நெஞ்சில் இட்டக் கோலம் எல்லாம்……

நண்பர் ஜெகதீஸ்வரனின் (http://sagotharan.wordpress.com) தொடர்பதிவு அழைப்பை ஏற்று இந்த இடுகையை எழுதுகிறேன்.

அரை டிராயர் பருவ நினைவுகளை அசை போடும் போதெல்லாம் மனதுக்குள் அழியாத கோலங்கள் பட்த்துப் பாட்டு கேட்கும்.

அழியாத கோலங்கள் பட்த்தில் வருகிற மாதிரி இயற்கை கொஞ்சும் ஊரில்லை நாகப்பட்டினம். ஆனாலும் மனதுக்குள் இருக்கும் நாகப்பட்டினம் ஒரு வசந்தபுரியாகத்தான் இருக்கிறது. நாங்கள் விளையாடிய பல விளையாட்டுக்கள் இன்றைக்கு வழக்கொழிந்து போய் விட்டன.

டயர் ஓட்டுவது என்பது என் காலப் பையன்களுக்கு ரொம்ப்ப் பிடித்த விஷயம்.

சைக்கிள் டயர் ஒன்றை ஒரு குச்சியால் உருட்டிக் கொண்டு வெறி பிடித்த மாதிரி ஓடுவோம். மூச்சு இரைக்கும், வியர்க்கும்.ஆனாலும் அது ஏதோ ஒரு தவிர்க்க முடியாத கடமை மாதிரி ஓடுவோம். அனுபவம் இல்லாத டயர் டிரைவர்களுக்கு பார்வை டயர் மேலேயே இருக்கும். எதிரில் வரும் ஆட்கள் தெரியாது. புண்டரி குளத்தில் குளித்து விட்டு கைகளை ஏரோபிளேன் மாதிரி விரித்தபடி வேட்டியைக் காயப் போட்டபடி சில ஆசாமிகள் வருவார்கள். அவர்களுக்குப் பக்கவாட்டில் டயர் புகுந்து வேட்டியை உருவி சுருட்டிக் கொண்டு ஓடும். கோலாமீன் அல்லது கோலமாவு விற்கும் பெண்களுக்கெதிரே ஏற்பட்ட இந்த எதிர்பாராத நிர்வாணத்தில் ஆத்திரம் பாதியும் வெட்கம் பாதியுமாக அவர்கள் படும் பாடு பரிதாபமாக இருக்கும். இந்த மாதிரி ஆசாமிகள் மூன்று ரகம். முதலாவது ஜளபுள ஜிங்ஸ் அண்டர்வேர், இரண்டாவது ஆறு இன்ச் அகல கோவணம், மூன்றாவது உள்ளாடை நல் அண்ட் வாய்ட் ரகம். விரட்டவும் முடியாமல் விடவும் முடியாமல் தவிப்பார்கள்.

“ஏய்.. ஏய்.. என்பார்கள். பேச்சே வராது.

“உங்கொப்பாவை வந்து பாக்கறேன்” என்பார்கள்.

“இப்படியே வந்தீங்கன்னா எங்கப்பாவால உங்களைப் பாக்க முடியாது” என்று சொல்லிவிட்டு ஓடி விடுவோம்.

ஒரு சிலர் இந்த டயர் ஓட்டுவதில் விற்பன்னர்கள். நடக்கிற வேகத்தில் சர்வ நிதானமாக ஓட்டும் திறமை படைத்தவர்கள். கீ போர்ட் பார்க்காமல் அறுபது வார்த்தை டைப் செய்கிற ஆட்கள் போல எதிரில் பார்த்தபடி ஜபர்தஸ்த்தாக ஓட்டுவார்கள். குச்சியில் இடப்புறம் ஒரு அடி, வலப்புறம் ஒரு அடி என்று இவர்கள் டயர் ஓட்டுவதே ஒரு கவிதை. மிக்க் குறைவான டர்னிங் ரேடியஸில் திருப்புவார்கள். எட்டு போடுவார்கள். ஓடிக் கொண்டிருக்கும் டயரில் இடப்புறம் புகுந்து வலப்புறமாக வெளியே வருவார்கள். அடுத்தவன் டயரோடு கொல்லிஷன் போட்டி வைத்து ஜெயிப்பார்கள்.

சில குசும்பர்கள் தெருச் சாக்கடையில் காலைக் கடன் முடித்துக் கொண்டிருக்கும் சிறுமிகளை நோக்கி இடிக்கிற மாதிரி ஓட்டிக் கொண்டு போய் போட்டோ ஃபினிஷ் துல்லியத்தில் திசை திருப்புவார்கள். இந்த டென்ஷணை வித்ஸ்டாண்ட் செய்ய முடியாத சிறுமிகள் ஒரு ஹை ஃப்ரீக்வன்ஸி அலறலுடன் எழுந்து அம்பு மாதிரி வீட்டுக்குள் ஓடுவார்கள். ஒரு சிலர் பயத்தில் சாக்கடைக்குள் விழுந்து விடுவார்கள்.

சில எமகாதகிகள் பன்றியை அடிக்க வைத்திருக்கும் கற்களால் எதிர்த் தாக்குதல் நட்த்துவார்கள். ஒவ்வொரு கல்லடியையும் ஒரு பூவாகப் பாவித்து ‘கடங்காரன், கம்மனாட்டி, கழிச்சல்ல போக’ என்று தமிழில் அர்ச்சனை செய்வார்கள்.

இந்த டயர்களை மரியாதையாக கிட்டிப் புல் விளையாடும் இட்த்தில் சுவர் ஓரமாகப் பார்க் செய்வோம். சில வசதியான வீட்டுப் பிள்ளைகள் ஒரு ரிம்மில் டயரை ஏற்றி அத்தோடு சேர்த்து ஓட்டுவார்கள். அந்த மாதிரி ரிம்மில் மாட்டிய டயர்கள் பிஎம்டபிள்யூ கார் மாதிரி ஒரு கனவு வஸ்து. எனக்குக் கிடைத்த ரிம் மாட்டிய டயர் ஒன்றை ஓட்டிக் கொண்டு போன போது அப்பளம் விற்கும் பாக்கியம் மாமி மேல் இடித்து விட்ட்து.

“ஈஸ்வரா…” என்று பலஹீனமாக முனகியபடி குண்ட்டி பட்ட காந்தி மாதிரி கீழே சாய்ந்து விட்டாள் மாமி.

வைத்தியர் கந்தசாமிப் பிள்ளை இருபத்திநாலு மணி நேரம் கெடு கொடுத்திருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். எல்லாரும் என்னை கோட்சே மாதிரி பார்த்தார்கள்.

கடைசியில்தான் தெரிந்த்து, பிள்ளை கொடுத்த கெடு பழைய பாக்கியை செட்டில் பண்ண என்று!

Advertisements

22 comments

 1. ////வைத்தியர் கந்தசாமிப் பிள்ளை இருபத்திநாலு மணி நேரம் கெடு கொடுத்திருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். எல்லாரும் என்னை கோட்சே மாதிரி பார்த்தார்கள்.

  கடைசியில்தான் தெரிந்த்து, பிள்ளை கொடுத்த கெடு பழைய பாக்கியை செட்டில் பண்ண என்று!////

  எப்படி நண்பரே உங்களால் முடிகிறது..எதை எழுதினாலும் சுவாரஸ்யம் குறையாம் எழுத…சிரித்து மாளல..
  அனுபவம்,அழகியல்,நகைச்சுவை,நினைவுகள்,பேச்சுவழக்கு,நயம் என அறுசுவைக் கலந்து பெருஞ்சுவை உண்ண தந்திருக்கிறீர்கள்…நன்றி நண்பரே…

 2. சிறுவயது நினைவுகள்-இந்த தொடரை தொடர்ந்து கொண்டு சென்றதற்கு நன்றி…இந்த தொடர்ப்பதிவு சங்கிலித்தொடராய் தொடர வேண்டும் என்பது எங்கள் அவா..நண்பரே தாங்கள் யாரையேனும் அடுத்து அழைத்து தொடரை நிற்க விடாமல் தொடங்கி வைத்தால்,பலர் நினைவுகளை நாம் அறியவும்,நம் நட்பு வட்டாரம் விரிவடையவும் வழிவகையாக அமையும்..தொடருங்கள் நண்பரே..

 3. டு வீலர் ரகளையை சிங்கிள் வீலர் ரகளை மிஞ்சிவிட்டது. ஓ.. பி.எம். டபிள்யூ ஒட்டிறிக்கிங்களா…ஸ்போக்ஸ் வைத்ததா? ஸ்போக்ஸ் இருந்தா , அந்த குச்சியை வைத்து கட, கட கட சவுண்டு வர வைப்பாங்க பசங்க . அப்படியே வேகத்தை குறைக்கும் டெக்னிக்கும் அத்துபடியா இருக்கும் . எனக்கு ரிப் கம்பியோட ஒரு டயர் கிடைத்ததே பெரிய லக்.
  உங்க டயர் வித்தை கள் குலுங்க வைத்து விட்டன..
  அதிலும் நல் அண்ட் வாய்ட் சங்கத்தினர் பட்ட பாடும் , கல்லர்ச்சனையும் நிறுத்த வாய்ப்பில்லா நகைச்சுவைகள்.
  கில்லியும், டயர் விளையாட்டும் நம் மாநில முன்னோடி விளையாட்டுகள்… ஏன் ஒலிம்பிக்கில் இன்னமும் சேர்க்காமல் இருக்கிறார்கள் என்பதும்..அதற்கு குரல் கொடுக்காமல் இருப்பதும் ஆச்சர்யம் …

 4. அழைப்பினை ஏற்று எழுதியமைக்கு நன்றி நண்பரே!.

  உங்கள் பதிவை படித்தவுடன் “ஐ, டயர் ஓட்டிய அனுபவம் எனக்கும் இருக்கிறது” என்று சொல்லத் தூண்டியது. நகைச்சுவை மிளிரும் வார்த்தைகள் நிறைந்த வலைப்பூ உங்களுடையது நண்பரே!

 5. தொடர்பதிவை தொடர்ந்ததற்கு நன்றி நண்பரே… பார்முலா கார் பந்தயங்களுக்கு கொடுக்கும் வர்ணனை கூட உங்களிடம் தோற்றுவிடும், அசத்தலான பதிவு. உங்கள் நகைச்சுவை உணர்வு பொறாமை பட வைக்கிறது…

 6. நினைவுகளை தொடர்பவர்கள்:

  1.படைப்பாளி -கருப்பு,வெள்ளையில் கலர்புல் நினைவுகள்..

  2.களர்நிலம் -என் நினைவுகளின் நிர்வாணம்.

  3.சகோதரன்-நானும் என் கிராமமும்

  4.இதயம் பேத்துகிறது -நெஞ்சில் இட்டக் கோலம் எல்லாம்……

 7. அன்பார்ந்த வலைபதிவரே,

  தங்களின் தளம் தமிழி திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. உமது பதிவுகள் அனைத்தும் நேரடியாகவே தமிழியில் ஊட்டப்படும். தமிழ் வலைபதிவுகளை திரட்டி தமிழ் வாசகர்களுக்கு தரும் ஒரு ஆரம்ப முயற்சி. எமது தளம் இன்னும் ஆல்பா நிலையிலே இருக்கின்றது. தமது தளத்தின் பதிவுகள் தமிழியில் இடம்பெறுவதை விரும்பாவிடின் எமக்கு அறியத்தரவும். மேலும் தகவல் மற்றும் தொடர்புகளுக்கு எம்மை அணுகவும்….

  நன்றிகள்,

  தமிழி மக்கள் தொடர்பு அலகு

 8. பிரமாதம். டயரை தட்டி உருட்டிக்கொண்டு அரை டிராயர்கள் அரை டஜன் பேர் திரியும் காட்சியை மனதில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

  காரைக்கால் நாட்களில் டீம் கட்டி இந்தப்பக்கம் நாலு பேர் எதிர்பக்கம் நாலு பேர் நின்று கொண்டு டென்னிஸ் போல் டயரை உருட்டி விளையாடியிருக்கிறோம். ஆவேசமாகப் போகும் மேட்ச்.

  சலீல் சௌத்ரியையும் நினைவு படுத்தினீர்கள். நன்றி.

 9. ‘தமிழ்ப் படம்’-ல் வருகிற மாதிரி அப்படியே பெரிய பையன் ஆகி விட்டீர்களா?…
  நல்ல இருக்குங்க… எங்களையெல்லாம் அப்படியே தலையை அண்ணாந்து நிலைகுத்தி சுருள் சுருளாய் பார்க்க வைத்துவிட்டீர்கள் ….
  //குண்ட்டி பட்ட காந்தி // -எழுத்துப்பிழை…. கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது…

 10. Dear Sir

  As usual very interesting and very funny. I too enjoyed the tyre driving. The 8 play tyre will wobble where us 12 play (rickshaw tyre) will run steadily and easy to drive. As you said the stick used to drive will act as brake. In my village only one person used to drive with rim…his father had cycle repair shop….to do the test drive of Tyre with rim…we used to bribe him with candy…gooli..ect…..BY THE WAY…HOW YOU MISSED GOOLI…?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s