கதிட்ரல் ரோடில் கில்மா கலெக்‌ஷன்

கடந்த பதினைந்து வருடங்களில் சென்னையைவிட பெங்களூருடன் நெருக்கம் அதிகமானதில், சென்னையின் சாலைகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கிறேன்.

மவுண்ட் ரோடிலேயே குண்டு குழிகள், பூந்தமல்லி ஹைரோடில் குப்பை, உஸ்மான் ரோட்டில் கஸ்மாலம் என்று நிறைய ஆதங்கம். கெதிட்ரல் ரோட் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

 வேதவல்லி கச்சேரிக்கும், நிஷா ராஜகோபால் கச்சேரிக்கும் இடையில் கொஞ்சம் கமர்ஷியல் பிரேக் எடுத்துக் கொண்டேன். சென்னைச் சாலைகளில் மதியம் பனிரெண்டு மணிக்கு நடந்து போகிற தைரியம் வேறெந்த மாசத்திலும் வராது. கெதிட்ரல் ரோடில் காலாற நடந்தேன்.

 ஸ்டெல்லா மாரிஸ் (ஆமாம், மாரிஸ்தான்) அருகே டூ வீலரில் போன ஒரு தம்பதியை நிறுத்தி குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். பத்தடி தள்ளி அதிகாரி அவரது பைக்கை நிறுத்திவிட்டு எதிர்ப்புறம் திரும்பி நின்றிருந்தார். இவர்களுக்கும் அவருக்குமாக மாற்றி மாற்றி நடந்து புறா வேலை செய்து கொண்டிருந்தார் அவரது அஸிஸ்டண்ட். பேச்சு வார்த்தை தோல்வி அடைகிற நிலையில் இருந்தது.

 அநேகமாக வண்டிக்கு வாங்கின லோனையே அவர்கள் இன்னும் திரும்பக் கட்டியிருக்க மாட்டார்கள். அழுக்கு சட்டையும், கசங்கின பேண்ட்டுமாக கணவனும், மஞ்சள் கயிரைத் தவிர வேறே எதுவுமே கழுத்தில் இல்லாமல், ஒரு நூற்றைம்பது ரூபாய் புடவையுடன் மனைவியும் இருந்தார்கள்.

 என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என்று கவனிக்கிற ஆசை என்னை நிறுத்தியது.

 “இங்க ஏன் சார் நிக்கிறீங்க?”

 “ஒரு ஃப்ரெண்டு வரேன்னாரு. அவருக்குத்தான் வெயிட் பண்றேன்”

 “கொஞ்சம் தள்ளிப் போய் வெயிட் பண்ணுங்க. இங்க நிக்கக் கூடாது”

 ’ஏன்?” என்று கேட்கிற ஆவல் எழுந்தது. ஃபிளாஸ்கில் கொஞ்சம் பழைய காபி வைத்திருந்தேன். கள்ளச் சாராயம் வைத்திருந்ததாக வழக்குப் போட்டு லாடம் கட்டிவிடுவார்களோ என்கிற பயத்தில் நகர்ந்து விட்டேன்.

 நடந்து, நடந்து, நடந்து ஜெமினி மேம்பாலம் கண்ணுக்குத் தெரிகிற தூரம் வந்ததும்,

 அட, இதென்ன பூங்கா மாதிரி இருக்கிறதே?

 ஓ… இதுதான் செம்மொழிப் பூங்காவா?

 ஜனங்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம். குழந்தைகளுக்கு கட்டணமில்லை. அரசாங்க பஸ் மாதிரி உசரத்தை வைத்து தீர்மானிக்கிறார்கள். குள்ளமணி, வரதுக்குட்டி எல்லாம் போனால் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது! காமிராவுக்குக் கட்டணமில்லை.

 செழுமையான பூச்செடிகள் மற்றும் குரோட்டன்ஸ் செடிகளும், ஃபவுண்டைன்களுமாக நன்றாகத்தான் இருக்கிறது. தண்ணீர்ப் பஞ்ச காலத்திலும் இதே போல இருக்குமா?

 உள்ளே ஏதாவது இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொன்வாசகங்கள் எழுதி வைத்திருப்பார்கள் என்று நினைத்தேன், செம்மொழிக்கும் இந்தப் பூங்காவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ம்ம்ம்ம் சிலப்பதிகாரம், திருக்குறள் வழியில் உருப்படு மாதிரி சமகால இலக்கிய முத்துக்களை (!) எல்லாம் அவர்கள் இன்னம் படிக்கவில்லை போலிருக்கிறது!

 பூங்காவில் எல்லார் கவனத்தையும் ஈர்த்தது ஒரு ஜெர்மானியக் குழந்தை. ஒரு முக்கால் ஜீன்ஸும், ஷூவும் அணிந்து அப்பா கையைப் பிடித்துக் கொண்டு ஒய்யாரமாக நடந்த அந்தக் குழந்தையை கொலைகாரனுக்குக் கூடப் பிடிக்கும். பார்த்தவர்கள் எல்லாரும் அந்தக் குழந்தையோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள, கொஞ்ச நேரத்தில் காமிரா வைத்திருப்பவர்களை தானே கைகாட்டி அழைத்து போஸ் கொடுக்க ஆரம்பித்தது. தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் முகத்திலும் அந்தச் சந்தோஷம் தெரிந்தது.

 ஜனங்கள் கண்டதைத் தின்று காகிதத்தைப் போடும் வேலையை அங்கே இன்னும் ஆரம்பிக்கவில்லை. மரத்துக்குப் பின் ஒதுங்கி நமட்டு விஷமம் செய்யும் ஸோ கால்ட் காதலர்களையும் அங்கே பார்க்க முடியவில்லை. செக்யூரிட்டியிடம்,

 “இத அப்டியே மைண்டன் பண்ணிக்க” என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.

 அகாடமி காண்டீனின் டிஃபன் பற்றி சுப்புடு பலதடவை எழுதியிருக்கிறார். பல வருஷங்களுக்கு முன்னால் ஆர்.கே.சூரியநாராயணா கச்சேரியின் முடிவில் பஜ்ஜி தின்றிருக்கிறேன். அந்த சுவை மெமரியின் ஒரு செல்லில் பதிவாகி இன்னமும் அழியாமல் இருப்பதால் தின்பதற்காகவே அகாடமிக்குப் போனேன்.

 அடாடா…. அந்தப் பொங்கலும், கரகரா வடையும் சாம்பாரின் சுவையும்….. செவிக்கு உணவு இருக்கிறபோதே வயிற்றுக்கு ஈவதற்காக பலர் வெளியில் வருகிறார்கள்! விலைகள் இருபது சதவீதம் ஜாஸ்தி, ஆனால் தரமும், சேவையும் பார்க்கிற போது அது மன்னிக்கப்படலாம்.

 வயிற்றுக்கு ஈய வேறெதுவும் இல்லை என்பதால் செவிக்கு ஈவதற்காக உள்ளே போனேன்.

 ஆர்.வேதவல்லி.

 காண்டீனிலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

 சிறந்த பாடகர்கள் குரலும், தம்மும் நன்றாக இருக்கும்போதே வி.ஆர்.எஸ் வாங்கிக் கொள்வது அவர்களின் ரெப்யுடேஷனுக்கு நல்லது. மஹாராஜபுரம் விஸ்வநாதய்யர் தன் கேரியரின் ஃபேக் எண்டில் பாடின சில கச்சேரிகள் இன்றைய வேதவல்லி ரகம்தான். ஆனாலும் என் அப்பா மாதிரி சில டை ஹார்ட் ஃபேன்கள், “ஸ்ஸ்ஸ்ஸ்ஸேபாஷ்” போட்டு அதை ரசித்தார்கள்.

 வேதவல்லியின் பாட்டு எந்த சங்கதிகளும் இன்றி, ரொம்ப சம்பிரதாயமாக இருந்ததோடு, ஓரஜூப்பு ஜூஸெதி நியாயமா என்று உச்சரிப்புப் பிழைகளும் நிறைய இருந்தன. கூடப் பாடியவருக்கு இன்னும் கொஞ்சம் அதிக சான்ஸ் தந்திருக்கலாம். மத்யமாவதி மாதிரி ஜனரஞ்சக ராகங்களைக் கூட விதியே என்று பாடின மாதிரி இருந்தது.

 இதே மாதிரி சுப்புடு செம்மங்குடி பற்றி எழுதும்போது செம்மங்குடி கொதித்தெழுந்தார்.

 “சுப்புடுவுக்கு வேறே வேலை இல்லை என்றால் என் பண்ணையில் நிறைய மாடுகள் இருக்கின்றன, அதை மேய்க்கலாம்” என்று பதில் சொன்னார்.

 வேதவல்லி அவர்களுக்கு பண்ணையோ, அதில் மாடுகளோ இல்லை என்று நினைக்கிறேன்.

 

Advertisements

21 comments

 1. பார்க், அப்புறம் கேண்டீன், அப்புறம் வேதவல்லியா.. வாழ்க்கைல ப்ரையாரிட்டீஸ் சரியா புரிஞ்சுருக்கு சார் உங்களுக்கு. வேதவல்லி இன்னுமா பாடறாங்கன்னு ஷாக்கா இருக்கு!

 2. காதல் இலக்கியங்கள் இதயப் படத்தோடு மரங்களில் கூட இன்னமும் செதுக்க வில்லையா..சென்னையில் இலக்கியத்துக்கு சோதனை…

  நான் பார்த்தவரையில் சென்னையில் முக்கிய சாலைகள் எவ்வளவு நேர்த்தியோ அவ்வளவுக்கு நேரேதிராக உப சாலைகள்….

 3. ” நேத்திக்கு அகாடமிக்கு வந்திருந்தேளோ…? ஆபோளிகான்னு…”
  “ ஆந்தோளிகா மாதிரி ஆபோளிகான்னு பாகவதர் புது ராகம் பாடினாரா…? “
  “ ஊஹூம்… காண்டீன்ல புது ஸ்வீட் போட்டிருந்தா… சூப்பர்…”

 4. பைக் தம்பதி சம்பவம்… எப்பவும் மாறது போல இருக்கு…

  பார்க் ரெம்ப நல்லா இருக்கும் போல இருக்கே சார்… இப்படியே maintain பண்ணினா புண்ணியம் எல்லாருக்கும்…

  கச்சேரிக்கும் எனக்கும் ரெம்ப தூரம்… ஆனாலும் உங்க நையாண்டி ரசித்தேன்…

  1. நன்றி அப்பாதுரைஜி, உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 5. மரத்துக்குப் பின் ஒதுங்கி நமட்டு விஷமம் செய்யும் ஸோ கால்ட் காதலர்களையும் அங்கே பார்க்க முடியவில்லை. செ//
  இதெல்லாம் இல்லாம அது என்ன பூங்கா…?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s