நாலு பேருக்கு நல்லதுன்னா…..

கிரிக்கெட் தெரியாமலோ, அதில் சுவாரஸ்யம் இல்லாமலோ இருப்பது ஒரு கலாச்சாரப் பிழையாகக் கருதப்படுகிறது.

 ”அமெரிக்கா எத்தனை ரன்?” என்று கேட்கிற லெவலில் இருந்தவன் நான். அமெரிக்கா விளையாடுவதில்லை என்கிற அளவுக்குத்தான் இதுவரை ஞானம் வளர்ந்திருக்கிறது. (விளையாடவில்லைதானே?)

கிரிக்கெட்டை யார், எங்கே எப்போது விளையாடினாலும், வாயை நீரின் மேற்பரப்புக்கு வரும் மீன் மாதிரி வைத்துக் கொண்டு பார்க்கிறவர்களைக் கண்டால் எனக்கு எரிச்சலாக இருக்கும். என் மாமனாரும், இளைய மகனும் 1987ல் நடந்த மேட்சைக் காட்டினாலும் அதே பிரமிப்புடன் பார்ப்பார்கள்.

“ஆறின கஞ்சி பழங்கஞ்சி… இதைப் போய் ஏண்டா பார்த்துகிட்டு இருக்கே?” என்று கேட்டால்,

“ஏன், பழசைப் பார்க்கக் கூடாதா?” என்று வெடிப்பான்.

“இல்லடா, அதுல யார் ஜெயிச்சாங்கன்னு தெரிஞ்சாச்சு, அதுக்கப்புறம் அதுல என்னடா திரில்?”

“ஜெயிப்பு, தோல்விக்கு மேல எதுவுமே இல்லாம இருக்கிறதுக்கு அது ஒண்ணும் மூணு சீட்டு இல்லைப்பா”

“சரிடா, எட்டு சீட்டு அதிகமா இருக்கலாம், அப்பவும் அதுல என்ன இருக்கு பார்க்க?”

“இதோ பார், இந்த பாலை ஏறி வந்து அடிச்சிருந்தா கபில்தேவ் அவுட் ஆயிருக்க வேணாம். இவ்வளவு ஸ்லிப் வேணாம், மிட் ஆன்ல யாருமே இல்லாததால அடிச்சி விளாசறாங்க பார், கேட்ச்சை வாங்கும் போது கையை இறக்கிற சமாச்சாரம் அப்ப இல்லை பார், அதான் டிராப் பண்றான்……” என்றெல்லாம் டோனி கோசியர் மாதிரி விமரிசனத்தை ஆரம்பிப்பான்.

“உனக்கு சரி, மத்தவங்களுக்கு?” என்று மட்டும் கேட்பேன்.(தர்மபுரி மாவட்ட டீமுக்கு விளையாடி, அவ்வப்போது ஹிந்து நாளிதழின் கோயம்பத்தூர் எடிஷனின் ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் இடம் பெற்றவன். ராபின் சிங், டபிள்யு.வி. ராமன் உள்ளிட்ட சில பிளேயர்களிடம் பரிசு வாங்கியவன். ஆகவே கிரிக்கெட்டை ரொம்பத் திட்டினால் என்னைத் தேசத் துரோகியாகப் பார்ப்பான்)

“மத்தவங்க டீம் ஸ்பிரிட் கத்துக்கலாம், ஃபோகஸ் கத்துக்கலாம், பிரஸன்ஸ் ஆஃப் மைண்ட் கத்துக்கலாம், எ ஃபுட் பால் ப்ளேயர் இஸ் மோர் குளோஸ் டு காட் தேன் எ யோகின்னு விவேகானந்தர் சொன்னதா அடிக்கடி சொல்வியே, அது பார்க்கிறவங்களுக்கும் பொருந்தும்”

“அது சரி, அது உன்னை மாதிரி ஐம்புலன்களும் ஒன்றி பார்க்கிறவங்களுக்கு சரி. ஒரு கையில துக்ளக்கும், இன்னொரு கையில காராச் சேவுமா உட்கார்ந்து கிட்டு காது இங்கே இல்லாம வாசல்லே விற்கிறது கீரையா, இராலான்னு பார்த்துகிட்டு இருக்கு. கிச்சன்லே சமைக்கிறது உருளைக் கிழங்கு பொடிமாஸா கொத்தவரைங்காய் துவட்டலான்னு மூக்கு பார்த்துகிட்டு இருக்கு. வாய், இன்னைக்கு லீக் ஆகிற பால் பாக்கெட் போட்டவனைத் திட்டிகிட்டு இருக்கு …………………”

“அப்பா ஸ்டாப்…. கண் காது மூக்கு போதும். சென்ஸார் இல்லைன்னா ஏதேதோ சொல்ல ஆரம்பிச்சிடுவே. இதனால் நீர் மன்னருக்குச் சொல்ல விரும்பும் கருத்து?”

“அப்படி இன்வால்வ்மெண்ட் இல்லாமப் பண்றதா இருந்தா தியானம் மட்டுமில்லை, கிரிக்கெட்டும் பிரயோஜனமில்லை”

“அது சரி, பல சமயம் விளையாடறவங்களே அடுப்புல பால் வெச்சிட்டு வந்த மாதிரி அவசரமாத் திரும்பிப் போயிடறாங்க, பாக்கறவங்க அப்படி இருந்தா தப்பில்லை”

“ஆக மொத்தம் பார்த்த மேட்சைப் பார்க்கிறது தப்பில்லைங்கிறே?”

“பார்த்த அயன் படத்தை திரும்பப் பார்க்கிறது, கேட்ட ஹரிஹரன் கஸலைத் திரும்பத் திரும்பக் கேட்கிறது, படிச்ச கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு புத்தகத்தைத் திரும்பப் படிக்கிறது…….”

“ஹோல்ட் ஆன்…… தப்பில்லையான்னா, தப்பில்லைன்னு சொல்ல வேண்டியதுதானே, அதுக்காக இப்படி குத்தி, கீறி, பிராண்டிக் காட்டணுமா?”

“நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லைன்னு ஸ்வாமி மணிரத்னானந்தா சொல்லியிருக்கார்”

“யார் அந்த நாலு பேர்?”

“ஸ்பான்ஸெர்ஸ், ப்ளேயர்ஸ், கிரிக்கெட் போர்டு, எலெக்ட்ரிஸிட்டி போர்டு”

Advertisements

9 comments

 1. நல்ல பதிவு. நாம் உலக கோப்பை ஜெயித்த 1983 மேச் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அலுக்காது.
  kindly visit my blog ‘ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருமுக்குளம்’ (ஸ்ரீ ஆண்டாள் கோவில் தெப்பத்தை பற்றிய பதிவு) and have your views & guidance. rathnavel-natarajan.blogspot.co
  நன்றி.

 2. அறிவுசார் பதிவுகள் அழுகின்றன
  அழாதா பின்னே
  அர்த்தமுள்ள செய்திகள் கோர்வையாயிருந்தும்
  அவற்றை விட
  அனேக வாசகர் ரசிகராயிருப்பது
  அசத்தலான (இதுபோன்ற) நகைச்சுவை ததும்பும் லேசுப்பதிவுகளுக்குத்தானே!

 3. மணிரத்னானந்தாவா!!!!!! நானும் கிரிக்கெட்டுக்குப் பக்கத்துவிட்டு ஜன்னல் வழியாக ,தொலைக்காட்சியைப் பார்த்தவள்தான். அது முப்பது வருடங்களுக்கு முன்னால்.
  இப்போது அலுத்துவிட்டது. நீங்கள் சொல்லும் மகனார் போன்றவர்கள் எங்கள் வீட்டிலும் உண்டு:)
  சிரித்தேன் சிரித்தேன்.:))))

 4. “ஜெயிப்பு, தோல்விக்கு மேல எதுவுமே இல்லாம இருக்கிறதுக்கு அது ஒண்ணும் மூணு சீட்டு இல்லைப்பா”??????????!!!!!!!!!!!!!!!!!!!!!!

 5. அதாவது கிரிக்கெட பற்றி ஓரளவுக்கு தெரியும் அனால் அதுவே என்று பழியாக கிடப்பவர்களைப் பார்த்தால் எரிச்சல் வருகிறது . அதுதானே!
  எனக்கும்தான்..

 6. //“அது சரி, பல சமயம் விளையாடறவங்களே அடுப்புல பால் வெச்சிட்டு வந்த மாதிரி அவசரமாத் திரும்பிப் போயிடறாங்க, பாக்கறவங்க அப்படி இருந்தா தப்பில்லை”//

  இது சரவெடி…..பின்னிட்டீங்க போங்க!!

  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

 7. நன்றிங்க. நான் ஹிரோஷிமாவுல இருக்கேங்க. இங்கே ஒன்னும் பிரச்சினையில்லை. கதிரியக்க பிரச்சினைகள்கூட ஃபுகுஷிமாவிலயும், டோக்கியோ நான் இன்னும் இங்கேதான் இருக்கேன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s