அப்துல் கலாம் – இந்தியாவின் பெருமிதம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை நடிகர் சிவகுமார் பேட்டி கண்ட நிகழ்ச்சியை நேற்று காண நேர்ந்தது. மறு ஒளிபரப்பு என்று நினைக்கிறேன். அதைப் பார்க்காதவர்களின் பெனிஃபிட்டுக்காக நிகழ்ச்சியில் நான் ரசித்த பகுதிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது.

 •  பேட்டி கண்டவரையே ஆங்காங்கே காணப்படுபவர் பேட்டி கண்டது புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.
 • சிவகுமாரை ‘சார்’ என்று அட்ரஸ் செய்தார் கலாம்
 • காந்தியிடம் உதவியாளராக இருந்த கல்யாணராமன் என்கிறவரிடம், ‘காந்தி அளவுக்குப் பண்புகள் நிறைந்த ஒரு மனிதர் அவருக்குப் பிறகு இந்தியாவில் தோன்றவே இல்லையே?’ என்று கேட்ட போது, “ஏன் இல்லை? கலாம் இருக்கிறாரே..’ என்றாராம்!
 • கலாமின் உறவினர்கள் சிலர் வந்து ராஷ்ட்ரபதி பவனில் தங்கி டெல்லியை சுற்றிப் பார்த்த போது, அவர்களின் தங்கும் செலவு, சாப்பாடு, போக்குவரத்து இவைகளுக்காக இரண்டு லட்ச ரூபாய் சொந்தப் பணத்தைக் கட்டினாராம் கலாம்
 • அமெரிக்க ஜனாதிபதி  இந்தியா வந்த போது அவரது உதவியாளர்கள் வந்து ராஷ்ட்ரபதி பவனை சுற்றிப் பார்த்தார்களாம். அங்கிருந்த கார்ப்பெட்கள் ரிச்சாக இல்லையென்று மாற்றச் சொன்னார்களாம். அமெரிக்காவிலிருந்து இரண்டாயிரம் பாதுகாப்பு ஊழியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்றார்களாம். அதை அன்போடு மறுத்து ரீகனையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டாராம் கலாம். கலாம் அவர்கள் சொன்ன காரணங்கள் :
 • இந்த நாட்டின் பல மூத்த தலைவர்களின் காலடிகள் பட்ட அந்த கார்ப்பெட்களை மாற்றுவதில் எனக்கு சம்மதமில்லை
 • இந்த நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களை எங்கள் உயிரைக் கொடுத்தாவது நாங்கள் காப்பாற்றுவோம். வேறு பாதுகாப்பு ஊழியர்கள் அவசியமில்லை.
 • ராமேஸ்வரத்தில் இஸ்லாமியர்களின் தொழுகைத் தலத்துக்கு தலைமைப் பொருப்பில் இருந்த கலாம் அவர்களின் தகப்பனார், சர்ச்சின் தலைமைப் பாதிரியார், ஒரு வைணவ அர்ச்சகர் ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை தோரும் கலாம் அவர்களின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து நன்றாக இருந்து கொண்டிருக்கும் மத நல்லிணக்கத்தை எவ்வாறெல்லாம் கட்டிக் காக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவார்களாம்.
 • பரிசுப் பொருட்கள் எதையுமே பெற்றுக் கொள்ள மாட்டாராம். காரணம் அவர் சிறுவனாக இருந்த போது அவரது தகப்பனார் குர் ஆனிலிருந்து எடுத்துக் காட்டிய ஒரு வாசகம் :
 • கடவுள் உனக்கு ஒரு பொருப்பையும், பதவியையும் தரும் போது அதை செவ்வனே நடத்திப் போவதற்குரிய பொருளையும் எப்படியாவது தருவார். இதர வழிகளில் வரும் செல்வத்தை ஏற்காதே என்பதே அது
 • வட மாநிலத்தில் ஒரு பள்ளியில் குழந்தைகளிடம் ‘சந்தோஷமான வாழ்க்கைக்கு தடையாக இருப்பது எது?’ என்று கேட்ட போது பல குழந்தைகள் பலவாறாக பதில் சொன்னார்களாம். ஸ்னேகா என்கிற குழந்தை ‘வறுமையும், நோயும்’ என்று சொன்னதாம். அதைப் பாராட்டி தன் நூல் ஒன்றை அந்த ஸ்னேகாவுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார் கலாம் அவர்கள்
 • வெளியில் தெரியாமல் பல குழந்தைகள் படிப்புக்கு உதவி செய்திருக்கிறார்
 • அடுத்த முறையும் அவரை குடியரசுத் தலைவராக இருக்கச் சொல்லி 85 சதவீதம் பேர் ஆதரவளித்தும் அதை அவர் ஏற்கவில்லை. அவர் சொன்ன காரணம் ‘போதும்’

 நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு சில நிமிஷங்களுக்கு காலரைத் தூக்கிக் கொண்டு உலாத்திக் கொண்டிருந்தேன்.

‘என் இந்தியக் கலாம்’

‘என் தமிழ்நாட்டுக் கலாம்’

அறிவு, அடக்கம், பண்பு, மனித நேயம் எல்லாம் ஒரே இடத்தில் இருப்பது மிக மிக அசாதாரணமானது. விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெருமை இல்லையே என்று நான் அடிக்கடி வருத்தப் படுவதுண்டு. கலாம் காலத்தில் வாழ்கிற பெருமையில் அந்த வருத்தம் அடிபட்டுப் போய்விட்டது.

Advertisements

21 comments

 1. கலாம் நல்ல மனிதர், பண்பாளர், நேர்மையானவர், உழைப்பாளி – இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

  குடியரசுத்தலைவராக என்ன சாத்தித்தார், இந்தியாவில் அப்பதவியிலிருந்துகொண்டு என்ன சாதிக்க முடியும், முடியாதென்றால் எதற்காக அதனை ஏற்றுக்கொண்டார் என்பதை யாரேனும் விளக்கினால் நன்றியுடன் நானும் கலாம் புகழ் பாடுவேன்.

  குடியரசுத்தலைவராக அவரது காலம் நிறைவடைகையில், முழு ஆதரவுடன் (காங்கிரஸ் + பா.ஜ.க.) கேட்டுக்கொண்டால், இரண்டாம் தரம் அப்பதவியில் அமர ஆயத்தமாக இருந்ததாக அவரே கூறியதாக ஞாபகம்.

  1. அன்புள்ள ராமனாதன், சாதனைகள் நிறைய உண்டு. போக்ரான் எதிரிகளுக்கு அஸ்தியில் ஜுரம் வரவழைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

   1. பதிலளித்தமைக்கு நன்றி ஜவஹர் ஐயா.

    போக்ரான் சோதனை நடந்தது 1998-ம் ஆண்டு மே மாதம். அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத்தலைவரானது 2001-ம் ஆண்டு. மேலும், அவர் முன்னமையே அப்பதவியை ஏற்றிருந்தாலும், அணு சோதனை நடத்துவது குடியரசுத்தலைவரின் தனிப்பெரும் முயற்சியாலோ, திறமையாலோ அல்லது விருப்பத்தினாலோ அல்ல.

    என் கருத்தை மீண்டும் சொல்கிறேன் – கலாம் நல்ல மனிதர், பண்பாளர், நேர்மையானவர், உழைப்பாளி. மற்றபடி, குடியரசுத்தலைவராக ஒன்றும் சாதிக்க வில்லை, ஒன்றும் சாதித்திருக்க முடியாது. மாற்றுக்கருத்தை ஆதாரத்துடன் விளக்கினால் ஆவலோடு ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.

   2. ராமனாதன், அணு விஞ்ஞானி ஒருவர் நம் தேசத்தின் முதற்குடிமகன் என்பது எதிரிகள் வயிற்றில் புளியைக் கரைக்கும் அது போதாதா என்பதுதான் நான் சொன்னது. நண்பர்கள் ஸ்ரீராம், பத்மனாபன் ஆகியோர் எழுதியிருக்கும் கருத்துக்கள், இதர வாசகர்கள் கருத்துக்களையும் படியுங்கள்

 2. பெருமிதத்தில் கண்களில் நீர் வழிய படித்தேன்.

  //அறிவு, அடக்கம், பண்பு, மனித நேயம் எல்லாம் ஒரே இடத்தில் இருப்பது மிக மிக அசாதாரணமானது.//

  உண்மை ..உண்மை …

 3. அப்துல் கலாம் அவர்கள் காந்தியை போல் எளிமையாக இருக்கிறார் . நேருவைப் போல் குழந்தைகளை நேசிக்கறார் குறிப்பாக கல்வியை பள்ளிக் குழந்தைகளுக்கு புகட்டிய விதம் ..எத்தனை நேர்காணல்கள் .பொறுமையாக எல்லாவற்றுக்கும் பதில் கூறியவிதம் …
  ஆர்ப்பாட்டம் செய்பவர்களைத் தான் பெரும்பாலனவர்களுக்கு பிடிக்கிறது என்பது இந்திய துரதிர்ஷ்டம் . முழு மனதாக ஆதரவு கொடுத்திருந்தால், ஐந்து வருடத்தில் என்னவென்று பிடிபட்ட அரசாங்க இயந்திரத்தை அடுத்த ஐந்து வருடத்தில் சுத்தம் செய்ய பார்த்திருப்பார்…..

 4. “அமெரிக்க ஜனாதிபதி ரீகன் இந்தியா வந்த போது அவரது உதவியாளர்கள் வந்து ராஷ்ட்ரபதி பவனை சுற்றிப் பார்த்தார்களாம். அங்கிருந்த கார்ப்பெட்கள் ரிச்சாக இல்லையென்று மாற்றச் சொன்னார்களாம். ”

  ரீகன் அதிபராக இருந்த காலம் 1981-89. கலாம் குடியரசுத் தலைவரான காலம் 2002-2007. ரீகன் 2004ல் செத்தே போய்விட்டார். கலாம் நல்லவர் வல்லவர் என்பதற்காக இப்படிப்பட்ட காரசார மசாலாக்களை சேர்க்க வேண்டுமா..

  1. ரீகன் என்கிற பெயர் மட்டும்தான் பிழை. சம்பவம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லப்பட்டதுதான். பிழை என்னுடையது. திருத்திவிட்டேன், நன்றி

 5. டி.ஆர்.டி.ஓவில் இருபது வருடங்கள் முன்…. ஆன் போர்ட் கம்ப்யுடர் டேபார்ட்மேண்டில் பனி புரிந்தேன். டைரக்டர் கலாம்! கேண்டீனின் உணவு வேஸ்ட் செய்வது அவருக்கு பிடிக்காது. புதிதாக ஜாயின் செய்தவர்களை அவர் கிண்டல் செய்வது அழகாக இருக்கும். அவர்களுக்கு நன்றாக சொல்லி கொடுப்பார்! என்ன எட்டு மணி நேரத்துக்கு மேல் பனி புரிய வைப்பார், நாட்டுக்காக!

 6. அன்புள்ள ஜவஹர்,

  15 ஆண்டுகளுக்கு முன்னர், திரு அப்துல் கலாம்
  அவர்களுடன் ஒரு நாள் முழுவதும் உடன் இருக்கக்கூடிய
  அருமையான வாய்ப்பு ஒன்று எனக்கு கிடைத்தது.

  நான் சந்தித்த – நிஜமான ஒரு மனிதர் அவர்.
  அவ்வளவு எளிமை.
  அவ்வளவு இனிமை.
  கோபமே வராத, எப்போதும் புன்னைகை தவழும் முகம்.
  அனைவரிடமும் அன்புடன் பழகும் தன்மை.

  I could not find
  anything artificial in him !

  என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

  பயனுள்ள பதிவு.

  -வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

 7. //”கலாம் காலத்தில் வாழ்கிற பெருமையில் “//

  எனக்கும் அந்தப் பெருமை எப்போதும் உண்டு. அந்த பேட்டி முன்னரே பார்த்திருக்கிறேன். விவேக் அவரை எடுத்த பேட்டியும் பார்த்திருக்கிறேன். காவிரி மைந்தன் சொன்னது போல அவரது எளிமை பற்றியும் நிறைய சொல்லக் கேட்டிருக்கிறேன். மாறுதல்களை குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும் என்று அவர் எடுக்கும் முயற்சியும் பாராட்டத் தக்கது. பத்மநாபன் சொல்லியுள்ள இந்திய துரதிருஷ்டம் உண்மை…உண்மையிலும் உண்மை. சோனியா பிரதமராகிவிடுவதர்கான சாத்தியக் கூறுகள் இருந்த போது அதில் இருந்த சட்டச் சிக்கல்களை தைரியமாக அவரிடமே சொன்னவர் கலாம்தான் என்று நினைவு. பிரதமராகி விடும் ஆசையில் இருந்த இத்தாலிய அன்னை, கலாமை சந்தித்து விட்டு வெளியே வரும்போதுதான் தியாக போர்வை போர்த்திக் கொண்டார் என்றும் ஞாபகம்.

 8. //அதில் இருந்த சட்டச் சிக்கல்களை தைரியமாக அவரிடமே சொன்னவர் கலாம்தான் என்று // ஜனாதிபதியின் பதவிக்கு உச்சக்கட்ட அவசியத்தை இந்த விஷயத்தில் காட்டினார்..மத மாச்சர்யங்களை தாண்டி இறையாண்மையை காப்பற்றிய முடிவு….மீண்டும் சொல்லவிரும்புவது , விஞ்ஞானியாகவே நெடுங்காலம் சேவை புரிந்த அவர்க்கு அரசியல் பிடிபட ஐந்து வருடமாயிற்று…தொடரவிட்டிருந்தால் அலைக்கற்றை மற்றும் இஸ்ரோ ஊழல்களை ஆரம்பித்திலேயே தடுத்திருப்பார்… கேள்வியே கேட்க வேண்டாம்.. கேள்வி கேட்க ஒரு ஆள் இருக்கிறேன் என்பதை காட்டியிருப்பார்…

 9. அனைவருக்கும் வணக்கம்

  இந்த தளத்திற்கு நான் புதிது

  இருந்தாலும் இந்த தலையங்கம் இடம்பெற்ற இடத்தில உள்ள உயர்ந்த நபர்
  உயர் திரு APJ. அப்துல் கலாம் அவர்கள்
  உயர் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் தன்னையும் தன்னை சார்ந்தவர்கலயும் உயர்த்தி பேசுவது

  அவர்களை பத்தி பேசுவது மட்டும் அல்லாமல் அல்லும் பகலும் அவர்களுக்க்காகவே
  பாடுபடுவதை நாம் கண்கூடாக அனுதினமும் காண்கிறோம் அவ்வாறு இருக்கையில்

  அதோடு மட்டும் அல்லாமல் தான் உயர் பதவியில் இருக்கிறோம் என்ற இறுமாப்பு அவர்களுக்கு இல்லை என்று மறுப்பதற்கு இல்லை
  தற்சமயம் தன எடுத்துரைக்கும் கருத்து தனது நாட்டியத அல்ல வேறு நாடு உடையத என்று கூட தெரியாத பல பெரும் தலைவர்களை நம் தற்சமயம் நாம் கொண்டுள்ளோம் அதற்கி இடையில் இவரை போல் நல்ல உள்ளங்களை நாம் வரவேற்க வேண்டும் வாழ்த்துரைக்க வேண்டும்

  உயர் திரு A.R. ரஹ்மான் இசை அமைப்பாளர் அவர்களை புகழ்ந்தால் அவர் அவருடைய சம்பளத்திற்கு இசை அமைக்கிறார் என்று நம்மில் பலர் சொல்வதுண்டு ஆனா அதே ரஹ்மான் ஆஸ்கார் அரங்கில் அவர் உச்சரித்த வார்த்தை இன்னும் என்னுடைய காதில் ஒலிக்கிறது
  இலங்கையில் போர் நிற்க வேண்டும் தமிழ் மக்கள் நலம் அடையும் வரை எனக்கு எந்த பாராட்டும் வேண்டாம் என வந்த பாராட்டை எல்லாம் மறுத்தவர் அவர் தமிழை தரணியிலே ஒழிக்க செய்தவர் அவரி எல்லாம் பாராட்டுகிறோம்

  அவரி போல் அல்லாமல் நமது பெருமதிப்பிற்கு உரிய கலாம் அவர்களை போற்றா விட்டாலும் பரவ இல்லை தயவு செய்து என்ன செய்தார் எது செய்தார் என்று அப்பட்டமாக பேசாதீர்

  அனைவருக்கும் தரும் ஒரு உதாரணம் இதோ

  இப்பொது சொல்லுங்கள் நீங்கள் கண்டதை யாரேனும் வென்றதுண்ட நண்பர்களே

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s