புத்தகச் சந்தை, சில புல்லட் பாயிண்ட்ஸ்

 • புத்தகச் சந்தையா, புத்தகக் கண்காட்சியா என்ற சுஜாதாவின் தயக்கம் எனக்கும் உண்டு. சந்தை என்கிற போதுதான் வாங்க வேண்டும் என்கிற எம்ஃபஸிஸ் இருக்கிறது.
 • சேத்துப்பட்டு ஸ்டேஷனில் இறங்கிப் போவதா, நுங்கம்பாக்கமா என்கிற குழப்பத்துடன் சேத்துப்பட்டில் இறங்கிப் போனேன். ஒருவேளை நுங்கம்பாக்கம் கிட்டயோ?
 • எச்சரிக்கை, ஒருநாளில் முழுசாகப் பார்க்க முடியாது. வீட்டுக்கு வந்தால் கால் வலிக்கிறது.
 • ஐந்து ரூபாய் கட்டணம் பற்றிக் கவலை இல்லாமல் ஏகப்பட்ட கூட்டம். உழவர் சந்தையில் காய்கறி வாங்குவது மாதிரி அள்ளினார்கள்.
 • இன்னமும் சூப்பர் ஸ்டார் சுஜாதாதான். அவர் புத்தகங்கள் ஹாட் கேக்காகப் போயின-தள்ளுபடி கிடையாது!
 • உயிர்மை, வானதி, கிழக்கு ஸ்டால்களில் கூட்டம் ஜாஸ்தி.
 • உயிர்மையில்  சுஜாதா புத்தகங்கள் இருந்த அலமாரியை ரொம்ப நேரம் பார்த்தபடி இருந்தார் பாடகர் சஞ்சய் சுப்ரமணியம். ஏன் என்று கேட்கிற ஆசை எழுந்தது. அதே கேள்வியை அவர் மனைவி(யா?) கேட்டார், “வி ஹேவ் ஆல் அஃப் தெம்” என்றார்
 • ரொம்ப விலை அதிகமான புத்தகங்கள் வாங்க வேண்டுமென்பதில்லை. முப்பது ரூபாயிலிருந்து நூறுக்குள் நிறைய ரத்தினங்கள் அகப்படுகின்றன. அவைகளில் பல சுஜாதா புத்தகங்கள்! (அந்த ரேஞ்சில் இருந்த எல்லாவற்றையும் நான் அள்ளிவிட்டேன்)
 • மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை நிறையப் பேர் வாங்கினார்கள். சீரியஸ் கவிதைகள் என்றால் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. என் ஆதர்சக் கவிதைகள் சுருக்கமாக, கொஞ்சம் ஹ்யூமராக, ட்விஸ்ட் அஃப் தெ டேல் போல ஒரு சஸ்பென்ஸோடு இருப்பவை மட்டுமே. ஆனால் அதுமாதிரி கவிதைகளை ஒரு புத்தகம் முழுதும் யாரும் எழுதுவதில்லை.
 • எழுத்தாளர் பா.ரா. வை தொலைபேசி, அலைபேசி, மின்னஞ்சல் எதிலும் பிடிக்க முடிவதில்லை. புத்தகச் சந்தையில் கையும், மகளுமாகப் பிடிபட்டார். “ஹாய்” என்றதும் இனிமையாக ரெஸிப்ரொக்கேட் செய்தாள். “புஸ்தகம் நிறையப் படிப்பியா?” என்றால், “ம்ம்ம்ம்” என்று பலமாக ஆமோதிக்கிறாள். “இது யாருன்னு சொல்லவே இல்லையேப்பா?” என்றதும், “அப்பாவோட ஃப்ரெண்ட்” என்றார். அந்த அப்ரோச் எனக்கு ரெம்பப் பிடிச்சிருந்தது!
 • இரண்டாம் உலகப் போர் உள்ளிட்ட பல நல்ல புத்தகங்களை எழுதியிருக்கும் மருதன் அடக்கமாக உட்கார்ந்து கல்லாப்பெட்டி சிங்காரம் வேலை செய்து கொண்டிருந்தார் கிழக்கு ஸ்டாலில்.
 • இந்த வருஷம் புத்தகச் சந்தையில் என் நூல்கள் இடம் பெற்றிருந்தது எனக்கு உபரி சந்தோஷம்.
Advertisements

14 comments

 1. இத்தனாம் பெரிய பதிவில்(!!) அதிமுக்கியமான வார்த்தை 4ஏ 4 தடவை தான் வந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி கன்னாபின்னாவென கண்டித்து வெளியேறுகிறேன். 😉

 2. ஜவஹர்,
  புத்தகக் கண்காட்சியை ரொம்ப மிஸ் பண்றேன்… உங்கள் புத்தகங்கள் கண்காட்சியில் விற்கப் படுவதற்கு வாழ்த்துக்கள்..

  ஏதாவது வாசகர்களுக்குக் கையெழுத்து போட்டுத் தந்தீர்களா?

  அன்புடன்
  சீமாச்சு..

 3. இந்த வருஷம் புத்தகச் சந்தையில் என் நூல்கள் இடம் பெற்றிருந்தது எனக்கு உபரி சந்தோஷம்.


  வாழ்த்துகள் நண்பரே!. நீங்கள் புத்தகம் எழுதியிருப்பதை இப்போதுதான் அறிகிறேன். அதைப் பற்றி பதிவு போட்டிருந்தால் தொடர்பு கொடுக்கவும்.

  நன்றி.

 4. // இன்னமும் சூப்பர் ஸ்டார் சுஜாதாதான்.// மகிழ்ச்சியாக இருக்கிறது ..இதை அப்பாதுரை படித்தால் இன்னமும் மகிழ்வேன் ..
  //அந்த ரேஞ்சில் இருந்த எல்லாவற்றையும் நான் அள்ளிவிட்டேன் // இப்படி அள்ளுவதற்கு ஊரில் இல்லாமல் போய் விட்டோமே ..ரத்தினங்கள் மிண்டும் கிடைக்குமா.
  //வி ஹேவ் ஆல் அஃப் தெம்// புத்தகம் வாங்க மனைவியரை அழைத்து செல்வது அவ்வளவு உசிதமல்ல.. ஒவ்வொரு புத்தகத்துக்கும் முன்னுரை முன்று பக்கத்துக்கு சொல்லி வாங்க வேண்டும் …
  உங்கள் புத்தகங்களுக்கு வாழ்த்துக்கள் …சிலம்பும் ஜென்னும் முதல்லேயே வாங்கிவிட்டேன் …. அடுத்த விடுப்பில் ”உருப்பட” வேண்டும் …தவிர வேறு புத்தகங்கள் வெளி வந்துள்ளதா ?

 5. ——–என் ஆதர்சக் கவிதைகள் சுருக்கமாக, கொஞ்சம் ஹ்யூமராக, ட்விஸ்ட் அஃப் தெ டேல் போல ஒரு சஸ்பென்ஸோடு இருப்பவை மட்டுமே. ஆனால் அதுமாதிரி கவிதைகளை ஒரு புத்தகம் முழுதும் யாரும் எழுதுவதில்லை—-

  Saar!,
  (சுஜாதா சார் எனக்கு அறிமுகபடுத்திய) ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்கள் எழுதிய வெண்பா புத்தகம்(தலைப்பு:ஆகாசம்பட்டு ) மணிவாசகம் பதிப்பகத்தில் கிடைக்கிறது.
  practical life experience -இல் இருந்து எழுதப்பட்ட ஓவுறு கவிதையும் ஒவ்வொன்றும் நச்சென்று இருக்குமென கேள்வி. கடையில் இன்னும் வர வில்லையாம். என்னை இன்று வர சொன்னார்கள். புதன் வாக்கில் போகலாம் என இருக்கிறேன்.

  சேஷாசலம் அவர்கள், இதே வெண்பா பாணியில், அனுமன் காவியமும்(பஞ்சவடி ரமணி அண்ணாவின் ஆசியுடன்) , காளிதாசரின் raghuவம்சமும் கூட எழுதியுள்ளார்.

  தஞ்சை இனியன் அவர்கள்இதே போன்று சமகால வெண்பாக்கள் எழுதியுள்ளார். பதிப்பகம் தெரியவில்லை

 6. >>ஏதாவது வாசகர்களுக்குக் கையெழுத்து போட்டுத் தந்தீர்களா?<<
  எனக்கும் (இப்படி புத்தகம் வாங்க) ஆசை உண்டு.ஆனால் ஒரே ஒரு தடவைதான் நிறைவேறியுள்ளது(ஜெயகாந்தன் மூலம்)
  போனதடவை புத்தக சந்தைக்கு பஸ்ஸில் வருகையில் பிரேக் டவுன் ஆகி எல்லா பயணிகளுக்கும் கண்டக்டர்,அவர்கள் வாங்கிய டிக்கெட்டில் கையெழுத்திட்டு கொடுத்ததை இதில் நான் சேர்க்கவில்லை!

 7. வெளியூரிலிருந்து தயவு செய்து யாரும் வராதீங்கப்பா!!
  உள்ளூர் ஜனத்தையே சமாளிக்க முடியலே!!
  அடுத்தவாட்டி island grounds ல தான் வைக்கணும்!

 8. //அண்ணா! அது //உயிர்மெய்// இல்லை. ”உயிர்மை”…. உயிர்த்திருப்பதைக் குறிப்பது. நேரம் கிடைக்கும்போது தயவுசெய்து சரி பண்ணிருங்க//

  ஸ்ரீதர், திருத்திட்டேன். நன்றி

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s