எந்திரன், இசையின் வளர்ச்சியா வீழ்ச்சியா?

”எப்படி சார் எந்திரன் பாட்டுக்கள்? மொத்த சிடிக்களும் முதல் நாளே வித்துப் போய் திரும்ப மானுஃபாக்ச்சர் பண்ற மாதிரி ஆயிடுச்சாமே?”

 “அப்படியா?”

 “என்ன அப்படியாங்கிறீங்க? அன்னைக்கு பாடல் வெளியீட்டு விழாவில சன் டிவியோட சக்சேனா சொல்லல்லை?”

 “சொன்னாரு, ரஜினி படம்ன்னா இப்படி ஒரு பரபரப்பு இருக்கத்தான் செய்யும்”

 “சயன்ஸ் ஃபிக்‌ஷணுக்குப் பாட்டு எழுதறது எப்படிப் பிரசவ வேதனையா இருந்ததுன்னு வைரமுத்து பேசினாரே கேட்டீங்களா?”

 “கேட்டேன், அந்தப் பாட்டைப் பாடினவருக்கும், அதைக் கேக்கறவங்களுக்கும் கூட அதே பிரசவ வேதனை இருக்கும்ன்னு நினைக்கிறேன்”

 “அப்டீன்னா?”

 “அந்தப்பாட்டு என் பழைய நினைவுகளைக் கிளறி விட்டிடிச்சு”

 “அட! நாஸ்தால்ஜிக் எஃபெக்ட்டா? அப்படி என்ன ஞாபகம் வந்தது?”

 “நாகப்பட்டினத்தில வாசல்ல ஒரு தொண்ணூறு வயசுத் தாத்தா ரொம்ப முடியாம ‘ஓமத்திராவகம்’ ந்னு வித்துகிட்டு வருவாரு. அந்த ஞாபகம் வந்தது”

 “ரோபோ அப்படித்தான் சார் பாடும். எட்டு கட்டைல ஏரிக்கரையின் மேலேன்னு பாடுமா?”

 “ரோபோ எப்படிப் பாடுதுங்கிறது அதோட சாமர்த்தியம் இல்லை. அதைப் புரோகிராம் பண்ணவனோட சாமர்த்தியம். நூறு பேரோட திறமைகள் இருக்கிற மாதிரி புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறதா ஒரு வசனம் வருது படத்திலே. ஹரிஹரன் மாதிரி பாடற திறமையையும் அதுக்கு புரோகிராமில கொடுத்திருக்கலாமே?”

 “ரெண்டு ஆஸ்கார் வாங்கின ஆளுக்குத் தெரியாத லாஜிக்கா உங்களுக்குத் தெரியும்?”

 “அதுதான் டிரபிள்ன்னு நினைக்கிறேன்”

 “எது?”

 “ஆஸ்கார். ஹாலிவுட் ரேஞ்சில படத்தை எடுத்திருக்கிறதா நிறையப் பேர் பேசினாங்க. இசையும் உலக அங்கீகாரத்தை மனசுல வச்சி பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன்”

 “அது கிரேட்தானே?”

 “அது கிரேட்தான். ரெஸ்ட் அஃப் தெ வேர்ல்டோட சங்கீதத்துக்கும் நம்ம சங்கீதத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. உலக சங்கீதத்தில நான் ஒரு ஞான சூன்யம்”

 “நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சிக்கணும். சங்கீத ரசனை தலைமுறைக்குத் தலைமுறை மாறுது. ஒவ்வொரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறை இசையை ரசிக்க முடியலை. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்த தலைமுறைலயும் இதில மாற்றம் இருக்கப் போறதில்லை”

 “இருக்கலாம். எனக்கென்னமோ இன்றைய மாறுதல் ஆரோக்யமாத் தெரியலை. இன்னைய ம்யூசிக் உலகத்தில எழுபத்தஞ்சு சதவீதம் டெக்னாலஜி. இருபத்தஞ்சு சதவீதம்தான் சங்கீதம். இப்படியே போனா கடைசியில வெறும் டெக்னாலஜி நோ சங்கீதம்ன்னு ஆயிடும்”

“காரியர் ஆரம்பத்தில உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேஷனே தெரியாது. நிறைய எஞ்சிநியரிங் கொஞ்சம் அட்மினிஸ்ட்ரேஷன்னு ஆரம்பிச்சீங்க. லெவல் ஏற ஏற எஞ்சிநியரிங் குறைஞ்சி அட்மினிஸ்ட்ரேஷன் அதிகமா ஆகல்லையா?”

 ”ஆமாம்”

 ”ஒரு கம்பெனியோட ஜி.எம்., பம்ப்புக்கு கிளாண்ட் பேக்கிங் பண்ணும் போது சிலைசிங் பண்ணனும், ஜாயிண்ட்டை ஆப்போசிட் ஆப்பொசிட்டா வைக்கணும், நாலு பேக்கிங் முடிஞ்சதும் வாட்டர் இன்சர்ட் வைக்கணும்ன்னு எல்லாம் சொல்லிகிட்டு இருப்பாரா? ஸ்டாப் ஆல் தெ வேஸ்டேஜஸ்ன்னு ஒரே லைன்ல சொல்லிட்டுப் போய்கிட்டே இருப்பாரு. அய்யே, லூஸு, இந்த ஜி.எம்முக்கு கிளாண்ட் பேக்கிங் கூடப் பண்ணத் தெரியலை, இவனெல்லாம் ஒரு ஜி.எம்மான்னு யாராவது சொல்வாங்களா?”

 “மாட்டாங்க”

 “இசை எஞ்சிநியரிங் மாதிரி, டெக்னாலஜி அட்மினிஸ்ட்ரேஷன் மாதிரி மோர் அஃப் அட்னிஸ்ட்ரேஷன்ங்கிறது வளர்ச்சிதான்”

 “எதையாவது சொல்லி நீ சொல்றதை மறுக்கணும் போல இருக்கு. ஆனா முடியல்லை”

 “தேவையில்லை சார். நீங்க இன்னும் சிலோன் ரேடியோ காலத்திலயே இருக்கீங்க. அப்பத்திய ம்யூசிக் வேறே. ம்யூசிக்கைக் கேட்கிற கருவிகள்ளே எவ்வளவு டெக்னாலஜி வந்திருக்கோ அவ்வளவு டெக்னாலஜி ம்யூசிக்லயும் வந்தாகணும். அப்படி வரல்லைன்னா ஒண்ணு ஒலிக்கருவிகளோட வளர்ச்சி வியர்த்தம்ன்னு ஆயிடும். இல்லைன்னா சங்கீதம் இந்த மிஸ்மேட்ச்சினாலே வளர்ச்சி அடையாமப் போயிடும். எந்திரன் பாட்டுக்களை ஃபைவ் பாயிண்ட் ஒன் ஸ்டேரியோவில கேட்டுப்பாருங்க. அது ஒரு அருமையான எக்ஸ்பீரியன்ஸ்”

 “டெக்னாலஜிக்கு ஏத்த மாதிரி சங்கீதம் மாறியிருக்குங்கிறே?”

 “ஆமாம்”

 “அது வளர்ச்சிதாங்கிறே?”

 “ஆமாம்”

 “அது புரியாதவன் ஞான சூன்யம்தாங்கிறே?”

“அதை நான் சொல்லல்லை. ஆனா சரியாப் புரிஞ்சிகிட்டீங்க”

Advertisements

34 comments

 1. எஞ்சிநியரிங், டெக்னாலஜி, அட்மினிஸ்ட்ரேஷன் , ..இசையை பிரிச்சு மேஞ்ச்சுட்டிங்க…. க்ளாண்ட்ல ரோப்பு வைக்கறது எளிய நல்ல உதாரணம்.

  //எதையாவது சொல்லி நீ சொல்றதை மறுக்கணும் போல இருக்கு. ஆனா முடியல்லை// இப்படி நிறைய ஆளுங்க சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்…நல்ல நகைச்சுவைசீண்டல்..

 2. இந்த ஃபாஸ்ட் ஃபுட் யுகத்தில் மலச்சிக்கல் அதிகமாவது சகஜம் என்பதால் இந்த மாதிரிப் இசை விரும்பப் படுவதும் சகஜம்.

 3. காதைக் கிழிக்கும் ராக் இசையைக் கேட்டு கண்ணில் தாரை தாரையாக அழுகிறார்கள் மேற்கில். கண்ணே கலைமானே கேட்டு நெகிழ்கிறோம் நாம். வெறும் உடுக்கைச் சப்தத்திற்காக உயிரையே கொடுப்பவர்களும் இருப்பார்கள். இசையும் இசைக்கருவிகளும் அவரவர் விருப்பங்கள் மற்றும் ரசனை. நாளைக்கு ரஹ்மானுக்கு அடுத்த டெக்னாலஜிக்காரர் வந்து பிறகு கம்ப்யூட்டரிலேயே பாடல் வரிகளையும், ட்யூனையும் கொடுத்தால் என்ன மூட், ஆம்பளையா பொம்பளையா அல்லது கோரஸா என்று கேட்டுவிட்டு கம்ப்யூட்டரே பாடிக் கொடுத்துவிடும். அடுத்த தலைமுறை அதை சிலாகித்துக் கொண்டாடும். வேலையில்லாததால் இந்நாள் பிரபல பாடகர்கள் தேங்காய்மூடி அல்லது திருமணக் கச்சேரிகள் அல்லது வட்டமாய் அமர்ந்து நோஸ்டால்ஜியா பாட்டுக்குப்பாட்டு என்று போய்விடுவார்கள்.

  நல்ல பதிவு. ஜாலியாய் எழுதியிருக்கிறீர்கள்.

 4. எது புரியவில்லையோ அதுதான் அதிக சில்லறை கொடுக்கும்!
  21 ஆம் நூற்றாண்டில் சில்லறைதான் முக்கியம்!
  so
  இனிமேல் நமக்கு கலை,கல்வி,இசை,இலக்கியம் எதுவும் புரியாது!
  1 என் தாத்தாவிற்கு பிடித்த G.Ramanathan என் கொள்ளுத்தாத்தாவிற்கு பிடிக்கல
  2.என் அப்பாவிற்கு பிடித்த MSV என் தாத்தாவிற்கு பிடிக்கல
  3 எனக்கு பிடித்த இளைய ராஜா என் அப்பாவிற்கு பிடிக்கல
  4 என் மகனுக்கு பிடித்த ARR எனக்கு பிடிக்கல

  இதிலே 1,2,3 நடந்த போது,internet இல்ல
  அதனாலே அது மத்தவங்களுக்கு தெரியலே!

 5. எந்த நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் கேட்டு ரசிக்க முடியவில்லையென்றால் இசை தானா என்ற சந்தேகம் வரும். ஹாலிவுட் ஆஸ்கார் என்று இழுத்து விட்டு என்னவோ ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளரெல்லாம் இப்படி நாராசமாக இசையமைப்பது போல சொல்லியிருக்கிறீர்களே? ரெஹ்மான் திறமைசாலி; எந்திரன் இசை ஏனோ தானோ. ஒன்று கவனித்தீர்களா? எந்திரன் இசை பற்றி எழுதுவரெல்லாம் ஹெட்செட் போட்டு கேட்டால் நன்றாக இருக்கும் என்று பரிவுரை வழங்கியிருக்கிறார்கள். ஹெட்செட் போட்டு கேட்டால் தான் ரசிக்க முடியுமா? ஹ்ம்ம்ம்.. என்ன இசை இது? வைரமுத்து…. ஹி ஹி ஹி… ஒண்ணான் நெம்பர் அடிவருடி. அவருடைய பிரசவ வேதனை என் காதுகளுக்கு மரண வேதனை.

  தலைமுறை வித்தியாசம் பற்றி எழுதியிருப்பது சரிதான் (?). என்னுடைய தாத்தா காலத்து ‘கொஞ்சும் புறாவே’ பாடலை என்னாலும், அதன் ஆங்கில மூலத்தை என் மகளாலும், இன்னும் கேட்க முடிகிறது. தமிழ்ச் சினிமா இசைக்கு ரெஹ்மான் தொண்டு செய்ததை விட ரெண்டு செய்தது தான் அதிகமென்று நினைக்கிறேன். தொழில்நுட்பச் சிறப்பைக் கேட்க வேண்டுமானால் எத்தனையோ மேற்கத்திய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள் (ரெஹ்மா நைசாக எடுத்து ஆளும் இசை உள்பட); பதினாறு வயது சூபர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். பாடலை ஷ்ரெடரில் போட்டு துவம்சம் செய்வதில் ரெஹ்மானுக்கு இணை ரெ.

  1. அப்பாதுரைஜி, சுவாரஸ்யமான பின்னூட்டத்துக்கு நன்றி. பைனாரல் என்கிற நுட்பத்தைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். திசை, தூரம் இரண்டும் துல்லியமாக இருக்கும். அது இயர் ஃபோனில் மட்டுமே உணர முடியும்.

   ஒரு சின்ன விஷயம், அந்த மைக்கை என் இல்லத்தரசி அமெரிக்கா போகும் போதே வாங்கி வந்து எனக்கு அன்பளிப்பு செய்து விட்டார்கள். நான் கம்போஸ் செய்யும் பாடல்களில் ஏற்கனவே அதைப் பயன்படுத்துகிறேன். (நானேதான் இதுவரை கேட்டுக் கொண்டும் இருக்கிறேன்)

 6. இந்தியாவில் இப்போ கஷ்டப்படுபவங்க எல்லாரும் 1960 க்கு முன்னாடி பொறந்தவங்க ..காரணம் எதையுமே அவங்க பாகுபாடு படுத்தும் விதம்….
  நல்லா இருக்கு (அ) நல்லா இல்லை ;
  நல்லது (அ) கெட்டது ;
  நல்லவன்(அ)கெட்டவன் ..
  மேல்ஜாதி (அ) கீழ்ஜாதி
  பாவம்(அ)புண்ணியம்
  whereas உலகத்தினர் பாகுபாடு படுத்தும் விதம்…
  உபயோகமானது(அ)உபயோகமற்றது
  பிடித்தது(அ)பிடிக்காதது
  Winner(a)Loser
  திறமைசாலி(அ)திறமையற்றவன்

  இந்தியாவில் இளைய தலைமுறையும் மாறிட்டு வராங்க

  அப்போ நீங்க?
  so
  எந்திரன் இசை பிடிச்சிருக்கா ,பிடிக்கலையா ன்னு கேளுங்க!
  நல்லா இருக்கா இல்லையான்னு கேக்காதீங்க!

  இத்தனை தெரிந்த நான் என்ன செய்தேன் பாருங்க!
  என் இருபது வயது மகள் சொன்னாள்:
  “அப்பா headset வச்சுண்டு கேளுங்க !ரொம்ப நல்லா இருக்கும்”
  நான் சொன்னேன்:
  “earplug வச்சுண்டு கேட்டா அதை விட நல்லா இருக்கு மா ”
  ரெண்டு நாளா அவ என்னோட பேசறதே இல்ல!

  1. கண்பத்ஜி, இயர் ப்ளக் பஞ்ச் பிரமாதம். ஆனா இந்த தலைமுறை பசங்க கிட்டே ரஹ்மான் பத்தி கொஞ்சம் அப்டி இப்டி பேசினா ரொம்ப டென்ஷன் ஆயிடறாங்க. என் பசங்களும் இப்படித்தான். அவங்க சும்மா பேசாம இருக்கிறதில்லை. சூடா விவாதம் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.

 7. well said and valid, Ganpat. non-judgmentalஆ இருக்கணும்னு நெனச்சுக்கிட்டே இருந்தாலும் சில சமயம் மறந்துடறோம்.. நினைவு படுத்தினதுக்கு நன்றி.
  – 1960க்குப் பிந்திப் பிறந்தவன்

  1. அப்பாதுரைஜி, ஒரு வருஷம் எல்லாம் நாங்க கணக்கில எடுக்கிறதில்லை. 🙂

   கண்பத்ஜி சொன்ன மாதிரி எஃபெக்ட்ஸ் எல்லாம் அட்ட்ரிப்யூட்ஸா இருந்தா சிக்ஸ் சிக்மால டிஓஈ பண்றது ஈஸி. த்ரீ லெவல், ஃபோர் லெவல் எஃபெக்ட்ஸா இருந்தா கிழிஞ்சிடும். ஆர்த்தோகனல் அரே போட்டாலே அறுபத்திநாலு எக்ஸ்பரிமெண்ட் வரும்!!

 8. ஒரு பாடல் நன்றாக இருக்கிறதா இல்லையா
  என்பதை தீர்மானம் செய்வது எது ?

  வார்த்தைகள் விளங்க வேண்டாமா ?
  மூன்று மாதங்கள் ஆராய்ச்சி
  செய்து விட்டு சிங்கத்தைப் பற்றி எழுதினேன்
  என்கிறார் – பாவம் வைரமுத்து !

  எந்தப் பாடல் நம்மை மீண்டும் மீண்டும்
  முணுமுணுக்க வைக்கிறதோ அதைத்தானே
  நல்ல பாடல் என்று ஏற்றுக் கொள்ள முடிகிறது.
  அத்தகைய பாடல்கள் தானே நிலைக்கும் ?

  வெறுமனே முக்க வைக்கும் பாடல்களை
  ஏற்றுக் கொள்வது எப்படி ?

  ஏழு எந்திரன் பாடல்களில் ஒன்றையாவது
  யாராவது கேட்டு விட்டு – வார்த்தைகளை
  மீண்டும் முழுமையாகச் சொன்னால் –
  அவர்களுக்கு என் சொத்து முழுவதையும்
  நிச்சயமாக எழுதித் தரத் தயாராக இருக்கிறேன் !
  (என் காலத்திற்குப் பிறகு,
  என் மனைவியின் காலத்திற்குப் பிறகு,
  என் பிள்ளைகள் ஒப்புக்கொண்டால் …….. )

  யாராவது தயாரா – கேளுங்கள் ஜவஹர் !

  (ஆனால் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும் –
  இசை கேட்க நன்றாகத் தான் இருக்கிறது !!!! )

  -காவிரிமைந்தன்
  http://www.vimarisanam.wordpress.com

  1. நன்றி காவிரிமைந்தன். இசைதான் நம்ம நாட்டை விட்டு விலகிகிட்டு இருக்கோன்னு பார்த்தா வார்த்தைகளும் எங்கேயோ போகுது! கிளிமாஞ்சாரோன்னா என்ன?

 9. வணக்கம் ஜவர்லால்ஜி…

  என்னமோ சொல்றீங்க… புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கும்…. காரணம் உங்கள் கதைகளின் வழியே ஜென் புததகம் என்று நினைக்கிறேன்… 🙂

  தங்களின் இரண்டு புத்தகங்களையும் வாங்கிவிட்டேன் எழுத்து நடை அருமை… படித்து விட்டு சொல்கிறேன்.

  P.s
  கிழக்கின் மார்கெட்டிங் அருமை.. காரைக்குடியில் ஒரு பெட்டிகடையில் இரு பக்கமும் பல புத்தகங்களின் அடடை படம் தெரியும் (தங்களின் புத்தகம் உட்பட) கட்டவுட் வைத்துள்ளர்கள்… பார்த்த உடன் ஆஹா நம்ம ஆளு புத்தகம் நம்ம ஊரிலே கிடைக்குதான்னு வாங்கிட்டேன்.
  10% தள்ளுபடியில்.

 10. //ஏழு எந்திரன் பாடல்களில் ஒன்றையாவது
  யாராவது கேட்டு விட்டு – வார்த்தைகளை
  மீண்டும் முழுமையாகச் சொன்னால் –
  அவர்களுக்கு என் சொத்து முழுவதையும்
  நிச்சயமாக எழுதித் தரத் தயாராக இருக்கிறேன் !
  (என் காலத்திற்குப் பிறகு,
  என் மனைவியின் காலத்திற்குப் பிறகு,
  என் பிள்ளைகள் ஒப்புக்கொண்டால் …….. )//

  ஒப்புக்கொண்டபின் சவால் விட வேண்டியது தானே….

  இது என்ன வெட்டி வேலை 🙂 🙂 🙂 🙂 (இசையமைக்காமல் இசையமைத்ததாக ஊரை ஏமாற்றிய பிராடு போல் !!!!)

  ஒரு வேளை உங்கள் பிள்ளைகள் ஒப்புக்கொண்டால் சவாலை ஏற்க நான் தயார்

 11. //மூன்று மாதங்கள் ஆராய்ச்சி
  செய்து விட்டு சிங்கத்தைப் பற்றி எழுதினேன்
  என்கிறார் – பாவம் வைரமுத்து !//

  பேரரசர் அல்லவா !சற்று அதிகம் சிரம பட்டிருக்கிறார் பாவம்!!

  இதையே நம் “அரசர்” எப்படி ஊதி தள்ளி இருக்கிறார் என்று பாருங்கள்!

  “சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?”

 12. கிளிமாஞ்சாரோன்னா என்ன?

  ஜவஹர் ஜி
  70 களில் கிரோம்பேட்,பல்லாவரம் தியேட்டர்களில் ஒருகாட்சியில் இரண்டு சினிமா போடுவார்கள்.ஒன்று ஆங்கிலம் மற்றது தமிழ்.ஒரு சமயம் Cleopatra மற்றும் பஞ்சவர்ணக்கிளி போடும்போது இப்படி போஸ்டர் அடித்தார்கள் :
  ஜனதாவில் இன்று 12 மணிக் காட்சி :
  “பஞ்சவர்ணகிளியோபாட்ரா”
  கிளிமாஞ்சாரோ எனக்கு அதை போலத்தான் தெரிகிறது

  ஆனால் இதை தயவு செய்து கவிஞரிடம் கேட்டுவிடாதீர்கள்.அவர் உடனே கண்கள் மேலே சொருக
  “கிளிமாஞ்சாரோ” …..அமேசான் காடுகளில் இருக்கும் ஒரு வகை கிளிவகை .இதில் ஒரு ஆண்கிளி ஒரு பெண் கிளியை விரும்பினால்
  அதைப்போலவே இலைகளையும் குச்சிகளையும் கொண்டு ஒரு உருவம் செய்து அதை அந்த பெண் கிளி பார்க்கும்படி வைக்குமாம்.இந்த பொம்மையை பழங்குடியினர் பெண் “கிளிமாஞ்சாரோ” என்று குறிப்பிடுவர்.” என்று ஒரு விளக்கம் கொடுப்பார்

 13. வணக்கம் ஜவஹர் ஜி,

  உங்கள் இதய பேத்தலை சில நாட்களாக படித்து வரும் ஒரு ரசிகன் நான்.

  //கிளிமாஞ்சாரோன்னா என்ன?//

  எனக்கு தெரிந்த தகவலை கொடுக்கலாம் என்று நினைத்தேன்.

  நான் அறிந்த வரை, “கிளிமஞ்சரோ (Kilimanjaro )” என்பது ஆப்ரிக்காவில் உள்ள ஒரு மலைசிகரதைக் குறிக்கும். மேலும் தவலுக்கு இங்க பார்க்கலாம்.
  http://en.wikipedia.org/wiki/Mount_Kilimanjaro

  நன்றி
  சிவா

 14. என்னை பொறுத்தவரை எந்திரன் இசை ஒரு டெக்னாலஜி குப்பை. அதில் இசை இல்லை. சீரற்ற ஒலி தான் இருக்கிறது. இசை என்றால் கேட்பவனை இசைய வைக்கவேண்டும். கர்நாடக இசை அதீதமாய் இருக்கும் போது அதுவும் மக்களிடம் இருந்து விலகி விடுகிறது. எந்திரன் இசை மேற்கத்திய இசையும் அல்ல . மேற்கத்திய பாப் பாடல்களையும் நான் விரும்பி கேட்டதுண்டு. அதில் இருக்கும் சீரும் இதில் இல்லை. எந்திரன் இசை ஒரு மட்டமான முன்னுதாரணம். அது இந்த வியாபார உலகத்தில் ரஜினி , ஷங்கர், ஆஸ்கார் புகழ் ஏ. ஆர். ரஹ்மான் என்ற பெரும் பிம்பங்களை வைத்து ரசிகனிடம் திணிக்கபடுகிறது. இதை வைத்து இதை வெற்றி என்றும் , அருமையான இசை என்றும் சொல்ல முடியாது.

 15. நண்பர் சுரேஷ் கண்ணன் கூறுகிறார்…

  மெல்லக் கொல்லும் விஷம் போன்றது ரஹ்மானின் இசை என்று வைரமுத்து ஏற்கெனவே சொல்லி விட்டார். சில உருவாக்கங்களைத் தவிர ரஹ்மானின் இசை முதல் கவனிப்பில் பொதுவாக அத்தனை கவர்வதில்லை.

  ரஹ்மான் தன்னுடைய பாடல்கள் ஒவ்வொன்றிலும் பல லேயர்களை அடுக்கி அதில் பல ஆச்சரியங்களை ஒளித்து வைக்கிறார் என்பதை தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன். குறிப்பாக நள்ளிரவு அமைதியில் கேட்கும் போது துரித நேரத்தில் ஒலித்து அடங்கும் ஓர் இசைத்துணுக்கை திடீரென கவனிக்கும் போது ‘ஏன் இதை இத்தனை நாள் கவனிக்கவில்லை’ என்ற ஆச்சரியத்தோடு ஏதோ நானே ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியது போல் பெருமிதமாயிருக்கும்.

  ரஹ்மானின் இசை பற்றி வேறு சில விமர்சனங்கள்….

  ரஹ்மான் நம் மனதிற்கு பரிச்சயமில்லாத புதியபரிமாணத்தில் புதுமாதிரியாக இசை அமைப்பதால் அந்த ராகத்தை மனசு உள்வாங்கி பழக்கப் படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப் படுகிறது.

  ரஹ்மான் இசை ஸ்காட்ச் விஸ்கி போன்றது. மூன்றாம் பெக்கில்தான் போதை ஏற ஆரம்பிக்கும்.

 16. எனக்குப் பல சமயங்களில் ராஜாவிற்கு்ப் பின் வந்த இன்றைய இசை இயக்குநர்களின் பல பாடல்கள் பிடிக்கும்.

  பாட்டை ஆஃப் செய்த பின்னர் கிடைக்கும் அமைதி, அதை விட அதிகம் பிடிக்கும்!

  – சிமுலேஷன்

  1. சிமுலேஷன்; சுவாரஸ்யமான பின்னூட்டம்!! நிம்மதி கேட்டு முனிவரிடம் போன ஒருத்தனுக்கு அவர் தந்த யோசனையாக ராமக்ரிஷ்னர் சொன்னதாக ஒரு கதை சொல்வார்கள். நீங்கள் சொல்வது அதை நினைவு படுத்துகிறது.

 17. //இது என்ன வெட்டி வேலை (இசையமைக்காமல் இசையமைத்ததாக ஊரை ஏமாற்றிய பிராடு போல் !!!!)

  dear friend, this doesn’t look good. what’s your problem?

 18. //இது என்ன வெட்டி வேலை (இசையமைக்காமல் இசையமைத்ததாக ஊரை ஏமாற்றிய பிராடு போல் !!!!)

  dear friend, this doesn’t look good. what’s your problem?//
  அவருக்கு ரொம்ப நாளாவே ஒரே ப்ராப்ளம் தான்…இளையராஜா…
  அதுக்கு மருந்து அவர்கிட்டயே இல்ல போல… அதான் போற இடத்துல எல்லாம் இப்படிப் போயிடுவாரு…
  நாம கொஞ்ச்ம் நகர்ந்து போயிட்டா சரி..
  என்னமோ இவர் அப்பன் வீட்டுச் சொத்தைக் கொள்ளை அடிச்ச மாதிரி…

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s