எல்.ஆர்.ஈஸ்வரி மாதம்

சித்ரா பெளர்ணமி

வைகாசி விசாகம்

ஆனித் திருமஞ்சனம்

ஆடிப் பூரம்

ஆவணி அவிட்டம்

புரட்டாசி சனிக்கிழமை

கார்த்திகை தீபம்

மார்கழித் திருவாதிரை

தைப் பூசம்

மாசி மகம்

பங்குனி உத்திரம்

 மேற்சொன்ன பட்டியலில் ஐப்பசிக்கு எதுவுமே இல்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

 மற்ற மாதங்களுக்கு மேற்சொன்ன மாதிரி ஒரு சிறப்புதான் உண்டு. ஆனால் ஆடி மாசத்துக்கு ஏகப்பட்ட சிறப்புக்கள். எனக்கு உடனே ஞாபகம் வருவது ஆடிப்பூரம். எத்தனையோ கோவில்களில் ஆடிப்பூரம் கொண்டாடப்பட்டாலும் நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோவில் ஆடிப்பூரம் மனதில் நிற்கிறது.

 காயாரோகணஸ்வாமி கோயில் என்று யாரும் சொல்வதில்லை. எல்லாருமே நீலாயதாட்சி அம்மன் கோயில் என்றுதான் சொல்வார்கள். தெருக்கள் கூட நீலா மேல வீதி, நீலா வடக்கு வீதி என்று எல்லாம் நீலா மயம்.

 ஆனால் திருவாரூரில் தியாகராஜஸ்வாமி கோயில்தானே ஒழிய கமலாம்பா கோயில் இல்லை!

 ஆடிப்பூரத்தின் போது நீலாயதாட்சி சன்னதித் தெருவில் வரிசையாகக் கடைகள் இருக்கும். உள்ளம் கவர்ந்த பல பொருட்கள் அங்கே விற்கப்பட்டாலும் அப்பா ஒரு ரூபாய்தான் தருவார். ஆகவே பல பொருட்களைப் பார்ப்பதோடு சரி. சிலவற்றைத்தான் வாங்க முடியும்.

சில பொருட்கள் வருஷம் தவறாமல் விற்பார்கள். அதை வருஷம் தவறாமல் வாங்குகிறவர்களும் உண்டு.

 ’புவ்வாங் பலூன்’ என்று அழைக்கப்பட்ட பொருள் அவைகளில் ஒன்று. ஒரு நாணல் குழாயில் ஒருபக்கத்திலிருந்து ஊதினால் மட்டுமே ஒலிக்கிற நான் ரிட்டர்ன் வால்வு மாதிரியான சீவாளி வைத்திருப்பார்கள். எதிர்ப்புறம் ஒரு பலூனை மாட்டி வைத்திருப்பார்கள். புஸ்ஸென்று ஊதி பலூனை இன்ஃப்லேட் செய்து விட்டு ஃப்ரீயாக விட்டால் பலூனில் ஊதிய காற்று எதிர்த்திசையில் ஃப்ளோ ஆகும் போது புவ்வாங் என்று ஊதல் ஊதும்.

 ஆரம்பத்தில் ராஜரத்தினம் பிள்ளை நாதசுரம் மாதிரி ஒலிக்கும் அந்த ஊதல் அப்புறம் அழுகிற குழந்தை மாதிரியும், அதற்கடுத்த ஸ்டேஜில் ஒப்பாரி வைக்கிற கிழவி போலவும், இறுதியில் குட்டையில் இறங்கின எருமை மாதிரியும் ஒலித்து பிறகு த்ரோட் இன்ஃபெக்ட் ஆன மாதிரி காற்று மட்டும்தான் வெளிவரும்.

 அடுத்தது பிளாஸ்டிக் மூக்குக் கண்ணாடி.

 சிவப்பு, மஞ்சள், ஊதா என்று ஆகாத நிறங்களில் ஐ பீசும், வெள்ளை நிற ஃப்ரேமுமாக இருக்கும் அவை பல குழந்தைகளின் கனவு. அது ஒரு சீசனல் ப்ராடக்ட் ஆனதால் எப்படா ஆடிப்பூரம் வரும் என்று காத்திருப்பார்கள். அதைக் கண்ணில் மாட்டிக் கொண்டால் பகலிலேயே பசுமாடு தெரியாது. கும்மிருட்டு ஆகிவிடும். ஆனாலும் அதைப் போட்டுக் கொண்டதும் அந்தாஸ் படத்து ராஜேஷ்கன்னா என்கிற நினைப்பு வந்து விடும். ஒருவாரம் போனதும் கீறல் விழுந்து அது வழியாக ஒரு இழவும் தெரியாது.

அதற்கப்புரம் சினிமா வ்யூவர்.

அரை ஜாண் நீளத்தில் ஒரு தகரக் குழாய். அதில் ஒரு பக்கம் லென்ஸ். இன்னொரு பக்கம் ஃபிலிமை சொருக கிளிப். ஒற்றைக் கண்ணால் லென்ஸ் வழியாகப் பார்த்தால், அடாடா…. பாண்டியன் டாக்கீஸில் படம் பார்க்கிற உணர்வு!

உமாபதி ஸ்டோர் என்கிற கடையில் இந்த தகர டப்பா ப்ரொஜக்டருக்கு ஃபிலிம் விற்பார்கள். கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் எல்லாம் பத்து பைசாவுக்கு பத்து ஃபிலிம் கிடைக்கும். அங்கே கூட எம்ஜியார் படங்கள் கிராக்கி. எங்க விட்டுப் பிள்ளை என்றால் நாலணா!

அதற்கப்புறம் ஒரு கிண்ணம் மாதிரி தகட்டில் ஸ்பாட் வெல்ட் செய்யப்பட்ட ஸ்டீல் ஸ்ட்ரிப். அதை அழுத்தி அழுத்தி விட்டால் டிக்கி டிக்கி டிக்கி என்று நாராசமான சத்தம் நாகூர் வரைக்கும் கேட்கும். இது பெற்றோர்களுக்கு மஹா பிராணாவஸ்தையான ஒரு வஸ்து. இது விற்பதை தடை செய்ய வேண்டும் என்று கவுன்ஸிலர் கோவிந்தசாமிக்கு மனு கொடுத்த பெற்றோரை எனக்குத் தெரியும்.

ஆடிப்பூரத்தோடு நிறுத்தி விட முடியாது. ஆடி வெள்ளிக் கிழமை, ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு என்று நிறைய சிறப்புக்களைச் சொல்லலாம். ஆடிக் காற்றில் அம்மி பறக்கும் என்றும் ஆடிப்பட்டம் தேடி விதை என்றும் பழமொழிகள் பெற்ற சிறப்பு ஆடி மாதத்துக்குத்தான் உண்டு. தக்‌ஷினாயனம் ஆடி மாசம்தான் தொடங்குகிறது.

ஆடி மாசத்தில் அம்மன் கோயில்களில் தூசி பறக்கிறது.

 எல்லாக் கோயில் ஸ்பீக்கர்களிலும் ’மாரியம்மா(வ்) எங்ங்ங்கள் மாரியம்மா(வ்)’ என்று அழுத்தமாக, பல்லிடுக்கு வழியாக எல்.ஆர்.ஈஸ்வரி. தூரத்திலிருந்தே கூழ் வாசனை தெரிகிறது. ஈரமான கோயிந்தா மஞ்சள் துணியுடன் பூ மிதிக்கிறார்கள். காலில் கொலுசும், இடுப்பில் கறுப்புத் துணியும் அணிந்து பார்க்க ஐயனார் மாதிரி இருக்கும் ஆசாமிகள் அக்கினிக் கப்பரை தூக்கிக் கொண்டு ராத்திரி எல்லாம் வீடு வீடாகப் போகிறார்கள்.

இவ்வளவு சிறப்புக்கள் இருந்தும் ஆடி மாசத்தில் நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. கல்யாணம் செய்யாததற்கு சித்திரை மாசம் பிரசவம் சங்கடம் என்கிற லாஜிக் இருக்கிறது. அறுபதாம் கல்யாணம் கூட செய்ய மாட்டேன் என்கிறார்களே, அது ஏன்? கிரஹப்பிரவேசம் ஏன் செய்வதில்லை? அடுத்த மாசக் கல்யாணத்திற்குக் கூட துணி எடுப்பதில்லை. அதனால் வந்ததுதானே ஆடித் தள்ளுபடி!

Advertisements

18 comments

 1. டைட்டில் பார்த்ததுமே தானாக முணுமுணுத்த பாடல் – ஆடும் கரகம் எடுத்து ஆடிவருவோம் தான் 🙂

  ஊர் & கிராமத்து கோவில்களில் தடபுடலான விழாக்கள்தான் ஆடி ஸ்பெஷல் !

 2. ஒரு ரவுண்டு கோயில் விழாவிற்கு அழைத்து போய் வந்து வீட்டீர்கள், எல்.ஆர்.ஈஸ்வரியம்மா பாடினா ,தன்னுணர்வா, ஆடி அசைக்காத கால்களே இருக்காது. ஆடி மாதம், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கால கட்டத்தில் தேடி விதைக்க போய்க்கொண்டிருந்ததனால் டைவர்சன் தவிர்த்து பழகி , உழைத்து, களைப்புக்கு விழாக்கொண்டாடி , விதைத்தது சீராக ஒரு நம்பிக்கையொடு மழைக்கு மாரியம்மனை கொண்டாடி வந்திருக்கலாம்.
  ஐப்பசியில் தீபாவளி வசமாக உட்கார்ந்து விட்டதால் மற்ற விழாக்களுக்கு அவசியமில்லை

 3. >>> இது பெற்றோர்களுக்கு மஹா பிராணாவஸ்தையான ஒரு வஸ்து!

  இதைப்படித்து சிரித்து சிரித்து….
  (இன்னும் சிரித்து முடிந்தபாடில்லை 🙂 )

 4. In future – Aadi masam also may have muhurtams.

  http://www.outlookindia.com/article.aspx?265668

  Hindu almanacs, popularly called panchangs across the country, are headed for fundamental changes, with the baby steps taken by a reformist group in Kolhapur, Maharashtra. In time to come, there may be uniformity or at least agreement on certain almanac notings among the 40-odd almanac-makers in the country. Muhurats for weddings and other auspicious occasions may be fixed during the so-called inauspicious monsoon months, and certain all-India festivals may fall on the same date in a year instead of regional variations that now confuse people.
  ——————————

 5. என்னப்பு இப்படி சொல்லிபுட்டீக. ஐப்பசில தான் சாத்திரம் தெரிஞ்சவக தெரியாதவுக எல்லாரும் கொண்டாடற தீபாவளி இருக்கே. அது மட்டுமா ஐப்பசினா அடைமழைனு கேள்விப்பட்டதில்லையா

 6. //அதைக் கண்ணில் மாட்டிக் கொண்டால் பகலிலேயே பசுமாடு தெரியாது.//
  //நாராசமான சத்தம் நாகூர் வரைக்கும் கேட்கும்.//

  🙂 🙂 🙂 🙂

 7. //இவ்வளவு சிறப்புக்கள் இருந்தும் ஆடி மாசத்தில் நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை.

  என் நண்பர் சொன்னது…
  ‘ஆடி மாதங்களில்தான் போரெல்லாம் நடக்குமாம்… போரில் நிறையப்பேர் உயிர்விடுவார்களில்லையா..? அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது போல, நாம் எதுவும் கொண்டாடுவதில்லை.. !’

  கார்த்திகேயன்
  காரணம் ஆயிரம்
  http://kaaranam1000.blogspot.com

  1. ரவி, அட்ரஸைச் சொன்னா அழைப்பு இல்லைன்னாலும் வந்து ஆசிர்வாதம் வாங்கிக்கறோம்…. விமரிசையா நடக்க கடவுளைப் பிரார்த்திக்கிறோம்.

 8. ஒரு ஸ்ப்ரிங் டிரிக்கரை அமுக்கிவிட்டால் ஓடுகின்ற பீரங்கி வண்டி, சுற்றி விடப்பட்ட பிளாஸ்டிக் பம்பரத்தின் காந்த முனை அடிக்காலில் – நெளிகின்ற பாம்பு, பிறைச் சந்திரன், நட்சத்திர வடிவங்கள் (தகரத்தில் வேட்டப்பட்டவை) – இவைகளும் ஆடிப்பூரத் திருவிழா கடைகளில் பெரிதும் விரும்பி வாங்கப்பட்ட பொருட்கள்.

 9. ஆடி மாதம் ஆகாத மாதமா?
  ——————————————–
  ஆடி மாதம் என்றாலே தற்க்காலத்தில் நல்ல காரியங்கள் ஏதும் செய்ய ஏற்ற மாதம் அல்ல என்றோர் நம்பிக்கை நம்மிடையை உள்ளது.ஆனால் பகுத்தறிந்த நம் முன்னோர் அவ்வாறு சொல்ல காரணம். ஒரு வைபவம் எனறால் பல உறவுகள் பல ஊர்களிலிருந்து வரவேண்டியிருக்கும். பல வேலைகள் அந்த வைபவத்திற்காக செய்யவேண்டியிருக்கும். பல பொருட்கள் தேவையிருக்கும். இக்காலம் போல் அன்று போக்குவரத்து வசதி இல்லை.சாலைகள் இல்லை. ஆறுகளை கடக்க பாலங்கள் இல்லை.அக்கால்த்தில் நடை பணம் அல்லது மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்றவையை இருந்தன. ஆடி மாதத்தில் கடும் காற்று வீசும் , தென்மேற்க்கு பருவ மழையினால் ஆறுகள் , ஓடைகள் என அனைத்திலும் புது புணல் பெருகும்.இடி , மின்னலுடன் பெரு மழை பெய்யும்.போக்குவரத்து வசதியில்லாத, மின்சார வசதியில்லத நிலையில் ஒரிடத்திலிருடந்து மற்றோரிடத்திற்க்கு செல்வதோ ஆறுகளை கடப்பதோ அக்காலத்தில் ஆபத்தானது.எனவேதான் நம் முன்னோர் ஆடி மாதத்தில் வைபவங்கள் வைப்பதை தவிர்த்தனர்.மேலும் ஆடிப்பட்டம் தேடி விதை என கூறுவதற்கேற்ப ஆடி மாதத்தில் உழவு வேலைகள் தொடங்கும் காலம்.விவசாய பணிகளுக்கு ஆட்களும் , பணமும் தேவை. அச்சமயத்தில் விசேடங்களை வைத்தால் விவசாய பணிகளுக்கு ஆட்களும் , பணமும் கிடைப்பது அரிதகிவிடும் என்ற காரணங்களுக்காக ஆடியை தவிர்த்தனரே தவிர அது ஆகாத மாதமல்ல.

 10. ஐப்பசி ( துலா ) மாதத்தின் சிறப்புகள்
  ==============================
  துலா மாதம்’ என்று போற்றப்படும் ஐப்பசி மாதத்தில் பகலும், இரவும் சமமாக இருக்கும். அதனால்தான் அது “துலா (தராசு) மாதம்’ என்று பெயர் பெற்றது. ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் நீராடுவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. கங்கை நதியைவிட காவிரி ஐப்பசியில் அதிகம் புனிதம் பெறுவதாக சாத்திர நூல்கள் கூறுகின்றன.

  ஐப்பசி மாதத்தில் மாயூரம் காவிரி நதிக்கரையோரம் உள்ள நந்திக்கட்டத்தில் கங்கையானவள் நீராடுகிறாள். மேலும் பாரதத்தில் உள்ள அனைத்து நதிகளும் அங்கு நீராடி தங்களிடம் மக்கள் தொலைத்துச் சென்ற பாவங்களைப் போக்கிக் கொள்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ “”ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமோ?” என்றொரு பேச்சு வழக்கு உள்ளது. இத்திருத் தலத்தில் ஐப்பசி இறுதியில் நடைபெறும் “கடைமுக தீர்த்தவாரி’ மிகவும் சிறப்புடையது.

  ஸ்ரீரங்கத்தில் அருள் புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு ஐப்பசி மாதத்தில் தங்கக் குடத்தில் ஸ்ரீரங்கம் தென்கரையில் ஓடும் காவிரி நதியிலிருந்து திருமஞ்சனத்திற்கு யானை மீது தீர்த்தம் கொண்டு வருவார்கள். இது பெருமாளுக்கு நடைபெறும் “துலா ஸ்நானம்’ ஆகும்.

  பார்வதி தேவி விரதம் கடைப்பிடித்து சிவபெருமானின் உடலில் சரிபாதி இடத்தைப் பெற்றது துலா மாதமான ஐப்பசியில் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

  ஐப்பசி மாத அமாவாசை அன்று காவிரி நதியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். அன்று “காவிரியானவள் கங்கையாக மாறுகிறாள்’ என்று காவிரி புராணம் உரைக்கின்றது. அன்று மறைந்த முன்னோர்களுக்கு காவிரி நதிக்கரையில் நீர்க்கடன் தர்ப்பணம் வழிபாடுகள் செய்ய உகந்த நாள் என்பர். கேதார கெüரி விரதம் கந்தசஷ்டி விரதம் ஆகிய விரதங்கள் ஐப்பசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

  திருப்பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி மகாவிஷ்ணுவிற்கு மாலை சூடிய நாள் ஓர் ஐப்பசி மாத சதுர்த்தி நாள் ஆகும். இந்த நாளில்தான் ராமபிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் அனுபவித்த பின் சீதாப் பிராட்டி மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்கு வந்தார்.

  இதே ஐப்பசி சதுர்த்தசி நாளில்தான் நரகாசுரன் ஸ்ரீகிருஷ்ணரின் தேவியான சத்தியபாமாவினால் கொல்லப்பட்டான். அந்த நாளே தீபாவளியாக மாறியது.

  ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் பொய்கை ஆழ்வாரும் அவிட்ட நட்சத்திரத்தில் பூதத்தாழ்வாரும் சதய நட்சத்திரத்தில் பேயாழ்வாரும் அவதரித்தார்கள்.

  1. உப்பிலிஜி, ஐப்பசியின் சிறப்புக்களைச் சொன்னதுக்கு நன்றி. நான் கேட்டது, ஆடிப்பூரம், ஆனித் திருமஞ்சனம், வைகாசி விசாகம் ங்கிற மாதிரி ஐப்பசி சம்திங்ன்னு ஏதாவது சொல்றாங்களா?

 11. ஐப்பசி திவாலா என்பது ஐதீகம். பெண்ணைப் பெற்றவர்களுக்குத் தெரியும். வேறென்ன…. ஒரு பெண் தலைப் பிரசவத்துக்கு வந்திருப்பாள். அடுத்த பெண் தலை தீபாவளிக்கு வந்திருப்பாள்.. பெற்றோர்கள் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிப்பார்கள்….

  1. மூர்த்திஜி, இது நல்லா இருக்கு. கோயில்கள்ள கொண்டாடற திருவிழாக்கள் பற்றிக் கேட்டிருந்தேன். குடும்பங்கள் கொண்டாடற திருவிழாவைச் சொல்லியிருக்கீங்க…. பேர் நல்லா இருக்கு. புரட்டாசி மாசத்து கோவிந்தாவில் சொச்ச மிச்சம் இருக்கிறது இந்த ஐப்பசி திவாலாவில் பயன்படும்!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s