திருவள்ளுவரின் அவுட் ஆஃப் பாக்ஸ் திங்க்கிங்

சம்பிரதாயமான வழிகளில் யோசிக்கிறதை விட கொஞ்சம் மாறுதலாக யோசிப்பதை Lateral thinking என்றும், Thinking out of the box என்றும் மேலாண்மையில் குறிப்பிடுவார்கள். அதுமாதிரி சிந்தனைகள் மிகக் குறைந்த செலவில், குறுகிய காலத்தில் சிறப்பான பலன்களைத் தரக் கூடியது.

 ஒரு தொழிற்சாலையில் சோப்புக்கட்டிகளை அட்டைப்பெட்டிக்குள் அடைத்து அனுப்ப ஒரு கன்வேயர் இருந்தது. வேலை செய்கிறவர்களின் கவனக் குறைவு காரணமாக சில பெட்டிகள் காலியாகப் போயின. கஸ்டமர்களிடம் கெட்ட பேர் ஏற்பட்டது. அதை எப்படி சரி செய்வது என்று யோசித்த போது லோட் செல், ஸ்கான்னர், இன்ஃப்ரா ரெட் சென்சர் என்று யோசனைகள் வந்தன. எல்லாம் இரண்டொரு லட்சம் செலவாகிற, ஒரு மாசத்துக்கு மேல் ஆகிற ஐடியாக்கள்.

 ஒரு தொழிலாளி சொன்ன யோசனை சுவாரஸ்யமானது.

 சினிமாவில் புயல் ஏற்படுத்த உபயோகிக்கிறது மாதிரி கொஞ்சம் சக்தி வாய்ந்த பெடஸ்டல் ஃபேனை வைத்தால் போதும். காலிப் பெட்டிகள் காற்றில் பறந்து கன்வேயரை விட்டு வெளியே போய் விழுந்து விடும் என்றானாம்.

 திருக்குறளில் கூட பல இடங்களில் Out of the box thinking காணப்படுகிறது.

 அவற்றில் சில நூற்றி எண்பது டிகிரி எதிர்த் திசையில் கூட இருக்கின்றன.

 சாதுவாக இருந்து கொண்டு ஊரை அடித்து உலையில் போடுகிற கேரக்டர்களை பசுந்தோல் போர்த்திய புலி என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

 ஆனால்,

கபட வேஷ போலிச்சாமியார்களை வள்ளுவர் புலித்தோல் போர்த்திய பசு என்கிறார்.

 ஊர்மக்களின் அடி உதையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள, அவர்களை பயந்து பக்கத்தில் வராமல் இருக்கச் செய்ய புலித்தோலைப் போர்த்தியபடி பயிரை மேய்ந்ததாம் பசு ஒன்று.

 பயிரைத் தின்கிற குணமே அது புலியில்லை என்பதைக் காட்டிக் கொடுத்து விடும் என்பது கூடத் தெரியாத முட்டாள் பசு போன்றவர்களாம் போலிச் சாமியார்கள். ரொம்ப சீக்கிரம் அடையாளம் காணப்படுவார்களாம்!

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றதம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

என்பது அந்தக் குறள்.

Advertisements

17 comments

 1. சார் , ஆரம்பமே அசத்தலா இருக்கு. இந்த வரிசையில் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். நேயர் விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றிகள் தொடரின் இறுதியில் சொல்றோம். இப்போ அடுத்த குறளை பற்றி யோசியுங்கள் 🙂

 2. சபாஷ்…

  எத்தனையோ பேர் திருக்குறள் பொருள் எழுதி இருக்கிறார்கள். நீங்களும் ஏன் வித்யாசமாக உங்கள் பாணியில் முயற்சிக்கக் கூடாது? மொத்தமாகக் கூட வேண்டாம். ஒவ்வொரு பதிவின் போது ஒரு குறள்… உங்கள் பாணியில் பொருளுடன்…

  1. ஈரோட்டான், இந்த நீங்களுமாக்கு என்ன அர்த்தம்?

   நீங்களுமா இந்த உபயோகமில்லாத நூலைத் தூக்கிப் பிடிக்கிறிங்கன்னா?

 3. //பெடஸ்டல் ஃபேனை வைத்தால் போதும். காலிப் பெட்டிகள் காற்றில் பறந்து கன்வேயரை விட்டு வெளியே போய் விழுந்து விடும்

  “Focus on solutions; Don’t Focus on Problems” என்பதற்காக சொல்லப்படுகிற இந்த கதை போல மற்றொரு கதையும் உண்டு.

  ஆரம்பகாலங்களில், விண்வெளிக்கு செல்லும் (விண்வெளி) வீரர்கள் சாதாரண இங்க் பேனா போன்ற ஒரு பேனாவைப் பயன்படுத்திவந்தார்கள். சரிவர எழுதமுடியாமல் இருந்தது. அமெரிக்கர்கள், பல பில்லியன்கள் செலவு செய்து ஒரு பேனாவை உருவாக்கினார்கள். கடலுக்கடியிலும், Vacuumமிலும் கூட வைத்து எழுத முடியும்.

  ரஸ்யாவின் விண்வெளி ஆராய்ச்சியில் பேனாவுக்குப்பதிலாக பயன்பட்டது – பென்சில் !

  அன்புடன்
  கார்த்திகேயன்
  http://kaaranam1000.blogspot.com

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s