3G இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக….

நேற்று மழை பற்றி எழுதியிருந்தேன்.

 நாகப்பட்டினத்து மழை நாட்கள் பற்றி எழுத நினைத்து மறந்து போனேன்.

மழைக்காலம் வந்ததும் எல்லார் வீட்டிலும் பரணிலிருந்து பழைய குடைகளைத் தேடி எடுப்பார்கள். குடை ரிப்பேர் ஆசாமி எப்போது வருவான் என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பார்கள்.

“கொடே ரிப்பேர்” என்று குரல் கேட்டதும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ‘கொட ரிப்பேர் இங்க வாங்க’ என்று அலறுவார்கள். ஆனாலும் அவர் முதலில் தேர்ந்தெடுப்பது எங்கள் வீட்டுத் திண்ணையைத்தான். பெரிய திண்ணை. தெருவிலிருந்து படியேறாமல் நேராக வந்து உட்காரலாம். வேலை முடிந்தால் அக்கடா என்று கட்டையை நீட்டி கொஞ்ச நேரம் தூங்கலாம். எல்லாவற்றையும் விட,

“என்ன குமாரசாமி, கடைசீல வரதராஜன் உம்ம பையனுக்கு பொண்ணு குடுக்க ஒத்துகிட்டாரா இல்லையா?” என்று போன வருஷம் விட்ட இடத்தில் பேச்சைத் தொடங்கும் அப்பா மேல் அவருக்கு அதீத அன்பு!

“என்ன பாட்டி, ஒரு தரம் கூட உங்க குடை நம்ம கிட்ட வர்ரதே இல்லை?” என்கிற குமாரசாமியிடம்

“என் குடை ரிப்பேரே ஆகாதுடா” என்று தாழங்குடையைக் காட்டுவாள் வாலாம்பா பாட்டி.

“என் குடையும் ரிப்பேர் ஆகாது பாட்டி” என்று பால்காரப் பரமு முக்கோணமாக மடித்த சாக்குப் பையைக் காட்டிச் சிரிப்பாள்.

பதினைந்து ரூபாய் குடையை பதினாறு வருஷம் ரிப்பேர் செய்து உபயோகிக்கிறவர்களும் இன்றைக்கு இல்லை, குடை ரிப்பேர் செய்கிற ஆசாமிகளும் இல்லை.

மழைக்காலம் வந்து விட்டால் ஒழுகுகிற இடத்தில் எல்லாம் பாத்திரம் வைக்க வேண்டும். வீடு பூரா பாத்திரங்களாக இருக்கும். அண்ணனின் நண்பர்கள் ஸ்கேலால் ஜலதரங்கம் வாசிப்பார்கள். ராத்திரி படுக்கும் போது ஆங்காங்கே இரண்டடி அகல ஒழுகாத இடத்தைத் தேடிக் கண்டு பிடிப்பது ஒரு சாதனை.

நெருப்புப் பெட்டி நமுத்துப் போய் அம்மாவைப் புலம்ப வைக்கும். உப்பு ஜாடி பூரா ஈரமாகியிருக்கும். சர்க்கரை கட்டித் தட்டிப் போகும். டெப்போ பால் வராது. பால்காரி பரமு லேட்டாக வருவாள். தூள் அடுப்பு, குமட்டி அடுப்பு, விறகு அடுப்பு எதுமே ஈரத்தில் எரியாது. ஸ்டவ் பற்ற வைக்கலாம் என்றால் மண்ணெண்ணை பிளாக்கில் லிட்டர் அறுபத்தைந்து பைசா விற்கும்!(ரேஷனில் முப்பத்தைந்து பைசா!) விறகு அடுக்கி வைக்கிற இடத்தில் பாம்பு படுத்திருக்கும். ஓட்டிலிருந்து தேள் விழும். கரண்ட்டே இருக்காது.

“மூணாவது புயல் கூண்டு ஏத்திட்டானாம்” என்று யாரோ தெருவில் பேசிக் கொண்டு போவார்கள்.

ராத்திரி பூரா கடலிலிருந்து சத்தம் வரும். காற்று சுழட்டி சுழட்டி அடிக்கும். ஓடெல்லாம் பறக்கும். கொல்லைப் பக்கத்து சுவர் இடிந்து விழும். வீதி பூரா ஜலப் பிரளயமாக இருக்கும். குடை பிடித்துக் கொண்டு கத்திக் கப்பல் செய்து விடுவோம்.

மழைக்குத் தோதான ஆட்டம் ட்ரேட் விளையாடுவோம்.

அப்போதே வீடு வீடாகக் கட்டி வாடகைக்கு விடும் நண்பன் கோபால் இன்றைக்கு மூன்று வீடு கட்டியிருக்கிறான்.

இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது!

இன்றைக்கு-

கொஞ்சம் பலமாக மழை பெய்து ‘Your Digicomp is not receiving signal’ என்று டிவி சொல்கிற போது கோபமாக வருகிறது. பிராட் பாண்ட் கிடைக்கவில்லை என்றால் காதல் தோல்வி ஆன மாதிரி இருக்கிறது. 3G சிக்னல் கிடைக்காத ஊரை தீயினுக்கு இரையாக மடுக்க வெறி வருகிறது.

Advertisements

5 comments

 1. //பிராட் பாண்ட் கிடைக்கவில்லை என்றால் காதல் தோல்வி ஆன மாதிரி இருக்கிறது. //

  உண்மை,எனக்கும் அதே பிரச்சனை!

 2. மழைபெய்தால்தான் மண்வாசனை வரும். ஆனா, இங்கே நீங்க மழையப் பத்தி எழுதினதுலேயே மண்வாசனை வருது! நாங்கூட உங்க பதிவு படிச்சதிலேயே திரும்ப ஒருமுறை ஒரு விடுமுறை நாள்ல ‘ட்ரேட்’ விளையாடிட்டேன்னா பார்த்துக்குங்களேன் 🙂

  பதிவு சூப்பர்!
  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

 3. சார், உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை. இந்தப்பதிவு அப்படியே என்னுடைய சிறு வயதிற்கு அழைத்துச்சென்றது. இனி இது போல் அடிக்கடி பதிவு எழுதுங்கள் சார். மிக்க நன்றி!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s