இந்தியன் தாத்தா அன்னா ஹஸாரே

கலக்கிக் கொண்டிருக்கிறார் அன்னா ஹஸாரே!

இந்தியன் படம் பார்க்கிற போது இப்படி ஒரு தாத்தா நிஜமாகவே உருவானால் பரவாயில்லையே என்று உங்களை மாதிரியே நானும் ஏங்கினேன்.

ஷிவ் கேராவின் ஃப்ரீடம் இஸ் நாட் ஃப்ரீ படித்துக் கொண்டிருக்கிறேன். தேர்தலில் வோட்டுப் போடுமுன் எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம். அதைப் படிக்கிற போதும், ஏன் நம் நாடு இப்படி அழிந்து கொண்டிருக்கிறது, விடிவே இல்லையா என்கிற ஏக்கம் ஏற்படுகிறது.

அன்னா ஹஸாரே பற்றி தொலைக்காட்சியில் பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது. இவர் சுபாஷ் சந்திர போசின் இந்தியன் தாத்தா அல்ல, காந்தியின் இந்தியன் தாத்தா. ஆனால் அரசியல்வாதிகளின் ஆணவமும், மெத்தனமும் இவரை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், Right To Information Act (RTI) வருவதற்குக் காரணமாக இருந்தவர்.

அன்னா ஹஸாரேக்கு பல்வேறு மாநிலங்களில் ஆதரவு தோன்றியிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். கிரன் பேடி உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். தேசத்தில் நல்லது நடக்கிற வாய்ப்புக்கள் தெரிகின்றன.

லோக்பால் பில் என்றால் என்ன?

லோக்பால் என்பது ஏதாவது ஜவுளிக்கடையின் பேரா?

லோக்பால் என்பது உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, குறைந்த பட்சம் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அல்லது இருக்கிற மேலும் இரண்டு நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு.

எந்த இந்தியப் பிரஜையும், பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சர் மீதும் இங்கே புகார் தரலாம். அந்தப் புகார்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1968ல் இப்படி ஒரு அமைப்பு முன்மொழியப்பட்டு, 1969 லேயே பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.

42 வருஷங்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த விஷயத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அன்னா ஹஸாரேயின் கோரிக்கை.

முதலில் அன்னா ஹஸாரேயின் செயலை இம்மெச்சூர் என்று காங்கிரஸ் வர்ணித்தது. பிறகு கொஞ்சம் காத்திருக்க வேண்டும், உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டது. பிறகு வீரப்ப மொய்லி அவர்கள் அடுத்த பார்லிமெண்ட் செஷனில் கொண்டுவருகிறோம் என்று உறுதி அளித்தார். எதற்குமே அன்னா மசியவில்லை. ஷரத் பவார் லோக்பால் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். ம்ஹூம்…..

மெச்சூராக இருப்பது என்றால் என்ன?

இந்தியாவின் கறுப்புப் பணம் கோடிக்கணக்கில் ஸ்விஸ் வங்கியில் இருப்பதும், நூறு வருஷத்து இந்திய பட்ஜெட் அளவுக்கு 2ஜியில் திருடப்பட்டிருப்பதும் தெரியவே தெரியாத மாதிரி உட்கார்ந்திருப்பதா?

அன்னா ஹஸாரேக்கு ஆதரவு தருவதாகச் சொல்லிக் கொண்டு வந்த அரசியல்வாதிகளை ஆட்டத்தில் சேர்க்கவில்லை மக்கள். உமாபாரதியையும், சௌதாலாவையும் அப்படியே வண்டியேற்றி அனுப்பிவிட்டார்கள்.

கிடைத்துவிட்டார் இரண்டாவது காந்தி.

அவரைப் பொன் போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது.

Advertisements

19 comments

 1. //கிடைத்துவிட்டார் இரண்டாவது காந்தி.

  அவரைப் பொன் போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது.//

  சத்தியம்! சத்தியம்!! சத்தியம்!!! சத்தியம்!!!! சத்தியம் !!!!!

  //ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.//

  இப்போ புரிகிறதா இந்தியா ஏன் உருப்படலேன்னு!!
  எதிர்கட்சித்தலைவர் பெயர் ராமர்.
  அவரே ஆளுங்கட்சியானால், அவர் பெயர் ராவணன்

  பதிவிட்ட ஜவஹ்ருக்கு’
  நன்றி! நன்றி!! நன்றி !!
  (courtesy: அசத்தபோவது யாரு)

 2. லோக்பால் பில் குறித்த தெளிவான தகவலுக்கு மிக்க நன்றி!

  உங்கள் அனுமதி கோராமல் இந்தப் பதிவிலிருந்து சில பத்திகளை என் தளத்தில் வெளியிட்டுள்ளேன். மறுப்பு இருப்பின் தெரிவிக்கவும்.

 3. நேற்று தான் லோக்பால் குறித்து எனது பேஸ்புக்கில் பதிவிருந்தேன். இன்று நீங்கள் மிக தெளிவான விளக்கத்தை தங்கள் பாணியில் பதிந்து விட்டீர்கள். வாழ்க அண்ணாஹசாரே!

  வளர்க உங்கள் கருத்து பரிமாற்ற பணி!

 4. please correct me if I am wrong:
  கர்நாடகாவில் ராமகிருஷ்ண ஹெக்டே முதல் அமைச்சராக இருந்த போது லோக் ஆயுக்தா சட்டம் அவையில் நிறைவேறி புகார்களை விசாரித்து வருகிறது. அது தான் இப்போதைய முதல் அமிச்சஹ்ருக்கு தலைவலி கொடுத்து ஊழல்களை வெளிக் கொண்டு வருகிறது. அது போன்ற சட்டம் இந்தியா முழுவதற்கும் வேண்டும் என்று தான் ஹஜாரே போராட்டம் நடத்துகிறார்.

 5. //கிடைத்துவிட்டார் இரண்டாவது காந்தி//
  காந்தி?? ..ஓகே! ஓகே! நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். ..வேலு

 6. ஹசாரே எதையும் மறைக்கவில்லையென்றால் – அவர் செயலின் பின்னணியில் புதைந்த எலும்புகள் இல்லையென்றால் – இப்போதோ நாளையோ எதிர்பார்க்கும் ஆதாயங்கள் எதுவும் இல்லையென்றால்… பாராட்டப் பட வேண்டிய, ஆதரிக்க வேண்டிய செயல். (on second thought, அப்படி ஏதாவது இருந்தாலும் ஆதரிக்க வேண்டிய செயல் – முன்மாதிரி ஆகலாம்.)

  1. அப்பாதுரைஜி, கடைகளில் தரும் வாரண்ட்டி கார்ட் மாதிரி அது இல்லையென்றால், இது இல்லையென்றால்ன்னு எல்லா பாசிபிலிட்டியையும் எக்ஸாஸ்ட் பண்ணிட்டீங்க!

 7. உங்கள் கருத்துடன் நான் மாறுபடுகின்றேன் தோழர். ம‌க்க‌ள் போராட்ட‌ம் ந‌ட‌த்துவ‌துக்கும், ஒரு N.G.O போராட்ட‌ம் ந‌ட‌த்துற‌துக்கும் வித்தியாச‌ம் இருக்கு. ம‌க்க‌ள் போராட்ட‌ம் என்ப‌து அக‌ சூழ்நிலைக‌ளால் ம‌க்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌டுவ‌து.. ஒரு N.G.O ந‌ட‌த்தும் போராட்ட‌ம் என்ப‌து அங்கே இல்லாத‌ ஒரு ச…ூழ்நிலையை வ‌லிந்து திணித்து ஒரு போராட்ட‌த்தை ந‌ட‌த்துவ‌து. ம‌க்க‌ளும் இங்கே போராட்ட‌த்திற்கான‌ சூழ‌ல் இருக்கோ என‌ எண்ணி ஏமாறுவார்க‌ள். இறுதியில் உண்மையாக அங்கு எழ வேண்டிய எழுச்சியை மழுங்கடித்த கர்வத்தோடு N.G.O பெட்டியை க‌ட்டிக் கொண்டு அடுத்த‌ வேலையைப் பார்க்க‌ கிள‌ம்பிவிடும். இதையே தான் இந்திய‌ அர‌சு அன்னா மூலம் செய்ய‌ முய‌ல்கின்ற‌து. ஒரு சிறிய‌ கேள்வி….போபாலில் பாதிக்கப்பட்ட மக்கள் எப்பொழுதும் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் என்ற பகுதியில் தான் கூடி உண்ணாவிரத போராட்டங்களை நடத்துவார்கள். ஆனால் கடந்த ஆண்டின் இறுதி வாக்கிலிருந்து அவர்களுக்கு அங்கு அனுமதி கிடைப்பதில்லை. ஆனால் இவர் உண்ணாவிரதம் இருப்பது தில்லி கேட் அருகில் அனுமதி கொடுத்தது யார்? ஏன் கொடுக்க வேண்டும்?

  1. நல்ல கேள்வி, யோசிக்க வேண்டிய விஷயம். காங்கிரஸ் தன் மேல் இருக்கும் ஊழல் கறையைத் துடைத்துக் கொள்ள செய்த யுக்தியாகக் கூட இருக்கலாம்!

 8. http://myneta.info/tamilnadu2011/

  தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள்(தொகுதிவாரியாக) இந்த தளத்தில் சீரிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
  இதை முடிந்த அளவு பிரபலப்படுத்தவும்
  நன்றி

 9. அண்ணா ஹஸாரோ உயறிய மனிதர், ஒவ்வொரு மாநிலத்துக்கும்
  பத்து அண்ணா ஹஸாரோ தேவை இந்த வுயரிய மனிதர் பாடபுத்தகத்தில் இடம் பெரவேண்டியவேர் இவரின் ஆயுளை அல்லாஹ் நீட்டிப்பானாக ஆமீன்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s