மூன்றாம் சுழியால் சென்னை சுத்தமாகும்!

சென்னை நகரில் தினமும் வீதிக்கு வீதி குப்பை மலையாகக் குவிக்கப்படுகிறது. கொஞ்ச நாளில் நாமெல்லாரும் குப்பை வெள்ளத்தில் மூழ்கி சுவாசிப்பதற்கு கஷ்டப்படலாம்! 25 மீட்டர் உயர பைப் ஒவ்வொரு வீட்டிலும் காற்றுக்காக சொருகப்படலாம்! இந்த அச்சுறுத்தலுக்கு நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம்?

 முகம் சுளிக்கிறோம். அரசாங்கத்தைத் திட்டுகிறோம். மக்களின் ஒழுங்கீனத்தை விமரிசிக்கிறோம். “நாம உருப்படப் போறதில்லை” என்று பெரிய சுப்ரீம் கோர்ட் மாதிரி தீர்ப்பு சொல்கிறோம்.

 இருபத்திரெண்டு வருஷங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழர் ரியாக்ட் செய்த விதம் வித்யாசமாக இருக்கிறது.

 மூன்றாம் சுழி வலைப்பதிவின் ஆசிரியர் திரு.அப்பாதுரை இந்தியா வந்திருக்கிறார். அவரோடு கழித்த மாலைப் பொழுது என் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெறுகிற அளவு சுவாரஸ்யமானது. (’அடக் கடவுளே, நீ வாழ்க்கை வரலாறு வேறே எழுதறதா இருக்கியா?’ என்கிற உங்கள் பயம் புரிகிறது)

 பொதுவாக நீண்டகாலம் அமெரிக்காவில் வசிக்கிறவர்கள் ”இட்ஸ் லாங் டைம் சின்ஸ் ஐ ஸ்போக் டாமில்” ரகம். சிலர் ஆங்கிலத்துக்கு இடையில் சிக்கிய ஓரிரு தமிழ்ச் சொற்கள் மட்டும் பேசுவார்கள் அல்லது தமிழையே ஆங்கிலம் மாதிரி வழவழப்பாகப் பேசுவார்கள்.

 அப்பாதுரை ஆங்கிலச் சொற்கள் கலக்காத தமிழ் பேசுகிறார். அதற்காக, குளம்பி அருந்தலாமா, எழுதுகோல் தருகிறீர்களா, கைப்பேசி அழைக்கிறது ரகம் என்று பயந்து கொள்ளாதீர்கள். எளிய தஞ்சை மாவட்டத் தமிழ்.

 ஆனால் அவர் ஆங்கிலம் பேச ஆரம்பித்தால் எல்லாம் போச்!

 மேனுஃபாக்சழிங், பேவழ் என்று ரொம்ப ரொம்ப அமெரிக்கா. தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசும் போது வாய்ஸ் அஃப் அமெரிக்காவின் செய்தி அறிக்கை மாதிரி இருக்கிறது. கூடவே ஒரு பரிமேலழகர் வந்தால்தான் புரியும்.

 இசை ஆர்வம் என்கிற பொதுப்படையான குணாதிசயம் எங்களுக்குள் இருப்பதால் அரட்டை நிற்பதாகவே தெரியவில்லை. அபார்ட்மெண்ட்டின் கேட்டை பூட்டிவிடுவார்கள் என்பதால் மட்டுமே ராத்திரி 11 மணிக்கு விளம்பர இடைவேளை விட்டிருக்கிறோம்.

 எங்கள் வீட்டு இட்லியைச் சாப்பிடும் போது அவர் கண்கள் பனித்தன. காரணம் மிளகாய்ப் பொடி.

 திரும்ப டிராப் செய்யப் போகும் போது, வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் பொறுப்பாக சீட் பெல்ட்டைப் போட்டுக் கொண்டார்.

 “இந்த குரோம்பேட்டை கசமுசாவில் செகண்ட் கியர் போட்டாலே ஜாஸ்தி, எதுக்கு சார் சீட் பெல்ட்டெல்லாம்?” என்றதற்கு

 “அது ரிஃப்லெக்ஸ்ல வந்துடுது” என்றார்.

 ம்க்குக்குக்குக்கும்ம்ம்…. அந்த குப்பை மேட்டருக்கு வருகிறேன்.

 திடக் குப்பைகளை எளிதாக டிஸ்போஸ் செய்ய ஒரு பிராஜக்ட் வைத்திருப்பதாகவும், அதை விரைவில் செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். அதில் லாபம் இருக்குமா என்று கேட்டேன்.

 “நிச்சயம் இருக்கும், ஆனால் பேபாக் கொஞ்சம் அதிகக் காலம் பிடிக்கும். அதனால் பரவாயில்லை, குப்பை முதலில் குறையட்டும்” என்றார்.

Advertisements

10 comments

 1. நல்ல பதிவு திரு ஜவஹர்.
  தற்போது குப்பை வண்டி வந்து அழகாக குப்பைகளை வாங்கி செல்கிறார்கள். இப்படி இருக்கும் நேரத்திலும் வண்டி வரும் நேரத்தை விட்டு விட்டு குப்பை பையை வாய்க்காலில் (open drainage) போடுபவர்களை என்ன செய்ய? எந்த முறை வந்தாலும் மக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் முக்கியம். நாம் அடுத்தவர்களை பற்றி கவலைப்படுவதேயில்லை.
  வாழ்த்துக்குள். தொடர்ந்து எழுதுங்கள்.

 2. மூன்றாம் சுழி பதிவரை நான் மிகவும் விசாரித்ததாகக் சொல்லவும். அவரால் குப்பைகளுக்கு மோட்சம்
  கிடைத்தால் மிக நிச்சயமாக இன்பம் தான்.

  அன்புடன்,

 3. அந்த நாளைய மணியன் பயணக்கட்டுரை போல இருக்கிறது.
  முதலில் படிக்கும்போது எதோ இருப்பதுபோல் தோன்றும்.ஊன்றி படித்தால் ஒன்றும் பெரிதாக இருக்காது.
  ஒரே வித்தியாசம் அவர், சான்பிரான்சிஸ்கோ சந்தானம் என்பவர் வீட்டில் சாம்பார் வடை சாப்பிட்டுக்கொண்டே சைதாப்பேட்டையை பற்றி பேசியிருப்பார்.இங்கு reverse
  😉

 4. அப்பாஜி,
  எப்போது சென்னை சென்றீர்கள்?
  விடுமுறையா?

  நசிகேத வெண்பாதான் ஆச்சரியம் என்றிருந்தேன்,குப்பை-மறு பயனாக்கம்-வேஸ்ட் ரீ சைக்கிளிங் வேறா?

  தொழில் முனையும் முயற்சியெனில் வாழ்த்துக்கள்..

 5. சற்றும் எதிர்பாராத plug ஜவஹர். மிகவும் நன்றி (கொஞ்சம் சங்கடமும் கலந்த). வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ‘சென்னையில் குப்பை ஒழியும்’ என்று ஏதோ சேவைத் தொனியில் எழுதியிருக்கிறீர்கள். இந்த claimக்கு எனக்குக் கொஞ்சம் கூட தகுதியோ அருகதையோ கிடையாது. நான் உங்களிடம் சொன்னது போல இது முற்றிலும் வணிக/லாப நோக்குடனான முயற்சி (திட்டம்?). தன் வீட்டுக் குப்பையை சுகாதாரமான முறையில் நீக்கும் பொறுப்பு அனேக மக்களுக்கு உண்டு என்று நம்புகிறேன். அதற்காக சில நூறு ரூபாய்களைச் செலவழிப்பார்கள் என்றும் நினைக்கிறேன். அந்த வாய்ப்பை லாபகரமாகப் பயன்படுத்திக்கொள்ள ஒரு திட்டம், அவ்வளவே.

  ஒரு வரியில் சொன்ன visionஐ வைத்து பதிவு போடும் உங்கள் திறனை வியக்கிறேன். மேலதிக விவரங்களைச் சொல்லாமல் போனது என்னுடைய தவறே (சட்டியிலேயே காணோம்).

  [உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அடுத்த முறை இன்னும் அவகாசமெடுத்துப் பேசுவோம். மிளகாய்ப்பொடி அட்டகாசம். ஸ்ஸ்.. யப்பாஆ..]

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s