நடிகர் சந்தானம் நம்பர் ஒன்னுக்கு வந்தது எப்படி?

வேடந்தாங்கலில் செப்டம்பருக்குப் பிறகு சீசன் என்று டிவிஎஸ் நண்பர்கள் சொன்னது மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

 போன வாரம் போயிருந்தோம்.

 கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கப் போன போது,

 “டிக்கெட்டெல்லாம் வேண்டாம் சார். சீசன் நவம்பர்லதான், ஒரே ஒரு பறவைதான் இருக்கு. போய்ப் பாக்கறதுன்னா பாருங்க” என்றார்.

“காமெராவுக்கு டிக்கெட் வாங்கணுமா?”

“ஆந்திராக்காரங்களா இருந்தாலும் டிக்கெட் இப்ப வாங்க வேணாம்”

உள்ளே போய் அந்த ஒரே ஒரு பறவை எது என்று தேடினோம். இஷ்ட மித்ர பந்துக்களுடன் அந்த ஒரு பறவை மரத்தில் உட்கார்ந்திருந்தது.

இஷ்டமித்ர பந்துக்களுடன்....

பறவைகள் இல்லாவிட்டாலும் இடம் பார்க்க ரம்மியமாக இருந்தது. குப்பை போடும் நம் தேசிய குணம் ஆங்காங்கே தெரிந்தது.

ரம்மியமாக......

நவம்பரில் திரும்ப ஒரு விசிட் அடிக்க வேண்டும்.

********************************************************************************************************

மலேஷியாவிலிருந்து வந்த என் மகனை வரவேற்க விமான நிலையம் போயிருந்தோம்.

அவனது சக பிரயாணி நடிகர் சந்தானம். சந்தானம் இவ்வளவு விரைவில் ஏறக்குறைய நம்பர் ஒன் நிலைக்கு உயர்ந்ததற்கு என்ன காரணம் என்பது புரிந்தது.

கூட தொண்டரடிப்பொடி கூட்டம் ஏதுமில்லை. தோளில் ஒன்றும், கையில் ஒன்றுமாக லக்கேஜை தானே தூக்கிக் கொண்டு வந்தார். ரிசீவ் செய்ய வந்த டிரைவரிடம் பளு எதுவும் தரவில்லை. என் மகன் அறிமுகப் படுத்தியதும் ரொம்ப சாதாரணமாகப் பேசினார். போட்டோ எடுக்கும் போது என் கையைப் பிடித்து இழுத்து ”கிட்ட வாங்க சார்” என்றார்.

“நீங்கதான் பீக்ல இருக்கீங்க…. இன்னும் மேல மேல வரப் போறிங்க” என்று என் மனைவி சொன்னதும் பணிவும் லஜ்ஜையுமாக

“தாங்க்ஸ்ங்க” என்றார்.

காரில் ஏறும் போது கையை அசைத்து விட்டுப் போனார்.

ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான் வரிசையில் இன்னொரு மிகப் பணிவான கலைஞன். சீக்கிரமே எல்லா நகைச்சுவை சேனல்களிலும் சந்தானம் காமெடியே ஓடுகிற காலம் வரப் போகிறது.

********************************************************************************************************

மகன் வருவதற்குக் காத்திருந்த போது சில விஐபிக்களைப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது.

தூய வெள்ளைக் கதர் வேட்டி, கதர் சட்டையுடன் அமைச்சர் ராஜா சின்னக் கவுண்டர் விஜயகாந்த் மாதிரி பீடு நடை போட்டுப் போனார். அரவிந்தசாமி பிக் அப்புக்கு வந்த வண்டி டிரைவரை ரொம்ப நேரம் தேடினார். அரவிந்தசாமியின் தலையில் நிறைய வேக்கண்ட் லாண்ட் வந்து விட்டதில் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. கொஞ்சம் தயக்கமாக நான் புன்னகைத்ததும் வசிகரமாக ஒரு பதில் புன்னகை செய்தார்.

 சிங்கப்பூர் விமானத்தில் வந்த எல்லோரும் ஆளுக்கொரு சோனி பிரேவியா எல்.ஈ.டி டிவி வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஏழைப் பயணிகளுக்கு டிவி வழங்கும் விழா நடத்தினார்களா?

********************************************************************************************************

மலேஷியாவில் ஹோட்டலில் செக் இன் செய்கிற நேரம் ஒத்து வராததால் என் மகனும் மருமகளும் காத்திருக்க நேரிட்டது. என்ன செய்யலாம் என்று கையைப் பிசைந்தபடி நின்றிருந்த போது நான் கொடுத்திருந்த நம் வலை ரசிகர் திருமதி ரேவதி ஸ்ரீநிவாசனின் அலைபேசி எண் நினைவு வந்து பேசியிருக்கிறான்.

உடனே அவர்களை வரவேற்று ஓய்வெடுக்க உதவியதோடு, இட்டிலி, தோசை, ஸ்வீட், ஜூஸ் என்று அவ்வளவு ஷார்ட் நோட்டீஸில் ஒரு விருந்தே வைத்து விட்டாராம் திருமதி.ரேவதி. கணவர் திரு.ஸ்ரீநிவாசன் ரொம்பப் பிரியமாகவும் மரியாதையாகவும் பழகுகிறாராம். மலேஷியாவில் டூஸ் அண்ட் டோண்ட்ஸ் என்னென்ன என்று சொல்லி சில விசேஷ பாதுகாப்புக் குறிப்புகளையும் சொன்னாராம்.

அன்பான, பண்பான ரேவதி ஸ்ரீநிவாசன் தம்பதிகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

மலேஷியாவிலிருந்து சிகிச்சைக்காக சென்னை வந்த பிளாக்கர் திரு.நம்பி அவர்களை என்னால் வரவேற்க முடியாமல் போய் விட்டது. பம்பாயில் ஒரு சிக்ஸ் சிக்மா ஒர்க்‌ஷாப்புக்காகப் போய்விட்டேன்.

********************************************************************************************************

22 comments

 1. அடேடே. நீங்க ஒரு மாமனாரும் கூடவா?
  இஷ்ட மித்ர பந் துக்களுடன் பட்சிகள் அழகாகவே வரவேற்பு
  கொடுத்துள்ளது. ஏன் தெரியுமா? கும்பலுடன் கோவிந்தாவாக
  இல்லாமல் உங்களைக் கவருவதற்காக இருக்கும்.
  இதயம் பேத்துகிரதில் இடம் பிடித்து விட்டது.
  விஷயங்களும், நகைச்சுவையுமாக எல்லாமே நன்றாக இருக்கு

 2. சார், தலைப்பு சற்று வில்லங்கமாக இருக்கிறதே என்று உள்ளே வந்தேன். நடிகர் சந்தானத்திற்கு ஒன்னுக்கு வந்தது எப்படி? என்பது மாதிரி படித்து தொலைத்து விட்டேன். மன்னிக்கவும்.

  (சந்தானம் மாதிரியே டைமிங்கா எதாவது சொல்ல முடியுமான்னு பாத்தேன்.) 🙂

 3. வேடந்தாங்கல் படங்கள் அருமை.
  // காமெராவுக்கு டிக்கெட் வாங்கணுமா
  ஆந்திராக்காரங்களா இருந்தாலும் டிக்கெட் இப்ப வாங்க வேணாம் //
  ரொம்ப நைசா நுழைந்த நகைச்சுவை…
  ஆமாங்க சந்தானம் , விவேக் நுழைந்த காலத்தை போலவே சிரத்தையான உழைப்பு..உச்சரிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ..கலாய்த்தல் ..நிச்சயம் முன்னுக்கு வருவார் .

 4. //பறவைகள் இல்லாவிட்டாலும் இடம் பார்க்க ரம்மியமாக இருந்தது.//

  சீசன் டைம்ல போனால் இவ்வளவு ரம்மியமாக இருக்கும் எனத் தோன்றவில்லை. இயற்கை அழகை ரசிக்க பெரும்பாலும் கூட்டம் இல்லாத சமயங்களில்தான் போகணும்.

  சந்தானம் கஷ்டப்பட்டு படிப்படியா முன்னுக்கு வந்த கலைஞன். திடீர்ன்னு ஏதோ அதிர்ஷ்டத்தில் முன்னுக்கு வந்தவங்க கிட்டதான் அந்த கர்வம் எல்லாம் இருக்கும்.

  //“காமெராவுக்கு டிக்கெட் வாங்கணுமா?”

  “ஆந்திராக்காரங்களா இருந்தாலும் டிக்கெட் இப்ப வாங்க வேணாம்”//
  :D:D..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s