காதலிக்கிறவர்கள் கவனத்துக்கு…

காதல் என்பது ஒரு மிகப் பெரிய பம்மாத்து என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன்.

 காதல் புனிதமானது, தெய்வீகமானது என்றெல்லாம் பேசுவது அறியாமை.

 உடம்பில் டெஸ்டோஸ்டெரோன் சுரக்காத ஆணும், ஈஸ்ட்ரோஜென் இல்லாத பெண்ணும் காதலித்ததாக எங்கேயாவது செய்தி வந்திருந்தால்தான் அதையெல்லாம் நம்புவேன். காதல் வெறும் கெமிஸ்ட்ரி.

ஒரு சீஸனில் தமிழ் சினிமாவில் ‘காதல்ங்கிறது’ என்று ஆரம்பித்து எஸ்ஸே டைப் கொஸ்ஸினுக்கு பதில் எழுதுவது போல பல கேரக்டர்கள் பேசினார்கள். காமெடியன் எல்லாம் கூடப் பேசினார்கள். பேசியவர்களுக்கே கூட அது லூசுத்தனம் என்று தெரிந்திருக்கும். என்ன செய்வது. காதல் இல்லாவிட்டால் சினிமா கிடையாது.

ஆதிகாலத்தில் சினிமாவில் ஆண்ட்டி அங்க்கிள் காதலில் ஆரம்பித்து, ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் இறங்கி வந்துவிட்டார்கள். ஏதோ ஒரு படத்தில் ‘காதலில் நல்ல காதல், கள்ளக் காதல் என்றெல்லாம் கிடையாது. எல்லாக் காதலுமே புனிதமானதுதான்’ என்கிற ரீதியில் கூட வசனம் வந்துவிட்டதாக ஞாபகம்.

‘If you love someone, let them free. If they come back they are yours, else they never were’

என்று காதல் பற்றி ஒரு பொன்மொழியை ரொம்ப உயர்வாகச் சொல்வார்கள். அப்படி விட்டுப் பாருங்கள், உத்திரவாதமாகச் சொல்கிறேன். ஓடிப் போய் விடுவார்கள். அந்தப் பழமொழியைச் சொன்னவனே யாரையோ பிக் அப் பண்ணத்தான் சொல்லியிருக்கிறான் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் ஐம்பது சதவீதமாக இருக்கிற விவாகரத்து, இந்தியாவில் 1.1 சதவீதம்தான். ஆனால் விவாகரத்து ஆகிற ஜோடிகளில் பெரும்பாலோர் காதல் கல்யாணம் செய்து கொண்டவர்கள்.

காதலில் நிறைய பொய் இருக்கிறது.

காதலிக்கிற ஆணும் சரி, பெண்ணும் சரி தன் இயல்பான குணங்களை அப்படியே வெளிப்படுத்துவதில்லை. தப்பான விஷயங்களை சப்ரஸ் செய்து விடுகிறார்கள். அவை, காதல் என்று சொல்லப்படுகிற ஈர்ப்பின் வீரியம் குறைய ஆரம்பிக்கும் போது மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன.

சந்தேகமும் காதல் கல்யாண தம்பதிகளுக்கு இடையில்தான் அதிகமாக இருக்கிறது.

காதல் காந்த ஈர்ப்பு மாதிரி.

இரண்டு துருவங்களும் இணையாமல், ஆனால் அருகருகே இருந்தால் ஈர்ப்பு விசை இருக்கும். இணைந்து விட்டால் காணாமல் போய்விடும்.

Advertisements

21 comments

  1. அப்பாதுரைஜி, இருக்கலாம், இருக்கா இல்லையாங்கிற டிஸ்பியூட் ரெண்டுலயுமே இருக்கே. அதுமட்டுமில்லை கிடைச்சதும் ஈர்ப்பு அழிஞ்சி போகிற தன்மையும் ரெண்டுலயும் உண்டுன்னு நினைக்கிறேன்.

   1. தைரியம் இருக்கவேண்டியதுதான் …. அசட்டு தைரியம் இருக்கலாமா 🙂 … நிங்களே சொல்லி இருக்கீங்க சம்சார மேலாண்மைக்கு ப்ளாக் பெல்ட் ஒத்துவராதுன்னு ….

 1. காதலும் கடவுள் மாதிரி தான்…. நிச்சயமா இருக்கு .. அதை ஒரு கோட்பாடா பார்க்கும் வரை நிச்சயம் இருக்கு….
  உருவத்துக்குள் கொண்டுவந்து விட்டால் , கெமிஸ்ட்ரி , பிஸிக்ஸ்.. பையலாஜி எல்லாம் வந்துவிடும்….
  உணர்வுக்குள் கொண்டு வந்ததனாலே அய்யனும், கம்பனும், பாரதியும் காதலைப்பாடி மாய்ந்தார்கள் …
  வாத்தியார் கூட…… பிரிவோம் சந்திப்போமில் , ரகுவை மதுமிதாவை மாய்ந்து மாய்ந்து காதலிக்க வைப்பார்.. பின்னர் ரகுவின் அப்பா மூலமாக “எல்லாம் ஆம்பிட்டமின்களின் தொந்திரவுடா“ என்பார் ..
  டெஸ்ட்ரொஜனோ, ஈஸ்ட்ரொஜனா, ஆம்பிட்டமினோ, எதாகட்டும் மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ
  ( இப்பொழுது சரியாக இந்த “மண்ணில்“பாட்டு ராஜ் மியுசிக்கில் வந்தது )

  1. அந்தப் பாட்டுலே கூட மண்ணில் காதல் இன்றின்னு சொல்லல்லை, மண்ணில் ’இந்த’ காதல்ன்னு சொல்றாங்க. அதாவது ஸோ கால்ட் லவ்!

   1. இந்த அர்த்தத்தில் தான் ”இந்த” வார்த்தையை பயன்படுத்தியிருப்பாரோ எழுதிய பாவலர் … சும்மா போட்டது உங்க கருத்துக்கு சாதக மாக்கிட்டிங்க ……

 2. சார்,

  பொதுவான கருத்துரீதியில் உங்களுடடைய கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால்…..

  உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு மேம்போக்கான ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை 😦

  1. யாசவி, இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து எழுதினா காதல் அபிமானிகள் கோபப்படுவாங்களேன்னுதான் மேம்போக்கா எழுதியிருக்கேன்னு சொன்னா நல்ல சமாளிப்பா இருக்குமா? 🙂

 3. /* காதல் என்பது ஒரு மிகப் பெரிய பம்மாத்து என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். */

  அமரர் சுஜாதா “ஏன் எதற்கு எப்படி” தொடரில் சொல்லி, அதை நான் படித்து இருந்தாலும் இதை நான் காதலித்து பார்த்தும் தெரிந்து கொண்டேன்.

  ‘If you love someone, let them free. If they come back they are yours, else they never were’

  இதை நம்பியும் கொஞ்ச நாள் லூசா திரிந்தேன். இதை சொன்னவன் மட்டும் என் கைல மாட்டி இருந்தால் தொலைந்தான்.

  ஆனால் அந்த மடத்தனத்திலும் ஒரு சுவை இருந்தது. இன்னைக்கு இருக்கிற தெளிவு அன்று இருந்திருந்தால் ஆட்டம் காட்டி இருக்கலாம்.

  உங்களுக்கு கோழி-ன்னு பேர் வைக்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். எப்ப பாரு பழைய ( மனக்) குப்பைய கிளறுவதே உங்க வேலையா போச்சு..

 4. உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு ஆனாலும் சில உறுத்தல்கள்

  1) ஹார்மோன் செயல் என்றாலும், அதிதமாக ஒரு/இரு(இந்த ஒரு, இருவில் மனைவியும் அடக்கம் சார் ) பெண்கள் மேல் மட்டும் காதல் வருவது எதனால்?சில casanova வை விட்டுவிடுங்கள், இந்தியாவில் இவர்கள் ratio வில் கம்மி தானே!

  2)மூளையால் கூட கட்டுபடுத்த முடிய depression காதல் தற்கொலைகள் இன்றும் நடப்பது தானே! ஏன்?

  3) ஹார்மோன் செயல்/உந்துதல் இயற்கை தானே, பின் ஏன் மேற்கத்திய நாடுகளில் கூட திருமணத்திருக்கு பிந்திய உறவு முறைக்கான தண்டனை அதிகம்?

  கடவுள் தேடல் போல் காதல் தேடல்க்கும் , பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டுமா !!!!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s