மதுரையில் ஃபோர்வேணி சங்கமம்

டிவிஎஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு 5S பயிற்சி வகுப்பு எடுப்பதற்காக மதுரை போக வேண்டியிருந்தது.

 ஸ்லீப்பர் பேருந்தில் என் முதல் அனுபவம்.

 பெருங்குளத்தூரில் ஜிஎஸ்டி சாலையில் ராத்திரி பதினொன்றரை மணி வரை நிற்க வைத்து விட்டார்கள்.  மஃப்ளர் சுற்றின போலீஸ்காரர் வந்து ‘டொக்,டொக்’ என்று குச்சியைத் தட்டி,

“எல்லா வண்டியும் போயாச்சே, எதுக்கு வெய்ட் பண்றீங்க?” என்று சந்தேகப் பார்வை பார்த்தார்.

அதுகூடப் பரவாயில்லை. அகாலத்தில் நடு ரோட்டில் வெற்றுப் பார்வை பார்த்தபடி நின்றதால் ’மேற்படி’ மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் களும் வர ஆரம்பித்து விட்டார்கள்.

ஸ்லீப்பர் வசதி நன்றாகத்தான் இருக்கிறது. ஒற்றை பெர்த்காரர்களுக்கு பெட்டி வைக்க இடமில்லாமல் அநீதி இழைக்கிறார்கள். பொதுவாக இரட்டை பெர்த்களை ஒரு குழுவைச் சேர்ந்தவர்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்கிறார்கள். ஒரே ஒரு இரட்டை பெர்த்தில் மட்டும் தனியாக வந்த ஒரு முப்பத்தைந்து வயதுப் பெண்மணியின் சக பிரயாணி ஒரு கல்லூரி மாணவன்.

“மேடம், சாரோட மாத்திக்கிறிங்களா?” என்று என் அனுமதியின்றி தாராளமாகக் கேட்டார் டிராவல்ஸ் ஆசாமி.

“வேணாம்” என்று சொன்னதோடு, விலுக் என்று ஒரு ஜம்ப் செய்து ரஜினி ஸ்டைலில் அப்பர் பெர்த்தில் அமர்ந்தார் அந்தப் பெண்மணி. யாரையாவது அவர் ஒரு அறை விட்டால் ஐந்தாறு பற்கள் எகிறிவிடும் போல இருந்தார் பார்க்க. காலையில் யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்,

“ஸ்டேஷனுக்கு வரணுமா, நேரா கோர்ட்டுக்கு வந்துடட்டுமா?”

“………………………………………….”

“இல்லை சார், திருமங்கலம் ஸ்டேஷன்ல ரிஜிஸ்டர் ஆயிருக்கு”

அவர் பேசிய ஜோரைப் பார்த்து கிளீனர் பையன்

“வணக்கங்க்கா” என்றான் பணிவாக ஒதுங்கி நின்று.

அவனை முதுகில் தட்டிச் சிரித்தார் அந்தப் பெண்மணி.

எந்த சாமியையும் இப்போதெல்லாம் இலவசமாகப் பார்க்க முடிவதில்லை. மீனாட்சியைப் பார்க்க ஓஸி தரிசன க்யூவில் போனால் முப்பதடிக்குப் பின்னால் நிறுத்தி ஜருகண்டி செய்து விடுகிறார்கள். நூறு ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினால் பத்தடி தூரத்தில் பார்க்க முடிகிறது. (டிக்கெட் வாங்காமல் அதே நூறு ரூபாயை காசாகக் கொடுத்தால் இரண்டு பேர் உள்ளே போக முடிகிறது) மரகதக் கல்லிலிருந்து வரும் ரேடியேஷன் ரொம்ப விசேஷமாமே?

சொக்கநாதருக்கு இத்தனை மார்க்கெட் வால்யூ இல்லை. அவரைக் காசில்லாமலே பார்க்கலாம். இங்கே மட்டுமில்லை, காசு கொடுத்துப் பார்க்கிற சிவன் எங்கேயுமே இல்லை.

வலது பாதம் தூக்கி ஆடும் நடராஜர் இங்கே விசேஷம் என்றார்கள் கோயிலில். எனக்கொரு சந்தேகம். ஒரு பாதம் மட்டும் தூக்கி எப்படி ஆட முடியும். கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பாதத்தையும் தூக்கத்தானே வேண்டும்? பிறகெப்படி அது விசேஷமாகும்?

மழை பெய்த போது வெண்ணைக் கடை வாசலில் நின்றிருந்தேன். கடையே வெறும் ஆறடிக்கு நாலடிதான்.

“உள்ள வந்து உட்காருங்க சார்” என்று கடைக்காரர் உபசரித்தார்.

சென்னையாக இருந்தால்,

“மறைக்காம இப்படி நில்லுங்க சார்” என்று கடைக்காரர் காட்டும் இடத்தில் நின்றால் இடது கை விரல்கள் தவிர பாக்கி எல்லாம் நனைந்து விடும்.

இருபது நிமிஷ மழையில் நாறிப் போகிறது மதுரை. மேலமாசி வீதியிலிருந்து ஹோட்டலுக்குத் திரும்பும் ஜங்க்‌ஷனில் இடுப்பளவு தண்ணீராகி எல்லோரும் அப்படி அப்படியே நின்று விட்டார்கள். பழக்கடைக்காரர் பாதாள சாக்கடையின் மூடியை நெம்பித் தள்ளிவிட்டார். ஃபோர்வேணி சங்கமம்!

Advertisements

14 comments

 1. ஓஹோன்னானா! மதுரை விஸிட்டா? எப்பூடீ?
  அப்புடியே அந்த பிரேமவிலாஸ் அல்வா தின்ற எக்ஸ்ப்பீரியன்ஸைப்பத்தியும் நீங்க எழுதி இருக்கலாம்!
  இப்போ எல்லா பிரைவேட் பஸ்லேயும் இதே பேஜார் தான் சார்!2 மணி நேரம் முன்னாடியே வெயிட் பண்ண வெச்சுட்டு இவங்க எல்லா இடத்துலேயும் பார்ஸல் ஏத்திண்டு வரத்துக்குள்ளே நமக்கு கால் கடுக்க ஆரம்பிச்சுடும்! வழக்கம்போல ஜோர் பதிவு தான்!

 2. // ஃபோர்வேணி சங்கமம்!// :)) சிலசமயம் பாதாள நதியும் கலந்து ‘மண’மா ஓடும்.

  //கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பாதத்தையும் தூக்கத்தானே வேண்டும்// இடது பாதத்தை தூக்கும்போது ஜம்ப் பண்ணி சிதம்பரத்தில லேண்ட் ஆயிடுவாரா இருக்கும். நல்லா கேக்கறீங்கய்யா டீடெய்லு :))

 3. இடது பாதத்தை தூக்கும்போது ஜம்ப் பண்ணி சிதம்பரத்தில் லேண்ட் ஆயிடுவாரா…? ஸ்ரீதர் நாராயணன்… உங்க கருத்தைப் படித்து, அந்த ஆடியபாதம் ஆடிப்போயிருப்பார்….

 4. நியாயமான கேள்வி – என்ன விசேஷமென்று கண்டுபிடித்தீரா?
  மதுரை திருச்சி எல்லாம் சென்னை போல் வளரவில்லை என்று புலம்புகிறார்களே – உங்கள் பார்வை என்ன?

  1. அப்பாதுரைஜி, மதுரையும் திருச்சியும் சென்னை அளவு வளராம குள்ளமா இருக்கிறதாலேதான் மழை பெய்தா சீக்கிரம் முழுகிடுதோ என்னமோ! மத்தபடி மெட்ரோவுக்கு உண்டான போலித்தனங்கள், அவசரங்கள், ஆடம்பரங்கள், அநாகரிகங்கள், குள்ளநரித்தனம் இதுல எல்லாம்தான் இன்னும் சரியா வளரல்லை….

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s