செருப்பின் சிறப்பு

என் பள்ளிக் காலத்தில் செருப்பே ஒரு லக்சுரிதான். (செருப்புக்கு என்ன ஸ்பெல்லிங்? பெரிய று வா, சின்ன ரு வா? சில பேர் செற்ற்றுப்பால அடிப்பேன் என்று கோபமாகச் சொல்லும்போது பெரிய று வோ என்று தோன்றும்)

 நிறையப் பிள்ளைகள் செருப்பு அணியாமல்தான் வருவார்கள். பொய்யூர், திட்டச்சேரி, வேளாங்கன்னியிலிருந்தெல்லாம் செருப்பு போடாமலே நடந்து வருவார்கள்.

 செருப்பு அணிகிற பிள்ளைகளும் ரப்பர் செருப்புதான் அணிவார்கள். அது பெரும்பாலும் தேய்ந்து குதிகால் வைக்கிற இடத்தில் ஓட்டையாகவும், கட்டைவிரல் வைக்கிற இடத்தில் குழிந்தும் இருக்கும். பல செருப்புக்களில் அடிப்புறம் பட்டன் தேய்ந்து சேஃப்டி பின்னைப் போட்டு வாரை லாக் செய்திருப்பார்கள். பெரும்பாலும் அண்ணன் அல்லது அக்காவுடையதாக இருக்கும். அந்த லூஸ் ஃபிட்டிங் செருப்புக்கள் சேற்றையும், புழுதியையும் வாரி அடித்து டிரவுசரும் சட்டையும் பின்புறம் அழுக்காக இருக்கும்.

கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளைகள் சாண்டாக் அணிந்து வருவார்கள். மிகச் சில பிள்ளைகள் தோல் செருப்பு அணிந்திருப்பார்கள். முனிசிபல் சேர்மன் பி.ஆர்.ராமகிருஷ்ணன் வீட்டுப் பிள்ளைகள் ஷூ அணிந்து வருவார்கள். (அந்த ஊரிலேயே பிளைமவுத் கார் வைத்திருந்த ஒரே மனிதர்!)

என் அண்ணனின் நண்பர்கள் அந்திக்கடையில் (அந்திக்கடை நாகப்பட்டினத்து ஸ்பெஷல். கஸ்டம்ஸ் கண்ணில் மண் தூவி தள்ளிக் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுப் பொருட்கள் விற்கும் கடை. சாயந்திர வேளையில் மட்டுமே இயங்குவதால் வந்த பெயர்) வாங்கின சிங்கப்பூர் செருப்பு அணிந்து வருவார்கள். நல்ல தடிமனாக இருக்கும் ஆனால் வெயிட்டே இல்லாமல் லேசாக இருக்கும்.

நான் ஒண்ணாங் கிளாஸிலேயே ஷூ வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து கழுதைக் கலரில் ஒரு ஜோடி கான்வாஸ் ஷூ வாங்கிக் கொண்டேன். அதைப் பெருமையாகப் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் போனபோது பொறாமைப் பார்வை பார்த்துவிட்டு நளாயினி டீச்சர்,

“என்ன இது, வேளாங்கன்னிப் பிச்சைக்காரன் மாதிரி?” என்று விமரிசித்தார்.

வேளாங்கன்னிப் பிச்சைக்காரன் என்பது ஒரு ஜார்கன். வேளாங்கன்னி உற்சவம் நடக்கும்போது நாகப்பட்டினம் பூரா பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள் கான்வாஸ் ஷூதான் அணிந்திருப்பார்கள்.

அண்ணன்கள் உபயத்தில் ஆறாங்கிளாஸிலேயே சாண்டாக் பிரமோஷனும், எட்டாங்கிளாஸில் தோல் செருப்பு பிரமோஷனும் கிடைத்தது எனக்கு. ஒன்பதாவது படிக்கும்போது லெதர் ஷூ!

வேலைக்குப் போனதும் மேலேயெல்லாம் பூனை மாதிரி இருக்கும் விசேஷமான லெதர் ஷூ வாங்கினேன். விலை-நூற்றைம்பது ரூபாய். ஏறக்குறைய பாதி சம்பளம். வாங்கின ஒரே வாரத்தில் ஃபாக்டரியில் கந்தக அமில பம்ப்பை சர்வீஸ் செய்யும் போது அமிலத்தில் குளித்து விறைத்து எருமை மாடு மாதிரி ஆகிவிட்டது.

அதற்கப்புறம் அந்தக் கம்பெனியில் வேலை செய்தவரை கரோனா கம்பெனியின் பிவிஸி ஷூதான். அது மோல்டட் ஷூ. காற்றே போகாது. வீட்டு வாசலில் வந்து ஷூவைக் கழற்றினால் போதும். யாரென்று பார்க்காமலே மோப்பத்திலேயே,

“இவர் வந்தாச்சு” என்பார் என் இல்லத்தரசி.

ஒருதரம் செகண்ட் ஷிப்ட் முடிந்து நானும் என் நண்பனும் பீச் ஸ்டேஷனில் மின்சார வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். அந்தக் கரோனா ஷுவைக் கழற்றியதும் ஒரு சுகம் வரும்…. ஆஹா…. அதற்கு இணையே கிடையாது. ஷூவைக் கழற்றிவிட்டு இரண்டு பேரும் உட்கார்ந்தோம். மெல்ல மெல்ல போர்ட் ட்ரஸ்ட் ஆசாமிகள் வந்து உட்கார்ந்து வண்டி நிறைந்தது.

எதிரில் உட்கார்ந்திருந்த ஒரு ஆசாமி அவ்வப்போது மூக்கை உறிஞ்சுவதும் சுற்றிலும் பார்பதுமாக இருந்தான். அவன் நண்பன்,

“நானும் கவ்ன்ச்சேன். த்தா எவனோ சாக்கடைல கால உட்டுட்டு வந்து கீறான்” என்றான்.

அவசரமாக நாங்கள் இருவரும் ஷூவைப் போட்டுக் கொண்டோம்.

Advertisements

19 comments

 1. செருப்பு மேலாண்மை ஓரு பெரிய விஷயம் தான் …..பத்தாங்க்ளாஸ் தாண்டிய பிறகுதான் பாதங்களுக்கு நிரந்திர பாதுகாப்பு கிட்டியது …அதுவரை பிரக்ஞையே இல்லாமல் சோளக்காடு கரும்புக்காடு என மேய்ந்து, காயங்களுக்கு காரணம் செருப்பில்லாமை என புரிவதற்கே தாமதம் ஆகிவிட்டது .. இப்ப மாதிரி ஜாக்கிங்கு தனி ,அவுட்டிங்க்க்கு தனி, காலேஜ் பிரக்டிகளுக்கு தனி , தியரிக்கு தனி வகை வகை ஷூக்களை அக்காலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது…

 2. அண்மைக் காலங்களில் செருப்பு,மற்றும் ஷூ(என்ன தமிழில்?)பல பிரபலங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது!காலில் மாட்ட வேண்டியதை “முகத்திலும்” மாட்டி அழகு பார்த்தார்கள்!

 3. என் நண்பர்கள் டயர் செருப்பு என்று ஒன்று அணிந்து வருவார்கள். சைக்கிள் டயர் லாரி டயர் என்று அதிலிருந்து செய்ததாகச் சொல்வார்கள். ரொம்ப நாள் உழைக்கும் என்று சொல்லும்போது சில நண்பர்கள் அதற்கு மாறினார்கள்.

 4. ஸ்ரீராம் சொல்வது சரிதான். நானும் சென்னை வந்த புதிதில், குரோம்பேட்டையில், ஒருவரிடம் (நடைபாதை ஓரக் கடையதிபர்) ஒரு ஜோடி ஷூவிற்கு ஆர்டர் கொடுத்தேன். ஏரோப்ளேன் டயர் உபயோகப் படுத்தி ஹீல்ஸ் அண்ட் சோல் செய்கிறேன் என்றார். அந்த ஷூக்களில் ஒன்று இரண்டே மாதங்களில் ‘டிபார்ட்டட் சோல்’ ஆகிவிட்டது!

 5. கொசுவர்த்தியை சுருள விட்டதில் ..
  எனக்கும் செருப்புக்கும் ராசியே இருந்ததில்லை. அப்பா ஒவ்வொரு தீபாவளிக்கும் செருப்பு வாங்கி கொடுப்பார். அதை இரண்டே வாரத்தில் தொலைப்பது என் வழக்கம். ஒரு கட்டத்திற்கு பிறகு செருப்பு என்பது கானல் நீர். அதிலும் ஒரு நன்மை இருக்கே. கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்தடுக்கி, மோதி, ரத்தம் வர நடந்து பாதம் உறுதியானது. பள்ளி புட்பால் டீமில் சேர அதுவும் ஒரு காரணமானது. அரசு பள்ளிகளில் சூ போட்டுவரும் மாணவர்களை விநோதமாக வேற்றுகிரக மனிதரை போல பார்பதுதான் வழக்கம்.

  என்னமோ போங்க உங்க பதிவு என்னை எங்கெங்கேயோ கூட்டிசென்று விட்டது

 6. ஐயா இது என்னங்க பெருமை….. எங்க ரூம்ல ஒருத்தன் இருக்கான்…… அவன் வந்து சூ வ கழட்டினான்………அந்த தெருவ முக்க பொத்தும்……………. அந்த லெவல்………….

 7. சைஸ் எட்டுக்கு மேல இருந்தா பெரிய செறுப்பு. அதுக்குக் கீழ இருந்தா சின்ன செருப்பு. (விளங்கும்னு நீங்க தலைல அடிச்சுக்கறது எனக்குக் கேக்கவே இல்லை. )

 8. ஹஹஹா நல்ல பதிவு . கோர்ட்டில் செருப்பால் அடிப்பேன் என்று சொல்வதற்கு தண்டனை கூட.
  அடித்துவிட்டால் தண்டனை கம்மி என்பார்கள் தெர்யும
  Viswanathan

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s