மினியேச்சர் மஞ்சுவிரட்டு

பொங்கல் பண்டிகை கிராமங்களில்தான் விசேஷம்.

நாகப்பட்டினம் கிராமமும் இல்லாத பட்டணமும் இல்லாத மையமான ஒரு முனிஸிபாலிட்டி. என் காலத்தில் அங்கிருந்த பன்றிகளின் எண்ணிக்கைக்கு மாட்டுப் பொங்கலுக்குப் பதில் பன்றிப் பொங்கல் கொண்டாடியிருப்பதே பொருத்தமாக இருந்திருக்கும். ஆனாலும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். காளையை அடக்கும் அளவு எங்கள் இளைஞர்களுக்கு சக்தி இல்லையோ அல்லது அடக்கப்படவேண்டிய அளவு காளைகளுக்கு சக்தி இல்லையோ தெரியாது, ஒரு காம்ப்ரமைஸ்ட் மஞ்சுவிரட்டு நடக்கும்.

கார் வாங்கும் அளவு வசதி இருந்தாலும் காலங்காலமாக வந்த மாட்டுவண்டி ஜபர்தஸ்தை விடாமல் இருந்த தனவந்தர்கள் நாகப்பட்டினத்தில் இருந்தார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் ஒரு மாட்டுப் பந்தயம் நடத்துவார்கள்.

மாடுகளை இழைக்க இழைக்கத் தேய்த்துக் குளிப்பாட்டி வெட் மாப்பிங் செய்த விர்டிஃபைட் டைல்ஸ் போலப் பளபளக்க வைப்பார்கள். நெற்றியில் சஞ்சய் தத் மாதிரி குங்குமத்தைத் தீட்டி, கலர்க்கலர் நெட்டி மாலைகள் அணிவிப்பார்கள். கொம்புகளுக்கு ப்ரிட்ரீட்மெண்ட், பிரைமர் எல்லாம் செய்து கலர் டாப்கோட் பெயிண்ட்!

கொம்புக்கு அடிக்கப்படும் பெயிண்டிலிருந்து மாட்டின் சொந்தக்காரர் காங்கிரஸா, திமுகவா, கம்யூனிஸ்ட்டா இல்லை தேசபக்தரா என்பதைப் புரிந்து கொள்ளலாம். சில மாடுகள் தின்னர் நெடியில் சரக்கடித்து சாக்கடை ஓரம் விழுந்து கிடக்கும் குடிமகன் மாதிரி மூக்கு விடைக்கப் படுத்துவிடும். இன்னும் சிலது பெயிண்ட் அடிக்கும் போது முரண்டு பிடித்து, பெயிண்ட்டைக் கொட்டி கண்ணெல்லாம் பெயிண்ட்டாகி கண் தெரியாமல் சாக்கடையில் இறங்கிவிடும்.

இன்னும் கழுத்தில் மணி, காலில் கொலுசு, முதுகில் பட்டுத் துணி என்று மனம் போன போக்கில் அலங்காரம் செய்து இறுதியில் மாடு லம்பாடி மாதிரி இருக்கும். பலபேர் வீட்டு மாடுகள் வருஷம் பூரா தீனியின்றி கொரடாச்சேரி குதிரை மாதிரி இருக்கும். அவைகளுக்கு இத்தனை இடைஞ்சல்களோடு நடப்பதே பிராணாவஸ்தையாக இருக்கும். ஈயம் பூசும் துருத்தி மாதிரி புஸ்ஸ்…. புஸ்ஸ்ஸ் என்று உஷ்ணமாக மூச்சு விட்டபடி பத்தடிக்கு ஒருதரம் நின்றுவிடும்.

மாட்டின் சொந்தக்காரர்களுக்கு இது ஒரு ஈகோ பிரச்சினையாகி,

“ஹாய்… ஹாய்” என்று கத்திக் கொண்டிருக்க, குசும்பு பிடித்த பையன்கள்

“என்னங்க இங்கிலீஷ் மாடா?” என்று விசாரிப்பார்கள்.

சிலபேர் வாஞ்சூரிலிருந்து (காரைக்கால் பார்டர்-மதுவிலக்கு கிடையாது) சரக்கு வாங்கி வந்து தொழுவத்தில் ஊற்றிவிடுவார்கள்.

அந்த மாடுகள் இலக்கில்லாமல் ஓடி, ஓனரே லுங்கி அவிழ விரட்டிப் பிடிக்கிற மாதிரி செய்துவிடும்.

Advertisements

10 comments

 1. எனக்கு தெரிஞ்ச விரட்டெல்லாம் சினிமாவில பார்த்த மஞ்சத்தண்ணியோட சரி!

  //இன்னும் சிலது பெயிண்ட் அடிக்கும் போது முரண்டு பிடித்து, பெயிண்ட்டைக் கொட்டி கண்ணெல்லாம் பெயிண்ட்டாகி கண் தெரியாமல் சாக்கடையில் இறங்கிவிடும்.//

  அடப்பாவமே.. நிசமாவா சொல்றீங்க? கண்ணு போயிடாது?

 2. காங்கிரஸா, திமுகவா, கம்யூனிஸ்ட்டா இல்லை தேசபக்தரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.///
  காங்கிரசுக்கும் ,தேசபக்தருக்கும் வித்தியாசம் எப்படி கண்டு புடிப்பீங்க?

  1. அந்தக்காலத்தில கஷ்டம்தான்…… ஆனா இப்போ காங்கிரசுக்கும் தேசபக்திக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கு!

 3. “சில மாடுகள் தின்னர் நெடியில் சரக்கடித்து சாக்கடை ஓரம் விழுந்து கிடக்கும்..” நல்ல வேளை…மேனகா காந்திக்கு தமிழ் தெரியாது!!

 4. இனிய பொங்கல் வாழ்த்துகள்….

  கொம்பு சீவி விட்ட நிலையில்..அவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் ..இவ்வளவு ஆபத்தான விளையாட்டை எப்படி விரும்புகிறார்களோ…

  தமிழனுக்கு வீரமும் பண்பாட்டையும் காக்க நிறைய விஷயங்கள் உள்ளன ..

  வீரம் தாண்டி அசட்டுத்தனம் மிஞ்சுகிறது…விளையாடுபவனுக்கும் ஆபத்து..வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஆபத்து…

 5. மத்தவங்க மஞ்சு விரட்டுக்கிட்டு இருந்தப்ப, நீங்க மாடியாத்து மஞ்சுவை விரட்டிக்கிட்டு இருந்ததை மறந்துட்டீங்களா…?

 6. திருக்குறள் மாதிரி ஒவ்வொரு வரியிலும் பல செய்திகளை (நக்கல் நையாண்டியொடு) சேர்த்து எழுதியுள்ளிர்கள்! வாழ்த்துக்கள்!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s