ரஜினியின் தைரியமும் ’சோ’வின் சான்றிதழும்

துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வழக்கமாக வருகை தரும் ரஜினிகாந்த் இந்த வருஷம் ஆப்ஸண்ட். இதைப்பற்றிக் கேள்வி எழுப்பிய ஒரு வாசகர் உட்பட வந்திருந்த பலரும் அவர் ஆளுங்கட்சிக்கு பயந்து கொண்டு வரவில்லை என்று சொன்னதை நம்மால் கேட்க முடிந்தது.

 பயமெல்லாம் அவருக்குக் கிடையாது என்று சோவே சான்றிதழ் வழங்கினார்.

முதலமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு கைசொடக்கிக் கேள்வி கேட்பவர், அந்தம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவந்தான் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் பேசியவர், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசாதிருப்பதும், துக்ளக் விழாவுக்கு வராமல் இருப்பதும் நேரமின்மை காரணமாகத்தான் என்பதை நாம் நம்புவோம். முதலமைச்சருக்கு நடத்தப்படும் பாராட்டுவிழாக்களிலும், அவர் கலந்து கொள்ளும் விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்வதும் ஏகப்பட்ட நேரம் இருப்பதால்தான் என்றும் நம்புவோம். பயத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று நம்புவோம். படத்தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனத்தின் மனக்கசப்பைத் தேடிக்கொள்ள அவருக்கு பயம் என்பது பிதற்றல் என்றும் நம்புவோம்.

குருமூர்த்தி பேசும்போது, ஸ்விஸ் பாங்கிலும், பெயர் வெளியிடத் தேவையில்லாத சில வெளிநாட்டு முதலீடுகளிலும் இருக்கும் இந்தியப் பணத்தில் நாலில் ஒரு பங்கு இந்தியாவுக்குத் திரும்பி வந்தால் இந்தியப் பொருளாதாரம் 16 சதவீதம் உயர்வடையும் என்றார். சோ உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் நேரடியாகச் சொல்லத் தயங்கும்போது ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் மருமகளை நேரடியாகச் சம்பந்தப்படுத்திப் பேசினார்.

நீங்கள் தலித்துகளுக்கு எதிராவர் என்பது மாதிரி ஒரு கருத்து இருக்கிறதே என்று ஒருவர் கேட்டபோது, ஜகஜீவன்ராம் பிரதமராக வருவதற்காக ஐந்து மாநிலங்களில் தான் கான்வாஸ் செய்ததையும், ‘பாப்பாத்தி’(”அவர் பாஷைல சொல்லணும்ன்னா” என்று குறிப்பிட்டார்) இந்திராவுக்கு ஆதரவாக கருணாநிதி இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

10 comments

 1. இந்த நிகழ்வின் ஆடியோவை சுடச் சுட இட்லி வடையில் (வலைப்பூ ) கேட்டு மகிழ்ந்தேன்…
  ரஜினி பயம் இருக்காது….பெரிய இடம் நிறைய வியாபாரங்கள் சடார்ன்னு முடிவு எடுக்க முடியாது…

  இந்த தடவை கிண்டல் கேலி சிக்ஸ்ர்கள் தட்டியெடுத்துட்டார்..

  ஒரு தலை பட்சமாக அம்மா பக்கம் பேசுவது மாதிரி இருந்தாலும்… ஓட்டு பங்கிட்டில் மாறுதலுக்கு இதை தவிர வேறு வழியில்லை என்பதையும் சொன்னார்… இதே வேலையை 96 ல் ..த.ம.க ,ரஜினி சேர்த்து கலைஞரைவெற்றி பெற செய்தார்….

 2. ‘சோ’ வெல்லாம் சான்றிதழ் கொடுக்கிற அளவுக்கு ரஜினியின் தரம் தாழ்ந்து விடவில்லை என்பது எனது தாழ்வான எண்ணம்.

  “‘சோ’-வின் உளரல்கள் ” என்று ஒரு தனிப் புத்தகமே போட முடியும். தொடர்ந்து துக்ளக் படிப்பவர்கள் ஈஸியாக இதைப் புரிந்து கொள்ள முடியும். ஏன், சோ-வுக்கே இது தெரியும்.

  ரஜினி மாதிரியான ஆட்கள் ‘சோ’ மாதிரியான ஆட்களிடம் தொடர்ந்து நட்பு கடை பிடிப்பதால் வரும் ஆபத்துகளில் இதுவும் ஒன்று!

 3. என்னங்க இது? ஸ்பெக்ட்ரம் விஷயத்துல ரஜினி என்ன சொல்லனும்னு நீங்கல்லாம் எதிர் பாக்குறிங்க? எத எடுத்துக்கிட்டாலும் ரஜினி ரஜினி ரஜினி… “அவர் ஏன் பேசல?” / பேசினா, “அவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல?”. அடடா… அவர்தான் இன்னும் அரசியலுக்கு வரலியே, அப்புறம் ஏன் இப்பிடி? வரட்டும், அப்புறமும் இப்பிடி இருந்தார்னா நீங்க இதென்ன இன்னும் நல்லா நாக்க புடுங்கிக்கிறா மாதிரி கேளுங்க, நானும் கேட்பேன்… அத உட்டுட்டு… இவ்ளோ விஷயம் தெரிஞ்ச (?!) நீங்களே இப்பிடி எல்லாம் பேசினா எப்படிங்க?

 4. ரஜினி பயப்பட தேவையிருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றே பூசி மெழுகி சொன்னார் …..அவருக்கும் அதே வருத்தம் இருந்திருக்கும் போல

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s