பயணங்கள் முடிவதில்லை

சில வேலைகளைப் பாதி முடிஞ்சிருக்கு என்று சொல்கிற போது ‘இந்தப் பாதி கிணறு தாண்டர வேலையெல்லாம் வேண்டாம்’ என்று சொல்கிறவர்களைப் பார்த்திருப்பிர்கள்.

இதற்கு என்ன அர்த்தம்?

முழுசும் முடிச்சாத்தான் முடிஞ்ச மாதிரி, பாதி கிணறைத் தாண்டி அங்கேயே நிற்க முடியுமா? உள்ளே விழுந்திட மாட்டோமா? என்றுதான் என் எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்யாரிலிருந்து சிக்ஸ் சிக்மா ப்ரொஃபஸர் வரை எல்லோரும் சொல்கிறார்கள்.

எனக்கென்னமோ நம் முன்னோர்கள் இவ்வளவு வெளிப்படையாகவும், எளிமையாகவும் இருக்கிற அர்த்தத்தை சொல்லியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. பார்க்க எளிமையாக இருந்தாலும் அதில் ஆழமான கருத்தைச் சொல்வதுதான் நம் முன்னோர்களின் ஸ்பெஷாலிட்டி. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற பழமொழியில் டிரான்ஸாக்‌ஷனல் அனாலிசிஸ் சொல்லிக் கொடுத்ததை ஏற்கனவே வேறொரு இடுகையில் எழுதியிருந்தோம்.

இதில் கூட ஏதாவது இருந்தே தீரும் என்று பிடிவாதமாக உட்கார்ந்து யோசித்தேன்.

“இப்படி அதிர்ச்சிப் பைத்தியம் மாதிரி உட்கார்ந்திருக்காம வீடு கட்டற வேலை எவ்வளவு தூரம் வந்திருக்குன்னு பார்த்துட்டு வரலாமில்லே?”

உடனடியாக அங்கிருந்து கழன்று கொண்டேன்.

“என்ன மேஸ்திரி, வேலை எவ்வளவு தூரம் வந்திருக்கு?”

“பாதி முடிஞ்சது சார்”

“இதைத்தானே ரெண்டு மாசாம சொல்றீங்க…. அப்போ ரெண்டு மாசமா வேலையே எதுவும் ஆகல்லையா?”

“போன மாசம் சொன்னது மொத்தத்தில பாதி. இப்போ சொல்றது மீதியில பாதி சார்”

“அடுத்த மாசம் வந்தா அந்த மீதியில  பாதி முடிஞ்சதுன்னு சொல்வீங்களா?”

மேஸ்திரியிடமிருந்து அழுகின வாழைப்பழம் வாசனை வந்தது. இன்றைய குவாட்டரை ஏற்கனவே ஏற்றிக் கொண்டாகி விட்டது போலிருந்தது. நான் கேட்ட கேள்வியை இரண்டு மூன்று தரம் சொல்லிப் பார்த்துக் கொண்டார்.

“சரக்கு அடிக்கும் போதுதான் இப்டி பாதி, பாதியில பாதின்னு அடிப்போம். கடைசீலே கொஞ்சம் மிச்சமாய்டும் சார்” என்றார்.

மேஸ்திரி சொன்னதை யோசித்துக் கொண்டே வந்தேன்.

இங்கிருந்து ஓசூர் போகிறேன் என்று வைத்துக் கொள்ளலாம். அந்தப் பயணத்தை சரிபாதியாகப் பிரித்துக் கொள்கிறேன். முதல் பாதி முடிந்ததும் பாக்கி இருக்கிற பாதி என் டார்கெட். அதில் பாதியை முடிக்கிறேன். அதற்கப்புறம் மீதிப் பாதிதான் டார்கெட். அதில் பாதியை முடிக்கிறேன். அதற்கப்…….

இந்தப் பயணம் முடியவே முடியாது.

பப்பாதியாக டார்கெட் செய்தால் மேஸ்திரி சொன்ன மாதிரி கொஞ்சம் மிச்சம் எப்போதுமே இருந்து கொண்டேதான் இருக்கும். X, 0.5X, 0.25X, 0.125X, 0.0625X, 0.03125X என்று போய்க்கொண்டே இருக்குமே ஒழிய சைபர் வராது.

இதைத்தான் பாதிக் கிணறு தாண்டுவது முடியவே முடியாது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். சொன்னது யாரென்று கூடத் தெரியவில்லை. பதினாறு வயதினிலே படத்து குருவம்மா மாதிரி ஒரு கிழவியாகக் கூட இருக்கலாம்.

ஆனால், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜீனோ என்கிற கிரேக்கத் தத்துவ ஞானியும் இதையே சொல்லியிருக்கிறார். ஜீனோஸ் பாரடாக்ஸ் என்று சொல்லப்படும் ஜல்லிகளில் இதுவும் ஒன்று.

நம்முடைய பிளாக் ஒரு வருஷம் முடித்ததை ஒட்டி (ஜூலை 13) வாசகர்களுக்கு ஒரு புதிர்.

நான் உங்களிடம் ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்து விடுகிறேன். அதற்கு பதில் அடுத்த மாசம் முதல் தேதியிலிருந்து பைசாக் கணக்கில் எனக்குத் திருப்பிக் கொடுத்தால் போதும் என்கிறேன். முதல் நாள் ஒரு பைசா. இரண்டாம் நாள் இரண்டு பைசா. மூன்றாம் நாள் நாலு பைசா, இப்படி ஒவ்வொரு நாளும் முதல் நாள் கொடுத்த மாதிரி இரட்டிப்புப் பைசா தந்தால் போதும். மாச முடிவில் எவ்வளவு கிடைத்திருந்தாலும் போதும் என்கிறேன்.

இந்த டீலிங் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?

Advertisements

42 comments

 1. கிணறு பத்தி சொன்னதால, பெரியோர்கள் ஆழமாகத்தான் சொல்லியிருப்பாங்க… அது இருக்கட்டும்… முதலில் நீங்க லட்சம் ரூபாயைக் குடுங்க…. அதை திருப்பிக் குடுக்கறதா, வேண்டாமா… எப்படித் திருப்பிக் குடுக்கறதுன்னு நாங்க முடிவு செஞ்சுக்கறோம்….

 2. sillarai kankka partha famous “wheat and chessboard problem ” pola theriyuthu…..(naan 16 th day escape )…2 kodiyae 14 latchathu etc etc kku naan enga porathu ..

  AAmaa.. “intha mixing ga partha’….i mean intha kanakka partha..PTC maths brain velaya theriyalaye …BSc(maths) Gold medal ..vuthavunangalo ?

 3. Jawahar
  The formula for calculating the interest would be Amount == (2^y) – 1 where y would be the day
  so for 1st day (2^1) – 1 = 1 paisa
  for 2nd day (2^2) – 1 = 3 paise (1 day’s 1 + 2 day’s 2)
  likewise
  for 30th day (2*30) – 1 = 1073741824 paise
  for 31st day (2*31) – 1 = 2147483647 paise

  So end of month it would be either Rs 10737418.24 or Rs21474836.47 depenind on 30/31 days.

 4. வெற்றிகரமாக ஒரு ஆண்டு நிறைவிற்க்கு வாழ்த்துக்கள். இது போல் பல்லாண்டுகள் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.
  பைசா கணக்கெல்லாம் எதுக்குன்னு நைசா நழுவிக்கிறோம்.

 5. ஒரு லட்சத்தை எங்கள் நிதி நிறுவனத்தில் போடவும். முதல் ஆறு மாதங்களுக்கு வட்டி கிடையாது. (அதற்குப் பிறகு அசலும் கிடைக்காது)

 6. sir,
  வெற்றிகரமாக ஒரு ஆண்டு நிறைவிற்க்கு வாழ்த்துக்கள். இது போல் பல்லாண்டுகள் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.

 7. I am making a better offer than Vimal. I will take it if I can walk away after 23 days repayment. 🙂

  At the end of 30 days, I should repay Rs. 1,07,37,418.23, for a initial loan of 1,00,000 – which potentially fetches the loaner 10637% return on investment.

  Excel இருக்கும்போது இந்த கணக்கெல்லாம் ஒரு ஜுஜுபி! 🙂

 8. There is a hypothetical case where if interest rates are so high (or inflation is so negative), this deal would make sense. The interest rates would be sky high that I would re-loan the initial capital of one lakh rupees so that the interest I accrue would more than offset the loss I make on my repayment to Jawarlal sir. 😉

  Ok, I have made my point to make people believe I know interest rates and some macroeconomics. Don’t ask further questions, because that’s all I know! 🙂

 9. ஆஹா அரம்பிசிட்டாரா .. இனி ஒரு பய நிம்மதியா தூங்க முடியாது, வேலை பார்க்க முடியாது. வந்தோமா பழமொழிக்கு விளக்கம் சொன்னோமா என்று இல்லாம இதென்ன புதுசா கணக்கு போன்ற வேலை.

 10. ஒரு வருஷம் வெற்றிகரமா முடித்ததற்கு வாழ்த்துக்கள் ( ஒரு புகைச்சலுடன் ) . நானும் ஆரம்பிச்சு ஒரு வருசத்துக்கு மேலேயே ஆச்சு. உங்க ஹிட்டுக்கு 10% கூட தொட முடியல. எல்லாம் உங்களின் ஆழ்ந்த அனுபவமும் , நகைசுவையான எழுத்தும் செய்யும் மாயம். தொடர்ச்சியாக எழுதுவதும் ஒரு காரணம் . உங்களிடம் கற்றுகொள்ள வேண்டியது நிறைய இருக்கு சார்.

   1. சட்டில இருந்தால் தானே அகப்பையில் வரும். நானெல்லாம் இன்னும் நிறைய படிக்கணும் சார். அதை தான் இப்போ பண்ணிக்கிட்டு இருக்கேன். மற்றபடி என் எழுத்து என்பது ஒரு பயிற்சியே

  1. ராமனாதன், நான் ஹோசூர்ல இருந்தேன். முருகப்பன் சார் பத்தி கேள்விப்பட்டிருக்கேன், பார்த்ததில்லை. அவர் எண்ணூர் ஆளு. ஆனா ரொம்ப எஃபிஷியண்ட் மனுஷன்!!

 11. தொடர்ந்து வாசிக்கறேன் ஆனா இதான் முதல் பின்னூட்டம். வாழ்த்துக்கள் சார்.
  உங்களோட ப்ளாக் ரொம்ப புடிச்சுருக்கு.

 12. திரு முருகப்பன் அவர்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். என்னுடைய கஸ்டமர் சாடிஸ்பாக்ஷன் சர்வே ஃபார்மில் அவர் இட்ட அதிக மதிப்பெண், எனக்கு பிரமோஷனுக்கு உதவியது. சுப ராமநாதன் அவர்கள், திரு முருகப்பனின் ஈ மெயில் முகவரியை, என்னுடைய kggouthaman@gmail.com மெயில் முகவரிக்கு தெரியப்படுத்தவும். நன்றி.

 13. நன்றி சுப. இராமநாதன். அவர் மெயில்(நீங்கள் கொடுத்த) விலாசத்திற்கு, ஒரு மின்னஞ்சல் அனுப்பி அவர் அதற்கு ஒரு பதில் மின்னஞ்சலும் அனுப்பிவிட்டார்.

 14. நீங்க ப்ளாக் எழுத ஆரம்பிச்சி ஒரு வருஷம் தான் ஆகுதா ? என்னமோ ரொம்ப வருஷமா உங்கள படிக்கிற மாதிரி/ உங்க கூட பழகின மாதிரி தோணுது.
  வாழ்த்துகள் சார்.

 15. வாழ்த்துக்கள் சார். உங்களுடைய எழுத்த்தப்பாத்து நாமளும் அதுபோல எழுத முடியும்ன்னு நம்பித்தான்(?) நான் என்னுடைய ப்ளாக்கயே ஆரம்பிச்சேன். இன்னும் நம்பிக்கிட்டே இருக்கேன்… ஆனலும் உங்களுடைய அந்த டைமிங்கும் ரைமிங்கும்.. ஆஹா..

  நன்றி சார்.

  1. சுரேந்திரன், என்னை விடச் சிறப்பா உங்களாலே எழுத முடியும். நல்ல விஷயங்களை நிறையப் படிங்க…..

 16. ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துகள். 🙂

  நானும் தான் 5 வருடங்கள் 10 மாதங்கள் 12 நாட்கள் ப்ளாக் பண்றேன், ஆயிரம் பதிவுகள் மேல் இருந்தும் என்ன பயன்!

  ***

  ஒரு பாதி கிணறு தாண்டியவுடன், எக்ச்பீரியன்சான ஆட்கள், நிறைவு செய்ய எத்தணை நாட்கள் ஆகும் என்று சொல்லுவார்கள். எதற்கும் முடிவில்லை! லிடேரல்லி எது வேண்டுமானாலும் சொல்லலாம். நிசமா .. எட்டு வருடம் முன் வாங்கிய வீட்டில் இன்றும் தான் கொத்தனார் டையில் சரி பண்ண வந்திருக்கார். அது ஒரு தொடர்கதை! என் சாப்டுவேர் தொழிலுக்கும் பொருந்தும். பக் இருப்பின் பயன் அதிகம்.

  ***

  டெர்மினல்லி இல் வியாதியஸ்தர் என்ன பண்ணுவார்? ஒரு லட்சத்தை சாகும் சில நாட்கள் முன் வாங்கிக்கொண்டு ‘போய்’ சேருவார்! அப்புறம், ஜெயிக்க வேண்டும் என்பவர்கள், இறந்தும் ஜெயிப்பார்கள். இன்சூரன்ஸ்காரனுக்கு தான் பாவம். 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s