அயோத்தி சமாச்சாரம், எதிரிகள் ஏமாறட்டும்

நாளைக்கு நம் நாட்டில் என்ன நடக்கப் போகிறது என்று உள்நாட்டு, வெளிநாட்டு விரோதிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பாதுகாப்பை, அமைதியைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.

காமன்வெல்த் விளையாட்டுகளிலிருந்து பல அத்லெட்டுகள் விலகி விட்டதாகவும், அவர்கள் பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்திருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன. இந்தநேரத்தில் இது ஒரு உபரியான தலைவேதனை.

இது போன்ற சூழ்நிலைகளில் அரசாங்கம் மட்டுமே பாதுகாப்பை நிலைநாட்டுவது சற்றுக் கடினமான செயல். ஒவ்வொரு பிரஜையும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்.

வேண்டாத விஷயங்களைப் பேசாமல் இருப்பதே மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

தீர்ப்பு சம்பந்தமாக எந்தக் கருத்தும் பேசக் கூடாது என்று அரசியல்வாதிகளுக்கும், மத அமைப்புகளுக்கும் நீதிமன்றமே வலியுறுத்த வேண்டும். ஆதரவாகவும் பேச வேண்டாம். எதிராகவும் பேச வேண்டாம். அவரவர் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போகவேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும். ஒரு பொறி கிளம்பினால் அதை நெருப்பாக்குகிற சமூக விரோதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த விஷயத்தில் எந்தக் கருத்தும் கூட இருக்காது. அவர்கள் உணர்வுகளைக் கிளப்புகிற மாதிரி பேச முயலும் போது பொறுப்பான பிரஜைகள் அதை அலட்சியம் செய்து விட வேண்டும்.

தீர்ப்பு என்னவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட மத அமைப்புகள் நீதி மன்றத்தீர்ப்பைத் தாங்கள் ஏற்பதாக அறிவிக்க வேண்டும். அதற்கு மேற்பட்டு எதுவும் பேசக்கூடாது.

பத்திரிகை, தொலைக்காட்சி அமைப்புகள் தேவையில்லாத கருத்துக்களையும் செய்திகளையும் தவிர்க்க வேண்டும். நாட்டின் எந்த மூலையில் எந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்தாலும் அதைத் தலைப் பொறுப்பாக அறிவித்து ஊதிப் பெரிதாக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பிரஸ் ஃப்ரீடம் அது இது என்று அலட்டிக் கொள்கிறவர்கள் வாயில் கொஞ்சம் கோந்து அல்வாவைப் போட்டு ஓரமாக உட்கார வைக்க வேண்டும். தீர்ப்பு இன்னது என்று மட்டும் அறிவித்து விட்டு மூடிக் கொள்வது அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்லது.

முக்கியமாக நம்  வலைப்பதிவாள நண்பர்கள், மேற்சொன்ன ஒழுங்குக் கட்டுப்பாட்டை நாமும் கடைபிடித்தால், தேசத்தின் அமைதியைப் பார்த்து விரோதிகள் பிரமிப்பும் ஏமாற்றமும் அடைவார்கள்.

நான் சொல்வது சரிதானே?

Advertisements

18 comments

 1. //கொஞ்சம் ஆறிப்போன பிறகு வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை//இதை மட்டும் எடுத்துவிடலாம் ..

  பத்திரிக்கை என்பது இது போன்றுதான் வேலையை செய்யவேண்டும்

 2. மிக அருமையான பதிவு…..சரியான நேரத்தில் , சரியான விதத்தில் , சரியாக போடப்பட்ட பதிவு …எதிரிகள் ஏமாற மட்டுமல்ல , ஒழியவும் பிரார்த்தனை செய்வோம் …. தேசம் வாழ்க …நேசம் பெருகுக ……

 3. தீர்ப்பு பற்றி கவலையில்லை. வந்தால் தானே கவலை கொள்ள, ஒரு வாரம் இணையத்திலிருந்து எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியாது என்பது வேதனை. இனிப்பு வழங்கக் கூடாது, கருத்து தெரிவிக்க கூடாது, பட்டாசு வெடிக்கூடாது.

  இந்தியாவில்தான் இருக்கிறேனா என சந்தேகம் வருகிறது.

  1. இந்த கண்டிஷன்கள் போதாது. பிரஸ் மற்றும் மீடியாவின் ஒத்துழைப்பும் வேண்டும் என்கிறேன். போர் சமயத்தில் செய்வது போல சில செய்திகளை இருட்டடிப்பு செய்வது அவசியம். பேச்சுரிமை, எழுத்துரிமை இதையெல்லாம் இந்த விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் பேசுகிறவர்கள் பொறுப்பாகப் பேசினால் கூட கேட்கிறவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்கிற காரண்டி கிடையாது. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எல்லாவற்றையும் தவறாகப் புரிந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது.

 4. நல்ல கருத்து நண்பரே

  அமைதி காத்தலும் பொருமையும் கூட ஜிகாத் தான்

  தீர்ப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் நாம் மனிதனாக இருப்போம் …

  1. சரியாச் சொன்னீங்க ஜமால். ஜாதி, மத, இன உணர்வுகளைக் கடந்து இந்தியன்/மனிதன் என்கிற அடையாளைத்தை மட்டுமே மதிக்கிற உங்கள் மாதிரி உள்ளங்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். பாராட்டு மட்டும் இல்லை உங்களால் நீங்கள் இருக்கிற இடத்தில் அமைதியையும், நல்லொழுக்கத்தையும் பரவச் செய்ய முடியும்.

   வாழ்த்துக்கள், நன்றி!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s