சாயிபாபா சர்ச்சைகள்

ஏப்ரல் முதல் தேதியன்றே சவப்பெட்டிக்கு ஆர்டர் செய்து விட்டார்களாம். சில தெலுங்கு சேனல்களில் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இருக்கும் கடையின் ரசீதைக் கூட காட்டினார்களாம். இன்றைய (28-04-2011) சென்னைப் பதிப்பு தினத் தந்தியில் 12ம் பக்கத்தில் செய்தி படித்தேன். நிஜமா என்பது எனக்குத் தெரியாது.

 பல விஷயங்களை செட்டில் செய்ய அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம்.

 சாயிபாபா மக்கள் ஞாபகத்தில் நிலைத்திருக்கப் போவது என்ன காரணத்தால், என்று நேற்று (27-04-2011) ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது.

 எனக்கு அவரது அபூர்வ சக்திகள் மீதும், ஆன்மீக அறிவின் மீதும் எள்ளளவும் நம்பிக்கை கிடையாது. நான் முட்டாளாக இருக்கலாம். விவேகானந்தருக்குப் பிறகு பிறந்த யாருக்குமே ஆன்மீகத்தில் தெளிவு இல்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம். ஆனால் அவர் அமைத்த கல்வி நிறுவனங்களும், மருத்துவ மனைகளும் நன்றாகவே இயங்கி வருகின்றன. அவை பற்றி தப்பான பேச்செதுவும் இல்லை. குடிநீருக்கு நன்கொடை கொடுத்ததும் பாராட்டப்பட வேண்டியதே.

 நல்ல காரியம் செய்ய விரும்புகிறவர்களிடமிருந்தெல்லாம் நன்கொடை பெற்று அதில் ஒரு பகுதியை நல்ல விஷயங்களுக்குச் செலவிட்டிருக்கிறார். ஒரு நல்ல கோ-ஆர்டினேட்டர். பாக்கிப் பணமும் தர்மத்துக்கே வந்தால் நல்லது.

 மற்றபடி அவரைக் கடவுள் என்று சொல்பவர்களைப் பார்த்து பரிதாபம்தான் படுவேன். அவர் கடவுள் என்றால், மாஜிக் நிபுணர்கள் எல்லாருமே கடவுள்கள்தான்!

Advertisements

44 comments

 1. அவரது மந்திர தந்திரங்கள் கூட வெகு சுமார் ரகம். யூடியூபில் கண்டு மிக்க அதிர்ச்சியுற்றேன். அந்த சரக்கை வைத்துக்கொண்டே “சித்து வேலைகள் செய்வார் ” என்ற பெயர் பெற்றுள்ளமை பாராட்டப்பட வேண்டியது! 🙂

  மற்றபடி, அடிப்படையில் தன்னாலான மிக நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். நம் நாட்டில், இவ்வளவு புகழ் பெற்ற சாமியார் பற்றி “நித்தி-ரஞ்சி” போன்ற சமாச்சாரங்கள் இல்லாததே பெரிய விஷயம்.

  ச, யாருமே அவரது தலை முடி பற்றி செய்தியோ காரணமோ வெளியிடவில்லையே!

  தாத்தா இரங்கல் தெரிவிக்கும் முதல் சாமியார் இவர்தானோ?

 2. நல்ல, நல்ல காரியங்கள் செய்திருக்கிரார். ஏதோ ஒரு ஆகர்ஷண
  சக்தி இருந்ததால்தான் பணபலம், மனபலம், உதவும் மனம்,
  எல்லாம் அமைந்தது. ஆன்மீகமும் உதவி புரிந்தது. நல்லார் ஒருவர் இருந்தார். மொத்தத்தில் வணங்கத்தக்கவர் என்பது
  என் அபிப்பிராயம்.

 3. புட்டபர்தி ஆஸ்ரமத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு பற்றி அமுக்கி விட்டார்களே!நாயகன் வசனம் மாதரி நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவானா பண்ணலாமா? அவர் பண்றது ஏமாத்துவேலைன்னு எல்லாருக்கும் தெரியும்.ஆனா என்ன .படித்தவ்ர்களும் தங்கள் உழைப்பால் முன்னுக்கு வந்தவ்ர்கள் கூட் அவருடைய ஆசி என்கிறாற்களே!!(சச்சின்,கவாஸ்கர்,ரஜினி இன்னபிற celebreties)
  ஆனா ராணுவ மரியாதையெல்லாம் கொஞ்சம் ஓவர்!

 4. //அவரைக் கடவுள் என்று சொல்பவர்களைப் பார்த்து பரிதாபம்தான் படுவேன். அவர் கடவுள் என்றால், மாஜிக் நிபுணர்கள் எல்லாருமே கடவுள்கள்தான்!//

  முற்றிலும் உண்மை, அவர் நல்லது செய்தார் செய்தார் என்கின்ற சிலருக்கு அவர் ஓரினச் சேர்க்கையாக பல மாணவர்களை பலவந்தம் செய்ததும், அதனை எதிர்த்த சில மாணவர்களை தமது படுக்கை அறையில் வைத்து கொன்றுவிட்டு, பின்னர் போலீஸ் எண்கவுண்டரில் நக்சல்கள் தாக்குதல் அதனால் அம்மாணவர்கள் கொல்லப்பட்டதாக சொன்னதும் தெரியாது போல !!!

 5. உங்களுக்கு நன்மைகள் பல செய்கிறேன் என்று
  பொய்பேசி,
  கபட நாடகங்கள் ஆடி,
  அப்பாவி மக்களை ஏமாற்றி,
  அவர்கள் ஓட்டைப்பெற்று ,
  ஆட்சி அமைத்துப் பிறகு
  கொலை கொள்ளை போன்ற கயமைகளைப்புரிந்து,
  பொதுசொத்தை தங்கள் குடும்பத்தினருக்கு தாரைவார்த்து, மக்கள் மத்தியில் வெட்கம் மானம் இன்றி உலவிடும்
  அரசியல் வாதிகளை தட்டிக்கேட்க துப்பில்லாத
  “அறிவுஜீவி” பதிவர்கள் சிலர்,
  ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய கடமைகளை,
  தங்களால் இயன்ற அளவு எளிய மக்களுக்கு செய்து,
  அவர்கள் கல்வி, ஆரோக்கியத்திற்கு, வேண்டிய உதவி செய்து,அவர்கள் மனம் பேதலிக்காமல் அதை ஆன்மீகத்தில் ஒருநிலை படுத்தி சேவை செய்யும்,
  சாய்பாபா,பங்காரு அடிகளார் போன்ற ஆசான்களை,
  அனாவசியமாக விமரிசித்து, அவர்களில் சிறு குறைகளை பெரிதாக்கி திருப்தி அடைவது என்ன சாமர்த்தியமோ/வீரமோ?
  (அதுவும் ஹிந்து மத ஆசான்களிடம்தான் வாலாட்ட முடியும்.)

  ம்ம்ம்…. எல்லாம் Google/Wordpress நிறுவனத்தால் வந்த வினை!

  அவர்கள் மட்டும் blog சேவையை இலவசமாக கொடுக்காமல் ஒரு சிறு கட்டணம் வசூலித்தால்(say ஒரு பதிவுக்கு ரூ.100 ,ஒரு பின்னூட்டத்திற்கு ரூ.10,…)!!!!

  கறை நல்லது!
  இலவசம் கெடுதல்!!!

  திரு.ஜெயகாந்தனின் காவிய சிறுகதையான
  “குரு பீடம்”படிக்குமாறு,அனைத்து “அறிவுஜீவி” பதிவர்களுக்கும் திண்ணமாக பரிந்துரைக்கிறேன்

  1. அந்தக் கதையை நானே பலருக்கு ரெகமண்ட் பண்ணியிருக்கேன், நம்ம பிளாக்ல கூட எழுதியிருக்கேன், என்னுடைய ஜென் புத்தகத்திலும் எழுதியிருக்கேன். ஒரு எச்சில் பொறுக்கியை குருவாக ஒருவன் ஏற்றுக் கொள்ளும் கதை அது…..

  2. //ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய கடமைகளை,
   தங்களால் இயன்ற அளவு எளிய மக்களுக்கு செய்து,
   அவர்கள் கல்வி, ஆரோக்கியத்திற்கு, வேண்டிய உதவி செய்து,அவர்கள் மனம் பேதலிக்காமல் அதை ஆன்மீகத்தில் ஒருநிலை படுத்தி சேவை செய்யும்//

   அவர் ஆன்மீகவாதி. புட்டபர்த்தியின் பஞ்சாயத்து தலைவர் அல்ல.

   பாபா தன்னை நாடி வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம், ‘ஏம்ப்பா…. நீங்க செய்ய வேண்டியதையெல்லாம் நான் செய்ய வேண்டியிருக்கே. இதெல்லாம் ஆன்மிகவாதி செய்ய வேண்டிய வேலையா? இதெல்லாம் அரசின்/உங்களின் கடமை’ அப்படின்னு அறிவுருத்த வேண்டியது தானே?

   பண்ண மாட்டார். ஏன்னா அவர்கள் அள்ளிக் கொட்டும் டப்பு வராது.

   ராஜகுரு ராஜவாகனும்னா ராஜாக்கள் எதற்கு?

   1. அப்பாடா…. பேரைப் போட்டுக்கல்லைன்னாலும் அறிவுப்பூர்வமா தின்க் பண்ணியிருக்காரு. இதான் இந்த நாட்டின் அவலம். தப்பு பண்றவன் வெக்கப்படறதே இல்லை. சரியானதைப் பேசவும் செய்யவும் ரொம்ப வெக்கப்படறாங்க!!

 6. //விவேகானந்தருக்குப் பிறகு பிறந்த யாருக்குமே ஆன்மீகத்தில் தெளிவு இல்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம்//

  என்ன சார் இது, இப்படிச் சொல்லிட்டீங்க… பாபாவை விட்டுத் தள்ளுங்க. அந்த ஆள் ஒரு மாஜிக் ஆசாமின்னே வச்சுப்ப்போம். ஆனா மத்தவங்க எல்லாம் ஆன்மீகத் தெளிவு இல்லாதவங்களா?

  குறிப்பா, விவேகானந்தருக்குப் பின் வாழ்ந்து மறைந்த ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை, பகவான் ரமணர் இவங்கெல்லாம் ஆன்மீகத் தெளிவு இல்லாதவங்களா? அதுவும் ஸ்ரீ அன்னையையும் ரமணரை ஆன்மீகத் தெளிவு இல்லாதவங்கன்னு நீங்க தாழ்மையா அபிப்பிராயப் பட்டீங்கன்னா உங்கள் ஆன்மீகத் தெளிவப் பத்தித் தான் நான் சந்தேகப்பட வேண்டியிருக்கு.

  ஐயா, ஒரு உண்மையான துறவி எப்படி இருக்க வேண்டும் என்று கண் முன்னால் வாழ்ந்து காட்டியவர் ஐயா ரமணர். அவர் அற்புதங்கள் எல்லாம் செய்யவில்லை. ஆனால் தன்னை நாடி வந்தவர்களின் மனதில் அந்த அற்புதங்களை நிகழ்த்தினார். இல்லாவிட்டால் யூதர்களும், கிறித்துவர்களும், இன்னபிறரும் அந்தக் காலத்தில் அவரை நாடி வந்திருப்பார்களா?

  அவர்களால் புரிந்து பெற முடிந்த ஆன்மீகத் தெளிவை நம்மால் பெற முடியவில்லையா? இல்லை, ’அறிவு’ என நாம் நினைக்கும் நம் ’அகங்காரம்’ நம் கண்களை மறைக்கிறதா?

  நீங்கள் பாபாவைப் புறந்தள்ளினாலும் கூட நான் ஏற்றுக் கொள்வேன், அதில் உண்மையிருக்கிறது என்று.

  ஆனால் விவேகானந்தருக்குப் பிறகு யாருமே ஆன்மீகத் தெளிவு இல்லாதவர்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதை ஏற்க முடியவில்லை.

  சக்தி அம்சங்களில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பது உண்டு. விவேகானந்தர் கிரியா சக்தி. ரமணர் ஞான சக்தி.

  விவேகானந்தரை தான் தான் ஒரு மாதிரி மாயையில் கட்டி வைத்திருக்கும் படி காளி அன்னையிடம் வேண்டிக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இல்லாவிட்டால் ’எல்லாம் மாயை’ ஷணத்தில் அவர் சமாதி அடைந்து விடுவாராம்.

  கடைசியில் அதுதான் நிகழ்ந்தது. 39ம் வயதில் விவேகானந்தர் தன் உடலை உதவினார்.

  பாரத நாட்டிற்கு நூறு விவேகானந்தர்கள் தேவை. அதே சமயம் ரமணர்களும் வேண்டும்.

  நன்றி

  1. ரமணன் சார், நான் ஆன்மீகத்தைக் கொஞ்சம் அறிவுப்பூர்வமா அணுகுகிறவன். ஏறக்குறைய என் கேள்வி எல்லாத்துக்கும் ராஜயோகாலதான் பதில் கிடைச்சது. நான் சொல்றதை உணர முடியல்லைன்னா நம்பாதேன்னு சொன்ன முதலும் கடைசியுமான குரு விவேகானந்தர்தான்.

 7. இந்தப் பின்னூட்டம் மூலம் நான் ’பாபாவை’ மட்டமாக விமர்சிக்கிறேன் என்று பொருள் கொள்ள வேண்டாம். உங்களைப் போன்றவர்களுக்காக ’அந்த ஆள்’, ‘மேஜிக் ஆசாமி’ ’புறந்தள்ளுதல்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். பாபாமீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உண்டு. நீங்கள் எல்லாம் அவரது யூ ட்யூப் வீடியோக்களைப் பார்த்து மட்டுமே அவரைப் பற்றி எடை போடுகிறீர்கள். அந்த யூ ட்யூப் எல்லாம் வருவதற்கு முன்னாலிருந்தே அவர் எத்தனையோ அற்புதங்களைச் செய்திருக்கிறார்.

  அவை எல்லாமே மேஜிக்கா. அப்புறம் படித்தவன் எல்லாம் முட்டாள் என்றா நினைக்கிறீர்கள்? அதுவும் மெத்தப் படித்த வெளிநாட்டுக் காரன் இந்த மோதிரம், விபூதி வழங்குவதால் தான் ஏமாற்றப்பட்டு கவரப்பட்டான் என நினைத்தால் அது மிகவும் தவறு. உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களே அப்படி நினைக்கும் போது யார் என்ன சொல்வது?

  வீணை காயத்ரியின் அனுபவம் உங்களுக்குத் தெரியுமா? இன்னும் பல வெளிநாட்டுக்காரர்களது அனுபவத்தை நீங்கள் படித்திருக்கிற்றீர்களா? அவர்கள் எல்லாம் ஏமாளிகளா? அல்லது பொய் சொல்கிறார்களா?

  உண்மை வெறும் அற்புதங்களில் இல்லை. அதற்கு அப்பால் இருக்கிறது. அதை எல்லோராலும் உணர முடியாது.

  1. இருக்கலாம் ரமணன் ஜி, எனக்கு வித்தை காட்டுகிற ஆன்மிகம் பிடிக்காது. அப்புறம் ஒரு விஷயம், முட்டாள்ள வெளிநாடு உள்நாடுங்கிற பிரிவெல்லாம் கிடையாது. முட்டாள்கள் எங்கும் விரவியிருக்காங்க. வெள்ளைக்காரன் நம்பரான்ங்கிறதினால எதையும் நம்பத் தேவையில்லை. அவங்களுக்கு ஆயிரம்(!) காரணங்கள் இருக்கலாம்! தான் முட்டாள்ன்னே தெரியாத முட்டாள்கள் நிறைய இருக்காங்க (என் மாதிரின்னு வெச்சிக்கங்களேன்)

 8. எப்ப ஒரு சுவாமிஜி கூட்டம் சேர்த்து ஆஷ்ரம் கட்டி கணக்கு வழக்கு நிர்வாகம் பன்றாரோ அப்போவே அவர் சம்சாரி ஆகி விடுகிறார். துறவி உஞ்சவ்ரிதி செஞ்சு தானே சாப்பிடனும்?அப்படி செய்யற ஒரே ஒரு ஆளை சொல்லுங்களேன் பார்போம். சொத்து குவிப்பதில் அரசியல்வாதி கூட இந்த துறவிகளோடு போட்டிஇட முடியாது .
  பணத்தை சேர்த்து,காலேஜ் , மருத்துவ மனைகள் கட்டி, பக்தர்களை கைலாஷ் அழைச்சுட்டு போறது, டிவி ல பிரசங்கம் பண்றது, யோகா சொல்லித்தரேன் என்று அநியாயத்துக்கு பீஸ் வாங்குவது, பிரபல சினிமா நடிகன் கேள்வி கேக்க பதில் சொல்வது ,உள்நாட்டில் இருக்கும் போது ஜீன்ஸ் போட்டுகொண்டு அலம்புவதும்,வெளிநாட்டில் சாமியார் வேஷம் போட்டு கொள்வதும், பக்தர்களை தன கால் கழுவிவிட சொல்வது, நடுநடுவில் ரூம்ல எங்காவது கேமரா இருக்குதான்னு செக் பண்றதும் ,இதெல்லாம் ஒரு பொழப்பா? இதை நம்பும் படித்த முட்டாள்களை என்ன செய்ய?

 9. Good post Jawahar!

  I am more allergic to the followers of the Godmen than the Godmen themselves.

  சாமியார்கள், குருஜிக்கள் நடத்தும் யோகப் பயிற்சி போன்றவைகளினால் உடல் நலம் முன்னேறினாலும், தியானப் பயிற்சி போன்றவைகளினால் மன அமைதி கிட்டினாலும், ‘அரிது , அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்று புகழப்பட்ட மானிட மூளையக் கழட்டிவிட்டு, நரஸ்துதி செய்யச் சொல்வதால் போலிச் சாமியாரும் வேண்டாம். நல்ல சாமியாரும் வேண்டாம்.

  http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_14.html

  – Simulation

  1. சுந்தர் சார், நாந்தான் சாமின்னு வேறெந்த சாமியாரும் சொல்லிகிட்டதில்லை… சிலபேரை மக்களாப் பாத்து சாமியா நினைக்கிறாங்க. எனக்குத் தெரிஞ்சி சத்குருங்கிற பட்டம் தியாகராஜருக்கு மட்டும்தான் இருக்கு. அதைத் தன் பேருக்கு முன்னால சந்தோஷமா போட்டுக்கிற கேரக்டர் ஒண்ணு இருக்கு…..

 10. //பாபா தன்னை நாடி வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம், ‘ஏம்ப்பா…. நீங்க செய்ய வேண்டியதையெல்லாம் நான் செய்ய வேண்டியிருக்கே. இதெல்லாம் ஆன்மிகவாதி செய்ய வேண்டிய வேலையா? இதெல்லாம் அரசின்/உங்களின் கடமை’ அப்படின்னு அறிவுருத்த வேண்டியது தானே?//

  பாபா அதைச் சொல்லவில்லை/செய்யவில்லை என்கிறீர்களா? நன்கு உங்களுக்குத் தெரியுமா? சம்பந்தப்பட்ட தமிழக அரசியல் தலைவரும். டெல்லி அரசியல் தலைவரும் மன சாட்சி உறுத்தி, உண்மையைச் சொன்னால் தானே பாபா என்ன சொன்னார், என்ன அறிவுரை கூறினார் என்பது வெளியே தெரியும்? அல்லது அப்போது உடன் இருந்தவர்கள் சொல்ல வேண்டும். இதெல்லாம் வெளியே சொல்லக் கூடினால் பிரச்னைகள் வரலாம் என்று அவர்கள் அமைதியாக இருந்தது உங்களுக்குத் தெரியாது. உட்கார்ந்த இடத்திலிருந்து புத்தகம் எழுதுவது போல அல்ல இது. ஒருமுறையாவது அங்கே சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தால் தானே உண்மை புரியும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களுக்கு – நல்லா திங்க் பண்றாருன்னு பட்டம் வேற.. பேஷ் பேஷ்.. ரொம்ப்ப்ப்ப நன்னார்க்க்கு…

 11. // நான் சொல்றதை உணர முடியல்லைன்னா நம்பாதேன்னு சொன்ன முதலும் கடைசியுமான குரு விவேகானந்தர்தான்.//

  குரு சொல்வதை சரியாக உணர முடியவில்லை என்றால் அது குருவின் தவறா? சீடனின் தவறா? நீங்கள் விவேகானந்தரைப் படித்திருந்தாலும் அவரது அவதார நோக்கத்தை, இறை எதற்காக அவரை பூமிக்கு அனுப்பியது, ஏன் திடீரென 39 வயதிலேயே அவர் உடலை உதறியது என்பதையெல்லாம் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

  பரவாயில்லை. அதனால் என்ன? “ராஜ யோகத்தை” முழுமையாகப் படித்திருக்கிறீர்களே, அதுவே போதும்.

 12. // சொத்து குவிப்பதில் அரசியல்வாதி கூட இந்த துறவிகளோடு போட்டிஇட முடியாது ………………பக்தர்களை தன கால் கழுவிவிட சொல்வது, நடுநடுவில் ரூம்ல எங்காவது கேமரா இருக்குதான்னு செக் பண்றதும் ,இதெல்லாம் ஒரு பொழப்பா? இதை நம்பும் படித்த முட்டாள்களை என்ன செய்ய?

  முழுக்க முழுக்க ஆமோதிக்கிறேன். போலிகளுக்கு அசல்களுக்கும் வித்தியாசம் தெரியாவிட்டால், உண்மையான ஆன்மீகம் எது என்று புரியாவிட்டால் இப்படித்தான்.

  இந்துமதத்தைப் பிடித்த சாபக் கேடு இதுஇதான். வருந்திப் பயனில்லை.

 13. //எனக்குத் தெரிஞ்சி சத்குருங்கிற பட்டம் தியாகராஜருக்கு மட்டும்தான் இருக்கு. //

  சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் அவ்வாறு அழைக்கப்பட்டவர்தான். உங்களுக்குப் பிடிக்காத அற்புதங்கள் பல செய்தவர்தான். அற்புதங்கள் அலர்ஜி என்கிறீர்கள். ஆனால் அற்புதங்களை முயற்சி செய்தால், இன்னும் ஆராய்ச்சி செய்தால் – விஞ்ஞானத்தின் படி நீருபிக்க இயலும். ஆனால் அதற்குப் பலப் பல ஆண்டுகள் பிடிக்கும்.

  சிம்பிளாகச் சொன்னால் அணுக்களால் ஆன ஒரு பொருளை (அது எதுவாக இருந்தாலும்) பிரித்து வேறொரிடத்தில் ஒன்றுக் கூட்டிச் சேர்க்கும்போது அந்தப் பொருளைத் தோன்ற வைக்க முடியும். அதற்கு அந்த அணுவைப் பிரித்துச் சேர்க்கும் ஆற்றல் இருக்க வேண்டும். நம் சித்தர்கள் இவற்றில் வல்லவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் உடலையே பலவாறாகப் பிரித்துச் சேர்த்தவர்கள். இதற்கு நவ கண்ட யோகம் என்று பெயர். வள்ளலார் இதில் தேர்ந்தவர்.

  நமக்குத் தெரியாத விஷயங்கள் எத்தனையோ இருக்கு சார். ’அறிவு’ என்பது நாம் அதுவரை அறிந்ததை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு அப்பாற்பட்டு எவ்வளவோ இருக்கிறது. அதை அறிய முயல்வது சிலருக்கு வீண் முயற்சி. சிலருக்கு ஆராய்ச்சி. சிலருக்கு ஒரு தேடல். அவ்வளவுதான். எல்லாமே இறுதியில் இறைவனின் பாதத்தில் தான் முடிவடைகிறது. அவனின்றி ஓரணுவும் அசையுமா?

 14. //நான் சொல்றதை உணர முடியல்லைன்னா நம்பாதேன்னு சொன்ன முதலும் கடைசியுமான குரு விவேகானந்தர்தான்.//

  இல்லை. இன்னொருத்தரும் இருக்கார். நான் சொல்ல மறந்துட்டேன். ”நான் சொல்றதை நீ நம்பணும்னு அவசியமில்லை. பின்பற்றனும்னு கட்டாயமுமில்லை. உனக்கு நீயே ஆராய்ந்து பார்த்து முடிவெடு” – இப்படிச் சொன்னவர் ஜே.கே.

  1. ஜே.கே ஒரு மத குருவோ சாமியாரோ இல்லை. நான் அவருடைய புத்தகங்கள் பலதைப் படிச்சிருக்கேன், படிச்சிகிட்டு இருக்கேன். ஆன் ரிலேஷன்ஷிப்ஸ் இப்ப படிச்சிகிட்டு இருக்கேன்

 15. மிக நல்லது. ஜே.கேவைப் படிப்பதே ஒரு பெரிய தவம் போலத் தான். அதுவும் ரமணரின் உள்ளது நாற்பது, குருவாசகக் கோவை, கோஸ்பெல்ஸ் ஆஃப் ராமகிருஷ்ணா, சுவாமிஜியின் கர்மயோகம், அன்னையின் தத்துவங்கள் எல்லாம் படித்து விட்டு, இதைப் படித்தால் விளங்காததெல்லாம் விளங்கும்.

  படித்து விட்டு அப்படியே போய் விடாமல் அது பற்றி ஒரு பதிவு அவசியம் போடவும். என்னை மாதிரி அரைகுறைகளுக்குப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் உதவியாக இருக்கும் 🙂

  //ஜே.கே ஒரு மத குருவோ சாமியாரோ இல்லை.//

  அப்படியானால் நீங்கள் விவேகானந்தரை வெறும் மதகுருவாகவோ அல்லது சாமியாராகவோ தான் கருதுகிறீர்களா?

  பேசாம உங்க பின்னூட்டத்திற்கு வரும் கேள்வி-பதில்களை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாப் போட்டுரலாமா? (யார் வாங்குவாங்கன்னு கேக்குறீங்களா? அது சரிதான்)

  1. பண்ணத்தான் போறேன் ரமணன், ஐநூறாவது பதிவுக்குப் பிறகு, சிந்தனையைத் தூண்டின பின்னூட்டங்கள், என்னை சுதந்திரமா விமரிசிச்ச பின்னூட்டங்கள் எல்லாத்தையும் தொகுத்துப் போட ஆசை. நம்ம பிளாக்கில் சுவாரஸ்யமான விஷயமே எதிர்க்கிறவங்க எல்லாம் புத்திசாலியாக இருப்பதுதான்! என் வெற்றியும் இதுதான். புத்திசாலிகளை எதிர்க்கவும் வெச்சி, அவர்களை நண்பர்களாகவும் வெச்சிருக்கிறது என் சாதனைன்னு நினைக்கிறேன்….. சரியா?

 16. விவேகானந்தர் வெறும் மதகுருவாகவோ அல்லது சாமியாராகவோ மட்டும் இல்லை. அவர் ஒரு சமூக சேவகரும் கூட. பாபா எப்படி என்று தெரியவில்லை. ஆனால் ஆன்மீகம் மட்டுமின்றி வேறு எதுவாக இருந்தாலும் சரி, சமூகத்திற்கு உபயோகமாக இருந்தால் மட்டுமே நாம் எல்லோரும் இப்படி விவாதிப்பதற்குக் கூட தகுதியுள்ளதாக இருக்கும். இல்லையேல் இதெல்லாம் வெறும் ஒரு வேளை உணவுக்கு மீன் தேடும் மீன் மார்க்கெட் ஆகிவிடும்.

  @ramanan
  //பாரத நாட்டிற்கு நூறு விவேகானந்தர்கள் தேவை. அதே சமயம் ரமணர்களும் வேண்டும்.//
  மிக மிகச் சரி. ஆனால் இது ஒரு அவலாசையாகவே தெரிகிறது.
  (சிவனே எதிரே வந்து நின்னாலும் யார் சுவாமி நம்புவது. சாமியார்களை சுற்றி இருக்கும் கூட்டத்தைப் பற்றி பேசாதீர்கள்)

 17. It is not that great men [men is generic here and includes many a worthy women] are born at far intervals as many of us seem to think. Every child born among us has the potential to be that. It is circumstances during their lifetime that makes them assume charge or to be identified with greatness. People like JK never wanted to be in the limelight or declare themselves as the guiding light that could provide easy transportation to God’s proximity. Anna Hazare and his ilk had been there around but their importance looms up because of the circumstances. Sathya Sai was not born into a great family, had no mentionable education but either assumed prominence by his own driving force or others who wanted an idol to show. He could not have been a know all and practice all as some people would want us to believe but it is not good manners to speak of the perceived or real defects of the departed and now defenceless soul. If there was a person who was born, cultivated or used as one who could help you achieve some thing in life there was such a person in him. If some parasites attached to him, it was not his mistake.

 18. சும்மா இருக்கலாம்னு நெனச்சாலும் அதீத உளறல்கள பார்க்கும் போது கை துரு துருங்கிறது!
  இந்த வருடம் தமிழ்நாட்டில் செம்ம மழைதான்
  (எத்தனை நல்லார் உளறறாங்க!!)

  முதல் உளறல்: ஆதி சங்கரர் முதல் ராஜசேகரன்,தேவநாதன் மற்றும் ஆறுமாதம் hair cutting saloon னுக்கு போகாத அனைவரையும் “சாமியார்” என்ற genre இல் அடைப்பது;தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவது
  தினமும் மனைவியின் கள்ளக்காதலன் கொலை என்று செய்திவந்துகொண்டுதான் இருக்கிறது.இதை படித்து,எல்லா மனைவிகளும் இப்படித்தான் என்று ஒருவர் தன மனைவியிடம் சொன்னால் என்ன ஆகும்?

  உளறல்2: அவர் கடவுள் என்றால், மாஜிக் நிபுணர்கள் எல்லாருமே கடவுள்கள்தான்!ஒரு மாஜிக் நிபுணரும் வீபூதி கொடுப்பார்.:
  ஒரு பாபா பக்தையிடம், ஒருவர் இதையே சொல்லி, தன் திறமையால் வீபூதியும் வரவழித்து காண்பித்த போது அவள் சொன்னாளாம்: “உண்மைதான் ; ஒப்புக்கொள்கிறேன்!ஆனால் பாபாவின் வீபூதி சொஸ்தமாக்குகிறதே!”என்று (But His veepoothi CURES)

  உளறல்3://துறவி உஞ்சவ்ரிதி செஞ்சு தானே சாப்பிடனும்?//
  ஆமா அப்போ நம்பளும் விவசாயம் பண்ணித்தான் சாப்பிடனும்.
  நம்ப கம்ப்யூட்டருக்கு வந்தோம்! அவங்க கார்ல போறாங்க.
  முடிவாக
  உங்கள் அரைகுறை அறிவுகொண்டு உலகில் எல்லாவற்றையும் அணுகாதீர்கள்.பிறர அனுபவங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.வேடதாரிக்கும் அசலுக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ளுங்கள்.last but not the least..
  use appreciation and praise and not hurt or hit, to raise the count of hits!
  Thanks

 19. Why all these saamiyaars are Hindus ?

  In Islam, if any one calls himself a god man, or avtar, he will be immediately killed.

  A person can do social service in any religion. But he cant call himself an avatar.

  Sai Baba called himself an avatar; so he is a cheat.

 20. //புத்திசாலிகளை எதிர்க்கவும் வெச்சி, அவர்களை நண்பர்களாகவும் வெச்சிருக்கிறது என் சாதனைன்னு நினைக்கிறேன்….. சரியா?//

  கண்டிப்பா சாதனைதான். அதுல ஒண்ணும் சந்தேகம் இல்லை. பட் லிஸ்ட்ல என் பேரும் இருக்குமாங்கறது எனக்கு இருக்குற ஒரே வருத்தம் 😦

 21. கண்பட் அய்யா, உங்களை மாதிரி பரிபூர்ண ஆசாமிகள் இருப்பதால் தான் சாமிகளின் பிழைப்பு தடையில்லாமல் நடக்கிறது.எதையுமே துறக்காமல் துறவி என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்பவரை என்ன செய்ய? நம்ம கம்ப்யூட்டர்-ருக்கு வந்துட்டா,அவிங்க கார்ல போவாங்களா? அப்பரம் நம்மள மாதிரியே குடும்பம்,குட்டி(!), சொத்து சேர்ப்பது,நம்மள விட ஆடம்பரமாக வாழ்றது , விளம்பரம் தேடுவது என்று ஆகி விடுகிறார்கள். அப்புறம் மகானுக்கும் நமக்கும் என்னையா வித்யாசம்?

 22. //எதையுமே துறக்காமல் துறவி என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்பவரை என்ன செய்ய?//

  எல்லாவற்றையும் துறப்பது துறவல்ல. ஒருவன் தான் என்ற அகந்தையை முழுமையாகத் துறப்பது தான் துறவு.

  – பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

  what do you mean by Sanyasa? Do you think it means leaving your home or wearing robes of a certain colour? Whereever you go, even if you fly up into the air, will your mind not go with you? Or can you leave it behind and go with out it?

  – Bahavan Sri Ramana Maharshi

  ’சந்யாசம்’ என்பதன் உண்மையான பொருளைப் புரிந்து கொள்ள முடியாதவர்களால் ‘ஆன்மீகத்தை’ப் பற்றி எப்படி சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

  எல்லாவற்றையும் துறந்து காஷாய உடையை அணிவதோ, காட்டுக்குள் ஒளிவதோ அல்ல சந்யாசம். தான், தனது என்ற பேத உணர்வுகளை நீக்கி, அகந்தையை ஒழித்து, பிறரிலும் தன்னையே காண்பவனே உண்மையான சந்யாசி.

  இந்தக் கால டகால்ஜி, புகால்ஜி சாமியார்களோடு மூத்த மகான்களை தயவு செய்து ஒப்பிடாதீர்கள் சுவாமின்.

 23. சுவாமிஜி,
  பல லட்சகணக்கான மக்களால் இறையம்சம் உள்ளவர் என்று உணரப்பட்ட ஒரு மகானை அவர் மறைந்த அன்றே விமர்சனம் செய்தது அனாவசியம்/அநாகரீகம் என்று தோன்றியதால் சில பதில்கள் கொடுக்கவேண்டியிருந்தது.
  மற்றபடி,

  “உண்டென்றால் அது உண்டு!
  இல்லையென்றால் அது இல்லை”
  என்பதே வேதம்!

  “நான் ஆத்திகன் ஆனேன்
  அவன் அகப்படவில்லை
  நான் நாத்திகனானேன்
  அவன் பயப்படவில்லை”
  என்பதே விதி!!

  “பல நூல் படித்து நீ அறியும் கல்வி
  பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
  பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
  இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்”
  என்பதே சத்தியம்!!!

  மேலும் சுவாமியிடமே சுவாமியை பற்றி சொல்ல எனக்கு திறமையும் இல்லை.

  ஜெய் JK
  ஜெய் விவேகானந்தா
  ஜெய் ரமணா
  ஜெய் சத்ய சாய்
  ஜெய் சுவாமி
  ஜெய் ஜவஹர்

  ஸர்வே ஜனோ;சுகினோ பவந்து.

  யார் முற்றும் துறந்தவர்களோ இல்லையோ,
  நான் இல்லை!
  எனவே
  இந்த விவாதம்,
  என்னைப்பொறுத்தவரை,
  -முற்றும்-

 24. எல்லாவற்றையும் துறந்து காஷாய உடையை அணிவதோ, காட்டுக்குள் ஒளிவதோ அல்ல சந்யாசம். தான், தனது என்ற பேத உணர்வுகளை நீக்கி, அகந்தையை ஒழித்து, பிறரிலும் தன்னையே காண்பவனே உண்மையான சந்யாசி.

  The ideas behind wearing certain types of dress, eating certain types of food, living in certain type of places and residences have not been understood by you. The ideas are that such restrictions if followed strictly will indeed help you to focus your mind on that which you need: renounciation (thuravu).
  In other areas too, such restrictions help you focus. For e.g restrictions on widows: wearing while saree, not wearing things like flower or ornaments. Such restrictions are in place not to humilate them; but to give them the option to choose a widowhood which means living a life different from normal women.
  Pentocostal woment are not widows. But wearing white sarees and not wearing any things like jewelry etc. help them focus.
  Similarly, burqa or niqab for muslim women.
  Thus, you see, restrictions do help and that was the primary intention.

  Reverse what you write:

  If a man who wants to renounce, drinks, smoke and party, live in ac palaces and splurge money on material comforts, and then he say he has completely erased his ego ! Can you believe it?

  So, the performance as well as the intention are both important.
  I dont agree with Ramakrishna. If he is true, why Ramakrishna Madam imposes dress and fode codes on their monks ?

 25. //If a man who wants to renounce, drinks, smoke and party, live in ac palaces and splurge money on material comforts, and then he say he has completely erased his ego ! Can you believe it?//

  If he has completely erased his ego really, Then he became silent.

  ’ஈகோவை ஒழித்து விட்டேன் பார்’ என்று ஒருவன் சொன்னால் அதுவே அகங்காரம் தான். அகங்காரத்தை உண்மையிலேயே ஒழித்து வென்றவன் அதைப் பற்றி வெளியே பேசிக் கொண்டிருக்க மாட்டான்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s