கண்டுபிடிச்சேன்.. கண்டுபிடிச்சேன்!

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார் ன்னு கேட்டா டாண்ணு சொல்லிடுவீங்க ரேடியோ ன்னு.

 ஸாரி, அது மார்க்கோனியோ? (என்ன பேர் இது மார் கோணி, இடுப்புக் கோணின்னு! எங்க ஊர்ல மழை பெய்யறப்போ தலையிலதான் கோணியப் போட்டுகிட்டுப் போவாங்க)

அப்போ பெல் என்ன கண்டுபிடிச்சார்?

ஃபோன்…. டெலிஃபோன்.

பெல் கண்டுபிடிச்சதாலேதான் அது ட்ரிங்… ட்ரிங்ன்னு மணி அடிச்சது போலிருக்கு. ஒரு வேளை அவர் பேர் அலக்ஸாண்டர் கிரஹாம் ஹாம்மர்ன்னு இருந்திருந்தா மணி அடிக்கிறதுக்கு பதில் மண்டைல அடிச்சிருக்கும்!

 அது போகட்டும், அவர் கண்டு பிடிச்ச வேறொரு பொருள் உலகம் பூரா உபயோகப்படுது. அவர்தான் கண்டுபிடிச்சார்ன்னு யாருக்குமே தெரியாது. அது என்ன தெரியுமா? மெட்டல் டிடக்ட்டர்.

 அமெரிக்க ஜனாதிபதியா இருந்த ஜேம்ஸ் கர்ஃபீல்ட் சுடப்பட்ட போது தோட்டா எவ்வளவு ஆழத்தில இருக்குன்னு கண்டு பிடிக்க முதன்முதல்லே அது பயன்படுத்தப்பட்டதாம்.

 நீராவி எஞ்சினோட இயக்கத் தத்துவத்தை ஜேம்ஸ் வாட் கண்டுபிடிச்சது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

 அப்ப அவர் எஞ்சினியர் கூட இல்லை.

 பள்ளிக்கூடத்தில படிச்சிகிட்டு இருந்தாரு. ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்ததும் அம்மா கடைத்தெருவுக்குப் புறப்பட்டாங்க. அடுப்பில வேர்க்கடலை அவிக்கிறதுக்கு வெச்சிருக்கிறதாவும், பதினஞ்சு நிமிஷம் பொறுத்து ஆஃப் பண்ணவும் சொல்லிட்டுப் போய்ட்டாங்க.

 இவுரு விளையாடப் போய்ட்டாரு.

 ஒரு மணி நேரம் கழிச்சிதான் ஞாபகம் வந்திருக்கு.

 போய்ப்பார்த்தா வேர்க்கடலையை மூடி வெச்சிருந்த தட்டு துள்ளித் துள்ளிக் குதிச்சிகிட்டு இருந்ததாம். ரூம் பூரா ஆவி. அதைப் பார்த்ததும் “ஐயய்யோ ஆவி வந்திடுச்சு” ந்னு அலறி அடிச்சிகிட்டு ஓடாம, நீராவிக்கு பொருட்களை அசைக்கிற சக்தி இருக்குன்னு கண்டுபிடிச்சாராம்.

 நமக்கும் ஜேம்ஸ் வாட்டுக்கும் என்ன வித்யாசம்?

 அவர் கடலை சாப்பிடும் போது ரயிலைக் கண்டுபிடிச்சார். நாம ரயில்ல போகும் போது கடலை சாப்பிடறோம்.

Advertisements

12 comments

  1. /
    நீராவியைப் பயன்படுத்தி, நாம இட்லியைக் கண்டுபிடிச்சதை மறந்துட்டீங்களே….
    /

    /
    இட்லி,புட்டு,கொழுகட்டை,இது மட்டுமா வெள்ளாவி கண்டுபிடிச்சது யாராம் ?!!!
    /

    ரிப்பீட்டு
    🙂

  2. கண்டுபிடிப்புகளில் அற்புதம் டெலிபோன் .//பெல் கண்டுபிடிச்சதாலேதான் அது ட்ரிங்… ட்ரிங்ன்னு மணி அடிச்சது போலிருக்கு. ஒரு வேளை அவர் பேர் அலக்ஸாண்டர் கிரஹாம் ஹாம்மர்ன்னு இருந்திருந்தா மணி அடிக்கிறதுக்கு பதில் மண்டைல அடிச்சிருக்கும்//
    பெல்லுக்கு காதுகள் கேட்காது என்று கேள்வி பட்டிருக்கிறேன் .அவர் கண்டுபிடித்தது , இதமாக மண்டையில் கொட்டுவது போல் இருந்திருந்தால் உணர்ந்து மகிழ்ந்திருப்பாரோ?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s