ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட அந்த மஹாசக்தி எது?

கிடைத்த ஸ்பெக்ட்ரம் அவலை ஜெயா டிவி நன்றாகவே மென்று கொண்டிருக்கிறது.

 வைகோ, சோ, சுப்ரமணியம் ஸ்வாமி என்று பல்வேறு பிரபலங்கள் அவல் கொண்டு வர ஊதி ஊதித் தின்று கொண்டிருக்கிறார்கள். சோ பேசுகிற போது ராஜாவுக்கும் கருணாநிதிக்கும் மிஞ்சிய ஒரு சக்தியின் தலையீடு இருக்கிறது, அந்த சக்தி நிச்சயம் பிரதமரை விட வல்லமை படைத்ததாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அளவில் மட்டுமே குறிப்பிட்டார்.

சோ அவரது வழக்கமான ராணுவ நிற சஃபாரியில் வராமல் வெளிர் மஞ்சள் நிறச் சட்டை அணிந்திருந்தார். மஞ்சள் துண்டு மாதிரி இதிலும் ஏதாவது செண்டிமெண்ட் இருக்குமோ?

பரபரப்புக்குப் பெயர் போன ஸ்வாமி இந்த இலைமறைக் காய் பேச்செல்லாம் பேசவில்லை. நெத்தியடியாக இன்னின்னாருக்கு இத்தனை சதவீதம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.

ஒரு பத்திரிகை கூட இந்த மஹாசக்தியின் இன்வால்வ்மெண்ட் பற்றி சந்தேகம் எழுப்பவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. வம்பை மார்க்கெட்டிங் செய்யும் பத்திரிகைகளின் வாயை மூடி வைத்திருப்பது நிஜமா, பயமா, பிரியமா, பணமா?  

ஸ்வாமியின் மழலைத் தமிழில் இந்த வம்பைக் கேட்க சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை அப்படியே நம்ப நான் தயாரில்லை. நான் மட்டுமில்லை, ஸ்வாமியைப் புரிந்த யாருமே அதை முழுசாக நம்ப மாட்டார்கள்.

திருடின பணம் வெளிநாட்டுக்குப் போயாகி விட்டது என்றால், நம்ம பொருளாதாரம் இத்தனை பெரிய ஓட்டையை அக்காமடேட் செய்யுமா?

சில ஆயிரம் கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதற்கே அமெரிக்கா சோற்றுக்கு சிங்கி அடிக்கும் நிலைக்கு வந்ததே, லட்சம் கோடியை இந்த நாடு தாங்குமா?

’இவர்கள் பட்டாடையைப் பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணம் களவு போய் விட்டது’ என்கிற தமிழன்பனின் கவிதை நினைவுக்கு வருகிறது.

தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்கள். நின்றால் கூட தோட்டா காலிடுக்கு வழியாகப் போய்விடுகிற அளவுக்கு குள்ளமான தெய்வம் போலிருக்கிறது. அதுதான் எல்லாரும் தப்பித்து விடுகிறார்கள்.

*******************************************************************************************************

ஜகன்மோஹன் ரெட்டி புதுக் கட்சி ஆரம்பிக்கிறாராம்.

ஆந்திரக் காற்றில் சிரஞ்சீவி அம்மியே பறந்து விட்டது. ஜகன்மோஹன் எல்லாம் வெறும் கூழாங்கல்!

Advertisements

10 comments

 1. //திருடின பணம் வெளிநாட்டுக்குப் போயாகி விட்டது என்றால், நம்ம பொருளாதாரம் இத்தனை பெரிய ஓட்டையை அக்காமடேட் செய்யுமா?சில ஆயிரம் கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதற்கே அமெரிக்கா சோற்றுக்கு சிங்கி அடிக்கும் நிலைக்கு வந்ததே, லட்சம் கோடியை இந்த நாடு தாங்குமா?//

  ‘இருக்கும் பணத்தை’ எடுத்தால் நம்ம பொருளாதாரம் இத்தனை பெரிய ஓட்டையை அக்காமடேட் செய்யாது. ஆனால் அரசுக்கு வர வரவேண்டிய பணத்தை ஆட்டையை போட்டால் வளர்ச்சி பாதிக்கும். என்ன சொல்ரீங்க……??

  1. அதென்னமோ சரிதான் புரட்சித் தலைவரே…… ஆனால் கையூட்டு பெறப்பட்டிருந்தால், அப்படிப் பெறப்பட்ட கையூட்டு வெளிநாட்டுக்குப் போயிருந்தால், நம் பொருளாதாரத்தில் சுழற்சியில் இருக்கும் பணத்தின் அளவு குறையும். இதைச் சமன்படுத்த உற்பத்திகளைக் குறைக்க வேண்டியிருக்கும். அது மிகப் பெரிய வீழ்ச்சியாக முடியலாம்.

 2. கையூட்டு பெறப்பட்டிருந்தால் –
  Sir,As you are well aware, there is no graft involved in this issue. just benomy style dealings and reaping profits that were due to govt.
  in fac – if there werent any “silly” acts like pre-ponement of cut-off dates,etc,, it would be very difficult to even nail any irregularity at all..95% of the process has been as per law – only ethically & morally wrong.
  For,ex – in 2003 – spectrum was given out in then recently determinied prices of 2001.
  Raja says, he followed the same process as his predecessors(selling in 2001 prices) – which is right as per law – but is a foolish act, if viewed morally.
  And there is the whole concept of whether to view licence to operate & spectrum – together or disctinctly.
  If you had seen Raja’s earlier interviews, you can clearly see that – he will interchangeably use the two terms spectrum and licence in order to confuse the public.
  My take is , any body in telecom industry – who know the nuances of gsm,cdma,importance of the different frequency bands, limits in each circle,etc… – would be awe struck at the geniusness of raasaa.

  1. பரவாயில்லை கேசவ், அதான் ஆவிகளுக்கு நிறைய பின்னூட்டம் வந்திருக்கே! அரசியலும் நம்மைப் பிடித்த பேய்தானே… அதனால ரெண்டும் ஒண்ணுதான்!

 3. வெங்கட் சொல்லியிருப்பது பெரும்பாலும் சரி தான். ஆனால் ஒரு விஷயம் இப்போதுதான் சரியானவகையில் வெளி வந்து உள்ளது: குறிப்பிட்ட தினத்தில் காலை அறிவிப்பு வெளியிட்டு, மதியம் நாற்பத்தைந்து மணித்துளிகள் நேரத்தில் டெண்டர் காகிதங்களுடன் வங்கி காசோலை ஆயிரத்து அறுநூறு கோடிக்கு சேர்த்து செலுத்தவேண்டும்; செலுத்துபவர்களில் “முதலில் வந்தவர்க்கு முன்னுரிமை ” என்றது என்ன நேர்மையில் சேர்த்தி? முன்னைய அரசும் அவ்வாறு தான் செய்ததா? சரி பல நிறுவனங்கள் தயாராகக் கொண்டு வந்த டெண்டர்களை செலுத்த தள்ளு முள்ளு ஆகியது எப்படி? எவ்வளவு பேருக்கு அன்று தான் அவ்வாறு அறிவிப்பு வெளிவரும் என்று முன்னமேயே சொல்லி இருந்தார்கள்? மிகத் திறமையாக செயலாற்றிய திருவாளர் ராசா இதில் எவ்வாறு கோட்டை விட்டார்?

 4. வலைப்பக்கங்களில் அதிகம் பயன் படும் வார்த்தைகள் ராசா, ராடியா போலும். எனவே பின்னூட்டங்களும் வெவ்வேறு வலைப்பதிவுகளுக்கு போகும் தானே

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s