வருமா ஏழைகளுக்கு ஒதுக்கீடு?

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் என்று பலதிறப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடுகள் இருக்கின்றன. இந்த எல்லாப் பிரிவுகளையும் இரண்டாகப் பிரிக்கலாம்.

ஒன்று ஏழை, இன்னொன்று பணக்காரன்.

அரசாங்கம் தருகிற சலுகைகள் சரியாக ஏழைகளுக்குப் போய்ச் சேருகின்றனவா என்பது மில்லியன் டாலர் கேள்வி. பொருளாதார நோக்கில் எந்த ஒதுக்கீடுமே இதுவரை இல்லை. இப்போது பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் இப்போதைய வழிநடத்தல் புதிய ஒதுக்கீடுகள் எதையும் புகுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதாவது ஐம்பது சதவீதத்துக்கு அதிகமாக ஒதுக்கீடுகள் இருக்கக் கூடாது என்பது தற்போதைய நிலை.

ஏழைகள் பிழைக்க வழி செய்வதுதான் ஜாதியை ஒழிக்கச் சிறந்த வழி.

சிபாரிசு சட்டமாகிறதா என்று பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

Advertisements

15 comments

 1. //புதிய ஒதுக்கீடுகள் எதையும் புகுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதாவது ஐம்பது சதவீதத்துக்கு அதிகமாக ஒதுக்கீடுகள் இருக்கக் கூடாது என்பது தற்போதைய நிலை//

  ஏன் முடியாது? எங்கள் மாநிலத்தில் இலவசங்களைத் தேடி அலையும் பரதேசிகள் அதிகம் என மாநில அரசு கணக்கு காட்டினால், 109%, 119% கூட இட ஒதுக்கீடு பெற முடியும்.

  இட ஒதுக்கீடு பெற்ற ஒருவரின் குடும்பத்தைசேர்ந்த அடுத்த தலைமுறையினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றாகும் வரையிலும், இட ஒதுக்கீடும் ஒழியாது, சாதியும் ஒழியாது.

 2. சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு; கோடிக்கணக்கில் உள்ளோம் என்ற தகுதியின் பெயரில் கோரிக்கை விடுக்கும் பெரும்பான்மையினருக்கும் இட ஒதுக்கீடு. விந்தை நாடு இந்தியா.

  இதையெல்லாம் மீறி, தகுதி மட்டுமே மதிக்கப்படும் நாடுகளுக்கு செல்வோரைப்பார்த்து கூசாமல் சொல்லுங்கள்: Brain Drain

 3. முற்படுத்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட போன்ற உயர்வு ,தாழ்வு மனப்பான்மை எற்படுத்தும் சொற்களுக்கு மாற்று கண்டுபிடித்தாகவேண்டும் . தேவைப்படுவோர்களுக்கு சலுகை கிடைப்பதில் மாற்று கருத்து இல்லை .
  என்னுடன் படித்த பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்தவர்களின் மகன்/ள் கள். என் மகனோடு படிக்கும் பொழுது அரசு அதிகாரி மற்றும் அரசியலார் தயவில் மிகவும் பிற்படுத்தவர்கள் பட்டியலுக்கு போய்விட்டார்கள்.இட ஒதுக்கீட்டின் உண்மை காரணங்கள் நீர்த்து விட்டது. இங்கு சமுக நீதி இறுக்கமாக கண்ணை மூடிக்கொண்டுள்ளது. பொருளாதார சமத்துவம் இல்லாமால் , சமுக நீதியை நிலை நாட்டவோ, அமைதியை கொண்டு வரவோ முடியாது .
  பல கோடிகளை கொள்ளை அடித்த அரசியல்வாதிக்கு, பல லட்சங்கள் விவசாய கடன் தள்ளுபடி . எழை விவசாயி அடுத்த கடன் கிடைக்க வேண்டுமே என்று ஒழுங்காக கட்டி வந்ததால் ,சொற்ப தள்ளுபடி மட்டும்.

  இல்லை என்போர் இருக்கையிலே , இருப்பவர்கள் இல்லை என்றால் ‘’ எம்.ஜி .ஆர் பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது.

 4. இவ்வளவு நாட்கள் ஏழைகள் மீது இல்லாத அக்கறை, அதுவும் இட ஒதுக்கீட்டில் மட்டும் பீற்றிக்கொண்டு வருவது ஏன் ?ஏழைகளுக்குக் கட்டாயம் உதவ வேண்டும்.ஏழ்மை ஒழிக்கப் பட வேண்டும்.ஒன்றும் முடியாத காரியமுமல்ல. பணக்காரன் ஆனதும் கீழ் சாதிக்காரன் மேல் சாதி ஆகி விட முடியாது.கொஞ்சம் நடிக்கலாம்,அவ்வளவு தான்.இந்திய அரசியல் சட்டத்திலே சாதி ஒழிக்கப் பட வேண்டும்.தண்டிக்கப் பட வேண்டும்.(தீண்டாமைதான் தற்போது குற்றம்,சாதியல்ல).இதற்குத்தான் பெரியார் சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தினார்.அதை நேருவிடம் திரித்துக் கூறி ஏமாற்றி விட்டார்கள்.

 5. முற்படுத்த பிற்படுத்த என்று அரசியல் வாதிகள் பேசிக்கொண்டிருக்கும் வரை இவர்களால் ஜாதியை ஒழிக்க முடியாது.

 6. முற்படுத்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ யார் இந்த நாட்டின் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பதவிகளில் அமர்ந்துள்ளனர் என்பதையும், நேர்முகத் தேர்வுகளில் குறிப்பாக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ( அதைத்தானே இப்போது கூற முடியும்) தேர்வுக் கமிட்டியில் இடம் பெறும் நபர்கள் பொதுவாக முற்பட்ட சாதியினர் தங்கள் இனத்தவரை பதவிகளில் அமர்த்தியது உண்மையா என்பதை ஆராய்ச்சி செய்ய ஏன் இயலவில்லை. ‘உயர் சாதியினரியின் அறிவை உங்களால் ஒன்றும் செய்ய இயலாது’ என்று இட ஒதுக்கீட்டின் போது தான் வகிக்க வேண்டிய நடு நிலையை மறந்து கொக்கரித்த முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவை ஏன் யாரும் ஒன்றும் சொல்ல இயலவில்லை. ஏன் சர்மா, சாஸ்திரி அனைவரும் சாதி வாரிக் கணக்கெடுப்புக்கு அஞ்சி முட்டுக்கட்டை போட வேண்டும். முதலில் உங்கள் சர்மா, சாஸ்திரி,அய்யர், அய்யங்கார் எனும் ஜாதிப் பெயர்களை பொதுவில் சொல்லுவதையாவது நிறுத்தி விட்டு பிறகு உங்கள் உபதேசங்களை ஊருக்குச் சொன்னால் நல்லது.

  1. அன்புள்ள பாலமுருகன், கருத்துக்களுக்கு நன்றி. ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஒன்று பணக்கார ஜாதி, இன்னொன்று ஏழை ஜாதி. ஏழை எந்த ஜாதியாக இருந்தாலும் நசுக்கப்படறான். பணக்காரன் எந்த ஜாதியாக இருந்தாலும் நசுக்குகிறான். பொருளாதார ரீதியான ஒதுக்கீடு வந்தால் எந்த ஜாதி ஏழையாக இருந்தாலும் பயனடைவான். அதைத்தான் சொல்லியிருக்கிறோம்.

 7. அது சரி

  இப்படி முற்பட்ட வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை கீழ்க்கண்டவர்கள் ஆதரிப்பார்களா எதிர்ப்பார்களா

  வக்கீல் விஜயன்
  இன்பொசிஸ் நாராயண மூர்த்தி
  பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்
  ஷிவ் கேரா

  🙂 🙂

  பொருத்திருந்து பார்க்க வேண்டும்

  குறைந்த மதிப்பெண் எடுத்த தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவனுக்கு இடம் அளிப்பதால் மெரிட் பறிபோகும் என்று கூப்பாடு போட்டவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்த முற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவனுக்கு இடம் அளிப்பதற்கு என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்

  நான் எதிர்ப்பார்த்தது போலவே இது வரை யாருமே மூச்சு விடும் சத்தம் கூட கேட்கவில்லை

  1. டாக்டர், சிந்திக்க வைக்கிற ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறிர்கள். நன்றி. பொருளாதார நிலையில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினர் ஒதுக்கீடு என்று ஒன்று தனியாக வராமல், பொருளாதாரமாகப் பின் தங்கியவர்கள் என்று பொதுவாக வரும் போது நிலைமை ஆரோக்யமாக இருக்கும். பொருளாதார நிலை மட்டுமே அடிப்படை என்று ஆகும் போது நீங்கள் சொல்கிற கேள்வி மெல்ல அடங்கிவிடும் என்று நினைக்கிறேன். அதற்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம். ஏழை பணக்காரன் என்கிற இரண்டு ஜாதி மட்டுமே அப்போது மேலோங்கி இருக்கும். ஜாதி வித்யாசம் இல்லாமல் ஏழைக்கு ஏழை குரல் கொடுக்கிற நிலை அப்போது வரும்.

 8. உங்கள் பார்வைகள் முதலில் இன்றுவரை மத்திய அரசுப் பொதுதுறைகளிலும், மத்திய அரசின் அலுவலகங்களிலும் எத்தனை சதவிகிதம் கல்வி மற்றும் சமூகரீதியாகப் பிந்தங்கியவர்கள் உள்ளனர் என்பதை முதலில் உணர வேண்டும்.

  இட ஒதுக்கீடு அளித்தபின் ஆட்சேர்க்கை நிறுத்தப்பட்டதை உணர மறுக்கின்றீர்கள்.

  இன்றும் சரிவர இட ஒதுக்கீட்டை அரசாணைப்படி பின்பற்றாமல் அட்டூழியம் சய்யும் உயர்குடிப் பிறப்புகளை சட்டம் ஒன்றும் செய்ய இயலவில்லை, சமுதாய்ம் அது பற்றிய உணர்வின்றிக் கிடக்கின்றது.

  ஏன் அரசாங்கம் இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முன்வரவில்லை.

  அதிகார வர்க்கம் ஆணவம் பிடித்த உயர்ஜாதியாயிருப்பதால்தான் இந்த அநியாயங்கள்.

  குடிமைப் பணிகளில் பொதுப்பிரிவில் வந்த பிற்படுத்தப்பட்ட மாணவ்ர்களின் சேர்க்கையை நயவஞ்சகமாக மறுத்து உச்ச நீதிமன்றம் சென்றவர்கள் யார்? ஏன்?

  ஜாதியை பிற்படுத்தப்பட்டவர்களும் , தாழ்த்தப்பட்டவர்களும் விட்டு விட வேண்டும், உயர் ஜாதியினர் உயர்த்திப் பிடித்துக் கொண்டு தங்கள் இனத்தை வாழ வைக்க…

  ஏன் இன்னும் பிறப்பிலிருந்து இறப்புவரை ஜாதியை அழிக்க இயலாது போராட வைத்து விட்டு, அந்த உயர்ஜாதியினர் கடவுள், மதம் போன்ற கொள்ளைப்புறங்கள் வழியாக மற்றவரின் கண்ணில் மண்ணைத் தூவுவது சரியா?

  உலகுக்கெல்லாம் இரண்டு வர்க்கமாயிருந்த போதிலும் இந்தியக் கடவுள்களும் மதங்களும் மனிதர்களை இன்னும் கூறு போட்டுப் பல படித்தரங்களில் நிறுத்தியுள்ளதை உணர்ந்தால், ஒவ்வொரு பணியிடங்களிலும் இந்தச் சகோதரர்கள் பணியிட மாறுதல், பதவி உயர்வு, தகுதி மதிப்பெண் என்று பல்வேறு வகையான பாதிப்புகளுக்குள்ளாவதை எந்தப் பத்திரிக்கையாவது வெளியிட்டுள்ளதா?

  மதத்தில் உள்ள ஒதுக்கீட்டை மனிதன் தானாக மாற்ற முனைவதில்லை.. அரசாங்கம் தருவதில் மட்டும் அலைபாயும் மேல்தட்டு வர்க்கம்.. எதெற்கெடுத்தாலும் அரசியலமைப்புச் சட்டம் பற்றிப் பேசும் கூட்டம் எந்தப் பிரிவில் உச்சபட்ச வரம்பாக 50 சதவிகிதம் கூறப்பட்டுள்ளது என்பதை கூற இயலவில்லை. மேலும் எந்தப் பிரிவில் பொருளாதார இட ஒதுக்கீடு வழங்க வழியுள்ளது என்பதையும் கூற இயலவில்லை..

  முதலில் உள்ள இட ஒதுக்கீட்டை உருப்படியாக நிறைவேற்றச் சொல்லுங்கள், பிறகு பார்க்கலாம் உங்கள் வர்க்க பேத இட ஒதுக்கீடடினை…

  பச்சையாகச் சொன்னால் மாவில் அடித்த கொள்ளையை, பணியாரத்திலும் அடிக்க எத்தனிக்கும் கூட்டத்தை என்னவென்று சொல்ல…

  1. சரியாகச் சொன்னீர்கள் பாலமுருகன், அரசாங்கம் தருகிற சலுகைகள் தகுதியுள்ளவர்களுக்குப் போய்ச் சேருவதில்லை. இதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். பொருளாதார அடிப்படையில் என்று வரும் போது யாருமே ஏமாற்ற முடியாது. அங்கே விண்ணப்பத்திலேயே வருமானத்தைத்தான் போடுவார்களே ஒழிய வர்ணத்தைப் போட மாட்டார்கள். அப்போது எந்தக் கொம்பனாலும் ஏமாற்ற முடியாது, நிறுத்த முடியாது!!

 9. தவறு செய்பவனுக்கு பயந்து வீட்டைக் காலி செய்யுங்கள் என்ற இந்த வாதத்தை குப்பைத் தொட்டியில் வீசுங்கள். சொன்ன கருத்துக்களின் உண்மையான அர்த்தத்தை விடுத்து அந்த அதிகாரக் கும்பலைக் களையெடுக்க அல்லது அந்தத் தவறை சரி செய்ய எந்தவொரு கருத்தும் இல்லாது, மூட்டைப் பூச்சிகளுக்கு பயன்ந்த வீட்டுக்காரனாய் இருக்க பெரும்பான்மைச் சமுதாயத்தை பழக்கப்படுத்த எத்தனிக்கும் உங்கள் வாதம் தவறானது.

  தவறு செய்த மேல்வர்க்க அதிகாரிகளை காப்பாற்றியே தீர எத்தனிக்கும் உங்கள் மனத்தை மறைக்க இயலாமல் வெளியிட்டதற்கு நன்றி.

  கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தானே … வாழ்க இந்த மேதாவி மேட்டுமைத்தனம்.

  1. என்ன ஆச்சு பாலமுருகன்? ஏன் இந்தக் கொந்தளிப்பு? ஏழைகள் எந்த ஜாதியில் இருந்தாலும் ஏமாற்றப்படக் கூடாதுன்னு சொல்றேன்… தப்பா?

 10. “பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்” என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.

  என்ன ஞானம் பாருங்கள்! பூஜ்ய ஸ்ரீ என்று பெரிய மகான்களை அழைப்பார்கலவா? பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே! அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு! அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான்! கண் அவன் தான்!


  http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s