வீலர் வீலர் அனுபவம்

முதன்முதலில் வண்டி வாங்கும் ஆசை வந்த போது நண்பர்கள் புல்லட், யெஸ்டி, லாம்பி, வெஸ்பா என்று அவரவருக்குப் பிடித்தமான வண்டிகளை சிபாரிசு செய்தார்கள். கியர் வண்டி என்றாலே உடம்பெல்லாம் கிர்ர்ர்ர் என்றது. மேலும் அத்தனை பெரிய வண்டிகள் வாங்குகிற அளவு பட்ஜெட்டில் இடமில்லை.

நாகப்பட்டினத்தில் படித்த காலத்தில் சுவேகாவில் ஸ்டைலாக வந்து இறங்கும் இங்கிலீஷ் வாத்தியார் கண்ணிலேயே நின்றார். பெரியவனானதும் முதல்லே ஒரு சுவேகா வாங்கணும் என்று படிக்கிற காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். துரதிஷ்டவசமாக சுவேகா வருவது அப்போது நின்று போயிருந்த்து. ஒரு ஹீரோ மெஜஸ்டிக் வைத்துக் கொண்டு மதுரையையே கலக்கிக் கொண்டிருந்த என் அக்கா பையனைப் பார்த்து ஹீரோ மெஜஸ்டிக் வாங்கும் ஆசை வந்த்து. சொன்னதும் என் கோத்தாரி கெமிக்கல்ஸ் நண்பர்கள் கேவலமாகப் பார்த்தார்கள். நான் ஏதோ ஆண்மைக்கு இழுக்கு சேர்க்கும் விஷயத்தைச் சொன்ன மாதிரி அசிங்கமாகப் பார்த்தார்கள்.

பாஸ்கர் என்று ஒரு நண்பன் இருந்தான். கொஞ்சம் பெரிய இடம். அடிக்கடி வண்டி மாற்றுவான்.

“உனக்குன்னா பாதி விலைக்குத் தர்ரேன். என் புல்லட்டை வாங்கிக்கிறியா?” என்றான்.

அந்த புல்லட்டை ஸ்டாண்டிலிருந்து ரிலீஸ் செய்யவே தனியாக ஒரு போஸ்ட் டிப்ளமா படிக்க வேண்டியிருக்கும் போல இருந்த்து. முதல் முயற்சியிலேயே என்னை மாறுகால் மாறுகை வாங்கி விட்ட்து. ரிலீஸ் செய்த மறு வினாடி வலது கை மணிக்கட்டு மடிந்து, இட்து பாத்த்தில் வண்டி விழுந்த்து. இட்து பதம் தூக்கி ஆடும் நடராஜனாக,

“என்னடா, பிட்றா, பிட்றான்னு அலர்ரேன்… நீ பாட்டுக்க தம் ஊதிகிட்டு நிக்கறே?” என்றேன் பரிதாபமாக.

“பிடிக்கிறதெல்லாம் வேலைக்கு ஆகாது மச்சி. ரெண்டு தரம் கால்ல விழுந்தா தானா வந்துடும்”

“ரெண்டாம் தரம் விழறதுக்கு கால் வேணுமே? அது எங்கிருந்து வரும்?”

விலையைக் கேட்ட்தும் எனக்கு மூச்சே நின்று விட்ட்து.

என் பதினாலு மாச சம்பளம்!

“இன்ஸ்டால்மெண்ட்ல தரலாமா?”

“எத்தினி… ரெண்டா மூணா?”

“ம்ம்ஹூம்…. மாசம் அம்பது நூறுன்னு…..”

“மாசம் அம்பது நூறா! முடிக்க பதிமூணு வருஷம் ஆகும். இப்பவே அடிமாடு மாதிரி இருக்கே அத்தினி நாள் உசிரோட இருப்பியா? நெதைக்கும் குளோரின் குடிச்சிட்டு இருமுறே….”

அடுத்த ஆஃபர் நண்பன் ஷெரீஃபின் லாம்ப்ரெட்டா.

விலை ரொம்ப சரசம். ஒண்ணரை மாச சம்பளம்தான். ஆவலில் உந்தப்பட்டு போய்ப் பார்த்தேன். டயரெல்லாம் சப்பை. சீட்டுக்கு வேட்டியில் உறை தைத்துப் போட்டிருந்தான். உடம்பெல்லாம் துருவும் டொக்குமாக சொறிநாய் மாதிரி இருந்த்து.

“வண்டி ரன்னிங் கண்டிஷனா?”

“என்னடா இப்டிக் கேக்கறே, இப்பதான் ஆவடி போய்ட்டு வந்து நிறுத்தினேன்”

“எப்ப ஆவடி போனே, டாங்க் ஃபாக்டரியை ஆர்.வெங்கட்ராமன் திறந்து வெச்சப்பவா?”

“என்ன கிண்டலா?” என்றவன் கிக் ஸ்டார்ட்டரின் மேல் ஏறி ஒரு குதி குதித்தான். வண்டி ஸ்டார்ட் ஆன ஷாக்கில் சைலன்ஸர் கழன்று விழுந்த்து.

மாவு மிஷின் மாதிரி கொடூரமான இரைச்சல். நீராவி எஞ்சின் மாதிரி புகையைக் க்க்க ஆரம்பித்த்து. இரண்டு சீட்டுகளுக்கு இடையில் யாரோ பிடிதுணியைக் காயப் போட்ட்தில் ஏர் ஃபில்ட்டர் அடைத்திருந்த்து. (அது பிடிதுணி இல்லை அவன் ஜட்டி என்று பின்னால் விசாரணையில் தெரிய வந்த்து). ஆனால் இதைக் கண்டு பிடிப்பதற்குள் புகையில் எதிர் வீட்டுக் கிழவர் இரும ஆரம்பித்து புரை ஏறி விட்ட்து. தெரு பூரா இருட்டு. பெரிய களேபரம் ஆகிவிட்ட்து.

ஆர்சி புக் என் பாட்டியின் பெரிய எழுத்து சுந்தர காண்ட்த்தை விடப் பழசாக இருந்த்து. ஏறக்குறைய பனிரெண்டு தரம் டிரான்ஸ்ஃபர் ஆகி புத்தகமே தீர்ந்து விட்ட்து.

“டிப்ரிசேஷன் எல்லாம் போக….” என்று ஆரம்பித்தான்.

“டிப்ரிசேஷனைக் கழிச்சா நீதான் எனக்கு ஐநூறு ரூபா தர வேண்டியிருக்கும்” என்றேன்.

கோபம் வந்து வண்டியை நான் விற்கிறதில்லை என்று சொல்லிவிட்டான்.

“நாளைலேர்ந்து கம்பெனிக்கு வண்டிலதான் வரப்போறேன்”

“டூ ஹண்ட்ரட் லிட்டர் பெட்ரோல் டாங்க் ஒண்ணு ஃபிக்ஸ் பண்ணிக்க”

“ஏன்?”

“ஒரு கிலோமீட்டருக்கு பன்னண்டு லிட்டர் ஆகும் போலிருக்கே”

பேசாமல் வண்டி வாங்குகிற ஆசையையே விட்டு விடலாம் என்று இருந்த போது அந்தப் பெண் வந்தாள். பிரபல ஆட்டமோபைல் ஏஜன்ஸியில் விற்பனைப் பெண். இனிஷியல் இன்ஸ்டால்மெண்ட் பாதிப் பணம். மாசம் நூறு ரூபாய்தான் என்று எப்படியோ ஒரு லூனாவை என் தலையில் கட்டிவிட்டாள்.

டீல் த்ரூ ஆனதும் நண்பன் ஹரி “தாங்க்ஸ் மச்சி” என்றான்.

“நீ எதுக்குடா தாங்க்ஸ் சொல்றே?”

இதற்கு அவன் சொன்ன பதில் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கு விட்டுவிடுவதுதான் என் உடம்புக்கு நல்லது.

அந்த லூனாவை ஓட்ட ஆரம்பித்த முதல் நாளே இரண்டு டிராஃபிக் கான்ஸ்டபிள்களிடம் ஒன்றன் பின் ஒன்றாக மாட்டினேன். வலது பக்கம் திரும்புவது உதறலெடுக்கும் விஷயமாக இருந்த்து. ஆர்க்காட் ரோடு போலீஸ்காரர் எப்போது வலது பக்கம் ரிலீஸ் செய்கிறார் என்பது புரியாமல் தேவிக் கொண்டிருந்த்தில் கத்துக்குட்டி என்று கண்டுபிடித்து விட்டார். செட்டில் பண்ண ஓரத்து மெடிக்கல் ஷாப் போனபோது,

“பத்து ரூபாயா! இது லாரிக்காரன் ரேட்டு. பார்கெயின் பண்ணியிருந்தா சீப்பா முடிச்சிருக்கலாம்” என்றார்.

அடுத்த்து பனகல் பார்க் ஒன் வேயில் மாட்டும் போது இந்த இன்புட் பயன்பட்ட்து. அடுத்த இரண்டு நாட்களுக்கு வண்டியை எடுக்கவே பயமாக இருந்த்து. இருந்தாலும் ஆசை பயத்தை வென்றது.

மேற்கு மாம்பலத்தில் கிளம்பி, வெங்கட்நாராயணா ரோடு வழியாக மவுண்ட் ரோடைப் பிடித்தேன்.(மணி காலை ஆறேகால். போலீஸ்கார்ர் இல்லை). தாம்பரம் பக்கமாக வண்டி சீறிப் பறக்க ஆரம்பித்த்து. ஆட்டோக்களை ஓவர்டேக் செய்யும் போது த்ரில்லாக இருந்த்து. பிரேக் போடும் போதெல்லாம் பின்னால் யாராவது இடித்தார்கள். வண்டி ஆஃப் ஆகும் போதெல்லாம் இறங்கி ஸ்டாண்ட் போட்டு ஸ்டார்ட் செய்ய வேண்டியிருந்த்து. மொத்த வாகன்ங்களும் ஹாரன் அடித்து டென்ஷன் செய்தார்கள். அதற்கு பயந்து வண்டியை படுவேகமாக ஸ்டார்ட் செய்து ஜிவ்வென்று தூக்க வேண்டியிருந்த்து. அப்போது நடக்கும் சின்ன உரசல்கள் மோதல்களில் ‘கொள்ளையில போக’, ‘பாம்பு புடுங்க’ என்றெல்லாம் மக்கள் கிரீட் செய்தார்கள்.

வலது பக்கம் திரும்பியோ அல்லது யு டர்ண் அடித்தோதான் மாம்பலத்துக்கு திரும்ப வேண்டும். ஆனால் அதற்கு பயந்து நேராகப் போய்க்கொண்டே இருந்த்தில் காட்டாங்குளத்தூர் வந்துவிட்ட்து. காட்டாங்குளத்தூரில் ரோடு காஆஆஆலியாக இருந்த்தில் தைரியமாகத் திருப்பினேன். பெரிய கண்டைனர் லாரி மாதிரி ஆறு மீட்டர் டர்னிங் ரேடியஸில் திருப்பிய என்னை லாரிக்கார்ர்கள் வினோதமாகப் பார்த்தார்கள்.

ரோடின் எதிர்ப்பக்கம் வந்த்தும் ஆக்ஸிலேட்டரை முறுக்கி முறுக்கிப் பார்க்கிறேன் ரெஸ்பான்ஸே இல்லை. டயர் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவன்,

“வண்டி ஆஃப் ஆயிடிச்சுண்ணே” என்று சொல்கிற வரை தெரியவில்லை.

வதக் வதக் என்று உதைத்து வலது கால் வீங்கியது. வியர்த்து மூச்சு இரைத்த்து. எல்லாரும் கூடி வேடிக்கை பார்த்த்தில் அவமானமாக இருந்த்து. சடக்கென்று ஸ்பார்க் பிலக்கைக் கழற்றி எமரி பேப்பரால் தேய்த்தேன். தபால் அட்டையை ஃபீலர் கேஜாக உபயோகித்து கேப் செட் செய்தேன்.

பிரயோஜனமில்லை. மறுபடி வதக் வதக்.

கார்புரெட்டர் ஜெட்டைக் கழற்றி வாயால் ஊதினேன்.

பிரயோஜனமில்லை.

“மெக்கானிக் கடை எங்கேயாவது இருக்கா?”

“செங்கல்பட்ல இருக்கு”

செங்கல்பட்டா!

அதற்குள் பஞ்ச்சர் கடைக்கார்ர் ஒருவர் எழுந்து வந்தார்.

“ஏன்ய்யா புது வண்டில போய் கார்புரேட்டர் எல்லாம் கழட்டிகிட்டு? வண்டில பெட்ரோல் இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே ட்யூபைப் பிடுங்கிப் பார்த்தார். சுத்தமாக பெட்ரோல் இல்லை.

“ஐய்ய்யோ… பெட்ரோல் பங்க் எவ்ளோ தூரம்?”

“எதுக்குய்யா பங்க்கு? ரிசர்வுல போடேன்…. ”

“ரிசர்வு எவ்வளவு தூரம்?”

“ரிசர்வு எவ்வளவு தூரமா? ரிசர்வுன்னாலே இன்னான்னு தெரியாதா?”

“ம்ஹூம்”

வால்வை ரிசர்வுக்கு மாற்றி இரண்டு கிராங்க் செய்து ஸ்டார்ட் செய்து கொடுத்தார்.

“இவ்ளோ அப்பாவியா கீறியே…. எந்த ஊரு உனக்கு?”

நாகப்பட்டினத்தின் மானம் காற்றில் போவதை விரும்பாமல்

“தஞ்சாவூர்” என்றேன்.

“தஞ்சாவூர்ல எங்க?”

“அருளான்ந்த நகர்”

“அட… அருளான்ந்த நகர்ல எந்த்த் தெரு?”

“வண்டிக்காரத் தெரு”

“வண்டிக்காரத் தெருவில எங்கே?”

“வீட்லதான்”

“அட யார் வீட்டுக்கிட்டப்பா?”

“கிட்டப்பான்னு யாரையும் தெரியாதுங்க”

“சரி சரி போ…. தாம்பரத்தில ஒரு ஒண்ணு அம்பது பெட்ரோல் போட்டுக்க”

“ஒண்ணரை ரூபாய்க்கா?”

“என்ன விட்டுடு… முடியல்லை”

ஆரம்ப அனுபவங்கள் இப்படி இருந்தாலும் அந்த லூனா என்னிடம் ஐந்து வருஷம் இருந்த்து.

அதற்குப் பிறகு எத்தனை வண்டிகள் வாங்கினாலும், முறுக்கி விட்டால் முகத்தில் புஸ்ஸென்று காற்றடிக்க, மின்கம்பங்கள் சட்சட்டென்று பின்னோக்கி ஓட பயணம் செய்த அந்த இன்பத்தை ஒப்பிடும் போது என் முதல் விமானப் பயண இன்பம் கூட இரண்டாம் பட்சம்தான்!

Advertisements

21 comments

 1. சுவேகா எனக்கு அனுபவம் இருக்கு. தம்பி சலீசா எங்கியோ புடிச்சிட்டு வந்தான். ஓடி ஒடியே ஸ்டார்ட் செய்யனும் , அதே வேகத்துல ஜம்ப்பனும்.. பல சமயங்களில் கிலோமீட்டர் கணக்குல ஓடணும். சில சமயங்களில் சேர வேண்டிய இடத்தை, கூட ஓடியே ஓடியே வந்து சேர்ந்துவிடுவோம்.
  புல்லட் நகைச்சுவை அருமை, ஆமா, ஒருகாலத்தில் அந்த டப்ப, டப்ப டப்ப சவுண்ட் ஆண்மையின் அடையாளம்.
  லேம்ரட்டா சரியான கலாட்டா.
  மாம்பலத்துல இருந்து காட்டாங்குளத்தூர் போய் திருப்பமா? லூனா அனுபவம் சூப்பர் ராவ்டி. ( ஹரி சொன்னத சொல்லிருங்க இன்னும் கொஞ்சம் சிரிச்சுக்குறோம்.)
  ஆனா ஒன்னுங்க, குரங்கு பெடல்ல சைக்கிள பேலன்ஸ் பண்ண ஆளுகளுக்கு, அது எந்த வண்டியாயிருந்தாலும் (வடிவேல் பாணி)பேலன்ஸ்ங்கிறது பிரச்ச்னையே வராது. இந்த தலைமுறை தவறவிடும் சுகங்களில் இதுவும் அடக்கம்.

 2. உங்க பதிவுகளை ஆபீசில் இருந்து படிக்கிறது வேஸ்ட். வீட்டுல கதவ சாத்திட்டு படிக்கணும். முன்னகூட்டியே வீட்டிலும் சொல்லிரணும். எவ்ளோ சத்தம் கேட்டாலும் கதவ தட்ட கூடாதுன்னு. சிரிச்சு மாளல்ல. செம்ம.. காமெடி..

  எனக்கு என்பீல்ட் மொபா , சில்வர் பிளஸ் , டிவிஎஸ் சாம்ப், ரெண்டாயிரம் ரூபாய்க்கு நண்பரிடம் இருந்து வாங்கிய சன்னி எல்லாம் கண் முன்னே வந்துவிட்டு போகிறது. நமக்கும் இதைவிட பெரிய வீலர் கதை இருக்கு. எழுததான் நேரம் கிடைக்கல

 3. நல்ல பதிவு.என் அனுபவங்களைப் போலவே இருக்கு.நீங்களும் என் கேஸ் போல அந்த காலத்து ஆள்தானா.சுவேகா,லூனா எல்லாம் மகிழ்ச்சியான அனுபவங்கள். ஆனால் நான் சொந்த வண்டி வாங்கும் போது லேம்ப்ரெட்டா போய் லேம்பி வந்து விட்டது. பாண்டிச்சேரியில்புது வண்டி வாங்கி ஈரோட்டுக்கு ஓட்டிக்கொண்டே போன போது ரேஸ் பண்ணக்கூடாது என்ற இன்ஸ்ட்ரக்‌ஷன் மறந்து விட்டது. திடீரென்று இஞ்சின் ஆப். என்ன உதைத்தாலும் ஸ்டார்ட் ஆகவில்லை.சிறிது நேரம் கழித்து ஸ்டார்ட் ஆகும். ஈரோடு போய் சேர்வதற்குள் இரவு வந்து விட்டது. இருட்டில் வண்டி ஓட்டிப் பழக்கம் இல்லை. ஓசி வண்டி எப்போதாவது பகலில் தான்கிடைக்கும்.மறு நாள் மெக்கானிக்கிடம் போன போதுதான் தெரிந்தது வண்டியில் ஏது கோளாரில்லை என்று.புது வண்டியில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் போனால் இஞ்சின் சூடாகி அது நின்று விடும் என்று தெரிந்து கொண்டேன்.டூ வீலர் என்பதால் வீலர் வீலர் என்று இரண்டு முறை போட்டிருக்கிறீர்களோ!
  அன்புடன்
  ராஜசுப்ரமணியன் S.

 4. சார். இனிமே பதிவுகளுக்கு தலைப்பில ஒரு Disclaimer கொடுத்துருங்க. அப்போதான் Office-ல சிரிச்சு மாட்டாம தப்பிக்க முடியும். சிரிச்சு வயிறு வலி மட்டுமில்ல வாய் வலியும் வந்துடுச்சு. அருமையான நடையில் ஒரு கொஞ்சம் பெரிய பதிவு.

 5. ஜவஹர் அண்ணா, எப்போதும் போல அருமை. நான் ஓட்டிய ஒரே டூ வீலர் சைக்கிள் தான். அவ்வளவு பெரிய்ய அனுபவமெல்லாம் இல்லை..

  நாகப்பட்டினம் மானம் போகாம இருக்கு நல்ல வேளை தஞ்சாவூர்னு சொன்னீங்க.. “மயிலாடுதுறை” ந்னு மட்டும் சொல்லியிருந்தீங்க……..??????? என்ன நடந்திருக்கும்னு எனக்கே சொல்லத்தெரியாது..

  பிழைச்சிப் போங்க…

 6. கலக்கல் பதிவு! நிறைய இடத்தில் பொங்கி வரும் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி வாசித்து சிரித்தேன்!

  பின்னே..தீடீர்னு விழுந்து விழுந்து சிரித்தா அலுவலகத்தில் எல்லோரும் வினோதமாக பார்ப்பார்களே 🙂

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 7. நமக்கு சிறுவயதில் நேர்ந்த அனுபவங்களின் பகிர்வை வலைப்பூவில் பதிக்க ஒரு தொடர் பதிவினை எழுத அழைக்கிறேன் நண்பரே!.

  ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
  – ஜெகதீஸ்வரன்.

 8. அது ஒரு பொருட்டல்ல நண்பரே!. படைப்பாளி தொடங்கி வைத்த பகிர்வு, சங்கலித் தொடராய் செல்ல வேண்டும் என்பதே விருப்பம். தாங்கள் அன்பு தொ்ல்லைகளை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி!.

 9. உங்க பதிவுகளை ஆபீசில் இருந்து படிக்கிறது வேஸ்ட். வீட்டுல கதவ சாத்திட்டு படிக்கணும். முன்னகூட்டியே வீட்டிலும் சொல்லிரணும். எவ்ளோ சத்தம் கேட்டாலும் கதவ தட்ட கூடாதுன்னு. சிரிச்சு மாளல்ல. செம்ம.. காமெடி…
  மீனாட்சி நாச்சியார் சொல்றமாதிரி காமெடியோட அனுபவங்கள சொல்லி அசத்துறீங்க…அருமை…
  உங்கள் சுவாரசியமான நடையில்,தங்களின் சிறுவயது அனுபவத்தை வாசிக்க..சகோதரன் ஜெகதீஸ்வரன் சேர்ந்து நானும் ஆவலாய் உள்ளேன்..தொடருங்கள் நண்பரே.

 10. நானும் வண்டி ஓட்டி பழகினது லூனாவுலதான்….
  சொன்ன பேச்சையே கேக்காது..
  வேகமா முறுக்குனா மெதுவா போகும்.
  மெதுவா முறுக்குனா வேகமாப் போகும்.
  பழைய நினைவுகளை கிளறி விட்ட ஜவகருக்கு நன்றி..
  நல்லா சிரிக்க முடிஞ்சது…

 11. நல்ல சரளமான நடை…இது அதை ஞாபகப் படுத்தி, அது இதை ஞாபகப் படுத்தி… (AUTOகிராப் படம்..)– எதற்குச் சொல்கிறேன் என்றால், பின்னூட்டங்களைப் பாருங்களேன்.. எல்லாரும் ஒரு கொசு வர்த்தியுடன் FLASHBACK ல்.. எனக்குமே எனது முதல் வண்டி ஞாபகம்தான் வந்தது… அப்படி ஞாபகம் வரவைக்க ரொம்ப சாதுர்யம் வேண்டும் அல்லவா? பிரமாதமாக இருக்கு!
  -ரோமிங் ராமன்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s