சொன்னது பலிக்கும் பாருங்க….

வாசலில் இருந்த ஆசாமி போகிற வழியாகத் தெரியவில்லை.

 “சொக்கலிங்கம், யாருய்யா அந்தாளு, அவரு கிட்ட என்ன விவாதம்?”

“இல்லிங்க முதலாளி, ஏதோ சிரிக்கிற புத்தர் பொம்மையாம். அது இருக்கிற இடத்தில ஒண்ணுக்கு மூணா வியாபாரம் பெருகுமாம். ஒருவாரமா தெனைக்கிம் வந்து வந்து தொந்தரவு பண்றாரு, வேணாம்ன்னா விட மாட்டேங்குறாரு”

“அவுரும்தான வச்சிருக்காரு. அவருக்கு வியாபாரம் மூணாப் பெருகிரிச்சாமா?”

“ஒருவாரமா ஒண்ணு கூடா விக்கல்லையாம்”

“பின்னே அதைப் போய் நாம வாங்கி என்னா பண்றது?”

“அதத்தாங்க நான் கேட்டேன். வாங்கிப் பாருங்க, நான் சொன்னது சரிதான்னு உங்களுக்கே புரியும்ங்கிறாரு”

”என்னா விலையாம்?”

“அம்பது ரூபாயாம்”

“வாங்கிகிட்டு அனுப்புய்யா, பாப்பம்”

“சரிங்க”

சொக்கலிங்கம் பொம்மையைக் கொண்டுவந்து முதலாளியிடம் கொடுத்தார்.

“எதையாவது சொல்லி வித்துப்புடறானுவ. அவஞ்சொன்னது ரைட்டோ, தப்போ, நல்ல விஷயத்தைச் சொன்னவரு பொம்மை இருந்தா தப்பில்லையே….. என்ன சொல்றே?”

“ஆமாங்க”

சாப்பாட்டுக்கு வீட்டுக்குள் புகுந்த சபாபதிக்கு ஷாக் காத்திருந்தது.

“சிவகாமி, ஏது இந்த பொம்மை?”

“வாசல்ல பொம்மைக்காரரு ஒருத்தர்கிட்ட வாங்கினேன்”

“இதப் போயி ஏன் வாங்கினே?”

“ஏதோ செய்யிறதெல்லாம் ஒண்ணுக்கு மூணா பலன் குடுக்கும்ன்னாரு. இங்க வந்து ஒருவாரமா தெனைக்கிம் தொந்தரவு பண்றாரேன்னு இப்பத்தான் நான் வாங்கி வெச்சேன்”

“கறுப்பா, குள்ளமா இருந்தானா?”

“ஆமாம்ங்க”

“கொஞ்சம் விந்தி விந்தி நடந்தானா?”

“ஆமாங்க…. எப்பிடித் தெரியும்?”

“வாங்கினது இப்பன்னா….. எப்ப?”

”இப்பதான் ரெண்டு நிமிஷம் இருக்கும். தெருக்கோடி போயிருக்க மாட்டாரு… ஏங்க இன்னொண்ணு வேணுமா?”

“என்னா, ஆள வெடக்கிறியா?”

சபாபதி அவசரமாக வெளியே வந்து பார்த்தார்.

நிஜம்தான்.

அந்த ஆள் விந்தி விந்தி தெருக்கோடியில் போய்க்கொண்டிருந்தார். பலமாகக் கைதட்டிப் பார்த்தார்.

“யோவ்…. பொம்மை….. பொம்மைக்காரரே…..” என்று தொண்டை கிழியக் கத்திப்பார்த்தார்.

ம்ம்ஹூம். அவன் திரும்பிப் பார்க்கிறதாகத் தெரியவில்லை. வாசல் வழியாக சைக்கிளில் போன பலவேசம்,

“என்னா… செட்டியாரே, இந்த வயசில பொம்மை வெச்சி விளையாடற ஆசை? வீட்ல புள்ளைங்க கூடக் கிடையாதே?”

“பலவேசம், கொஞ்சம் வேகமாப் போயி அந்தாளை நான் கூப்ட்டேன்னு வரச்சொல்லுய்யா”

“என்னா அத்தினி அவசரம்?”

“அவசரம்தான், வரச்சொல்லுய்யா”

சபாபதி உள்ளே வந்தார்.

“வரட்டும், அவன என்ன பண்றேன் பார்” என்று காத்திருந்தார்.

 ”அவன்கூட என்னாத்துக்கு தகறாரு. சாப்பிட வாங்க”

கொஞ்ச நேரத்தில் பலவேசம் உள்ளே வந்தார்.

“எங்கேய்யா அந்தாளு?”

“ஏதோ மாயவரத்தில அவசர வேலைன்னு பஸ் ஏறிப் போய்ட்டான்”

“விட்டுட்டியேய்யா….”

“அதெப்புடி விட்டுருவோம்? என்னாடா விஷயம், ஏன் செட்டியார் உன்னை அவ்வளவு அவசரமா கூப்பிடறாருன்னேன். வேறே ஒண்ணுமில்ல, புத்தர் பொம்மை விக்கிறதுக்காக கடைக்கிப் போயிருந்தேன். பேரம் படியல்ல. வீட்டுக்குப் போனா மறுபடி ஆரம்பிப்பாரு. அவரு கிட்ட பேரம் பேசிகிட்டு இருக்க நேரமில்ல. மாயவரத்தில கொஞ்சம் சரக்கு எடுக்கணும்ன்னான். என்ன விலைன்னேன். அறுபது ரூபான்னான். சரி, ஆசைப்பட்டுக் கேட்டிருக்காரு, அவரு என்னா நியாயமான விலைன்னு நினைக்கிறாரோ தரட்டும் குடுன்னு வாங்கிட்டு வந்தேன். இந்தாங்க செட்டியாரே, அவசரமில்லை, எப்ப சவுரியப்படுமோ அப்ப அறுபது ரூபா குடுங்க”

Advertisements

17 comments

 1. கால் திருடன் , அரை திருடன், முக்கால் திருடன்…என்ற பழய ஜோக் ஜாடை லேசா இருந்தாலும், முடிவை யூகிக்க முடிஞ்சாலு ம் (மூணாவது பொம்மை )……”சுவாரஸ்யம்” உமது டச் …….. வேலு

   1. ஹாட்ஸ் ஆஃப்.

    உங்க சமாளிப்ஸ்’சுக்கு ஒரு அளவே இல்லியா? நல்ல வேளை உங்களை யாரும் காப்பியடிச்சுட்டீங்கன்னு போஸ்டு போட்டு திட்டலை. அது வரைக்கும் லாபன்னு நெனச்சிக்கோங்க.

    பை தி வே, நான் தேவனை படிச்சதில்லை. படிச்சிருந்தாத்தான் என்ன? இங்க எல்லாமே சைக்கிள்தான் நீங்க சொன்ன மாதிரி.

    அந்த ஒண்ணு மூணாவறது எத்தன சீக்கிரம்னு புத்தர் தெளிவா காட்டிட்டாரு. ஆனா அதை யாரும் பெருசா புரிஞ்சிக்கிட்டதா தெரியலை. (இல்லை அதுல யாரும் பின்னூட்டமிடலை போல)

    எங்க வாசல்’ல சிரிக்கிற புத்தர் வந்தா விடறதா இல்லை, விக்கற ஆளை.

   2. கிரி, அந்த தேவன் கதை நான் படிச்சிருக்கேன். சும்மாவாவது மூணு பொருள் வித்ததா எழுதறதுக்கு பதிலா, அந்த மூணுக்கு ஒரு சிக்னிஃபிகன்ஸ் இருக்கணும்ன்னு நினைச்சேன். மேலும் எங்க வீட்டில ரெண்டு லாஃபிங் புத்தா பொம்மையை ஒரே ஆள் கிட்டே வாங்கின அனுபவமும் இருக்கு.

 2. மறுபடியும் தேவகி நாவல் உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் சென்னை வாசி என்றால், அதை வந்து நகல் எடுத்துக் கொள்ளலாமா?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s