நண்பேண்டா…..

இப்போதெல்லாம் பெருங்காயம் வாங்குவதாக இருந்தால் கூட மூன்று கொட்டேஷன்கள் வாங்கித்தான் தீர்மானிக்கிறேன். (வெங்காயம் வாங்க பாங்க்கில் லோன் போட்டிருக்கிறேன்)

 வழக்கமாக வாங்கும் கடை மூடி இருக்கிறதே என்று ஒரு புதுக் கடையில் அரிசி வாங்கினேன். ஸ்டாப் கேப்தானே என்று ரெண்டு கிலோ மட்டும் போடச் சொன்னேன். அரிசி நன்றாக இருந்தது. என்ன விலை என்று கேட்டதற்கு என் ஆஸ்தானக் கடையைவிட கிலோவுக்கு ஐந்து ரூபாய் குறைவாக இருந்தது.

“நல்லா இருக்கே, எனக்கு பத்து கிலோ போடுங்க” என்று பக்கத்திலிருந்தவர் கேட்டார்.

“அம்மா வாங்கற அரிசி இந்த ரகமில்லைங்க. அது வேறே” என்றார் கடைக்காரர்.

“பரவாயில்லைங்க, கிலோ முப்பத்திரெண்டு ரூபான்னா சீப்பா இருக்கே?”

“ஐய்யெய்யே, விலை குறைச்சலா இருக்கேன்னு இதை வாங்காதீங்க, தேவையில்லாம பிரச்சினை ஆயிடும், அவங்க டேஸ்டே வேறே”

“சரி துவரம் பருப்பு ஒரு கிலோ போடுங்க”

“துவரம் பருப்பு காலி ஆயிடுச்சுங்களே”

“சக்கரை ஒரு கிலோ……”

“மளையில சக்கரையெல்லாம் கட்டி கட்டிரிச்சுங்க”

“பரவாயில்லை குடுங்க”

“நீங்க பரவாயில்லைம்பீங்க, நம்ம கடைக்குன்னு ஒரு இமேஜ் இருக்கில்ல”

அந்தாளுக்கு எதுவும் விற்பதில்லை என்பதில் கடைக்காரர் தீர்மானமாக இருப்பது புரிந்தது.

ஏன் என்பது மட்டும் புரியவில்லை.

“ஏங்க கஸ்மர்ங்களை இப்படி டீல் பண்றிங்க? அப்புறம் மறுபடி வரவே மாட்டாங்க” என்ற என்னைப் பார்த்து

“எனக்கும் அதாங்க வேணும். அந்தாளு தரவேண்டிய பழைய பாக்கியே ஆயிரத்தி முன்னூறு ரூபா இருக்கு. எப்பிடி மேலும் மேலும் கடன் தர்ரது? நாலு பேருக்கு எதிர்ல அதைக் கேட்டாலும் வருத்தப் படுவாரு”

எது எப்படியோ இத்தனை நாளாக ’நண்பேண்டா’ என்று நம்பிக்கையாகப் பொருள் வாங்கின என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்.

ரொம்ப நட்போடு பழகும் போது பேரம் பேச மாட்டோம். இந்த பிரிவிலேஜை விலையை ஏற்றி விற்க நிறைய வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

என் ஆஸ்த்தான கேட்டரிங் வித்வான் கூட அப்படித்தான். நான் அவரிடம் கேள்வியே கேட்பதில்லை.

“……………………………. சொன்னா அதுக்கு அப்பீலே கிடையாது. நீங்க சொன்னதுதான் ரேட்” என்று அப்படியே ஒப்புக் கொண்டு விடுவேன்.

ஒன்று இரண்டு இல்லை, எங்கள் குடும்பத்தில் சுமார் பனிரெண்டு சந்தர்ப்பங்களில் கேட்டரிங் செய்தவர். எங்களாலேயே குறைந்தது பத்து லட்சம் சம்பாதித்திருப்பார். அவரை என் நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்துக்கு சிபாரிசு செய்தேன்.

என் நண்பர் எமகாதகர்.

”சோனா மசூரியா இருந்தா ஒரு கிலோவுக்கு பதினேழாயிரத்தி தொளாயிரத்தி ஆறு அரிசி இருகும். அதுவே பொன்னியா இருந்தா பதினெட்டாயிரத்தி…….” என்கிற லெவலில் கணக்குப் போடுகிறவர்.

நாங்கள் தருவதைவிட நாற்பெத்தெட்டாயிரம் குறைவாகக் கொடுத்து, ஃபோட்டோ, வீடியோவும் சேர்த்துப் பண்ண ஒப்புக்கொள்ள வைத்துவிட்டார் நண்பர். கேட்டால் ”இதுலயே அவனுக்கு எழுபத்திரெண்டாயிரத்தி சில்றை லாபம் இருக்குய்யா” என்கிறார்.

அவர் சாமர்த்தியமாக இருந்து தொலைக்கட்டும். இதை என் மனைவி இருக்கும் போதா சொல்லி என் தாலியை அறுக்க வேண்டும்?

“என்ன இழவு பிளாக் பெல்ட்டோ, ஒரு அருணாக்கயிறுக்குக் கூட லாயக்கில்லை” என்று சொல்லிவிட்டு, நான் தரும் விளக்கத்தைக் கூடக் காது கொடுத்துக் கேட்பதில்லை என் இல்லத்தரசி.

“சரி, சரி. வாசல்ல குப்பைக்காரன் வர்ரதுக்குள்ளே இதைக் கொண்டு போய் வைங்க” என்று குப்பைத் தொட்டியை நீட்டுகிற போது என் ரத்த அழுத்தம் நூற்றி எழுபதைத் தொடும்.

பிஸினஸ் தனி, பழக்கம் தனி என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாம்தான் ஏமாந்து போகிறோம்.

நான் அரிசி வாங்கின கடையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.

“சோப்பு குடுங்க நாடார்”

“என்னா சோப்பு?”

“………………………… சோப்பைத் தவிர வேறே எந்தக் கழுதை சோப்பா இருந்தாலும் குடுங்க”

இதைச் சொல்லும் போதே அவர் கைகள் நடுங்குவதையும், அவர் பற்கள் இறுகுவதையும் கவனித்தேன்.

“என்ன இப்டிச் சொல்றீங்க, …………………………….. சோப்தான இப்ப ஃபேமஸூ?” வெலையும் சரஸமில்ல?”

அவருக்கு நரம்புகள் புடைத்தது.

“அந்த சோப் பேரை மறுபடி சொன்னீங்கன்னா இந்தக் கடைப் பக்கமே நான் வரமாட்டேன்”

நான் ஆச்சரியமாக அவரைப் பார்த்தேன்.

“ஏன் சார் இந்தக் கொலை வெறி?”

“ஏங்க, ஒரு விளம்பர இடைவேளை மொத்தம் அஞ்சு நிமிஷம். அந்த அஞ்சு நிமிஷத்துக்குள்ளே ஒரு விளம்பரத்தை எட்டு தடவை போட்டா எவனுக்குத்தான் கடுப்பு வராது? ஒடம்புல அழுக்கே போகல்லைன்னாலும் பரவாயில்லை, அதிக விலை குடுத்து சொத்தே அழிஞ்சாலும் பரவாயில்லை. ………………………………. சோப்பை மட்டும் இனி வாங்கறதில்லை”

விளம்பரம் என்பது ஒருவித மூளைச் சலவை.

சோப் என்றதுமே உங்கள் மனக்கண்ணில் கும்மாச்சி சோப்தான் வரவேண்டுமாம்! அதற்காக கும்மாச்சி சோப் விளம்பரத்தைத் திரும்பத் திரும்பப் போடுகிறார்களாம்! ஓவர் டோசாகப் போகிற போது அதற்கு இந்த மாதிரி எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்பதை ஏனோ அவர்கள் மறந்து விட்டார்கள்.

எனக்குக் கூட அவர் குறிப்பிட்ட அந்த விளம்பரம் கொஞ்சம் எரிச்சல் ஊட்டும் என்பது நிஜம்தான். அதற்குப் பயந்து கொண்டு சில அபிமான நிகழ்ச்சிகளையே சில நிமிஷங்கள் ஃபோர்கோ செய்ததுண்டு. ஒருவேளை போட்டிக் கம்பெனிக்காரர்கள் ஸ்பான்ஸர் செய்து அந்த விளம்பரத்தைத் திரும்பத் திரும்பப் போட வைக்கிறார்களோ?

சம்பந்தப்பட்டவர்கள் விளம்பரத்துக்கு முன்னும் பின்னும் வியாபார நிலையைச் சோதித்தால் அவர்களுக்கே புரியப் போகிறது. வாடிக்கையாளர்கள் எல்லாருமேவா எங்களை மாதிரி கடுப்பெடுத்த கந்தசாமியாக இருப்பார்கள்!

இந்தமாதிரி வேண்டாம் வேண்டாம் என்று ஓடுகிற வரைக்கும் சில விளம்பரங்களைப் போடுகிறார்கள். சமீபத்தில் வந்த ஒரு பிரபல ஜவுளிக் கடை விளம்பரத்தில் சுத்தசாவேரி ராகத்தில் அருமையாக ஒரு பாட்டுப் போட்டிருக்கிறார்கள். மிகச் சரியாக ராக லட்சணம் தெரிகிற இடத்தில் கடைப் பெயரைப் போட்டிருக்கிறார்கள். அதைக் கேட்கிற யாரும் அந்த லைனைப் பாடிப் பார்க்காமல் இருக்க முடியாது. எந்தச் சானலில் அந்த விளம்பரம் வரும் என்று தேடித் தேடி இளைக்கிறேன். போடவே மாட்டேன் என்கிறார்கள்.

கும்மாச்சி சோப்காரர்கள் இவர்களிடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

Advertisements

14 comments

 1. இது என்ன ஜூ.வில வர்ற கழுகு மாதிரி கடைசி வரைக்கும் கும்மாச்சி சோப்போட நிஜப்பெயரை சொல்லவே இல்லையே! ஹாஹா! மனைவி கிட்ட எதையும் மறைக்கக் கூடாது, தெரியாதா?

  சரி போன பதிவிலே கமெண்ட் போட முடியாததுக்கு, என்ன காரணமாம்?

 2. //வெங்காயம் வாங்க பாங்க்கில் லோன் போட்டிருக்கிறேன்//

  அதில் பூண்டையும் தக்காளியையும் சேர்த்திருந்தா லோன் சாங்க்ஷன் ஆகியிருக்கும் இந்நேரம்.

 3. எனக்கும் கூட இந்த அனுபவம் எங்கள் இல்ல ஆஸ்தான சமையல் கலைஞரிடம் உண்டு. நான் அவரிடம் உரையாடிய போது அவர் “எனக்கு இந்த கான்ட்ராக்ட் மூலம் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை” என்றார். எனக்கு கொஞ்சம் சுருக் என்றது. நம்மால் ஒருவர் நஷ்டப்படுவதா? நானும் என் தகப்பனாரும் “தானப்ப முதலி” டைப். உடனே பேசிய தொகைக்கு மேல் ஒரு இருபத்தைந்தாயிரம் கொடுத்தோம்.
  எனக்கென்னவோ இந்த ஸ்டேட்மெண்ட்லாம் அவர்கள் ஸ்ட்ராடேஜி என்றே தோன்றுகிறது. ஆனால் என்ன அவர்கள் உணவின் சுவை இந்தவிலை பேரத்தைஎல்லாம் மறக்கடித்துவிடும்.

  பேரங்களில் “தோற்றால்” அல்லது ஏமாற்றப்பட்டால் சில (பல) சமயம் எங்கள் இல்லத்தில் என் அப்பாவிற்கு நல்ல அர்ச்சனை கிடைக்கும், தற்போது எனக்கும் சேர்த்து. நீங்கல்லாம் என்ன ஆடிட்டரா இருந்தேல்னு வெளியில் சொல்லாதீங்கோ (இது அப்பாவிற்கு) நீ எம்.டெக், பஞ்சாப் ல படிச்சனு சொல்லாதடா நீயும்.. என் மானம் போகுது (இது எனக்கு)

  படிப்புக்கும், வேலைக்கும் பேரத்தில் தோற்பதக்கும் என்ன சம்பந்தம் என்பதை யாரேனும் விளக்கலாம்.

 4. வெங்காய லோன்ல ஆரம்பிச்சு ..காலையில சர வெடிதான் போங்க..

  //அவர் சாமர்த்தியமாக இருந்து தொலைக்கட்டும்.//

  நியாமான எரிச்சல்..

  //“என்ன இழவு பிளாக் பெல்ட்டோ, ஒரு அருணாக்கயிறுக்குக் கூட லாயக்கில்லை”//

  நாம கடுகுன்னு நினைச்சு மறச்சா , அவங்களுக்கு பூசனியா தெரியுது..ஒன்னும் பண்ணமுடியாது .. சங்கம் ஆரம்பிச்சு இன்னமும் ராஜதந்திரங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்…

 5. ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் வாய்த்திருக்கும்..!!
  ”நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு” இதெல்லாம் அந்தக்காலம். நம்பினாத்தான் நல்லா ஏமாத்தறாங்க …அவ்வ்வ்….

 6. கும்மாச்சி சோப் – விளம்பரத்தின் வெற்றி தான் இது! எரிச்சலோ, என்ன இழவோ, அந்த சோப்பின் பெயர் நினைவு வைத்திருக்கிறாரே, அதே ஒரு வெற்றி தானே? இப்போதெல்லாம் எரிச்சலூட்டி விளம்பரப்படுத்துவது தான் ஃபேஷன்! ப்ளாக்பெல்ட் vs அருணாக்கயிறு சூப்பர் ரகம்! வழக்கம்ப்போல சரவெடி போஸ்டு.. சூப்பர் தல!

 7. நீங்க சொன்ன சோப் விளம்பரம் – நிச்சயம் பயங்கர டென்ஷன் ஆகுது. 5 நிமிஷத்தில் 10 தடவை போடறாங்க. (பொழுது போகலைன்னா இது கூட நாங்க எல்லாம் கணக்கு எடுப்போம்.)

  அதில் அப்பா, அம்மா, பெண் 3 பேர் வருவார்கள்.

  அம்மா பேசும் போது – என் வீட்டில் என்று சொல்லுவார்கள். எங்க என்று சொல்லணும் கூடத் தெரியாத ஒரு விளம்பரம்.

  எங்க வீட்டைப் பொறுத்தவரை – சம்பாதிப்பது மட்டும்தான் என் பொறுப்பு. வாங்குவது எல்லாம் அவங்கதான். மீ எஸ்கேப்பு ஃப்ரம் திட்டு கெட்டிங்.

 8. நல்ல பதிவு!இது போல் எல்லா கடைகளிலும் உண்டு!குறிப்பாக துணிக்கடை!ஆளுக்கு ஆள் வித்தியாசமாகவே விலை சொல்வார்கள்!நம்ம ஆளு என்று முருக்க மரத்தில் ஏற்றி விடுவார்கள்!

 9. இந்த விளம்பர தீவிரவாதத்தை ஓரளவாவது குறைக்க, டிவிஆரில் ரெகார்டு பண்ணிவைத்துவிட்டு, FF பண்ணியே பல ப்ரொக்ராம்களை நாங்கள் பார்க்கிறோம். அப்படியும் இந்த பேஸ்ட்/ப்ரஷ் கம்பெனி அடிக்கிற கூத்தில், நல்ல தூக்கத்தில் பயந்து போய் எழுந்து உட்கார்ந்து அலற வேண்டியிருக்கிறது!

  அதுவும் தீபாவளி, நியூ இயர் என்று வந்துவிட்டால் இந்த தீவிரவாதத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. அறுவை தாங்காமல், ஒரு ஆறுதலுக்காக நான் மொழியே தெரியாவிட்டாலும் பரவாயில்லை என்று ஏதாவது ரஷ்ய, கொரிய, ஸ்பானிஷ் சேனல்களில் போய்க் கொஞ்ச நேரம் தஞ்சமடைவதும் உண்டு!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s