குறட்டை அரங்கம்

குறட்டை விடுகிறவர்கள் தீவிரவாதிகளை விட பயங்கரமானவர்கள்.

சிலர் விடும் குறட்டையில் நமக்கு தூக்கம் கெட்டுப் போவதுடன், காலையில் எழுந்தால் வைப்ரோ ஃபீடரில் படுத்திருந்த மாதிரி உணர்வோம். ஜட்டி லூஸாகி, பல்லெல்லாம் ஆட்டம் கண்டு, கண்கூட மாறுகண் ஆகிவிடும். ஆனால் அவர்களோ,

”குறட்டையா? நானா?” என்று சந்தூர் விளம்பரம் மாதிரி நம்மை சந்தேகமாகப் பார்ப்பார்கள்.

என் பள்ளிப் பருவத்தில் இரட்டைக் குறட்டைஞர்களோடு இரவைக் கழித்தவன் நான். கொட்டாங்கச்சியில் ரம்பத்தால் அறுப்பது மாதிரி ஒருத்தரும், கழுத்து நசுங்கின மூஞ்சூர் போல இன்னொருவரும் மாறி மாறி குறட்டை விடுவார்கள்.

’கொர்ர்ர்ர்ர்ர்’

’ஸ்க்யூஊஊங்’

என்று ரிதமிக்காக வருகிற இந்தக் குறட்டைத் தனி ஆவர்த்தனங்கள் பழகிப் போய் பிற்காலத்தில் அது இல்லாமல் தூங்க ரொம்ப சிரமப்பட்டேன். பல்லாவரம் டிம்பர் டெப்போ அருகில் வீடு கிடைக்குமா, அல்லது சீலிங் ஃபேனில் பேரிங்கில் இருக்கும் கிரீஸை எல்லாம் கெரோசின் போட்டு எடுத்து குறட்டைக்கு சப்ஸ்டிட்ட்யூட் பண்ணுவோமா என்றெல்லாம் டெஸ்பரேட்டாக அலைந்தேன். ஆனால் அப்போது வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் இந்த சப்த ஜாலங்களில் பீதி ஏற்பட்டு காலையில் பேதியாக ஆரம்பித்து வைத்தியர் கந்தசாமிப் பிள்ளையிடம் போக வேண்டியிருக்கும்.

சிலர், ராத்திரி கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். பேச்சும் குறட்டையும் ராக் அண்ட் ஹிண்துஸ்தானி ஃப்யூஷன் போல ரொம்ப அழகாக மெர்ஜ் ஆகும்.

“தண்டபாணி, துரைசாமிப் பிள்ளையைப் பார்த்தியா?” என்பார் இவர்.

“அவன் ஒண்ணும்………………………… சொல்றதை………………………….. காதுகுடுத்துக்………………………………..” என்று ஹால்ட் ஆகி ”கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று ஸ்க்ரீன் சேவர் மோடுக்குப் போய்விடுவார்.

கேட்டவர்,

“தண்டூ…..” என்று பிரஸ் எனி கீ ஆப்பரேஷன் செய்ததும்,

“கேட்கிறவனாவே தெரியலை” என்று ரெஸ்யூம் ஆவார்.

சில பேர் உடனே ரெஸ்யூம் ஆகாமல்,

“யாரு?” என்று பாஸ்வேர்ட் கேட்பார்கள்.

“துரைசாமிப் பிள்ளை” என்று எண்ட்ரி கொடுத்த பிறகுதான் ரெஸ்யூம் ஆவார்கள்.

சிலருடைய குறட்டை ஏழு ஸ்வரங்கள் பேசும். என் அப்பாவுக்கு குறட்டையிலேயே சங்கராபரணம் வாசிக்கிற அளவு வித்வத் உண்டு!

என் நண்பன் ஒருவன் கல்யாணத்துக்கு முன் பதினைந்தாயிரம் செலவு செய்து குறட்டைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டான்.

“சரியாயிடுச்சா?” என்று கேட்டேன்.

“ஓரளவு” என்றான்.

“ஓரளவுன்னா?”

“முன்னேயெல்லாம் காலைலே எழுந்தா சட்டையே கிழிஞ்சிருக்கும், இப்போ பட்டன் மட்டும்தான் கழளுது”

குறட்டையின் எஞ்சிநியரிங் பார்ட்டுக்கு அப்புறம் வரலாம், டெக்னாலஜி பார்ட்டை முதலில் பார்ப்போம்.

குறட்டை வித்வான்கள் பெரும்பாலும் மல்லாக்கப் படுத்துத் தூங்கும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். பக்கவாட்டில் படுக்கச் சொன்னாலே குறட்டை நின்று விடும்!

குறட்டையில் தாற்காலிகக் குறட்டை, நிரந்தரக் குறட்டை இரண்டும் உண்டு. தப்பான போஸ்சரில் தூங்குகிறவர்கள், ரொம்ப அசதியுடன் தூங்குகிறவர்கள், சரக்கு அடித்தவர்கள், சில தூக்கத்தைத் தரும் மருந்துகள் உட்கொண்டவர்கள் இவர்களெல்லாம் தாற்காலிக ரகம். குறட்டையுடனான தூக்கம் சரியான ஓய்வைத் தருவதில்லை என்பது கவனிக்கத் தக்கது.

பொடி போடுகிறவர்கள், புகையிலைக்காரர்கள், சிகரெட் பிடிப்பவர்கள், சைனஸ்காரர்கள் இவர்கள் நிரந்தரக் குறட்டை ரகம். இவர்களுக்கு சுவாசப் பாதை குறுகலாகி விடுகிறதால், மூச்சுக் காற்றின் வெலாசிட்டி அதிகரித்து, அல்லது மூச்சுப் பாதையில் தோன்றிய டிஷ்யூக்கள் வைப்ரேட் ஆகி சப்தம் வருகிறது. புகையிலை, ஜர்தா அதிகம் உபயோகிப்பவர்களுக்கு ஏகப்பட்ட ட்ஷ்யூக்கள் தோன்றி, மூச்சுக் குழாயே விட்டத்தில் அதிகமாகி சாப்பாட்டை விழுங்க முடியாத அளவுக்குக் கூடப் போகும். அப்படி ஆன என் நண்பர் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார்.

 பிராணாயாமம் குறட்டைக்கு மிகச்சிறந்த நிவாரணி!

Advertisements

9 comments

 1. மிகவும் அருமை. சற்று இடைவெளிக்குப்பிறகு முழு பார்மிற்கு வந்து விட்டீர்கள் ஜவர்லால் அவர்களே! நகைச்சுவை இழையோடும் உங்கள் நடை, வாசிப்பதை ஒரு பரவச அனுபவமாக்குகிறது. அடிக்கடி பதிவு எழுதுவதற்கு நன்றி, எழுதப்போவதற்க்கு நன்றியும், வாழ்த்துக்களும்.

 2. வயதானவர்களுக்கு தூக்கம் வரதோ இல்லையோ குறட்டைகட்டாயம் வரும். ஸரியா தூங்கவேயில்லை என்று சொல்பவர்களிடம் உங்கள் குறட்டை சத்தம் ராத்திரி பூரா என்று
  சொல்லிப் பாருங்கள். நானா குறட்டையா வயதானவர்களைச் சொல்லமுடியும் சொல்கிறீர்கள். எங்கவயஸு வரட்டும். உங்களுக்கு ,அப்போ தெறியும் இந்த சவால் கட்டாயம் வரும்.நிம்மதியாக தூங்குவதற்கு மாத்திரை போடறவங்களுக்கும் இதே கதிதான். குறட்டைக்கு உங்கள் அலசலும் பிரமாதம்.

 3. அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா (கூகுள் ஆண்டவரிடம் “OSA ” என்று கேட்டுப் பாருங்கள்) உள்ளவர்கள் ரொம்ப குறட்டை விடுவார்கள். இது ஒரு சீரியசான வியாதி. ஸ்லீப் அப்னியா ஆசாமிகள் படுத்த உடன் “ரிலாக்ஸ்” ஆகும் மசில்கள் மூச்சுக் குழாய்க்குள் அடைப்பு உண்டாக்கி அவர்கள் மூச்சு விடுவதை தடை செய்யும். இதுதான் குறட்டைக்குக் காரணம். நாளடைவில் இது ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல இதய நோய்களுக்கு வழி வகுக்கும். தூங்கும்போது ஒரு மெஷினுடன் இணைத்த மாஸ்க் அணிந்துத் தூங்குவதே இதற்கான வைத்தியம்.

 4. கடைசியிலே இங்கயே வந்துட்டீங்களா! குறட்டை அனுபவிப்போர் சங்க சார்பில் உங்கள் கருத்துக்களை மறுக்கிறேன். ஓட்டு கேட்டு பக்கம் வாங்க சொல்றேன்.

 5. சூப்பர்…….சிரிப்பு தாங்கல!

  நேரமிருந்தா இந்த பதிவை படிங்க……
  http://padmahari.wordpress.com/2010/03/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9/

  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s