badri ) ?

  1. Thank you Nanban. Six Sigma is postponned at the moment as I am otherwise busy! Kizakku are the best publishers in the field today. They follow scientific methods to decide which subject has to be taken up for launch. They do extensive market research. Mr.Badri is a very intelligent Engineer. He is a product of IIT. More than that he is a nice hman being. He loves good writing and wants to encourage good writers. Mr.Raghavan wants to bring in lot of talents. I like his king maker attitude!

 10. நன்று மற்றும் மென்மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!
  Expecting more books on Corporate Leadership & Management skills, 6 Sigma.

  பொதுவாக நகைச்சுவையாக எழுதக்கூடியரான உங்களுக்கு ஒரு காப்பியம் அதுவும் சீரியஸான சிலப்பதிகாரம் – ஒரு சவாலில்லையா… ?
  என்பது எனக்குள் எழும் ஒரு கேள்வி!

  நிறைய வரலாற்றுத்தகவல்களுக்குள் கொஞ்சம் கற்பனை, இனிமை.. பொ.செ மாதிரி!

  இந்த இரண்டு காரணங்களுக்காகவும் படித்துவிட்டு, கருத்துக்கள் பகிர்கின்றேன்.

  நன்றி.

  அன்புடன்
  கார்த்திகேயன்
  காரணம் ஆயிரம்
  http://kaaranam1000.blogspot.com

  1. //பொதுவாக நகைச்சுவையாக எழுதக்கூடியரான உங்களுக்கு ஒரு காப்பியம் அதுவும் சீரியஸான சிலப்பதிகாரம் – ஒரு சவாலில்லையா… ?
   என்பது எனக்குள் எழும் ஒரு கேள்வி!//

   நிஜம்தான் கார்த்திகேயன். நகைச்சுவைக்கு மிகக் குறைவான ஸ்கோப்தான்! இருந்தாலும் ஒல்லும் வாயெல்லாம் செயல்ங்கிற மாதிரி லேசா முயற்சி பண்ணியிருக்கேன் சில இடங்கள்ளே. பொற்கொல்லன் வர்ர அத்தியாயங்கள்ளே ஒரு சமூக நாவல் அளவுக்கு விறுவிறுப்பு தர்ர வாய்ப்பு கிடைச்சது. முடிக்கிறப்பவும் ஒரு பஞ்ச் இருக்கணும்ங்கிற என் அரிப்புக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது.

 11. வணக்கம்,

  கலக்கிட்டீங்க. மிகப் பெரிய விஷயம் செய்துள்ளீர்கள். திருக்குறளை படி படின்னு எல்லோரும் சொல்கிறோம் ஆனாலும் அதை எளிய கவிதை வடிவில் எழுதி புத்தகமாக வெளியிட்டவர் புலவர். கங்கை மணிமாறன் அவர்கள், அவ்வரிசையில் நம் தமிழ் காவியமென மெச்சி சாமானியர்கள் நாவல் பிரியர்கள் என எல்லோராலும் படிக்கப் பட்டு நம்மொரு காவியம் மூளை லுடுக்கேல்லாம் பரவ ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள். அதன் பயனும் சிறப்பும் உணர்ந்தவர் பா.ரா அவர்களும். மிக்க பாராட்டுக்கல்ம், இது போல் நம் தமிழ் பெரும் சிறப்புக்களை மேலும் வெளிக் கொணர்ந்து சிறப்பும் மேன்மையுமுற பல படைப்புக்களை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தர வாழ்த்துக்களும், இது போன்ற படைப்பாளிகளை உலகப் பார்வையில் கொண்டு வரும் பாரா ஐயா அவர்களுக்கு பெருத்த நன்றிகளும் உரித்தாகட்டும்..

  நிச்சயம் தாயகம் அருகையில் வாங்கி படித்து விமர்சனம் தர முயல்வேன்.

  மகிழ்வுடன்..

  வித்யாசாகர்

 12. வணக்கம் சகோதரர்,

  கலக்கிட்டீங்க. மிகப் பெரிய விஷயம் செய்துள்ளீர்கள். திருக்குறளை படி படின்னு எல்லோரும் சொல்கிறோம். ஆனாலும் அதை எளிய கவிதை வடிவில் எழுதி புத்தகமாக வெளியிட்டவர் புலவர். கங்கை மணிமாறன் ஐயா அவர்கள், அவ்வரிசையில் நம் தமிழ் காவியமென மெச்சி சாமானியர்கள் நாவல் பிரியர்கள் என எல்லோராலும் படிக்கப்பட்டு, நம்மொரு காவியம் மூலைமுடுக்கேல்லாம் பரவ ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள். அதன் பயனும் சிறப்பும் உணர்ந்தவர் ஐயா பா.ரா அவர்களும்.

  மிக்க பாராட்டுக்கள். இது போல் நம் தமிழ் பெரும் சிறப்புக்களை மேலும் வெளிக் கொணர்ந்து சிறப்பும் மேன்மையுமுற பல படைப்புக்களை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தர மனதார்ந்த வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  மேலும் இது போன்ற படைப்பாளிகளை உலகப் பார்வையில் கொண்டு வரும் ஐயா பா.ரா அவர்களுக்கு பெருத்த நன்றிகளும் கூற கடமையானோம்.

  நிச்சயம் தாயகம் அருகையில் வாங்கி படித்து விமர்சனம் தர முயல்வேன்.

  மகிழ்வுடன்..

  வித்யாசாகர்

 13. இதுவரை

  * 176,086 நண்பர்களை வைத்துக் கொண்டு வலைப்பூவைப் பற்றியும் நூலாசிரியர் குறிப்பில் போட்டிருக்கலாம்.

  எங்களுக்கும் கொஞ்சம் பெருமையாக இருந்திருக்கும். அடுத்த புத்தகத்தில் மிஸ் பண்ணமா பிளாக் பத்தியும் போடுங்க.

  – ஜெகதீஸ்வரன்
  http://sagotharan.wordpress.com/

 14. >>..எழுத்தாளர்கள் எல்லாம் பிடிஎஃப் ஃபைல்களை எதிர்த்துப் போராடப் போறோம்

  நீங்களா இப்படிச் சொல்றீங்க ஜவஹர்?!
  பிடிஎப் அல்லது வேறு முறையில் மின்வடிவம் பரந்த வினியோகத்துக்கு ஏதுவாகுமே? என்னைப் போல் மின்புத்தகப் பிரியர்களுக்கு உலகின் எந்த மூலையிலிருந்தும் தரவிறக்கம் செய்து உடனே படிக்க வசதியாகுமே? பிடிஎப் என்றால் திருட்டு என்று பொருளா? அடடா!

  1. அப்பாதுரைஜி எல்லாத்துக்குமே ஒரு நல்ல கோணம் ஒரு தப்பான கோணம் ரெண்டும் இருக்கு. நீங்க சொல்லியிருக்கிறது ஒரு ஆரோக்யமான கோணம். ஆனா ஒரு தரம் பிடிஎஃப் வந்துட்டா போதும். இசகு பிசகா சர்குலேட் ஆக ஆரம்பிச்சிடும். அப்புறம் பதிப்பகத்துக்கு நஷ்டம்தானே?

 15. புத்தகம் வரட்டும்…. படிச்சுட்டு சொல்றேன்.
  மேலும் மேலும் புதிய புதிய புத்தகங்கள் வர வாழ்த்துக்கள்.

 16. // “இந்த வீட்டில பாத்திரம் தேய்க்க மட்டும்தான் நான் இருக்கேனா? புடவைங்களையும் நாந்தான் துவைப்பேன்னு குரலை உசத்தி அதிகாரமா நான் சொன்னேன்னா அவங்க பெட்டிப் பாம்பா அடங்கிப் போயிடுவாங்க”//

  மனம் விட்டு சிரித்தேன்.

 17. சார் மனமார்ந்த வாழ்த்துக்கள்……
  மேல நெறைய பேர் சொன்ன மாதிரி நானும் சொல்றேன் சிக்ஸ் சிக்மா பத்தி எழுதுங்க சார்….
  உங்க நடையில் சிக்ஸ் சிக்மா படிக்கறதுக்கு ரொம்ப ஆவலா காத்துருக்கேன்…..

  ஊருக்கு வந்தவுடனே கண்டிப்பா சிலப்பதிகரத்த படிச்சுடுறேன்…….

 18. Dear Jawarlal, Fantastic effort. Please accpet my congratulations on your book release.

  Frankly speaking, I was little dissappointed when I didnt find more postings after your retirement. I thought you are tired of writing. But now I am happy that you got your book released. Hope I can expect more postings/ books from you in coming days. I need a favor from your end. Instead of buying book from a store, Please send your bank acc no and branch details and cost (book price + courier charges to bangalore) to my mail id mentioned above. I will transfer the money and send my address and the transfer details, so that you can send me a copy with your personlized note and signature to me. Hope I am not disturbing you. Thank you and continue your writing. Regards, RamKumar K R

 19. நன்றி சுப்பராயன். கோயில் வேலை ஸ்டார்ட் ஆயிடுச்சா?

  Iam sorry jawharji, you are wrongly interrupted me with the other subarayan.

  with warm regards,
  subarayan

  1. நன்றி சங்கர். விமர்சனம் படிச்சேன். நாவலை முழுமையாப் படிச்சிருக்கீங்க! நீங்க சொன்ன மாதிரி விவாதங்கள் வந்தா விளம்பரம்தான்!!!

 20. சிலப்பதிகாரம் எழுதிட்டீங்க. இனி என்ன? அடுத்த செம்மொழி மாநாடுதானே? (கனி மொழியாம் செம்மொழியை பார்த்துட்டீங்களா?)

  1. கனியாய் இனிக்கும், பனியாய்க் குளிரும்
   நனிசிறந்த நன்மொழிக்குச்
   செம்மொழிச் சாக்கில் சிலப்பதிகாரம் செய்ததில்
   உம்மொழி பெற்றேன், வன்மொழியே நம்மொழி…..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s