என்னா வில்லத்தனம்!

அன்னா ஹஸாரேக்கும் அவர் ஆதரவாளர்களுக்கும் அவப்பெயர் உண்டாக்கும் முயற்சிகள் நன்றாகவே நடந்து வருகின்றன. அதற்கு மல்லிகா சாராபாய் நல்ல ஒத்துழைப்பும் தந்திருக்கிறார்.

அவரைச் சொல்லிக் குற்றமில்லை. சிலரை எளிதில் உணர்ச்சிவசப்படுத்திவிட முடியும். மல்லிகா உணர்ச்சிவசப்படுகிற ஜாதி! மோடி பற்றிய ஹஸாரேயின் கருத்தை ‘இத நான் ஒத்துக்கிர மாட்டேன்’ என்கிற ரீதியில் விமரிசித்திருக்கிறார்.

நான் பாராட்டியது மோடி மற்றும் நிதின்குமாரின் நலத் திட்ட செயல்பாட்டைத்தான். கம்யூனலிசத்தை எந்த வடிவிலும் என்னால் ஏற்க முடியாது என்று விளக்கமும் அளித்திருக்கிறார் ஹஸாரே. அதெல்லாம் கிடையாது, அவர் மோடிக்கு கிளின் சிட் கொடுத்துவிட்டார் என்று அலறுகிறார்கள். சில இஸ்லாமிய நண்பர்கள் கூட அவர் ஏதோ மதவாதம் பேசிவிட்டது மாதிரி பேசவும் எழுதவும் ஆரம்பித்து விட்டார்கள். லோக்பால் எதிர்ப்பாளர்களுக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கும். பற்ற வைத்த நெருப்பு பற்றி எரிகிறதே!

இந்த முயற்சி எதிர்பார்த்த அளவு பலன் தரவில்லையோ என்னவோ, அடுத்து சாந்தி பூஷணை நோண்டியிருக்கிறார்கள். எங்கெங்கோ எவ்வெப்போதோ பேசியவைகளை வெட்டி ஒட்டி இந்த மாதிரி உரையாடல்களை உண்டாக்க முடியும். முலாயம் சிங் முழுதுமாக மறுத்திருக்கிறார். அமர் சிங் ஞாபகமில்லை என்கிறார் – கவனிக்கப்பட வேண்டியது!

மக்ஸாஸே விருது வாங்கியிருக்கும் ஹஸாரே ஆதரவாளர் கேஜ்ரிவால் ஒருவாரம் முன்பே சொல்லி விட்டார். சாந்தி பூஷனையும், ப்ரஷாந்த் பூஷனையும் கமிட்டியிலிருந்து ஒழிக்க ஆனதையும் செய்வார்கள் என்று, அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இல்லாமல் கமிட்டி இல்லை என்பதையும் தெளிவாக்கிவிட்டார்.

அன்னா ஹஸாரே நல்லவர்தான். அவரைக் கெட்டவராகக் காண்பிக்கிற சாமர்த்தியம் படைத்தவர்கள் அரசியலில் இருக்கிறார்கள் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது.

திரித்துக் கூறுதல், பொய்வழக்கு, வீடியோ, ஆடியோ, ஜாதியைத் தூண்டிவிடுதல், மதத்தை ஏற்றி விடுதல் என்று நிறைய யுக்திகள் இருக்கின்றன. சரியாகத் தெரியாவிட்டால் பயிற்சி கொடுக்க நம்ம ஊரில் அனுபவஸ்தர்கள் இருக்கிறார்கள். மொள்ளமாறித் தனத்துக்கு யூனிவர்ஸிட்டியே வைக்கிற தகுதி இருப்பவர்கள் இங்கே உண்டு.

அவர் ஆரம்பிக்க, மற்றவர்கள்தான் சேர்ந்து கொண்டார்களே ஒழிய, அவர்களை நம்பி போரட்டத்தை ஹஸாரே ஆரம்பிக்கவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். யாருடைய துணையும் இல்லாமலே அரசாங்கத்தை ஆட்டிவைக்கிற ஆதரவும், தகுதியும், துணிவும் அவருக்கு இருக்கின்றன.

அரசியல்வாதிகளை அவர் தூரவே வைத்திருப்பது நல்லது.

Advertisements

15 comments

 1. Lets brush aside sarabai and the cd allegation.

  And face the questions:

  What is the necessity of placing a father and son in a five member committee of civil members ?
  Because they are Hazare’s friends?
  Are they only figures noted for integrity ? Or, are they drafted as members for their legal acumen
  There are many many lawyers in India and many many legal luminaries in academia (teaching law or functioning as VC of Law University like the former VC of Madras Law College Madhava Menon) who could be drafted as members?

  In a nation of 80 crore, you get a a father and son in a committee of five members, to decide the fate of 80 million people?

  Why not Soli Sorabji? For e.g
  It is insult to the nation to give our fate in the hands of a single family, here Bhushan family. In politics Gandhi family, Karunanithi family, arent they?

  Hazare is following family dynasty?
  What are Swami Agnivesh and the yoga guru doing with him?

  Agnivesh is a known sympathiser of left communists and maoists?
  The yoga guru is a known cheat in selling medicines?

  So, Hazare can be easily fooled by anyone who comes to him and moves with him as friends!

  Lok Bal Bill is basically a legal matters. It needs to be drafted for which only suggestions can be given by Hazeare and his friends .

  Why should five of his friends represent 80 cr people?

  What is the role of Parliament? Why to by pass it? If you want to bypass the Parliament, why not dissolve it? Why democracy? Why elections? Why not change the form of goverment into oligarchy i.e government of old men like Hazare?

  If politicians are criminals and cant be trusted, why to elect them in elections?
  Elections r there only because the system of democracy demands/

  So, instead of playing the double game, it would be right we change of our form of governmenf from democracy to oligarchy or something you desire, where you can eliminate all politicians and put people like Hazare.

  That will make the nation great.

 2. //மொள்ளமாறித் தனத்துக்கு யூனிவர்ஸிட்டியே வைக்கிற தகுதி இருப்பவர்கள் இங்கே உண்டு.//

  சத்தியமான உண்மை!!

  நல்லவனா உள்ளே நுழைபவனை கெடுக்க இவுங்களுக்குச் சொல்லித்தரணுமா??????????

 3. இது எதிர்பார்த்ததுதான். அரசியல்வாதிகள் தங்கள் சொந்தசெலவில் சூனியம் வைத்துகுகொள்ளுமளவுக்கு முட்டாள்கள் அல்ல.நேரடியாக எதிர்த்தால அன்னா ஹஸாரேக்கு ஆதரவு பெருகும் என்று நன்றாகவே தெரியும் ஆகவே கூடவே இருந்து குழிபறிக்கும் வேலை செய்கிறார்கள். இந்த லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுவிடும். இதில் ஆண்ட ஆளும் ஆளப்போகும் கட்சிகள் எல்லாம் சேர்ந்துகொள்ளும்.

 4. இந்த லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுவிடும்

  But when it is done in Parliament, it will be telecast nationwide. No secrecy involved. Parliament has the right given by people of this country to either pass or defeat a Bill.

  If a bill is defeated, it is the defeat by the people. If a bill is passed, it is the success of the bill by the people.

  Parliament is people and people is parliament.

  If Anna Hazare represents the people, then, we can dissolve the Parliament and make Hazare our dictator, I mean, benign dictator, which further means that he will do all that people want.

  I find enormous distaste and distrust of Parliamentary democracy. If I am right, then, the proper way for Hazare, his five friends, and Jawahar and his blog supporters, not to go for just one bill, but ask for change of form of government.
  That is the real fight.
  Let people decide which form they want.

  Not Hazare and his chosen friends.
  Any counter comments from anyone?

 5. Today news: (from his interview given to Srinivasan Jain of NDTV)

  Will accept Parliament decision to reject Lokpal Bill: Hazare

  New Delhi, Apr 17: In an apparent softening of stand,
  Anna Hazare today said Parliament was supreme and would accept its decision if it rejects the Lokpal Bill.

  Hazare also showed some flexibility on the August 15 deadline
  he had set for passage of the Lokpal Bill by Parliament saying
  he was open to extending it if he found that the government
  was on the right path.

  “We will have to accept it. We believe in democracy,”
  Hazare said in reply to a question on what would be
  his stand if Parliament rejected the Lokpal Bill drafted jointly by the government and representatives of the civil society.
  So, he is for democracy.
  What is the stand of Jawahar ?

  I am waiting.

 6. அன்னா ஹசாரேக்கு தமிழ் தெரிந்து, அவர் தமிழ் ஊடகங்களில் அடிக்கடி தலையைக் காட்டி, அவருடைய நிலைப்பாட்டை விளக்கினால் அன்றி, நம் மக்கள் யாரும் அவரை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. தமிழகத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்குக் கிடைத்த மரியாதைதான் இவருக்கும்.

 7. // இந்த லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுவிடும். இதில் ஆண்ட ஆளும் ஆளப்போகும் கட்சிகள் எல்லாம் சேர்ந்துகொள்ளும்.
  //

  இதுதான் தெரிந்த உண்மையாயிறே. அதைத் தான் ஹசாரேவும் தெளிவாக “பாராளுமன்றத்தின் முடிவு அப்பயி இருக்குமாயின் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் “ என்று சொல்லி விட்டாரே!

  இந்தியாவில் புரையோடிப் போய் விட்ட இந்த ஊழல் சாம்ராஜ்யத்தை ஒழிப்பதற்கு சமாதான வழி எல்லாம் சரி வராது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. அது நடந்தால்தான் எதிர்கால சந்ததிகளாவது ஒழுங்காக, ஒற்றுமையாக வாழ முடியும். இல்லா விட்டால் இந்தியாவும் சோமாலியா ஆகிவிடும், ஒருநாள்.

 8. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. அது

  Correct. That surgery is in the form of government. Change it. We dont need democracy which help corrupt politicians to decide the fate of bills like the one Hazare is bringing.

 9. If you see them as father and son you are biassed. If you see them as two eminent lawers you are right

  Jawahr

  Bias is a personal feeling. To be biased against the father-son duo, I must either know them personally, or I must have been a lawyer who was pushed out by them, or some one known to me must have been pushed out by them.

  Nothing of that sort happened.
  In a country of 80 crores among whome there are so many corruption free eminent lawyers, why Hazare zeroed in on these two from the same family? not anwered by u.

  U say there are eminent lawyers. Remember the son is so much junior to many eminent lawyers. In legal acument and knowledge, many corruption free eminernt lawyers are available. I gave the e.g of Soli Sorabji.

  Therefore, nepotism played an important part in the selection. Hazare lacks the common sense to know the simple truth that whoever surrouns are not necessarily be gifted with posts.

  Take Kiran Bed. She served IPS for more than 3 days; and left it on the selfish grounds that she was denied the post of Delhi Police chief which went to another person of unimpeachable integrity. During her service, she never took any efforts to make the force corruption free. During her tenure as DCP, Delhi, the traffic searjeants continued to take bribes and the police force was full of corrupt constables.
  She has come to be counted as a friend of Hazare. So also, others surrounded him.

  I would say this finally: your prejudice against politicians, or the desire to tar them all with the same brush, is responsible for the support to Hazare. You have not gone beyond that.

  Today corrupt politicians entered politics as clean ones only. As time goes on, the power corrupted them.

  As someone said: Power corrupts; absolute power absolutedly. The Tamil movie director took a film Acamillai achamillai on this theme.

  If you look deeper into the Hazare and his challenge to democracy, which is called ‘Terrorism of Principles’, you will come to know that his movement will soon come to nothing. He is interested in catching big fish. Of course, he can; as Pawar episode shows. But politics will go on. New polticians will come up. The son of the late CM AP declared his assets to 500 cr which was 24 only a few years ago. He is young and new.

  The movement is veththu vettu.

  Your blog post is emotional. You are afraid to analyse.

  Answer my qn: if democracy is a fine cradle of corruption and corrupt politicians, why not Hazare ask for change of form of governemnt? Only Lokpal bill to catch a few politicians?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s