குள்ளநரி கூட்டம் – லேட் விமர்சனம்

படத்தின் பெயர்க் காரணம் தெரிய வேண்டுமென்றால் பதினோறாவது ரீல் வரை காத்திருக்க வேண்டும். ஒன்பதெழுத்து செண்ட்டிமெண்ட்டில் வழக்கப்படி க் கன்னாவை சாப்பிட்டு விட்டார்கள்.

இடைவேளை வரும் போது, ‘அட, ஒரு படத்தை இடைவேளை வரை நகர்த்த இவ்வளவு கதை போதுமா!’ என்கிற ஆச்சரியம் வருகிறது. ஆனாலும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாகப் போகிறது. வெண்ணிலா கபடிக் குழு டீமிலிருந்து நிறையப் பேர் தென்படுகிறார்கள், கதாநாயகன், இசையமைப்பாளர் உள்பட.

கதாநாயகியிடம் அனுஷ்கா ஜாடை தெரிகிறது. ஆனாலும் நடிப்பை மட்டும்தான் முதலீடு செய்திருக்கிறார்.

பொதுவான தமிழ்ப்பட சம்பிரதாயங்களை வைத்து சில காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று ஆண்டிஸிபேட் செய்யும் போது ஆச்சரியம் காத்திருக்கிறது. உதாரணம் பெண் கேட்கப் போகும் காட்சி. பெண் பார்க்கும் கும்பலோடு கதாநாயகன் கலக்கும் போது ‘ஐயய்யோ…. மிஸ்டேகன் ஐடெண்டிட்டி கதையா’ என்கிற பயம் வருகிறது.

இன்னொரு உதாரணம் உண்மை தெரிந்ததும் அப்பாவின் ரியாக்‌ஷன். ரொம்ப இயற்கையான ஆண்ட்டி கிளைமாக்ஸ் அது.

தெருவில் படுத்திருக்கும் ஆசாமிகள் ‘இதுதான் நீங்க தேடற அட்ரஸ், அப்படி ஒரு இடுக்குல படுங்க’ என்று கதாநாயகனிடம் சொல்கிற போது அர்த்தம் புரியவில்லை. அடுத்த காட்சியில் புரிகிற போது நல்ல ஒருபக்கக் கதை படித்த திருப்தி.

ரொம்ப இயற்கையான சம்பவங்கள். ஆழம் என்கிற பெயரில் மெலோடிராமா எதுவும் இல்லாத சவுகர்யமான கதை.

விழிகளிலே பாட்டு நன்றாக இருக்கிறது. ரீதிகெளளை மாதிரி ஆரம்பித்து வேறே ரூட்டில் போகிற மாதிரி இருக்கிறது. குத்துப் பாட்டில் வருகிற நையாண்டி மேள பிட் ‘உச்சந்தல மேலிருக்கு.. உள்ளங்காலு கீழிருக்கு’ என்ற சிங்காரி சரக்கு பாட்டு வரிகளை நினைவு படுத்துகிறது. செல்வகணேஷிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்.

கவர்ச்சி இல்லாமல் நல்ல படம் தர முடியும் என்று ஏற்கனவே நிரூபிக்க ஆரம்பித்து விட்டார்கள், அழ வைக்காமலும் நல்ல படம் தர முடியும் என்றும் நிரூபித்திருக்கிறார்கள்.

Advertisements

6 comments

  1. இந்த மாதிரி பெயர் இருந்தாலே பக்கத்தில் போக மாட்டேன் ,நீங்க சொன்ன சரி. பார்க்கும் படி இருக்குதா ?

  2. //ஒன்பதெழுத்து செண்ட்டிமெண்ட்டில் வழக்கப்படி க் கன்னாவை சாப்பிட்டு விட்டார்கள். //

    நான் கொஞ்சம் மக்கு பையன். கொஞ்சம் இதை விளக்கி சொல்ல முடியுமா..!

    1. ஒண்ணும் பெரிய ராஜ ரகசியம் இல்லை, ஒன்பதெழுத்துல பேர் வெச்சா படம் வெற்றி அடையும்ன்னு ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கு, சில சமயம் அதை ஒற்றைப்படை எண்ணா மாத்திக்கக் கூட இது மாதிரி திருத்தங்கள் செய்வாங்க. நிறைய படத் தலைப்புகள்ளே க்.. ச்.. த் ஐ விழுங்கியிருப்பாங்க பாருங்க

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s