கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் syrup

”ஏன்ய்யா, அந்தாளு ஸ்மோக்கரான்னு கேட்டதுக்கு இல்லைன்னே, சிகரெட்டை ஊதித் தள்றானே?”

“இப்பவும் சொல்றேன். அவன் smoker இல்லை, smokest”

****************************************************************************************************** 

”நேத்து எங்க வீடு பூரா ஃப்ளோரோஸெண்ட்”

 “ஓ… நிறைய சி.எஃப்.எல். பல்பு வாங்கிப் போட்டீங்களா?”

 “ம்ம்ஹூம்…. என் தம்பி செண்ட் பாட்டிலை உடைச்சி தரை பூரா செண்ட் ஆயிடிச்சு”

 ********************************************************************************************************

”ஏண்டா, பாயில்’ஸ் லாவுக்கு ப்ரூஃப் கேட்டா இவ்வளவு தப்பும் தவறுமா எழுதியிருக்கே?”

 “ப்ரூஃப்தானே சார். திருத்திக் குடுங்க. பிரிண்ட் பண்றப்போ சரியாப் பண்ணிடலாம்”

 ********************************************************************************************************

“இன்னா நாற்பது, இனியவை நாற்பது இரண்டும் ஏற்றம் தருவன”

 “அது ஒரு நாப்பது, இது ஒரு நாப்பது. மொத்தம் எண்பதுதானே ஆச்சு? குறைஞ்சது நைண்ட்டியாவது அடிச்சாத்தானே ஏறும்?”

 *******************************************************************************************************

“என்னது, பாதரசம் எரியுமா?”

 “அடுப்புலேர்ந்து ரசத்தை இறக்கறப்போ பாதத்துலே கொட்டி ராத்திரி பூரா எரியுது எரியுதுன்னு புலம்பிகிட்டு இருந்தாங்களே அம்மா?”

 ******************************************************************************************************

”எப்படிடா சினிமாவுக்குப் பணம் கிடைச்சுதுன்னா மணிஜாடி பரிசோதனைங்கிறே? அது காத்துல ஆக்ஸிஜன் எவ்வளவு, நைட்ரஜன் எவ்வளவுன்னு கண்டுபிடிக்கத்தானே?”

 “எங்கம்மா கிச்சன்ல பணத்தைப் போட்டு வைக்கிற Money ஜாடியை பரிசோதனை பண்ணப்போ பணம் கிடைச்சது”

 ********************************************************************************************************

“ஏண்டா, படிக்கிறதெல்லாம் நல்லாத்தான் படிக்கிறே.. வகுப்புல இவ்வளவு கெட்டவனா நடந்துக்கறியே ஏன்?”

 “நல்லவனா நடந்துக்கலாம். ஆனா நன்னடத்தைக்காக சீக்கிரமே வெளியே அனுப்பிட்டீங்கன்னா சில கிளாஸ் மிஸ் ஆயிடுமே சார்”

 ******************************************************************************************************

“எம்.ஏ, எம்.ஃபில், பிஹெச்டின்னு ஏகப்பட்ட படிப்பு படிச்சவர் அவர். நல்ல இருமல் அவருக்கு. காஃப் சிரப்பை மறந்து வீட்லயே வெச்சிட்டு ஊருக்குப் போய்ட்டாரு. ஆனாலும் ஒண்ணும் பிரச்சினை இல்லை”

 “எப்படி?”

“கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் syrup”

Advertisements

9 comments

 1. மோகன்லாலுக்கும் ஜவர்லாலுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?

  தெரியலயே..

  மோகன்லால் சினிமால நடிக்கிறவரு…
  ஜவர்லால் பிளாக்குல கடிக்கிறவரு..
  எப்பூடி….

 2. நேற்று பெய்த மழையில் எங்க compound wall முழழுக்க தண்ணீரில் முழுகிடுச்சு!!

  அப்புறம்?

  அப்புறம் என்ன ?எல்லாரும் அந்த
  தண்ணீரை எடுத்து குடித்தோம்!

  ஏன்?

  அது Waterbury’s compound ஆச்சே!
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  நேத்து அடையாருக்கு வழி தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன்!

  அப்புறம்?

  நல்ல முயற்சி செய்து,பல பேரை கேட்டு,போய் சேர்நதுட்டேன்!

  பின்ன? சும்மாவா சொன்னங்க..
  “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” ன்னு
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  smoker is the best!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s