எனக்கு அறிமுகமான முதல் ஆங்கில நாவல் ‘தி பிளாக் ஆரோ’. ஆர்.எல்.ஸ்டீவன்ஸன் எழுதியது. பள்ளிக்கூட நாண்டீடெயிலாக வந்தது. நாண்டீடெயிலாக இருந்தாலும் நான் டீடைலா சொல்றேன் என்று ஜோக்குடன் ஆரம்பித்தார் இங்கிலீஷ் வாத்தியார் ஸ்ரீநிவாசன்.
அவர் அந்தக் கதையைச் சொன்ன விதம் முன்னணிக் கதாநாயகனின் கால்ஷீட்டுக்காக இளம் இயக்குனர் கதை சொல்வது மாதிரி இருக்கும். பாத்திரங்களை அவர் வர்ணிக்கும் போது இவர் ஆர். ஸ்ரீநிவாசனா, ஆர்.எல்.ஸ்டீவன்ஸனா என்று தோன்றும். டேனியல், பென்னெட் ஹாட்ச், ஜோவானா எல்லாரும் இன்னமும் கண்முன் நிற்கிறார்கள். ஜோவானாவை அவர் வர்ணித்த விதத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாவாக உருவகம் செய்து கொண்டு ஏங்கினேன்.
அதற்குப் பிறகு கல்லூரியில் சர் ஆர்த்தர் கானன் டைலின் ஷெர்லக் ஹோம்ஸ். அதை நடத்தியது டில்ஷத் ஹனிஃப் என்கிற (மிக மிக இளம்) பெண் விரிவுரையாளர். கண்ணும் மனமும் அதர்வைஸ் பிஸியாக இருந்ததால் ஷெர்லக் ஹோம்ஸ் சரியாக மண்டையில் ஏறவில்லை. ஆங்கிலம் இரண்டாம் தாளில் நான் வாங்கின மார்க் பிளாக்கில் அறிவிக்கிற அளவு கவுரவமானது இல்லை. ஒரு க்ளூ மட்டும் தருகிறேன். அஸெஸ்மெண்ட் மார்க் என்று அழைக்கப்பட்ட கிளாஸ் மார்க்கும் பரிட்சை மார்க்கும் சேர்ந்து தொண்ணூறு வந்தால் பாஸ். கிளாஸ் மார்க் மினிமம் ஐம்பத்தைந்து இருந்தால்தான் பரிட்சைக்கு ஹால் டிக்கெட் கிடைக்கும்.
வேலையில் சேர்ந்த பிறகு தாம்பரம் டு பீச் ரயிலில் நிறையப் படித்தது ஸ்டான்லி கார்ட்னரின் பெரி மேசன் கதைகள். அறிமுகப் படுத்தியவர் என் அண்ணன்களில் ஒருவர். அவர் ஸ்டான்லி கார்ட்னரின் டை ஹார்ட் ஃபேன். ’ஜார்ஜ் ஆல்டர்’ என்று கதாபாத்திரத்தின் பேரைச் சொன்னால் போதும். ’கேஸ் அஃப் தி நெக்லிஜண்ட் நிம்ஃப்’ என்று கதையின் பேரைச் சொல்லி விடுவார்.
கிரைம் எழுதுகிற எல்லாரிடமும் பெரி மேசன் கதைகளின் பாதிப்பு இருக்கும். தமிழ்வாணனில் ஆரம்பித்து சுஜாதா வரைக்கும் ஸ்டான்லி கார்ட்னரின் பாத்திரங்களையும், சிலசமயம் சில காட்சிகளையும் வெகுவாகப் பயன் படுத்தி இருக்கிறார்கள். சர் ஆர்த்தர் கானன் டைலுக்குப் பிறகு ஒரு புத்திசாலி எழுத்தாளர் எர்ள் ஸ்டான்லி கார்ட்னர். கானன் டைல் வெறும் லாஜிக் மட்டும்தான் எழுதுவார். கார்ட்னரின் கதைகளில் லேடரல் திங்கிங், மிஸ்டேக் ப்ரூஃபிங், எஃப்.எம்.ஈ.எ எல்லாம் வரும்! ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பதுகளுக்கு அது ரொம்ப ஜாஸ்தி.
பெரிமேசன் கதைகள் ஐம்பதுகளில் டிவி சீரியலாக வந்துள்ளன. நம்ம ஊரில் இதை எழுதுகிற இந்த வினாடி வரை அந்தத் தரத்தில் சீரியல் வரவில்லை.
மேசன் கதைகளுக்கென்று சில கல்யாண குணங்கள் உண்டு.
எந்தக் கதா பாத்திரம் சாட்சிகளாலும், எவிடென்ஸ்களாலும் கழுத்து வரைக்கும் பிரச்சினையில் இருக்கிறதோ அவருக்குத்தான் மேசன் வழக்கறிஞராக ஆஜராவார். ஏறக்குறைய எல்லாக் கதைகளிலும் போலிஸ் கமிஷ்னர் லெஃப்டினண்ட் டிராக் மேசன் குற்றவாளியை ஒளித்து வைத்திருப்பதாக திட்டுவார். எவிடன்ஸை டாம்ப்பர் செய்ததற்காக வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக மிரட்டுவார்.
டெல்லா ஸ்ட்ரீட் விசிட்டர்களை வர்ணிக்கும் போது ஷெர்லக் ஹோம்ஸ் நினைவு வரும். மேசன் கிரிண்ட் என்கிற வாக்கியம் இருபது முறையாவது வரும். ’கெட் தெ ஹெல் அவுட் ஆஃப் ஹியர்’, ‘வாட் தெ டெவில் ஆர் யு டூயிங் ஹியர்’ என்றெல்லாம் லெஃப்டினண்ட் டிராக் எல்லாக் கதையிலும் சொல்வார்.
பொதுவாகப் புழக்கத்தில் இல்லாத ஆங்கிலப் பதங்கள் நிறைய வரும். உதாரணத்திற்கு ‘ஹி இஸ் அ ஸ்கொயர்’ என்று ஒரு பாத்திரத்தைச் சொல்வார். ஸ்கொயர் என்கிற பதத்துக்கு பிட்மான் அகராதியில் ஒரு பக்கம் முழுக்க அர்த்தம் போட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அர்த்தங்கள் நிறைய இருக்கிறது. அந்தப் பாத்திரத்துக்கு எந்த அர்த்தம் பொருந்தும் என்று கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.
துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் வர்ணிக்கும் பழக்கம் முதலில் கார்ட்னர் ஆரம்பித்ததுதான். அதற்கப்புறம்தான் ஃப்ரெட்ரிக் ஃபோர்சித்!
பெரி மேசன் குறுக்கு விசாரணை செய்கிற போதெல்லாம் ஹாமில்ட்டன் பெர்ஜருக்கு ரத்தம் கொதிக்கும். அடிக்கடி அப்ஜக்ஷன் யுவர் ஹானர் சொல்வார். ஆனால் ஜட்ஜ் ஏறக்குறைய எல்லா அப்ஜெக்ஷனையும் ஓவர் ரூல் செய்து விடுவார். ஜட்ஜே ஆச்சரியமாகக் கதை கேட்பார்.
நீங்கள் பெரி மேசன் ரசிகர் என்றால், உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி யுவர் ஹானர், கெர்ட்டி என்கிற பாத்திரம் ஆணா-பெண்ணா?
உண்மையைப் புட்டு வைக்கிறீங்களே? சண்டைக்கு வந்துறப் போறாங்க.
>>>.. ஸ்டான்லி கார்ட்னரின் பாத்திரங்களையும், சிலசமயம் சில காட்சிகளையும் வெகுவாகப் பயன் படுத்தி இருக்கிறார்கள்.
இங்கிலீஷ் கட்டுரை, செய்திகள், காமிக்ஸ், சிறுகதைகள், ஹிஸ்டரி, சுய சரிதை எல்லாம் படிப்பேன். ஆனால் இந்த நாவல் படிக்க ஆரம்பித்தால் மட்டும் கொட்டாவி வந்து தூங்கிவிடுகிறேன். ஏன் என்றே புரியவில்லை சார்..
ஆனால் உங்க பதிவு நாவல் படிக்க தூண்டிவிடுகிறது. கொட்டாவி விடாமல் படிக்க முயற்சி பண்றேன்
“Gertrude “Gertie” Lade – Mason’s switchboard operator, an “incurable romantic” rarely seen in the TV series but a common presence in the novels. She was played in the first series by Connie Cezon and in the second by Brett Somers, later of Match Game fame.”
பெரி மேசன் சின்ட்ரோம் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்!. தமிழ் நாட்டில் அது யாருக்கு உள்ளது என்று ஊகியுங்கள்
உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்
புது புது தகவல்கள்! அற்புதம்!
அன்பின் ஜவகர் – என்ன ஆளையே கானோம் – பணிச்சுமையா ? வலைச்சரு ஆசிரியப் பொற்ப்பேற்க அழைப்பு அனுப்பி இருந்தேனே – இன்னும் ஏறகவில்லை – இன்னும் இடுகை இடத் துவங்க வில்லை – என்ன ஆயிற்று. ம்ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் ஜவஹர் – நட்புடன் சீனா
ஜஸ்ட் ஃபார் ஃபாலோஅப்