ஜென் கற்க ஒரு சுவாரஸ்யமான வழி

ஜென் கதைகள் என்றால் நிறையப் பேருக்கு அலர்ஜி.

புரிந்தது என்று சொல்லிக் கொள்ள தைரியம் இருக்காது. புரியவில்லை என்று சொல்லவும் ஈகோ இடம் தராது.

 ஏதாவது ஒரு ஜென் கதையை உங்கள் நண்பரிடம் சொல்லி,

 “என்ன, புரியுதா?” என்று கேட்டுப் பாருங்கள்.

 “புரியாம என்ன…. இந்த மாதிரி எல்லாத்தையும் ஃபிலசாஃபிக்காவே பார்த்துகிட்டு இருந்தா லைஃபை அனுபவிக்கவே முடியாது.” என்று பொதுப்படையாகச் சொல்லி விட்டு உங்கள் முகத்தைப் பார்ப்பார்.

 இந்த  Fishing Expedition ல் நிச்சயம் நீங்கள் சிக்குவீர்கள். புரிந்து விட்டது என்கிற மதர்ப்பு உங்களை அமைதியாக இருக்க விடாது என்பது அவருக்குத் தெரியும்.

 உடனே ‘அதெப்புடி?’ என்று அதை விளக்க முற்படாமல்,

 “ஏன் இந்த ஃபிலாசஃபி வாழ்க்கையை அனுபவிக்க உதவாதுன்னு சொல்லு?” என்று எதிர்க் கேள்வி கேட்டுப் பாருங்கள்.

 “எனக்கு இதில எல்லாம் இண்ட்ரஸ்ட் கிடையாது” என்று கழன்று கொள்வார். அப்போதும் புரியவில்லை என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்.

 தெரியாததை எல்லாம் எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லை என்று சொல்லிக் கொள்வது ஒரு இண்டெலெக்ச்சுவல் ஏமாற்று. (நான் கூட மாத்ஸில் இண்ட்ரஸ்ட் இல்லை என்று சொல்லிக் கொள்வதுண்டு!)

 மண்டையில் அடித்த மாதிரி புரிய வைக்கக் கூடாது என்பதற்காகவே புதிராகச் சொல்லப்பட்டவை ஜென் கதைகள்.  ஆனால், ஒவ்வொரு கதையையும் படித்து விட்டு என்ன சொல்ல வருகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்க யாருக்கும் நேரமில்லை. வேலை நாட்களில் தூங்க மட்டும்தான் நேரமிருக்கிறது. ஒரே ஒரு ஞாயிற்றுக் கிழமைக்காக ஏற்கனவே மிக நீண்ட ஆதர்சப் பட்டியல் இருக்கிறது. (முட்டுக்காடு போட்டிங்கும், வல்லக் கோட்டை முருகன் கோவிலும் இன்னும் இது மாதிரி நிறைய ஆதர்சங்கள் பெண்டிங்கில் இருப்பது நிஜம்தானே?)

 வேலையே இல்லாத எவனாவது ஜென் கதைகளைப் படித்து விட்டு மோட்டுவளையைப் பார்த்தபடி யோசித்து அதைப் புத்தகமாக எழுதினால்தான் வசதிப்படும்.

 அட ஆமாம்! இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே! என்றுதானே யோசிக்கிறீர்கள்?

ஹி.. ஹி… அதைத்தாங்க நான் பண்ணியிருக்கேன். (ஆனா ஐடியா கிழக்கு பதிப்பகத்தினுடையது!)

 ‘கதைகளின் வழியே ஜென்’ என்கிற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 200 பக்கங்கள். விலை ரூ.100/=

 ஒரு விஷயம்.

 விளக்குகிறேன் பேர்வழி என்று படிக்கிறவர்களை தச்சி மம்மு சாப்பிட்டுவிட்டு தாச்சிக் கொள்கிற குழந்தை லெவலுக்கு இறக்கினால் என் பேச்சு ‘காய்’ விட்டு விடுவீர்கள்.

 ஃபிலசாஃபிக் சொசைட்டி சொற்பொழிவுகள் லெவலுக்குப் போவதற்கு எனக்கு ஞானம் போதாது. ஒருவேளை போனாலும் படிக்கிறவர்களுக்கு ஜூரம் வந்து நாக்கு இழுத்துக் கொள்கிற அபாயம் இருக்கிறது.

 நண்பர்களோடு சாயந்திரம் உட்கார்ந்து அரட்டை அடிப்பது நம் எல்லோருக்குமே பிடிக்கும். அப்போது எப்படிப் பேசுவோம்?

 அப்படித்தான் எழுதியிருக்கிறேன்.

அரட்டையில் இருக்கும் நகைச்சுவை, நம்முடைய சொந்த அனுபவங்கள், சில பிரபலஸ்தர்களின் அனுபவங்கள், டிவி, சினிமாக்களில் வரும் ஜோக்குகள் எல்லாமே இதில் இருக்கின்றன. கூடவே கொஞ்சம் மேலாண்மைத் தத்துவ விளக்கங்களும் இருக்கின்றன.

 நிச்சயம் இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்.

 சுவாரஸ்யத்தின் ஊடே சில நல்ல விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

 பல கதைகளுக்கு நீங்கள் நினைக்கும் நீதி வேறு விதமாகக் கூட இருக்கலாம். அப்படி இருந்தால் எழுதுங்கள். நம் வாசகர்கள் எல்லாரும் பயனடைவார்கள்.

 புத்தகத்தை எழுதி முடித்ததும் எழுத்தாளர் பாராவிடம்,

 “ஒவ்வொரு கதைக்கும் நீதி என்னன்னு முடியைப் பிச்சிகிட்டு யோசிச்சதிலே தலை மொட்டை ஆயிடிச்சு. கம்பெனி செலவில ஒரு விக் வாங்கிக் குடுங்க சார்” என்றேன்.

 “காஸ்ட் எஃபெக்டிவ்னஸ் பத்தி நீயே இந்தப் புத்தகத்தில எங்கியோ எழுதியிருக்கே இல்லை?” என்றார் மோவாயைச் சொறிந்தபடி.

 “ஆமாம் சார்” என்றேன் உற்சாகமாக.

 “விக் கொஞ்சம் காஸ்ட்லி. ஒரு காசித் துண்டு வாங்கித் தர்ரேன். தலையை மூடிக்க. வெய்யிலுக்கும் நல்லது” என்றார்.

Advertisements

48 comments

  1. இதை அந்தக் கட்டுரையில் நானே எழுதியிருக்கேனே.

   //பல கதைகளுக்கு நீங்கள் நினைக்கும் நீதி வேறு விதமாகக் கூட இருக்கலாம். அப்படி இருந்தால் எழுதுங்கள். நம் வாசகர்கள் எல்லாரும் பயனடைவார்கள்.//

   என்று எழுதியிருப்பதைப் படிக்கவில்லையா?

 1. Same way many people don’t understand K.B films.
  உங்க‌ள் த‌லையில் சொட்டை வி‌ழுந்த‌துக்கு வித்தியாச‌மான‌ விள‌க்க‌ம்…ந‌ம்ப‌றோம்

 2. ஆக மொத்தம் ஜக்கி வாசுதேவுக்கு நீங்க போட்டின்னு சொல்லுங்க. 🙂

  நூறு புத்தகங்கள் எழுத வாழ்த்துக்கள்!

  TQM, CMMi பற்றி கொஞ்சம் நகைச்சுவையாக ஒரு புத்தகம் வேண்டும்!

 3. காசித்துண்டு ரொம்ப எக்ஸ்பென்ஸிவ் ஆல்டர்னேட். கர்ச்சீப் வாங்கித்தரேன்னு சொல்லி இருந்தா போறுமா இருந்ததே!!. இன்னும் நிறைய புஸ்த்தகங்கள் எழுத என் வாழ்த்துக்கள்.

  1. அநன்யா…. சத்தமா பேசாதீங்க…. ராகவன் சார் உங்களை கிழக்கு பதிப்பகத்தோட ஃபைனான்ஸ் கண்ட்ரோல்லாரா அப்பாயிண்ட் பண்ணிடுவாரு! வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களை மாதிரி ரசிகர்கள் இருக்கிறதாலேதான் நான் மென்மேலும் சிறப்பா எழுத முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்.

 4. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜவஹர்ஜி….
  புத்தகத்தின் பெயர் ‘ ஜன்னலின் வழியே ஜென் ‘ அப்டீன்னு வச்சிருக்கலாமே…..

  1. நன்றி வேலன் சார்…. வர வேண்டிய சமயத்தில சரிய்ய்யா வர்ரீங்க… வாழ்த்தறிங்க….. அப்பறம் நான் வேலன் எங்கே… எங்கேன்னு தேட வைக்கறீங்க!

 5. அடுத்த புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்…. ஜென் கதைகளா..சந்தேகமே இல்லை .நகைச்சுவைக்கும் ..மேலாண்மை கருத்துகளுக்கும் பஞ்சமிருக்காது..நிச்சயமாக உங்களுக்கும் எங்களுக்கும் வேட்டை தான்….

  1. நன்றி பத்மனாபன்…. உங்களை மாதிரி ரசிகர்களின் ஆதரவுதான் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது.

  1. நமஸ்காரம் ஸ்வாமி…. உங்களை மாதிரி மனிதர்(?)களின் ஆசிதான் எனக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகளைக் கொடுக்கிறது. உங்க வாழ்த்துக்கள் எனக்கு எப்பவும் வேணும்.

  1. பத்மாஜி, உங்களோட அர்த்தபுஷ்டியான காமெண்ட்டுகளைப் பார்த்து ரொம்ப நாளாச்சு! ஜென் டில் மேன்!!! உங்க சிந்தனைத் திறமைக்கு என் சிரந்தாழ்ந்த வண்க்கங்கள்!!!

 6. சூப்பர் :)))

  எழுத்தாள அவதாரத்தில் அடுத்தடுத்து அருமையான புத்தகங்கள் வெளிவருதல் மிகவும் பெருமைக்குரியதாகிறது. வாழ்த்துக்கள் ஜவஹர்ஜி..

  சென்னையிலேர்ந்து நண்பர் வரும் சமயம் உங்கள் புத்தகங்களை(யும்) வாங்கிவர சொல்லிவிடுகிறேன்.

  (2 புக் தானா.. இல்லை வேற ஏதும் இருக்குதா?)

  1. ஆதரவு நல்லா இருந்தா இன்னும் நிறைய வரும் சென்ஷிஜி. எனக்குத் தெரிஞ்ச நல்ல, அறிவுப்பூர்வமான விஷயங்களை குறைந்த விலையில் புத்தகமாக வெளியிட எனக்கு மட்டும் இல்லை, கிழக்கு பதிப்பகத்துக்கும் ஆசை இருக்கு…………

 7. உங்கள் எழுத்துப் பணி மென்மேலும் சிறப்புற வேண்டும், இன்னும் நிறைய புத்தகங்கள் எழுதி வெளியிட்டு, வெற்றி பெற வேண்டும்.

  மனம் நிறைந்த வாழ்த்துகள்!

  திருமதி சுப்ரமணியம்

 8. வாழ்த்துக்கள் சார் . அசத்துறிங்க. திருக்குறளில் இருக்கும் மேலாண்மை கருத்துக்களை உங்களின் அனுபவத்துடன் தொடர்புபடுத்தி நகைச்சுவையாக ஒரு புத்தகம் எழுதலாமே.

  1. நன்றி துளசிஜி! உங்க படைப்பும் சந்த்யா பதிப்பகம் மூலம் வந்திருக்கிறதா அறிகிறேன்… வாழ்த்துக்கள்!!!

 9. ஜவஹர்ஜி,

  இதோ ஒரு மிகச் சிறிய ஜென் கதை….

  சீடன் : குருவே, மலை உச்சிக்குப் போக வேண்டும். எங்கிருந்து தொடங்குவது ?

  குரு : உச்சியிலிருந்து.

  (நகைச்சுவையாய் தோன்றும் இந்த கதைக்குள் ஒரு பேருண்மை உள்ளது. கண்டு பிடித்தவுடன் எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா ?)

 10. ஒண்ணு நான் வாங்கறேன். ஒண்ணு நீங்க வாங்குவீங்க. ஒவ்வொண்ணு ஒங்க மச்சான் மாமனார் வாங்குவாங்க. இது டெஃபனெட் சேல். அதுக்கு மேல எத்தனை விக்குது, தயாரிப்பாளருக்கு விக்கல் இல்லையான்னு பர்சனம் மெயில் எக்ஸ்ப்ரஸிவா அனுப்புங்க. தெரிஞ்சுண்டு அதுக்கப்புறம் நானும் வேலைய விட்டுட்டு உங்களுக்கு உதவியாளான வரேன்.

  உங்க எழுத்த பார்த்து பொறாமை படறத விட உங்களுக்கு அசிஸ்டென்ட் ஆக டெண்ட் கட்டறது பெட்டர்னு நெனைக்கிறேன்.

  (பெரிய எழுத்தாளர்கள் மறுமொழிக்கு மறுமொழி தரமாட்டார்கள் என்று தெரிந்த)

  இரா. சத்தியமூர்த்தி
  குவைத்

  1. சத்தி, நா இன்னும் அவ்வளவு பெரிய எழுத்தாளரா ஆகாததாலே பதில் சொல்லத்தான் வேணும். நீங்க சொன்ன முதன் வாக்கியம் மட்டும் எனக்குப் பிடிச்சிருக்கு!

 11. அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு, உன் துணிச்சல் எனக்கு பிடிச்சிருக்கு.

  அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு, உன் வெகுளித்தனமும் பிடிச்சிருக்கு.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s