எந்திரன் – வாசகர் விமர்சனம்

நம் வாசகர் திருமதி.நீலா சந்திரசேகர் எந்திரன் படத்தை சூடாக கானடாவில்(?) பார்த்து விட்டு எழுதியிருக்கும் விமர்சனம்.

 இது ரஜினியை பற்றிய விமரிசனம் அல்ல. அவருடைய ஆளுமை, திறமை, உழைப்பு எல்லாம் படம் முழுவதும் பிரம்மாண்டமாக விரிந்திருக்கிறது. அதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ரசிகர்களின் நெடுநாளைய எதிர்பார்ப்பு – கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார். ஆனால் லஞ்சம் ஊழல் போன்ற சமூக பிரச்சினைகளை தன்னுடைய முந்தைய படங்களில் வித்தியாசமாக கையாண்ட டைரக்டர் ஷங்கரிடம் எதிர்பார்த்து, ஏமாற்றத்தினால் எழுந்த ஆதங்கம் இது.

கதை? சீதையின் மீது கொண்ட மோகத்தால், தன்னையே நோக்கி நெடும்பகை தேடிக்கொண்ட இராவணனின் கதை-கணினி யுகத்தின் மாற்றியமைக்கப்பட்ட 2 XP இயந்திரமானாலும் மனித உணர்வுகள் ஊட்டப்பட்டபின்பு பெண் மேல் கொண்ட ஆசையால் தன்னை படைத்தவனையும் தடுக்கவரும் அனைவரையும் கொன்று குவிக்க வெறி ஆட்டம் போடும் அவலம். “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” – இங்கு இயந்திரன் ஆவது ஆணாலே, அழிவது பெண்ணாலே .

தாய் தந்தை படைக்காத தம்பி சிட்டியை படைத்து இயந்திர சாதனை படைக்கும் வசீகரன்.வெட்டிக்கொண்டு வா என்றால் நிஜமாகவே வெட்டிக்கொண்டு வரும் சிட்டி. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று இராணுவத்திற்கு பயன்பட பழக்கும் வசீகரன். படைத்தல், காத்தல், அழித்தல்என்று ரஜினி ஒரு மும்மூர்த்திகளின் அவதாரம். எஜமான் ரஜினி பட்டாம் பூச்சி பிடிக்க ஓடினார் என்றால், எந்திரன் ரஜினி கொசு பிடிக்க ஓடுகிறார். ஒரேடியாக ஒழித்து கட்டிவிடுவார், தமிழகத்திற்கு இனிமேல் தலை வலி இல்லை என்றால், அந்த ஒரு கொசுவை மட்டும் பிடித்து வந்து ஐசிடம் மன்னிப்பு கேட்க வைத்து பறக்க விடுகிறார்.(என்ன கொடுமைடா சாமி )கண்ணின் கடைப்பார்வை இயந்திரனையும் விட்டு வைக்காதோ? வசீகரன் அருகில் ஐஸை பார்த்தால் நமக்கே பொறாமை வருகிறது, சிட்டிக்கு வந்ததில் ஆச்சரியம் இல்லை. இயந்திர முகத்தில், முத்தம் ஏற்படுத்திய மாற்றங்களை உணரும் ரஜினி சூப்பர் . ஐஸுக்கு அதிகமாக வேலை இல்லை. இருந்தாலும் அவளை சுற்றியே கதை இயங்குவதால் இராமாயண சீதை. இயந்திர ராவணனால் சிறை எடுக்கப்பட்டு மீண்டு வரும்வரை பாட்டு பாடியே பொழுதை கழிக்கிறார். தான் சிந்தும் ஒரு துளி ரத்தத்திலிருந்து அனேக ராவணங்கள் தோன்றி போர் புரிந்ததாக இதிகாசம் கூறுவது இங்கும் அப்படியே. ஒவ்வொரு நட்டில் இருந்தும் உயிர்த்தெழும் அனேக கோடி இயந்திர மனிதர்கள் !!!!!!

அடெயப்பாஆஆ என்ன பிரம்மாண்டம்!!!!!!!! எவ்வளவு பொருள் சேதங்கள், உயிர் சேதங்கள் ? அங்கு போவது நட்டும் ஸ்க்ரூ வும் தான், ஆனால் இங்கு போவது மனித உயிர்கள் !!!!!!!!!!! கட்ட பொம்மன் காலத்தில் வாளுக்கும் பீரங்கிகளுக்கும் நடந்த போர் மாதிரி, அது கூட தெரியாத விஞ்ஞானி.!!!!!!! இயந்திர மனிதனால் எந்த ஒரு உபயோகமும் இல்லை இந்த நாட்டிற்கு. (கொசுவை அழிப்பதில் இருந்து கோட்டையை பிடிப்பதுவரை எவ்வளவோ பண்ணி இருக்க முடியும்) ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போன்று சாகசம் புரிய மட்டும் என்றால் சின்னத்திரையில் மெகா தொடராக வந்திருக்கலாம். நவீன இயந்திர மனிதனும் காதலில் சிக்கி போராடி ” கை கலைப்பில்” முடிகிறது கதை. இயந்திர மனிதனுக்குள்ளும் மனித உணர்வுகள் ஊட்டப்பட்ட பின்பும் மேலோங்கி நிற்பது காதல் என்ற உணர்வுதான். சிதைந்து வீசி எறியப்படபின்பும் குப்பை மேட்டிலிருந்து புரண்டு வந்து இயந்திரம் கேட்கிறது,”எனக்கு அவ வேணும்; சானா வேணும்” …………… மற்றைய குணங்களில் ஒன்று கூட வெளிப்படவில்லையே?

பல வருடங்களுக்குப்பிறகு ….. ஏதோ எல்லா துறைகளிலும் ரோபோ வின் உதவியால் அனேக மாற்றங்களை ஷங்கர் காட்டப்போகிறார் என்று ஆவலோடு பார்த்தால், பள்ளி பிள்ளைகளுக்கு “சும்மா” இதுதான் ரோபோட் என்று வேடிக்கை காட்டி விட்டு போவது இன்னும் வேதனை. (ஷங்கரின் முந்தைய படங்களில் அது மாதிரி ஏதாவது மாற்றங்கள் காட்டியது, மனதுக்கு இதமாக இருந்ததே?) அட ராமா!!!!!!!! இதற்க்கு A I R D approval மட்டுமல்ல, எங்களுடயதும் NO தான்.

Advertisements

17 comments

  1. அநன்யாஜி, எப்போ தியேட்டர்லே பதினைந்து நிமிஷத்திலே டிக்கெட் வாங்க முடியுமோ அப்போதான் நான் படம் பார்ப்பேன்! அநேகமா அப்போ படம் வெள்ளிவிழா தாண்டியிருக்கலாம்!

 1. கதையில் கவணம் செலுத்தாது இயக்குனர் சங்கரின் தவறு. ஒரு வேளை 10 ஆண்டுகளுக்கு முந்தையக் கதை என்பதால், மெருகேற்றாமல் விட்டுவிட்டாரா என தெரியவில்லை.

  படத்தில் பாரட்ட வேண்டியவரும் அவரே!. தமிழ்சினிமாவில் இத்தனை பிரம்மாண்டத்தை நிச்சயம் நான் எதி்ர்பார்க்கவில்லை. ரோபோவை சூப்பர் மேனாக காட்டினால் நிச்சியம் ஹாலிவுட் பாதிப்பு இருந்திருக்கும். சங்கருக்கு பேர் இன்னும் கெட்டிருக்கும்.

  வில்லன் ரஜினி, ரோபோ ரஜினி, விஞ்ஞானி ரஜினி் இதில் யாரின் நடிப்பு அற்புதம் என போட்டியே வைக்கலாம். சீக்கிரம் படம் பாருங்க. இணையத்தில் பார்ப்பவர்கள்,… இதை பயன்படு்ததி்க்கொள்ளுங்கள்.

  http://www.123tamiltv.com/endhiran-2010.html

 2. இணையத்தில் எங்கு தேடினாலும் இப்படியொரு விமர்சனம் இருக்குமா என தெரியவில்லை.

  படம் பார்த்ததும் ரஜினியை பாராட்ட தோன்றியது, சங்கர்மீது கோபம் வந்தது. அடுத்த கட்டத்திற்கு தமிழ் சினிமாவை நகர்த்தி செல்லும் படமாவே இதை கருதினேன். சங்கர் ஏமாற்றிவிட்டார்.

  நன்றி திருமதி.நீலா சந்திரசேகர்.

 3. ஜவஹர்ஜி… தியேட்டர்ல 15 நிமிஷத்துல டிக்கெட் வாங்கணுமா… மும்பைக்கு வாங்க… தியேட்டர் பூரா உங்களுக்குத்தான்….

 4. நம் மக்கள் ஒரு சினிமாவிலிருந்து என்னவெல்லாம் எதிர் பார்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது.
  கதையின் நாயகியைக் கவர நினைக்கும் வில்லன்கள் கதை எல்லாம் ராமாயணமாகவும், அண்ணன் தம்பி தகராறுகள் மகாபாரதங்களாகவும், சின்ன வீடு கதைகள் சிலப்பதிக்காரங்களாகவும் தான் நமக்கு தெரியும். அதற்க்கு காரணம் உண்டு. நம் பாட்டிகள் கூறாத கதையும் உண்டா? என் தந்தை எனக்கு கூறிய கதைகளில் அவர் வீட்டின் அருகில் உள்ள பாட்டிகள் – “ஏன்டா அம்பி மூணு பனைமர உயரத்துக்கு அப்பறம் காத்தே இருக்காதாமே” என்று டிரோபோஸ்பியர் (Troposphere) பற்றிய ஆய்வுகளையே வெளிப் படுத்தினர். அப்படி இருக்கையில் அவர்கள் விஞ்ஞானக் கதைகளையும் கூறி நம் மக்களை அறிவாளியாக்கி விட்டதில் என்ன ஆச்சரியம்?
  அதன் விளைவாக – படம் எப்படி சார் இருக்கு என்று கேட்டால் நம்ம ஊர் விஞ்ஞானிகள் தரும் பதில்கள் அபாரம் – Screenplay சொதப்பிட்டான், First Half இல் கொஞ்சம் Continuity Editing introduce பண்ணிருக்கலாம் – London Film Research Institute இல் Post Graduate Diploma வாங்கியிருப்பார்களோ என்று நமக்கு சந்தேகம் வரும்(!?)
  சங்கருடைய முயற்சி மக்களுக்கு Advanced Robotics and Autonomous Systems கற்று கொடுப்பது அல்ல. அதே போல், அவருடைய முயற்சி இயந்திரங்களின் இயக்குமும் அதனால் விளையும் நன்மைகளும் என்ற ஆய்வுப் படமும் இல்லை. ரஜினி என்ற ஒரு National Symbol ஐ வைத்து ஒரு Commercial Entertainer செய்வதே ஆம். அதில் அவர் பெரும் வெற்றி பெற்றுள்ளார் என்பதே உண்மை.

  1. ஆஹா…. அருண்ஜி…. உங்க கருத்து ரொம்ப ரொம்பத் தெளிவு!!!

   சங்கர் ரசிகர்களை ரொம்ப தெளிவா புரிஞ்சி வெச்சிருக்கார். நீங்களும்தான்!!

   பாராட்டுக்கள்…..

 5. ஆராய்ச்சி என்பது ஒருவர் விட்டு சென்றதை அடுத்தவர் தொடர்வது தானே? அதற்கு முடிவே கிடையாது. ரஜினியின் முத்துவிற்கே (சப்பை)மூக்கின் மேல் விரலை வைத்த ஜப்பானியர்கள் இயந்திரனின் நியுரோ ஸ்கீமா வை விரைவில் பயன்படுத்தலாம்.(இருந்தாலும் ரஜினி உயரத்திற்கு பண்ண முடியாது 🙂 ) சீனர்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நம்மிடம் இல்லாத ஒன்று அவர்களிடம் உள்ளது. பணம்.

 6. //கதையில் கவணம் செலுத்தாது இயக்குனர் சங்கரின் தவறு. ஒரு வேளை 10 ஆண்டுகளுக்கு முந்தையக் கதை என்பதால், மெருகேற்றாமல் விட்டுவிட்டாரா என தெரியவில்லை.//

  ரஜனியின் அரசியல் ஆர்வமும் வழக்கமான “பன்ச்” டயலாக்கும் எங்கே என்திரனிலும் எதிரொலித்து விடுமோ என்று பயந்திருந்த ஆளுங்கட்சிக்கு , ஷங்கர் , காதல் மோதல்,சாதல், என்ற வழக்கமான தமிழ் சினிமா பார்முலா தந்து வயிற்றில் பாலை வார்த்து விட்டார். சூரிய குடும்பத்தினர் சார்பாக நூறு கோடி (?) நன்றி. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளி வந்த, மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்த ரஜினி படத்திற்கு ப்ரோடக் ஷன் சன் பிக்சர்ஸ்.:) அடுத்த படம் வரும் வரை ஆளுங்கட்சி சிறிது மூச்சு விட்டு கொள்ளலாம்.

 7. சரியாவும் சுருக்குன்னும் சொல்லியிருக்கீங்க ஜவஹர். ராமாயணக்கதை ஒற்றுமை பிரமாதம்.

  லீஸ்ட் காமன் டினாமிடேரை மனதில் வைத்துப் படம் எடுக்கிறார்கள் என்றாலும், இத்தனை வசதி இருக்கும்பொழுது கொஞ்சம் சுமாரா எடுத்திருக்கலாமேனு தோணுது.. ‘ரிமோட் இன்ப்ரா ரெட் தான், நான் பாத்துக்குறேன்’ மாதிரி நகைச்சுவைக் காட்சிகளை வித்தியாசமா எடுத்திருக்கலாம்.

  டிகெட் வாங்குறது சிக்கல்னா நெட்டுல பாருங்க, ஹைடெப் பிரதி கிடைக்குது. (i have no moral qualms on this)

 8. அறிவை வளர்க்க பள்ளிக்கூடமும் நூலகமும் இருக்கு, சங்கர் படம் தேவையில்லைனு சொல்லும் அருண் கருத்து சரிதான். சினிமா ஒரு வியாபாரம். வியாபாரத்தில் சில சமயம் தரக்குறைவான பொருட்களும் விற்பனையில் சாதனை செய்கின்றன. எந்திரனும் அப்படித்தான். இதில் சங்கரையோ ரஜினியையோ வேறே யாரையுமோ குறை சொல்ல முடியாது. this is as much a distribution/marketing win.

  இருந்தாலும் ரஜினி..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s