கம்பனும் ஔவையும் சாதியும்

கம்பரும், ஔவையாரும் டாம் அண்ட் ஜெர்ரியாக இருந்தார்களோ என்று நினைக்க வைக்கிற செய்திகள் வரலாற்றில் உண்டு.

 கம்பருக்கு ஔவை மேல் என்ன காண்டு என்று தெரியவில்லை. ஒரு விடுகதை சொல்வது போல் ஔவையை அடியே புடியே என்று ஏக வசனத்தில் பேசித் திருப்திப் பட்டிருக்கிறார்.

 ’ஒரு காலடி நாலிலைப் பந்தலடி’ என்று ஒரு விடுகதை போட்டாராம். அடி என்று வருவது இடக்கர் என்கிறார்கள். இடக்கராவது வலக்கராவது என்று நினைக்க வேண்டாம். ஒரு பாடலுக்கு இலக்கணம் அனுமதித்த ஒரு அங்கம் என்று மட்டும் தெரிந்து கொண்டால் போதும். ஆனால், என்னைக் கேட்டால் வேறு மாதிரி பொருள் சொல்வேன்.

 ஒரு காலடி (அதாவது மூன்றங்குலம்), நாலிலைப் பந்தலடி (பந்தல் போல அமைந்த நான்கு இலைகளுக்கு அடியில்). இந்த விடுகதைக்கு விடை ஆரை (க்கீரை)

 அந்த விடையை ஔவையார் எப்படிச் சொல்கிறார் பாருங்கள். இரண்டே இரண்டு அடி சொன்னதற்கு இன்னாடா கஸ்மாலம், எரும, கய்தே, குட்டிசுவரே, குரங்கே என்றெல்லாம் சொல்கிறார். மிகையே இல்லை, செய்யுளைப் பாருங்கள் :

 எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாய் அது

 அடா என்பதும் அகப் பொருட்கிளவி என்று சொல்கிற ஒரு அனுமதிக்கப்பட்ட இலக்கணம்தான்.

 தமிழில் எண்கள் எழுதும் போது அ என்றால் 8. வ என்றால் கால். எட்டேகால் லட்சணம் என்றால் என்னவென்று தெரிகிறதா? பெரியம்மை வாகனம் என்றால் மூதேவியின் வாகனம், அதாவது கழுதை. மற்றவை உங்களுக்கே புரியும்.

 இரண்டு பேரும் இப்படி கோல் போட்டுக் கொண்டாலும் ஒரு விஷயத்தில் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.

 நூலெனிலோ கோல்சாயும் நும்தமரேல் வெஞ்சமராம்

கோலெனிலோ ஆங்கே குடிசாயும் – நாலாவான்

மந்திரியும் ஆவான், வழிக்குத் துணையாவான்

அந்த அரசே அரசு

 நூல் என்று ஔவை குறிப்பிட்டது பூநூலை. நும்தமர் (உன் உறவினர்கள்) என்றது ஷத்ரியர்களை. கோல் என்றது தராசு வைத்து நிறுக்கும் வைசியர்களை.

 ஏறக் குறைய இதே அர்த்தத்தில் கம்பர் பாடிய பாடல் :

 செட்டி மக்கள் வாசல் வழிச் செல்லோமே செக்காரப்

பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே-முட்டிபுகும்

பார்ப்பார் அகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும்

காப்பாரே வேளாளர் காண்

 மேற்சொன்ன கம்பர் பாட்டில் சிந்தனைக்குரிய இன்னும் சில விஷயங்கள் கூட இருக்கின்றன. அதை வேறொரு சமயம் பார்க்கலாம்.

10 comments

 1. ஒளவையும் கம்பரும் சென்ற மாதம் தமிழகத்தில் இருந்திருந்தால், கழங்கங்கள் இவர்களை வளைத்துப்போட்டு எதிரணியை இலக்கிய range-ல் வசைபாடியிருக்கும்!

  “நூலெனிலோ” பாடலையும், “செட்டி மக்கள்….” பாடலையும் யாராவது தமிழில் மொழிபெயர்த்து சொல்லுங்கள். 🙂

 2. //’ஒரு காலடி நாலிலைப் பந்தலடி’//

  இப்படிக் கேட்டவர் கம்பர் அல்ல ஒட்டக்கூத்தர் என எங்கேயோ படித்ததாக நினைவு..

 3. ஆம் ஒட்டக்கூத்தரைத்தானே ஔவையார் ஏசியதாக கதைகள் ஆனால் கம்பரோடு முடிச்சுப்போட்டது சற்றி வியப்பாக இருக்கின்றதே

 4. சார்,
  //வ என்றால் கால் //
  ஹி ஹி,…. வ என்றால் குவார்ட்டர் கட்டிங்.

  விளக்கங்கள் சூப்பர்.

  சரி, ஒட்டக்கூத்தருக்கும் கம்பருக்கும் ஏதோ ஆள் மாறாட்ட விளையாட்டு போல தெரியுது.
  நாகை-மாயவரம்-தேரழந்தூர், பூந்தோட்டம்-கூத்தனூர் எல்லாம் பக்கத்து பக்கத்துல வர்ரதுனாலையா?

  http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s