பிப்ரவரியில் என்ன விசேஷம்?

பிப்ரவரி மாதத்தை யாருக்குமே பிடிக்காது.

ஒரு பண்டிகை, ஒரு தேசிய விடுமுறை கிடையாது. லாஸ் அஃப் பே லீவ் போட்டால் ஏகப்பட்ட நஷ்டம். 31 நாள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை 28 ட்டே நாளில் சம்பாதிச்சாச்சு என்று வேண்டுமானால் மார்தட்டிக் கொள்ளலாம். கொடுத்த கடனை திருப்பிக் கேட்கிறவர்களை முப்பதாம் தேதி காலை வரச் சொல்லலாம்.

 ஃபெப்ரம் என்கிற லத்தின் பதத்திலிருந்து வந்த பெயர் ஃபெப்ருஅரி. ஃபெப்ரம் என்றால் புனிதப்படுத்துதல் என்று அர்த்தம். ஒருகாலத்தில் ஜனவரியில் நிறைய பாவங்கள் நடந்தனவோ?

பிப்ரவரி 29ம் தேதி பிறந்தவர்கள் இளமையாகச் செத்துப் போகலாம். முன்னாள் பிரதமர் திரு.மொரார்ஜி தேசாய் அவர்கள் தன் இருபத்தாறாவது பிறந்தநாளையே பார்க்காமல் அகால மரணம் அடைந்துவிட்டார். ஆபிரஹாம் லிங்கன் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டனின் பிறந்தநாட்கள் வருகிற மாசம் என்பதாலோ என்னவோ அமெரிக்கா இந்த மாசத்தில் ஜனாதிபதிகள் தினம் கொண்டாடுகிறது.

அதிகாலையில் வெளியே வந்தால் அள்ளி அணைக்கிற பனிக்காற்றுக் கன்னி ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறாள். மறுபடி அவள் வர ஒரு வருஷமாகும். அவளுடைய கடைசி முத்தங்களைப் பெருவதற்காகக் காலை நாலரைக்கே எழுந்திருக்கிறேன். சூர்யோதயத்துக்கு முன்னாலேயே …………………. எரிகிற பருவம் தெருக்கோடியில் காத்திருக்கிறது. இப்போதே ராத்திரி ஏஸி போடவேண்டியிருக்கிறது. ஆனாலும் 25 டிகிரியே இதமாக இருக்கிறது. மார்ச் மாதம் வந்தால் ஏன் 18 டிகிரிக்குக் கீழே செட்டிங்கே தரவில்லை என்று கோபமாக வரும்.

பிப்ரவரியில், புது வருஷப் பிரதிஞ்ஞைகள் அடுத்த வருஷத்துக்கு ஒத்திப் போடப்பட்டிருக்கும். டைரி எழுதுவது முழுசாக மறந்து போகும். தேதி எழுதும்போது கைத்தவறுதலாக 2010 என்று போட்டவர்கள் இனி ஞாபகமாக 2011 என்று போடுவார்கள்.

பவுர்ணமி இல்லாத பிப்ரவரிகள் சாத்தியம்.

இருங்க, யாரோ ஏதோ சொல்றாங்க. என்னங்க….. என்னது….. வாலடைல் டேவா? வால் அண்ட் டெயில் டேவா? வால் டெயில் எல்லாம் ஒண்ணுதானே? என்னமோ சொல்றாங்க, ஒண்ணும் காதுல சரியா விழல்லை.

பிப்ரவரியைச் சம்பந்தப்படுத்தி ஒரு ஜோக் எழுதியே தீரவேண்டும் என்று மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தேன்,

“என்னடா, ஜனவரிலேர்ந்து தண்ணி அடிக்கிறதில்லைன்னு சொல்லிட்டு இன்னமும் பாட்டிலும் கையுமா உட்கார்ந்திருக்கே?”

“புரோகிராம்ல ஒரு சின்ன சேஞ்ச். பிப்ரவரிலேர்ந்துன்னு மாத்திட்டேன்”

“இது சரிப்படாது. இப்படியே போனா மார்ச்சுவரிலதான் நிறுத்துவே”

Advertisements

11 comments

  1. Haha!

    //ஒரு பண்டிகை, ஒரு தேசிய விடுமுறை கிடையாது// avlo yen, inga ithanai periya teamla orutharukume birthday kooda kidaiyadhu!! :O

    //முத்தங்களைப் பெருவதற்காகக்// unga adutha bookla proof reader velai enaku kidaikuma? 😀

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s