ஜொள்ளுக்கிரைத்த நீர் சீட் வழியோடி

ஞாயிற்றுக் கிழமை மாயாஜாலில் ஒரு படம் பார்த்தே தீருவது என்று புறப்பட்டோம்.

தியேட்டருக்குப் போனால் தமிழ், ஆங்கிலப்படங்கள் எல்லாம் ஃபுல். மேலும் போன நேரத்துக்கு (மதியம் ஒன்று முப்பது) ஷோவே இல்லை. அடுத்த காட்சி எத்தனை மணிக்கு என்று பார்த்தோம். மூன்று மணிக்கு இருந்த்து. பட்த்தின் பெயரே வாயில் நுழையவில்லை. ஹிந்திப் படம். (டபாங்கா, டுபாங்கா?) யார் நடித்த்து என்றே தெரியாது. குப்த ஞான் மாதிரி ஏதாவது மேட்டர் படமாக இருந்து தொலைக்குமோ என்கிற பயம் கொஞ்சம் இருந்த்து.

படம் ஆரம்பிக்க நேரமிருந்த்தால் ரெஸ்டாரெண்ட்டுக்குள் போனோம். ஒரு காபி மட்டும் போதும் என்றதற்கு விதம் விதமான பெயர்களில் ஏகப்பட்ட காபிகளின் பெயர்களும் படமும் இருக்கிற மெனு கார்டைக் கொடுத்தார்கள். காபி விலையில் மாடே வாங்கலாம் போல இருந்த்து. கன்றுக்குட்டி விலையில் இருந்த ஒரு காபியை ஆர்டர் செய்தோம். காபி நன்றாகவே இருந்த்து.

இடம் கிடைத்த்து மூன்றாவது வரிசையில். தலையை அண்ணாந்து பார்த்தால்தான் படமே தெரியும்.

எழுத்து போட ஆரம்பித்தால் டிம்ப்பிள் கபாடியா, வினோத் கன்னா, அனுபம் கெர் எல்லாம் போடுகிறார்கள்! ஆஹா பழைய படம் போலிருக்கிறதே என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

டிம்ப்பிள் கபாடியா என்றதும் மனதுக்குள் ’ஹூ அக்சர் கோயி லடுக்கா’ என்று குட்டைப் பாவாடையுடன் அவர் ஓடுவதும், மற்றும் டூ பீஸ் பிகினியில் சில எக்கச்சக்கமான காட்சிகளும் ஞாபகம் வந்தன. சுற்றிலும் ஒருதரம் பார்த்து விட்டு கர்ச்சீஃபால் வாய் ஓரத்தைத் துடைத்துக் கொண்டேன்.

என் ஜொள்ளெல்லாம் விழலுக்கிறைத்த நீராயிற்று.

இவர்களுடன் விசு என்கிற மாதிரி கடைசியில் அண்ட் சல்மான் கான் அஸ் ஜுல்புல் பாண்டே என்று போட்டார்கள். (இதுவே நான் பார்க்கும் முதல் சல்மான் படம்)

டிம்பிள் அம்மா. அதுவும் எம் குமரன் படம் போல கவர்ச்சியான அம்மா கூட இல்லை. சால்வை போர்த்திக் கொண்டு லொக் லொக் என்று இருமும் சீக்கு அம்மா.

ஓ… வாட் எ சாடிஸ்ட் டைரக்டர்!

வினோத் கன்னாவும் அப்படியே.

உ.பி. கிராமத்தில் மரத்தடியில் ஜாங்கிரி விற்கிற ஆள் மாதிரி கெட்டப்பில்! அவர் அப்பா.

சிங்கம் பட்த்தில் பட்டையாக சூர்யா வைத்திருக்கும் மீசையைப் போன மாசம்தான் பார்த்த எனக்கு, சல்மானின் மீசையைப் பார்த்தால் சிரிப்பு போலீஸ் மாதிரி இருந்த்து. பாடல் காட்சிகளில் வயசான காலத்தில் என்.டி.ஆர். ஆடின மாதிரி பஜனையாக ஆடுகிறார். ஹீரோயின் புதுசாம். அழகு கவர்ச்சி இரண்டுமே சுமார்தான். நடிப்பை நம்பி எடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. கண் பேசுகிறது.

கதை கிதையெல்லாம் ஒன்றும் பெரிசாக இல்லை. சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் திறமை தெரிகிறது.

மாயாஜாலில் வீராசாமி படம் கூட நன்றாக இருக்கும் போலிருக்கிறது.

Advertisements

7 comments

 1. //காபி விலையில் மாடே வாங்கலாம் போல இருந்த்து. // குபீர் சிரிப்பு…நல்ல வேளை காப்பி குடிச்சிட்டே படிக்கல…காபி குபுக் ஆகி இருக்கும்..
  படத்தை விட சூழல் சுகம்….கூட வரும் கூட்டம் அடுத்த சுகம்…..கிராமத்தில் டெண்ட் கொட்டகைக்கு…கூட்டமாக சென்று, கும்மாளமாக கைமுறுக்கோட எம்.ஜி.யார் …சிவாஜி படங்கள் பார்க்கும் சுகங்களை நிச்சயம் இந்த அல்ட்ரா டிலக்ஸ் குப் ஏசி கட்டிடங்கள் தராது…..அப்ப எது எடுத்தாலும் அனுபவிப்பு ..இப்ப எல்லாமே வெட்டி ஆராய்ச்சி…. மாயஜால்ல கீத்து கொட்டகை விஷயம் எதோ இருக்கு….

 2. //கன்றுக்குட்டி விலையில் இருந்த ஒரு காபியை ஆர்டர் செய்தோம். //

  //உ.பி. கிராமத்தில் மரத்தடியில் ஜாங்கிரி விற்கிற ஆள் மாதிரி கெட்டப்பில்!//

  //மாயாஜாலில் வீராசாமி படம் கூட நன்றாக இருக்கும் போலிருக்கிறது.//

  Enjoyed

 3. அழகான பதிவு.

  சத்தியம் தியேட்டரில் பத்து ரூபாய் டிக்கெட்டுக்கு படம் பார்த்திருக்கிறேன். எந்தப் படமாக இருந்தாலும் நன்றாக இருப்பது போலவே இருக்கும். பத்து ரூபாய்க்கு அதுவே அதிகம் என்று சொல்லுவோம். ஆனால் சில படங்களின் டிக்கெட்டுகளை பத்து ரூபாய்க்கு கொடுத்தால் கூட வாங்காமல் போய்விடுபவர்களும் உண்டு.

 4. காபிய பாத்தி சொன்னீங்கல்ல அது ரொம்ப சரி. சென்னைல அந்த அனுபவம் இல்ல, ஆனா மலேஶியால அந்த அனுபவம் உண்டு. முதல் முறை தலை வலிக்கு காபி குடிக்க போயி அந்த மெனு கார்ட பாத்துட்டு தலை வலி இன்னும் அதிகமாயிடுச்சி….காபி நல்லாத்தான் இருக்கும். ஆனா காசு???? very nice post…..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s