ஐ வில் டை ஃபார் யூ

என் நண்பர் ஒருவருக்கு டை அடிப்பவர்களைப் பிடிக்கவே பிடிக்காது. மனோ தத்துவ ரீதியாக அவர்கள் தப்பானவர்கள் என்று உறுதியாக நம்புகிறவர்.

 “ஆமாம்ய்யா… வயசை மறைக்கத்தானே டை அடிக்கறாங்க? எதுக்காக வயசை மறைக்கணும்….. எதுக்கு அது தடங்கலா இருக்கு? டையை கண்டுபிடிச்சவனே தப்பானவன்தான்” என்று பிரகாஷ்ராஜ் மாதிரி ஆள்காட்டி விரலை மூஞ்சிக்கு நேரே ஆட்டி பயமுறுத்துவார்.

 “ப்ரீமெச்சூரா தலை நரைக்கிறவங்க நிறையப் பேர் இருக்காங்க சார். அது மாதிரி ஒரு ஆள்தான் கண்டுபிடிச்சிருப்பான். அது மாதிரி ஆட்கள் டை போடறது தப்பில்லையே”

 துரதிஷ்டவசமாக நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது எதிரில் வந்த ஆசாமி எனக்குச் சத்ரு ஆகிவிட்டார். நெற்றிக்கு மேல் நாலு கிலோமீட்டர் வேக்கண்ட்டாக இருந்தது. அதற்கப்புறம் ஜில்ப்பா வளர்த்து அதில் சாயம் அடித்திருந்தார். கிரீடத்தைக் கழற்றி வைத்த எமன் மாதிரி இருந்தார். மீசையை செவ்வகமாகச் செதுக்கி கறுப்பு அடித்திருந்தது பார்க்க வயர் பிரஷ் மாதிரி இருந்தது.

 “பாரு, இது ப்ரீமெச்சூரா? பார்க்கவே வாஸ்கோடகாமாவுக்கு மூத்தவன்னு தெரியலை?”

 “இளமையா காமிச்சிக்கிறதில என்ன சார் தப்பு… ஆக்சுவலா அது தன்னம்பிக்கையை வளர்க்கும்”

 “இளமை மனசுல இருக்கணும்ய்யா ………ர்ல இருக்க வேண்டாம். இந்த ஆள் பரவாயில்லை. நேத்து ஒருத்தரைப் பார்த்தேன். கன்னத்தில டொக்கு விழுந்து, தவடை எல்லாம் ஒட்டகம் மாதிரி மடிஞ்சிருக்கு. கண்ணே தெரியலை, புருவத்துக்கு மேலே கையை சன்ஷேட் மாதிரி வெச்சிப் பார்க்கறாரு. ஏதாவது பேசினா ‘ஆங்…. ஆங்’ ந்னு ஏழு தடவை காதை மடிச்சிகிட்டு கேக்கறாரு. ஆனா முடியும் மீசையும் காக்கா மாதிரி கறுகறுன்னு இருக்கு. அவரை இந்த சாயம் இளமையாக் காட்டும்ன்னு சொல்றியா?”

 “இதுக்கு அவரோட தன்னம்பிக்கையைப் பாராட்டணும் சார். அவருக்கு வயசாச்சுன்னு நீங்கதான் நினைக்கிறிங்க. அவர் நினைக்கல்லையே?”

 “மண்ணாங்கட்டி, பைத்தியக்காரன் கூட தான் பைத்தியம்ன்னு தெரியாமத்தான் அலையறான். நீதான் பைத்தியம்ன்னு சொல்றே. அவனுக்கும் தன்னம்பிக்கையா?”

 “இதெல்லாம் ஒரு மனிஷனோட சொந்த விருப்பு வெறுப்பு சார். அதிலேர்ந்து எந்த இன்ஃபரன்ஸும் ட்ரா பண்ண வேண்டியதில்லை. முக்கியமா டை அடிக்கிற ஆசாமிகளுக்கு எதிர்ல இப்படிப் பேசினா அவங்க ஹர்ட் ஆயிடுவாங்க”

 பிரயோஜனமில்லை.

 அவர் அப்படியேதான் பேசிக் கொண்டிருந்தார். ஒருநாள் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர்,

 “ஹலோ… ஐயாம் ஷ்யாம்” என்று கையை நீட்டினார். அவரும் சாயம் பூசுகிற ஜாதி. நண்பர் அவரைப் பார்த்ததும் முதலில் சொன்னது,

 “எனக்கு டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது”

 வந்த ஆசாமி வில்லாதி வில்லன்.

“எனக்கும் டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது சார். அதனால எப்பவுமே நானாவேதான் அடிச்சுக்குவேன். வேணும்ன்னா சொல்லுங்க உங்களுக்கும் போட்டு விடறேன். ஐ வில் டை ஃபார் யூ” என்றார்.

Advertisements

25 comments

 1. நான் – ஸ்டாப் நகைச்சுவை …

  எளிய மேக்-அப் நிச்சயம் தன்னம்பிக்கை தரும் விஷயம் ..

  ’அந்த’ விஷயத்தில் ஒரு ஜோக் வருமே அது போல்’’ டை ‘ விஷயமும் ஆகிவிடும் ..90% டை அடிக்கிறார்கள் ,மீதி 10 % லை (lie ) அடிக்கிறார்கள்.

  //ஐ வில் டை ஃபார் யூ” // கடைசி வரிக்கு சிறப்பு பாராட்டு

 2. // “இதுக்கு அவரோட தன்னம்பிக்கையைப் பாராட்டணும் சார். அவருக்கு வயசாச்சுன்னு நீங்கதான் நினைக்கிறிங்க. அவர் நினைக்கல்லையே?”

  “மண்ணாங்கட்டி, பைத்தியக்காரன் கூட தான் பைத்தியம்ன்னு தெரியாமத்தான் அலையறான். நீதான் பைத்தியம்ன்னு சொல்றே. அவனுக்கும் தன்னம்பிக்கையா?”//

  ஹாஹாஹா.. காலையில முதல் பதிவு உங்க இடுகைதான் :))

  வயிறு குலுங்க சிரிக்க வைச்சிட்டீங்க 😉

 3. “நெற்றிக்கு மேல் நாலு கிலோமீட்டர் வேக்கண்ட்டாக இருந்தது. அதற்கப்புறம் ஜில்ப்பா வளர்த்து அதில் சாயம் அடித்திருந்தார்.”

  “கிரீடத்தைக் கழற்றி வைத்த எமன் மாதிரி இருந்தார். மீசையை செவ்வகமாகச் செதுக்கி கறுப்பு அடித்திருந்தது பார்க்க வயர் பிரஷ் மாதிரி இருந்தது”.

  “பாரு, இது ப்ரீமெச்சூரா? பார்க்கவே வாஸ்கோடகாமாவுக்கு மூத்தவன்னு தெரியலை?”

  நல்ல உவமை !
  டைட்டில் பார்த்தஉடனே நான் ஏதோ காதல் பத்திதான் எழுதப்போறீங்கனு நினைச்சுட்டேன்!

  நீங்க அடிச்சுக்கற “டை”க்கு இப்பிடியும் ஜஸ்டிபிகேஷன் தறீங்களா??

  சார் எனக்கு ஒரு சந்தேகம் திருமணமான ஒருவர் (வயது – உங்க வயசு னு வச்சிக்கோங்க) தலைக்கு “டை” அடித்தால் அவரது மனைவி அதை எப்பிடி எடுத்துக்கொள்வார்கள்?

  வயசானாலும் மனஷனுக்கு நினைப்பை பாருன்னா? அல்லது அவர்கள் தங்கள் கணவரது அழகை ரசிப்பார்களா?

 4. உங்க பதிவை பார்த்த உடனே “கூகில்” பண்ணினேன்! ஹேர் கலரிங் பத்தி நெறைய விஷயம் தெரிஞ்சுக்க முடிஞ்சுது! சில இங்க!

  2006 இல் ஹேர் கலர் மார்கெட் இந்தியாவில Rs 300 கோடி இது Business Standard ள வந்த விஷயம் (Nov)

  அடுத்த ரெண்டு வருஷத்துல முன்னுறு அறுநூறு ஆயிடுச்சாம் இது அதே Business Standard 2008ஆகஸ்ட் மாத பத்திரிகையில்.

  இப்போ என்னடான்னா இந்த பிசினஸ் மார்க்கெட் Rs 1200 கோடி தொட்டுருக்கு னு சொல்லுறாங்க!

  தலைவர் என்னிக்குமே சாதாரண விஷயத்தை எழுதறது இல்ல!!

  யாரும் சும்மா மலைய கட்டி இழு னு சொல்ல முடியாது! ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் சமாச்சாரம்!!

  பார்வை: http://www.dare.co.in/blogs/hair-dye-market-in-india.htm

  அட பரவாயில்லை னு நெனைச்சு அடுத்த பேஜ் பார்த்தா! ஹேர் கலரிங் பண்ணறதும் புகை பிடிக்கறதும் “நம்ம லிவரை” பாதிக்கும்னு குண்டை தூக்கி போடுறாங்க! ரொம்ப மெடிக்கல் சமாச்சாரமா இருக்கிறதுனால, இதனை சக பதிவர் “மேலிருப்பான்” (http://padmahari.wordpress.com) கவனிக்கட்டும்!

  பார்வை: http://groupsearch.bmj.com/search/search.cgi?query=hair+dye+&collection=bmj

 5. டை அடிப்பவர்களைப் பற்றி எனக்கு எந்த வித வெறுப்பும் கிடையாது. ஆனால் என் நண்பரின் தங்கையின் கண்வர் டை அடித்து, அது அலர்ஜியாகி அதனால் மரணமடைந்துவிட்டார். அது முதல் எனக்கு டை அடிப்பது என்றாலே பயம்..

 6. //டை அடிப்பவர்களைப் பற்றி எனக்கு எந்த வித வெறுப்பும் கிடையாது. ஆனால் என் நண்பரின் தங்கையின் கண்வர் டை அடித்து, அது அலர்ஜியாகி அதனால் மரணமடைந்துவிட்டார்.

  ஆத்தாடி.. தோல் ஒவ்வாமை வந்தால் பரவாயில்லை.. மரணம் கூடவா வருகிறது?

 7. மேல் உள்ள குறளை அப்படியே பொருத்தலாம்.

  கொஞ்சம் மாற்றியும் பொருத்தலாம்.

  கடி தான் ,அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் (மொக்கை மொக்கை என்று சொல்லி போரடித்து விட்டது )

  பொய்மையும் வாய்மை யிடத்த நரை தீர்ந்தநன்மை பயக்கும் எனின்.

 8. டாக்டர் எல். மகாதேவன்
  ayurved@sancharnet.in
  panchakarma101@yahoo.co.in

  இளநரை
  ========
  இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும். இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.

  தலைக்குச் சாயம் (Hair Dye)
  =======================
  சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம். கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். இது பீஹ்மீ போலப் பயன்படும். கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம். மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

  1. உப்பிலி, ரொம்ப உபயோகமான தகவல். ஆனா, தலை கருஞ்சிவப்பு நிறமாப் போச்சுன்னா ஜெர்மன் பிச்சைக்காரன் மாதிரி இருக்கும் சிலபேருக்கு!

 9. சுஜாதா பதில்கள்….
  ஆர்.கே.குமாரி, சென்னை.

  சுஜாதாவின் (ரங்கராஜன் இல்லை ஸார் !) இளமையின் ரகசியம் என்ன ?

  யாண்டுபலவாகியும் நரையிலன் ஆகுதல் மீண்டும் மீண்டும் dye அடித்துக்கொள்வதால்.

 10. அதென்னவோ தெரியல. உங்க கட்டுரை தலைப்பை படிக்க ஆரம்பிச்ச உடனே ‘கெக்கே பிக்கே’ னு சிரிக்க ஆரம்பிச்சுடறேன். (மனைவி சந்தேகமா பர்க்கிறா ஸார்)
  நகைச்சுவை அப்படியே நைஸா ஓடுது….எனக்கு சுஜாதா ஞாபகம் வருவதை தவிர்க்க முடியலை. தவறாக எண்ண வேண்டாம்,அதுவும் தங்களுக்கு பெருமையே.

 11. //பைத்தியக்காரன் கூட தான் பைத்தியம்ன்னு தெரியாமத்தான் அலையறான். நீதான் பைத்தியம்ன்னு சொல்றே. அவனுக்கும் தன்னம்பிக்கையா?”//

  இது செம பஞ்ச்ச்ச்ச்…….

 12. சுஜாதா பதில்கள்
  ==============
  இந்தியர்களைப் போல வெளிநாட்டவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தலை முடி நரைப்பதில்லையே…. ஏன் ?

  தலைமுடி மூன்று அல்லது நான்கு வகைப்படும். கரிய நிறம், பிரவுன் நிறம், ப்ளாண்ட் என்று சொல்லக்கூடிய பொன்னிறம், சிவப்பு நிறம்.
  கரிய நிறத்தில் நரை என்பது சுலபமாகத் தெரிந்துவிடும். இன்ன பிறருக்கும் நரைக்கிறது என்றாலும், கருப்பு முடிகளைப் பார்த்துப் பழகிய நம் கண்களுக்கு அது தெரிவதில்லை.

  மற்றபடி நரை முடி என்பது வம்சக் கோளாறுகள், உணர்ச்சிவசப்படுவது, கவலைப்படுவது போன்றவைகளுடன் தொடர்பு கொண்டது. ‘புகை பிடிக்கிறவர்களுக்கு நான்கு மடங்கு அதிக வேகத்தில் முடி நரைக்கிறது’ என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் 12 வருஷங்களுக்கு முன்னால் ஆராய்ச்சிக் கட்டுரைகூடப் போட்டிருந்தார்கள்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s