பலியாடு கைது

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

 எது நடக்கிறதோ அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது. என்ன நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

தரணி படம் மாதிரி திரைக்கதை படுசுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று காண்பித்தாகிவிட்டது. தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஃபாக்டரை பலஹீனப்படுத்தியாயிற்று. இப்போதைக்கு இது போதும். தேர்தல் முடிவதற்குள் தீர்ப்பு வருகிற வாய்ப்புக்கள் குறைவு.

நம் லோக்கல் தொலைக்காட்சிகள் நேற்று அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. எங்கேயாவது செய்தியில் இரண்டு வரி சொல்லியிருப்பார்கள். நான் பார்க்கவில்லை. ஆனால், டைம்ஸ் நெள, ஹெட்லைன்ஸ், என்.டி.டிவி, சி.என்.என் எல்லாரும் களத்தில் குதித்து பி.ஜே.பி, அ.தி.மு.க, காங்கிரஸ் (திமு.க தவிர!) எல்லாரையும் வைத்து டெலிகான்ஃபரன்ஸிங் செய்தார்கள்.

வந்திருந்தவர்கள் எழுப்பிய சில கேள்விகள் சுவாரஸ்யமாக இருந்தன.

நிரா ரேடியா மீது நடவடிக்கை எதுவும் கிடையாதா? அவருடன் பேசிய மகள் மற்றும் மகளின் தாய் மீது நடவடிக்கை கிடையாதா? கொள்ளை லாபம் அடித்தவர்கள் மேல் நடவடிக்கை கிடையாதா?

காங்கிரஸ்காரர் ‘எடியூரப்பா விஷயத்தை மடியில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்க உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?’ என்று பி.ஜே.பி. யை ஆஃப் செய்தார்.

அரசாங்கத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சுப்ரமணியம் ஸ்வாமி காமெடி செய்தார்.

நிறையப் பேர் சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை தெரிவித்தார்கள்.

அந்த நம்பிக்கை மட்டும் எனக்கும் இன்னும் இருக்கிறது.

Advertisements

9 comments

 1. பலி ஆடு, ஆட்டைய போட்ட எல்லா ஆடுகளையும் துணைக்கு சீக்கிரம் கூப்பிட்டிக்கும் உள்ளே புல் மேய்வதற்கு ……
  சுப்ரீம் கோர்ட் சுப்ரீம் ஆக இருக்கும் பட்சத்தில் நம் நம்பிக்கை வீண் போகாது…

 2. பலிகடா… எப்பவேணா வெளில வந்துடும். தேர்தல் முடியட்டும்.

  மற்றவர்கள் அப்படியே தான் இருப்பார்கள். ஒரு விரல் நீண்டால் மற்ற நான்கு விரல்களும் தன்னையே சுட்டும் என்று நல்ல பாடம் கற்றவர்கள். அவர்களும் தண்டிக்கப் பட்டால், ஓ அது கனவு,
  ஒரு கண்டனமாவது செய்யப்பட்டால் இந்தியா ஒரு வழியாக உருப்பட வழியிருக்கிறது.

 3. ஊழலில் ஈடுபட்ட , உதவிய, காசு வாங்கிகொண்டு கமுக்கமாக இருந்த அனைவருக்கும் ஆப்பு இருக்கின்றது. ஆனால் ஆப்பு கண்ணுக்கு தெரியாது. இன்றைய எனது பதிவில் எழுதி இருப்பது இதற்கும் பொருந்தும்.

 4. அவருடன் பேசிய மகள் மற்றும் மகளின் தாய் மீது நடவடிக்கை கிடையாதா?

  – no proof (:

  BTW, I also feel, instead of depending on some sincere souls like Prashant Bhushan and hitmen like S.SWamy, each one of use must be responsible and proactively be vigilant.(having said this, i will run now to complete projects,play computer games and update social media profiles)
  Bye !!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s