எந்திரனும் எச்சுமிப்பாட்டியும்

”எங்கடிம்மா பொறப்ட்டுட்டேள் ரெண்டு பேருமா?”

 “எந்திரன் பாக்கப் போறோம்”

 “அதைப் பாக்க ஏன் இப்டி டீக்கா டிரஸ் பண்ணிண்டு வெளில போகணும்… எங்கிட்ட கேட்டா நான் காமிக்க மாட்டேனா?”

 “பாட்டீ….. உனக்கெப்படிக் கிடைச்சுது? போலீஸ்க்கு தெரிஞ்சா அரஸ்ட் பண்ணிடுவா”

 “போலீஸ்க்கு எபடித் தெரியும், அது இருக்கிறது உங்கப்பனுக்கே தெரியாது”

 “உனக்கெதுக்கு பாட்டி இந்த திருட்டு புத்தி? அப்பாக்கு கூடத் தெரியாம ஒளிச்சி வெச்சிருக்கியா? யாரு கிட்ட வாங்கியிருந்தாலும் உடனே கொண்டு போய்க் குடுத்திடு. இப்படி அவங்கவங்க திருட்டுத்தனம் பண்றதிலே எத்தனை பேரோட பிழைப்புல மண்ணு விழுது தெரியுமா? எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?”

 “நஷ்டம்தான் ஒப்புக்கறேன்… நம்ம செளகர்யம்ன்னு ஒண்ணு இருக்கே…. டக்குன்னு வேண்டிருக்கும் போது எடுத்துப் போட்டு நாலு ரவுண்டு…..”

 “இந்த மாதிரி ஒரோரு ஆள் பண்ற போதும் குறைஞ்சது நூறு ரூபா நஷ்டம்”

 “நூறு ரூபாயா! அடி அங்காள பரமேஸ்வரி…. எங்க காலத்துல காலணாதான் சார்ஜு”

 “அதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் அவங்களுக்கு ஆகற செலவே இருபது கோடி. கிடைக்கற லாபம் நூத்தி அம்பது கோடி இருக்கும்”

 “காலம் போற போக்கைப் பாரு, அந்தக் காலத்தில மிஷின் வெச்சிருந்த நாயுடு கொரடாச்சேரி குதிரை மாதிரி இருப்பான். அவன் குழந்தைங்க எல்லாம் கஞ்சிக்கு செத்த நாய்ங்க மாதிரி இருக்கும். மாசம் பூரா ஓட்டினாலும் ஆறரை ரூபா கூடக் கிடைக்காது”

 “ஏன் பாட்டி, கூட்டமே வராதா?”

 “மிஞ்சிப்போனா பத்து பேர் வருவா தினம். அதுல என்ன சம்பாதிச்சிட முடியும்?”

 “பத்து பேரா? பத்து பேர்க்காக ஓட்டினாரா?”

 “என்ன பண்றது வயித்துப் பிழைப்புன்னு ஒண்ணு இருக்கே”

 ”இப்ப அப்டியெல்லாம் கிடையாது. பிரேக் இவன்க்கு மேல வர்ர வரைக்கும்தான் ஓட்டுவா. இல்லைன்னா படத்தை மாத்திடுவா”

 “ஓஹோ… படத்தை மாத்தினா கூட்டம் சேருமோ?”

 “ஆமாம், இல்லையா பின்னே?”

 “லோகம் எங்க போயிண்டிருக்குன்னே தெரியலை. மாவரைக்கிற மிஷின்ல கூட்டம் சேர்க்கறதுக்கு பஸ் மாதிரி படமெல்லாம் போடறாளா?”

 “மாவரைக்கிற மிஷினா?”

 “ஆமாம்… அதுலதானே கோடி கோடியா சம்பாதிக்கிறான்னு சொன்னே?”

 “நாசமாய்ப் போச்சு. நான் சொன்னது சினிமா தியேட்டரை”

 “சினிமா தியேட்டரா? அது எங்க வந்தது?”

 “அதுலதானே எந்திரன் பாக்கப் போறோம்”

“வாஸ்தவம்தான். பழைய பொருளெல்லாம் இப்ப நேர்ல எங்க பாக்க முடியறது. சினிமாலதான் பாக்கணும். என் மாதிரி எத்தனை பேர் ஆத்துல பத்திரமா வெச்சிருக்கப் போறா”

 ”பாட்டி… நீ என்ன பேசறேன்னே புரியலை. தலை சுத்தறது”

 “எந்திரம்தானே பார்க்கப் போறேன்னு சொன்னே? மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வந்தப்புறம் எந்தரத்தை யாரு யூஸ் பண்றா. பரண்ல வெச்சிருக்கேன். மாப்பிள்ளையை ஏறி செத்த எடுக்கச் சொல்லேன். அதைப் போய் ஏன் நூறு ரூபா குடுத்துப் பார்க்கறே?”

 ”மை காட்…. எந்திரம் இல்லை பாட்டி, எந்திரன்.. எந்திரன் பார்க்கப் போறோம்”

 “அதாரு எந்திரன்? உங்கப்பா வேலைக்குப் போன புதுசில குந்தரன்ன்னு ஒத்தன் கிரிக்கெட் ஆடிண்டு இருந்தான். அவனை இன்னமா டீம்ல வெச்சிருக்கா? இருந்தாலும் இருக்கும், இந்த கவாஸ்கரை ரிடையர் பண்ணப்பட்ட பாடு நாயறிஞ்சி போச்சே”

 “எந்திரன்னா ரோபோட்…. ரஜினி ரோபோட்டா நடிச்சிருக்கார்”

 “ரோபோட்டா? நடிக்கிறதுதான் நடிக்கிறான் மோட்டார் போட்டாவே நடிச்சிருக்கலாமே…. என்னத்துக்காக ரோபோட்டு?”

 “ரோபோட்ன்னா போட் இல்லை. அது மனிஷன் மாதிரியே இருக்கிற ஒரு மிஷின். விலை அறுபது லட்சத்துலேர்ந்து நாலு கோடி ரூபா வரைக்கும்”

 “நல்லாத்தாண்டிம்மா இருக்கு. மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன் என்ன பன்ணுமாம் அந்த மிஷின்?”

 “மனிஷன் பண்ற எல்லாத்தையும் பண்ணுமாம்”

 “பூ… இவ்ளோதானா? அதை ஒரு மனிஷனே பண்ணிடலாமே. நாலு கோடி ரூபா குடுத்து மனிஷனாலே பண்ண முடியாததைப் பண்ணா தேவல்லை”

 “பாட்டி… சட்டவிரோதமான காரியங்களைப் பண்ண அதை யூஸ் பண்றாளாம்”

 “ஏன்… மனிஷாளேதான் நிறைய்ய சட்டவிரோதமான காரியமெல்லாம் பண்றாளே”

 “மிஷின் மேலே கேஸ் போடமுடியாதோலியோ… அது தப்பிச்சிடுமே?”

 “மனிஷாளும்தான் ஊரையே அடிச்சி உலைல போட்டுட்டு கேஸ் இல்லாம தப்பிச்சிடறாளே? மறுபடியும் எலக்‌ஷன்ல நின்னா ஓட்டும் போட்டுடறாளே”

 

Advertisements

15 comments

  1. // “மனிஷாளும்தான் ஊரையே அடிச்சி உலைல போட்டுட்டு கேஸ் இல்லாம தப்பிச்சிடறாளே? மறுபடியும் எலக்‌ஷன்ல நின்னா ஓட்டும் போட்டுடறாளே”//

    மிகச் சரியாக சொல்லியிருக்காங்க…..

  2. லச்சுமி பாட்டி கேள்வியெல்லாம் நன்னா இருக்கு கேள்விக்கு பதில் கிடைக்கிரதே அதுதான் ஆச்சரியமாக இருக்கு. உனக்கு ஒண்ணும் தெரியாது.சும்மா தொணதொணக்காதேன்னு சொல்லலையா. ஆச்சரியமாக இருக்கே

  3. //மறுபடியும் எலக்‌ஷன்ல நின்னா ஓட்டும் போட்டுடறாளே// இதுதாங்க புரியமாட்டெங்கிறது! கட்சியை தாண்டி ஒரு நல்ல எளிமையான நபருக்கு ஓட்டு போட நம் மக்கள் ஏன் இன்னும் சிந்திக்க முடியவில்லையோ!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s