பகுத்தறிவு என்றால் என்ன?
”பகுத்” ஐ எடுத்து விடுங்கள். மிச்சம் என்ன இருக்கிறது?
அறிவு.
அவ்வளவுதான்.
மூளை, மனிதனின் செண்ட்ரல் பிராஸஸிங் யூனிட்.
ஐம்புலன்கள், அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி இவையெல்லாம் இன்புட் சானல்கள். இந்த இன்புட்களை பிராஸஸ் செய்து ரிஸல்ட் தரவேண்டியது மூளையின் வேலை. இந்த பிராஸஸ் உங்களுக்கு, எனக்கு, உங்களுக்கும் எனக்கும் நண்பர்கள், விரோதிகள் எல்லாருக்கும் பொது. ஆனால் அவுட்புட்கள் வித்யாசமாக இருக்கின்றன.
ஏன்?
எல்லாக் கம்ப்யூட்டர்களிலும் செண்ட்ரல் பிராஸசிங் யூனிட்கள் இருக்கின்றன. எல்லாமே இன்புட்களை சரியாகப் பிராஸஸ் செய்து சரியான அவுட்புட்களைத் தருகின்றனவா?
உங்களுக்கு ஒரு டிராயிங் வேண்டும். கீ போர்ட்தானே இன்புட், என்னதான் இன்புட் கொடுத்தாலும் டிராயிங் வருமா? ஆட்டோகேட் சாஃப்ட்வேர் இருந்தால்தானே வரும்?.
நீங்கள் டைப் செய்வது ஒரு கடித வடிவில் வரவேண்டும். கீபோர்ட் மட்டும் போதுமா?
எப்படி வரும்?
எம்.எஸ். வேர்ட் இருக்க வேண்டும்.
ஒரு அக்கவுண்டிங் ஸ்டேட்மெண்ட் வேண்டும்.
எக்ஸெல் வேண்டுமல்லவா?
ஆக, இன்புட்களுக்கு மீறி ஒரு விஷயம் தேவையிருக்கிறது, சாஃப்ட்வேர்.
அப்போது மனித சி.பி.யூ வில் கடவுள் அவுட்புட்டாக இருக்க வேண்டுமானால் என்ன சாஃப்ட்வேர் இருக்கிறது? அல்லது எப்படி புரோக்ராம் செய்வது? யாராவது சொல்லியிருக்கிறார்களா?
ஆம்.
சொல்லியிருக்கிறார்.
யார்?
ஸ்வாமி விவேகானந்தா.
அந்த புரோக்ராம் பெயர் என்ன?
ராஜ யோகா.
ஒரு விஞ்ஞானியாகவோ, பொறியாளனாகவோ ஏகப்பட்ட பிராக்டிகல் செஷண்கள் இருக்கின்றன. நாம் நம்மை (அல்லது கடவுளை) அறிய பிராக்டிகல்ஸ் இருக்காதா?
அவைகளைச் செய்து பார்த்த பிறகும் நமக்கு எதுவும் பிடிபடவில்லை என்றால் அப்புறம் நாத்திகர்கள் ஆகலாமே?
எப்படி சவுகர்யம்?
ராஜயோகா கற்க விருப்பமா?
நிறையப் பேர் தயாராயிருந்தால் வகுப்புகள் ஆரம்பிக்கலாம்.
Nice!
//அவைகளைச் செய்து பார்த்த பிறகும் நமக்கு எதுவும் பிடிபடவில்லை என்றால் அப்புறம் நாத்திகர்கள் ஆகலாமே?//
விலைமாதுவிடம் ஒருமுறை சென்று பார்க்கலாம், பிடிக்கவில்லையெனில் பிறகு நல்லவனாக இருக்கலாமே.
மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை ஒரு முறை சென்று வரலாமே, பிடிக்கவில்லையெனில் பிறகு இந்துவாகவே வாழலாமே.
அடுத்த வீட்டுக்காரியை ஒருமுறை அழைத்துப்பார்க்கலாமே, சிக்காவிடில் ‘சீ சீ இந்தப்பழம் புளிக்கும்’ என்று சொல்லிக்கொள்ளலாமே.
சூரியன் மேற்கில் உதிக்கிறதா என்று எதற்கும் ஒருமுறை நாளை காலை பரிசோதித்துவிட்டு, பிறகு சொல்லலாமே சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறதா என்று.
//அப்போது மனித சி.பி.யூ வில் கடவுள் அவுட்புட்டாக இருக்க வேண்டுமானால் என்ன சாஃப்ட்வேர் இருக்கிறது?//
ஒரு அக்கவுண்டிங் ஸ்டேட்மெண்ட் வேண்டும் என்பது குறிக்கோள். அதற்கு வழி செய்ய எக்சல் வேண்டும். எக்சல் வைத்துக்கொள்வது குறிக்கோள் அல்லவே! அதுபோல, ஏதாவது ஒரு குறிக்கோளை அடைய கடவுள் என்ற சிந்தனை வழி செய்ய உதவ வேண்டும். எந்த ஒரு குறிக்கோளுமன்றி, கடவுளை மனம் நினைத்து உருக்கிக்கொண்டே இருக்கவேண்டுமென்பதில் உள்ள ‘லாஜிக்’ எனக்குப் புரியவில்லை.
சார், ராஜயோகா கற்க நான் ரெடி!!!
(விலைமாதுவிடம் செல்பவர்கள் கெட்டவர்கள் இல்லை 🙂 மற்றபடி, பிரமாதம் சுப இராமநாதன்!
குறிக்கோள் இங்கே குழப்புது ஜவஹர். ‘பகுத்’தை எடுத்தா ‘தோடா’வாயிடும்… தோடா!:)
நல்ல பதிவு.
எழுதுங்கள். தொடர்ந்து படிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
ஆரம்பிங்க.. நல்ல விஷயம்தானே?.
முயற்சிக்கு வாழ்த்துகள் ஜி….
அடுத்ததா, கிழக்குப் பதிப்பகம் உங்க ராஜயோகத்தை வெளியிடப் போறாங்கன்னு சொல்லவேண்டியதுதானே…..
மூர்த்திஜி, இதை இன்னும் அவங்களே சொல்லல்லை. ஆனா எனக்கு அந்த ஆசை இருக்கிறது நிஜம். எழுதத்தான் போறேன். யார் வெளியிடுவாங்கன்னு தெரியாது. எழுதின பிறகுதான் பத்ரி சார் கிட்டயும், ராகவன் சார் கிட்டயும் பேசப் போறேன்.
The Tamil word ‘Paguththarivu’ gives you association of thoughts. You associate the word with certain group of people in TN. Dont do that. The word can exist in its own right and meaning.
Translated into English, it just means that nothing is acceptable w/o empirical evidence. A paguththarivaalar wont accept the concept of God as that concept cant be subject to empirical evidence. The believers show only circumstantial evidences like ‘ I cancelled my flight tkt at the last minute; otherwise I would have been one of the travellers who perished in the 9/27 disaster. Jesus saved me!’ and the like.
Using computer terminology to prove your theory can be disproved by a clever empiricists by using another analogy.
CPU is the brain; the inputs are to be fed into brain; and the software is necessary to transform the inputs.
What about other things Mr ? Blood circulation does not come under inputs, by inputs you mean commands only. Ur b.c does not give any command. Your software does not help to translate anything in the context of b.c.
w/o b.c, what is the use of ur brain and your inputs and your famous almighty software ?
Can u categorise the b.c under any of ur comp terminolgy?
Similarly, what abt liver ? It works as a sorting office for b.c where the energy from the b.c is stored and rationed out to the bodies in correct measures. If incorrect, you will reach your God at once, mind you.
There are other things also. Your God will wait. Now, u answer your pagutharivaalarkal writing here.
“(A paguththarivaalar) wont accept the concept of God as that concept cant be subject to empirical evidence.”
This is the samething Swami Vivekanantha says in his Raja Yoga. He says, Do not belive anything until you experience it. He is rather, throwing a challenge before us……
simple. blood circulation is the electricity supply. It can also be considered as an input method. It carries hormones which regulate few processes in some organs around the body.
லஜ்ஜாவதி “___ பொரியல்” சாப்பிட்டதை படிப்பதற்கு பதிலாக கண்டிப்பாக ராஜயோகம் படிக்கலாம். ஆரம்பியுங்கோ…
பகுத் அச்சா ஹை!
என்னுடைய முதல் கேள்வியே ” நான் ஏன் கடவுளாக வேண்டும்? “. இதுக்கு பதில் கிடைக்குமென்றால் அடுத்த கட்ட முயற்சிக்கு முன்னேறலாம் . என்ன சொல்றிங்க தலைவரே ?
தெளிவான நடை. நேர்த்தியான வாதங்கள். கட்டுரை முழுவதும் கண்ணை உறுத்தாமல் கலந்து போகும் கலக்கலான நகைச்சுவை கலந்த நடை. தற்செயலாக தங்கள் வலைத்தளத்திற்கு வந்த என்னை உங்கள் கட்டுரைகள் மணிக்கணக்கில் கட்டிப் போட்டு விட்டன. தொடர்ந்து எழுதுங்கள்.
ராஜாயோகாவைத் தங்களிடமிருந்து கற்கும் வாய்ப்பு கிட்டியதில் மகிழ்ச்சி. எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்?
சூர்யா
six sigma class start panniyaachu… on demand-la poitu irukku
ippo raja yoga
😉
kalakkunga sir
ராஜயோகா கற்க ஆவலுடன் இருக்கிறேன். 🙂
பிரம்மகுமாரிகள் இயக்கத்தினரும் ராஜயோகா என்று சொல்லிக்கொடுக்கிறார்களே. அதுவும் இதுவும் ஒன்றா?
ஆமாம்
ராஜயோகா கற்க ஆவலுடன் இருக்கிறேன்.