தனியார் தொலைக்காட்சிகளில் ஆபாச நிகழ்ச்சிகள்

பள்ளிக் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக இருக்கின்றன.

பணத்துக்காகவோ அல்லது பர்வர்ட்டட் செக்ஸுக்காகவோதான் இந்தக் குற்றங்கள் நிகழ்கின்றன என்று நினைக்கக் கூடாது. எனக்கு வேறு ஒரு கோணம் தோன்றுகிறது.

தீவிரவாதக் குழுக்கள் எவையேனும் குழந்தைகளைக் கடத்திச் சென்று பயிற்சி அளிக்கிற முயற்சியாகக் கூட இது இருக்கலாம்.

 பெற்றொருக்கு சில உபாயங்கள் :

 •  மொபைல் வாங்கித் தந்தால் குழந்தைகள் கெட்டுப் போகிறார்கள் என்கிற எண்ணத்தைக் கொஞ்சம் கைவிட்டு மொபைல் வாங்கிக் கொடுங்கள்.
 • பள்ளியிலிருந்து புறப்பட்டதும் எஸ்.எம்.எஸ் தரச் சொல்லுங்கள். அதற்குப் பிறகு ஒவ்வொரு பதினைந்து நிமிடமும் ஒரு எஸ்.எம்.எஸ் தரச் சொல்லுங்கள். கடத்தல் நிகழ்ந்தால் குறைந்த பட்சம் இருபது நிமிடங்களிலும், அதிக பட்சம் அரை மணியிலும் தெரிந்து கொண்டு போலிஸுக்குத் தகவல் தர செளகர்யமாக இருக்கும். கடைசியாக எந்த ஏரியாவில் இருந்தார்கள் என்பதும் தெரிய வரும்.
 • குழந்தைகளை எப்போதும் கூட்டமாக இருக்கச் சொல்லுங்கள். தெரியாத நபர் யார் என்ன சொல்லி அழைத்தாலும் போக வேண்டாம் என்று சொல்லுங்கள்
 • கூடுமானவரை குழந்தைகள் பள்ளி வாகனத்திலேயே வரட்டும். சொந்த வாகனமோ பப்ளிக் டிரான்ஸ்போட்டோ வேண்டாம்.
 • குழந்தைகளுக்கு நகைகள் போட்டு அனுப்ப வேண்டாம்.

************************************************************************

இன்றைய தினமலரில் படித்த ஒரு செய்தி சிந்திக்க வைப்பதாக இருந்தது. (தினமலர்-சென்னை-18.11.2010.-பக்கம்-6)தனியார் மருத்துவமனை ஒன்றின் மேல் நிலுவையில் இருக்கும் வழக்கு சம்பந்தமாக, சில ஆவணங்களைக் கேட்டு ஒரு ஆசாமி கோட்டுச்சேரி காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார். தன்னை சிறப்பு நீதிபதி என்று அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். அடையாள அட்டையைக் கேட்டதற்கு ஒரு அட்டையைக் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு புறம் இன்ஸ்பெக்டர் என்றும் இன்னொருபுறம் நீதிபதி என்றும் இருந்திருக்கிறது.

இதைவிட விசேஷமானது என்னவென்றால், அதிலிருந்த கையெழுத்து. சம்பளம் வாங்காதவர்கள் நடத்தும் தனி சர்க்கார் என்கிற பின்னணியிலும், பாதிக்கப்பட்டோர் கழகம் என்ற பின்னணியிலும் செந்தமிழ்கிழார் என்பவர் கையெழுத்திட்டிருந்தாராம். பெயரும், பின்னணியும் தீவிரவாத அமைப்போ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

போலிஸ்காரர்களிடம் நீதிபதி என்று பொய் சொல்ல ஒன்று அதீத தைரியம் வேண்டும் இல்லாவிட்டால் முட்டாளாகவோ, பைத்தியமாகவோ இருக்க வேண்டும். அதிலும் இப்படிப்பட்ட டுபாக்குர் அடையாள அட்டையை தைரியமாகக் காட்ட!

பின்னணி என்னவாக இருக்கும்?

************************************************************************

என்.டி. டிவியின் பிக் பாஸ் மற்றும் ராக்கி சாவந்த்தின் ராகி கா இன்சாஃப் நிகழ்ச்சிகளை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டு இரவு பதினோரு மணியிலிருந்து காலை ஐந்து மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை ஆணை பிறப்பித்திருக்கிறதாம்.

மேலும் எஸ்.எஸ் ம்யூசிக்கின் தெலுங்கு அலைவரிசையில் நிர்வாணக் காட்சிகள் இடம் பெறுவதால் ஒருவாரம் தடை விதித்திருக்கிறார்களாம்.

ச்சே… இந்த மாதிரி சமாச்சாரங்கள் நமக்குத் தெரியுமுன் தகவல் ஒலிபரப்புத் துறைக்குத் தெரிந்து போகிறதே!

Advertisements

12 comments

 1. பள்ளி குழந்தைகள் கடத்தலை தடுக்க நீங்கள் சொன்ன யோசனை அருமை. இன்னும் எங்க பாப்பாவை பள்ளியில் சேர்க்கவில்லை, சேர்த்ததும் கடைபிடிக்கிறேன்

  விகடன் மாணவர் நிருபரா இருந்தபோது இதுபோன்ற போலி அடையாள அட்டை கேசை பார்த்திருக்கிறேன். ஆனால் போலி கண்டக்டர் பஸ் பாஸ், ட்ரெயின் பாஸ் என்று தான் இருக்கும். ஆனால் இவரு தில்லான மங்காணி

  //ச்சே… இந்த மாதிரி சமாச்சாரங்கள் நமக்குத் தெரியுமுன் தகவல் ஒலிபரப்புத் துறைக்குத் தெரிந்து போகிறதே!//

  எனக்கும் இதே வருத்தம் தான் சார்.

 2. எஸ் எஸ் மியுசிக் தெலுங்கு சேனலா…அடேடே எனக்கு வரவில்லையே…வந்தால் பார்த்து விட்டு கடும் கண்டனங்களைச் சொல்லலாம் என்று பார்க்கிறேன்…ம்..ஹூம்.

 3. Sir,
  I wish to humbly put in a few points. These thoughts were born after seeing a few bright children,who were being treated in a protected manner.

  children particularly,need to be in peace and carefree mindset,rather than being forced to remain ever-cautious.
  In fact, there are lot of bright kids(particularly girls) are forbidden from taking part in after-school extra-curricular activities,because of the need to return in school-vehicle.this pains me a lot.in this way, i feel, the whole point of schooling is lost.

  on another point of view, i think the kidnappings could be controlled by increasing the police ratio. currently i believe in madras – the police ratio is about 1 police for 25,000 citizens.

  if teachers take attendance at start of every hour, and if children stick to known vehicle drivers, any untoward incidents could be avoided.

  schools/parents also need to arrange for additional trips of school vehicles to take care of extra-curricular classes.

  Respectfully,
  Venkat

 4. பள்ளிக் குழந்தைகளைக் கடத்திப் போய், கிட்னி பிசினெஸ் போல ஏதாவது நடக்கின்றதா என்பதையும் காவல்துறை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இன்றளவில் லட்சக் கணக்கில் / கோடிக கணக்கில் சம்பாதிக்க சமூகவிரோதிகள் பல வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். எல்லோரும் எச்சரிக்கையாய் இருங்கள்.

  1. இது ஒரு முக்கியமான ஆங்கிள் கவுதம்ஜி, சுட்டிக்காட்டினதுக்கு நன்றி. குழந்தைகளைக் கடத்திகிட்டுப் போய்ட்டு பணத்திலயோ, வேறெதிலயுமோ கவனமே இல்லாத சில கடத்தல்கள் இந்த பயத்தையும் தருது

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s