கேர்ள்ஃப்ரெண்டிடம் பேசுவது பற்றி வள்ளுவர்…..

டோண்டு ராகவன் பாணியில் சொல்வதானால், சமீபத்தில் 1987ம் வருஷம் தூர்தர்ஷனில் நேஷனல் நெட்வொர்க்கில் ஒரு பெங்காலிப் படம் போட்டிருந்தார்கள்.

 அதில் ஒரு தமிழ் பேசும் அரசாங்க உத்தியோகஸ்தர் பாத்திரம் வரும். கதைப்படி அது வெள்ளைக்காரர்கள் காலம்.

 “வெள்ளைக்காரன் இருக்கானே, அவன் நெருப்பு மாதிரி. ரொம்பக் கிட்ட போனா எரிச்சுடுவான். அதுக்காக தூரவே இருந்தோம்ன்னா நமக்கு கதகதப்பே கிடைக்காது.”

 இது வெள்ளைக்காரனுக்கு மட்டுமில்லை. உயர்பதவியில் இருக்கிற எல்லாருக்குமே பொருந்தும். பாஸ்களிடம் அளவுக்கதிகமாக நெருங்கி இருந்தால் போச்சு. நம்முடைய வீக்னஸ் பூரா தெரிந்து நாய்க்குட்டி போல ஆக்கிவிடுவார்கள்.

 “பொங்கல் அன்னைக்கு டிவிதானேடா பார்க்கப் போறே? ஒரு பதினோரு மணிக்கு ஆஃபீஸ்க்கு வா. அரை மணி நேரம் வேலை இருக்கு” என்பார்கள்.

 அரைமணி நேர வேலைக்கு ஒன்றரை மணிநேர கார்ப் பிரயாணத்தில் பங்களூரிலிருந்து ஒருத்தர் வருவாரா என்று எண்ணிப் பார்க்க மறந்து போவோம். பக்தி கண்ணை மறைக்கும்.

 “நாளைக்கு எம்.டி. விஸிட் இருக்கு. ஒரு பத்து ஸ்லைட். கரண்ட் ஸ்டேட்டஸ், நியூ மாடல்ஸ், பிராஜக்ட்ஸ் அவ்வளவுதான்” என்று ஈஸியாகச் சொல்வார்.

 கரண்ட் ஸ்டேட்டஸில் வால்யூம் அண்ட் ஷெட்யூல் அதியரன்ஸில் இருக்கும் முரண்பாடுகளை விளக்க நாலு மணிநேரம் டேட்டா எடுக்க வேண்டும். நியூ மாடல்கள் போட முடியாததற்கு சப்பைக்கட்டு கட்ட அடுத்த நாலுமணி நேரம். பிராஜக்ட்டை எடுக்கும் போது ராத்திரி எட்டு மணி ஆகிவிடும்.

 “நாளைக்கு கார்த்தாலே கொஞ்சம் சீக்கிரம் (அதாவது ஆறுமணி) வந்துடேன்” என்று கதையை தொடரும் போட்டு நிறுத்துவார்.

 விறைத்துக் கொண்டு பாஸின் கிட்டேயே போகாமல் இருந்தால் என்ன ஆகும் என்பது அப்ரைசல் எழுதும் போது தெரியும். ஒரு இன்க்ரிமெண்ட்டையே ‘தொலைச்சிக்கோ’ என்கிற மாதிரி கொடுப்பார்கள். புரமோஷன் காலத்தில் ‘நாட் கேப்பபிள் டு டேக் அப் அடிஷனல் ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ்’ என்று எழுதிக் கழுத்தறுப்பார்கள்.

 ‘நான் என்ன எல்லாம் பண்ணியிருக்கேன் தெரியுமா?’ என்று கடுப்பாகி பட்டியல் போட்டால் ‘அட, சொல்லவே இல்ல?’ என்பார்கள்.

 அதற்கப்புற்ம் நெருங்கித்தான் ஆக வேண்டும்.

 கொஞ்சம் நெருக்கமாகப் போனால் மேலே ஏறி உட்கார்ந்து கொள்கிற சபார்டினேட்களும் இருக்கிறார்கள். சொந்த விஷயம் பூரா பேசுவார்கள். சாயந்திரம் கொடூரமான பிரச்சினை வந்து ஆளைத் தேடினால் ஏற்கனவே வீட்டுக்குப் போயிருப்பார்கள். திடீர் திடீர் என்று பங்க் அடிப்பார்கள்.

 “நான் சொல்லல்லே? என் மச்சினிக்கு ஒரு லவ் அஃப்ஃபேர்ன்னு அதுல கொஞ்சம் பிரச்சினை ஆகி டிக் டொண்ட்டியைக் குடிச்சிட்டா” என்று விபரீதமான காரணங்களை ரெண்டுநாள் லீவுக்கு சொல்வார்கள். நமக்கு விஷயம் தெரியும் என்பதாலும், தெரிகிற லெவலில் பழகியதாலும் இதைப் பொருத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்!

 கேர்ள் ஃப்ரெண்ட் விஷயத்தில் கூட இது பொருந்தும்.

 ரொம்ப நெருங்கினால் ஸ்திரீலோலன் என்பார்கள். ரொம்ப விலகி இருந்தால் நம்பர் சரியில்லையோ என்று சந்தேகிப்பார்கள். ரொம்ப மையமாகவே இருந்தால் ஜாடைமாடையாக வேறே அர்த்தம் வருகிற மாதிரிப் பேசுவார்கள். அது புரிந்ததாகக் காட்டிக் கொண்டால் ‘ஐ டிட்ண்ட் மீன் தட்’ என்பார்கள்.

 இவ்வளவு சொல்வதற்கு பதிலாக திருவள்ளுவர்

 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

 என்கிறார்.

Advertisements

18 comments

 1. //
  ‘நான் என்ன எல்லாம் பண்ணியிருக்கேன் தெரியுமா?’ என்று கடுப்பாகி பட்டியல் போட்டால் ‘அட, சொல்லவே இல்ல?’ என்பார்கள்.
  //

  அட்டகாசம் சார்.. 🙂 இப்போ சமீபத்தில் கூட (இது நிஜமாகவே சமீபம் தான் :)) ரஜினி அவர்களும் முதல்வரின் ஒரு பாராட்டு விழாவில் இந்த குறளை குறிப்பிட்டு இருந்தார்.. முதல்வருடனான அவரின் நெருக்கம் குறித்து..

 2. இப்ப இருக்க கேர்ள் பிரண்டெல்லாம் வேறமாதிரி சார். நம்ம காலம் மாதிரி இல்லை. தூங்கி எந்திரிச்சா வேற ஒருத்தன் கொத்திட்டுப் போயிடுறான். மேலும் அவஙக் டிமாண்ட் வேற ஜாஸ்தி.

  ”தும் இத்னி தூர் சே?”ன்னு ஒரு ஹீரோ ஹோண்டா விளம்பரம் வரும் அதுதான் நிதர்சனம். அவ மெசேஜ் அனுப்பினா இவனும் அனுப்ப வேண்டியதுதானே? ஏன் அவ்ளோ தூரம் போகணும்?

  நம்பி சார் இரண்டாம் குறள் ஓக்கேனாலும் அது கொஞ்சம் இன்டிமேட் விஷயம், சார் சொன்ன்மாதிரி பாஸுக்கு பொருந்தாது அப்புறம் அர்த்தம் அனர்த்தம் ஆகிடும் பாருங்க.

 3. “பொங்கல் அன்னைக்கு டிவிதானேடா பார்க்கப் போறே? ஒரு பதினோரு மணிக்கு ஆஃபீஸ்க்கு வா. அரை மணி நேரம் வேலை இருக்கு” என்பார்கள்.”

  I have stuck like this situation in my office! is thr any TIRUKURAL to come out of this situation…

 4. வெள்ளைக்காரர்கள் கலாச்சாரத்தில் இரண்டும் பெண் தான் என்றாலும் ஃபிரண்டுக்கும், கேர்ள் ஃபிரண்டுக்கும் வித்தியாசம் நிறைய வைத்திருக்கிறார்கள். இங்கு பணிபுரியும் ஆஸ்திரேலியர் ஓருவர், இந்தியாவை சுற்றிப்பார்க்க ஒரு பெண்ணும் இரு ஆண்களுமாக வந்தார் .ஒரு ஆண் உடல் நிலை சரியில்லாமல் நாடு திரும்பி விட்டார் , இவரும் பெண்ணுமாக இந்தியாவை 6 மாதம் முழு சுற்றுலா சுற்றியதாக சுற்றிய இடங்களை சொன்னார். நான் அந்த பெண் ’’கேர்ள் ஃப்ரெண்டா ? என்று ஆர்வ அபத்த கேள்வியை கேட்க , அவர் அவசரமாக் , No ,she is friend only , my girl friend is in Newzland . நம்மூர்ல அப்படியா? மணி கேட்டாலே , ’’நடத்து’’ ’’நடத்து’’ என்பவர்கள் தான் அதிகம்..

  என் நண்பர் ஒருவர் , மென் பொருள் துறையில் ஆண் ,பெண் வித்தியாசம் இல்லை . பணிக்குத்தான் முன்னுரிமை என்று சொன்னார்…பல சென்னைக் கல்லூரியில் இருக்கும் ஆண் பெண் பழக்க கட்டு பாடுகளை பார்த்தால் , அதீத கட்டுப்பாடு , ஆபத்தான சுதந்திரமாகி பப்புகளையும் கிளப்புகளையும் ரொப்பும் சாத்தியம் தான் அதிகம் .

  நம்பி அவர்கள் எடுத்துக் காட்டிய வள்ளுவனின் ஸ்பெஷல் ”தீ”க் குறள் ,அய்யனுக்கே உரித்தான காதல் ஹைக்கூ…

 5. அசத்தல்..

  தெரிஞ்ச குறள் தான் . ஆனால் நிஜ வாழ்கையில் அழகாக ஒட்டவைத்து , பாஸ்-களுடன் எப்படி இருக்க வேண்டும் என்று ஞாபகபடுத்தி விட்டீர். அருமை சார்

 6. பதிவுலகில் ஒரு முத்து நீங்கள்…உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக நேர்த்தியாக இருக்கிறது…வாழ்த்துக்கள்….(நான் அதிகம் புகழ்வதாக நினைக்க வேண்டாம்)

 7. திருக்குறள் புதிய உரை – சுஜாதா
  ===========================
  அகலா(து) அணுகாது தீக்காய்வார் போல்க
  இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (691 )

  கிட்டேயும் போகாமல் தூரத்திலும் இல்லாமல் நெருப்பில் குளிர் காய்பவர்களைப் போல மன்னரிடம் பழக வேண்டும்.

  நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்என்னும்
  தீயாண்டுப் பெற்றாள் இவள். (1104)

  நீங்கினால் சுடும். நெருங்கினால் குளிரும். புதியதொரு நோயை இவள் எங்கிருந்து பெற்றாள் ?

  1. உப்பிலி, நல்ல காண்ட்ராஸ்ட் இல்லே? நீங்கினால் சுடறது சரி, நெருங்கினா குளிர்ரதும் சரி, அணைச்சா கதகதப்பா இருக்குமில்லை?

   அணைச்சா இருள் வர்ரது வெறும் விளக்கு
   இருள் வந்தப்புறம் அணைக்கிறது குலவிளக்கை! நல்லா இருக்கா?

 8. இந்த கருத்து ஆசிரியர்களுக்கும் மிக பொருந்தும். தன்னிடம் நெருங்கி பழகும் மாணவ மணிகளின் அந்தரங்களை அடுத்தவரிடம் சொல்லி நகைப்பதும், அவர்களை அடிமைகளைப் போல நடத்துவதும் எல்லா இடங்களிலும் பார்க்கும் உண்மை!.

  – ஜெகதீஸ்வரன்
  http://sagotharan.wordpress.com/

 9. :))

  //கேர்ள் ஃப்ரெண்ட் விஷயத்தில் கூட இது பொருந்தும்.

  ரொம்ப நெருங்கினால் ஸ்திரீலோலன் என்பார்கள். ரொம்ப விலகி இருந்தால் நம்பர் சரியில்லையோ என்று சந்தேகிப்பார்கள். ரொம்ப மையமாகவே இருந்தால் ஜாடைமாடையாக வேறே அர்த்தம் வருகிற மாதிரிப் பேசுவார்கள். அது புரிந்ததாகக் காட்டிக் கொண்டால் ‘ஐ டிட்ண்ட் மீன் தட்’ என்பார்கள்.//

  அப்ப அவங்க என்னதான் சொல்லி இருப்பாங்க! 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s