பிளஸ் டூவுக்கு அப்புறம் என்ன?

யாரைக் கேட்டாலும் டாக்டர், எஞ்சிநியர்தான்.

வேறு ஏதாவது படிக்க வைப்பது கலாச்சார இழுக்கு என்று நினைக்கிறார்கள். அட மார்க் கொஞ்சம் கம்மியான குழந்தைகளையாவது விட்டார்களா? பார்க்கிறவர்களை எல்லாம் கடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், மேனேஜ்மெண்ட் சீட் பிடிக்க.

என்ன படிப்பது என்பதை குழந்தைகளின் தகுதி அடிப்படையில் முடிவு செய்யாததால் எஞ்சிநியரிங்கிலும், டாக்டர் தொழிலிலும் இன்காம்பீடன்ஸ் அதிகமாகி வருகிறது. ரத்தத்தில் ஈஸனோஃபில்ஸ் அதிகமாக இருந்தால் உடனே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகு என்கிறார்கள். லிம்ஃபோசைட்ஸ் நாற்பது சதவீதம் இருக்கும் போது ஒன்றும் பிரச்சினை இல்லை, ஹெபடோகுளோபின் சாப்பிடு ஒரு வாரத்தில சரியாய்டும் என்கிறார்கள். சின்ன பிரச்சினைக்காகப் போனால் எலெக்ட்ரோ கார்டியோ கிராஃப் வரை எல்லா டெஸ்டும் செய்துவிட்டு கடைசியில் தப்பாக டயக்னாஸ் செய்கிறார்கள்.

எஞ்சிநியர்கள் லட்சணமும் இப்படித்தான்.

பம்ப் ஆகவில்லை என்றதுமே அக்கக்காய் கழற்றிப் போட்டு என்.பி.எஸ்.ஹெச் ப்ராப்ளம் என்கிறார்கள். ரொடேஷன் தப்புய்யா, அதைப் பாக்கலையா என்றால் டைரக்‌ஷன் மார்க் பண்ணலையே என்கிறார்கள். புதுசாக சேர்ந்த ஒரு எஞ்சிநியர் அஸெம்பிள் செய்த வண்டியில் ரொம்ப நேரமாக ஏதோ தேடிக் கொண்டிருந்தான். என்ன தேடறே என்றதற்கு, கார்புரெட்டர் என்றான். இது டீஸல் எஞ்சின்ய்யா என்று சொன்னாலும் அதனால என்ன என்கிற மாதிரி பார்க்கிறான்.

டீக்கடைகளை விட எஞ்சிநியரிங் காலேஜ்கள் அதிகம்!

போன வருஷம் 52,000 சீட்கள் ஃபில் அப் ஆகாமலே இருந்தனவாம்.

இவ்வளவு எஞ்சிநியர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அப்பளம், ஊறுகாய், ஊதுபத்தி கம்பெனிக்காரர்கள் கூட ‘A good degree in engineering. Post graduation desirable but not essential’ என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ‘என் பிள்ளை எஞ்சிநியர்’ என்று சொல்லும் போது ஒரு காலத்தில் சமூகம் அண்ணாந்து பார்த்தது. இப்போது,

‘அப்பிடியா, எங்க வீட்டு தோட்டக்காரன் புள்ளை கூட எஞ்சிநியர்தான்’ என்கிறார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி இப்படித்தான் இருந்தது. எஸ்.எஸ்.எல்.சி முடித்தால் வேலைக்குப் போய் விடலாம் என்று இருந்தது. ‘என்னடா இது, எஸ்.எஸ்.எல்.சி படிச்சிட்டு காப்பி ஆத்திகிட்டு இருக்கே?’ என்று கேட்பார்கள். இன்றைக்கு எஸ்.எஸ்.எல்.சி க்கு பியூன் வேலை கூடக் கிடையாது.

பி.ஈ., எம்.எஸ்., டாக்டரேட் எல்லாம் முடித்துவிட்டு பல்பொடி கம்பெனியில் புரட்ஷன் அஸிஸ்டண்ட்டாக வேலை பார்க்கிற காலம் அதிக தூரத்தில் இல்லை.

Advertisements

14 comments

 1. உண்மைதான். எத்தனையோ படிப்புகள் இருந்தும் நம்மவருக்கு எஞ்சினியர், மருத்துவர் மோகம் போகவில்லை

 2. 1086 மார்க் எடுத்து பி. எஸ். சி கெமிஸ்டிரி சேர்ந்தவனை ஏதோ வேற்றுக் கிரக ஜந்துவைப் போல் பார்த்தார்கள். நான் ஏதோ எதிலயோ புரண்டு எழுந்து வந்தவன் போலவும் அவர்கள் எல்லாம் பன்னீரில் குளித்தவர்கள் போலவும் பேசினார்கள். என்ன கொடுமை என்றால் எனக்கு கெமிஸ்ட்ரி எடுத்த சார் என்னை இன்ஜினியரிங் எடு, வாழ்க்கையை வீணாக்காதே எஎறு சொன்னதுதான்

  1. சிவராமன் சார், உங்க பதில்ல தற்பெருமை தான் தூக்கலா தெரியுது. எல்லாரும் உங்களோட நல்லதுக்கு தான் திட்டினாங்களே ஒழிய வேறெதுக்கும் இல்ல. அவங்க சொல்ற கருத்து தப்போ சரியோ, அவங்களோட எண்ணம் நல்லது தான். அப்புறம் 1086 ஒன்னும் மிக பிரமாதமான மார்க் இல்லையே இப்போ இருக்கற போட்டி உலகத்துல. கருத்துல தவறு இருந்தால் மன்னிக்கவும்.

 3. //‘அப்பிடியா, எங்க வீட்டு தோட்டக்காரன் புள்ளை கூட எஞ்சிநியர்தான்’ என்கிறார்கள்.//
  ஏன் தோட்டக்காரன் புள்ளை எஞ்சிநியர் ஆக கூடாதா?! மேலும் இப்ப இருக்கற நிலமையில கையில காசு இருந்தா ஜஸ்டு பாஸானா போதும், யார் வேனா எஞ்சிநியர் ஆகலாம்

  1. நித்தில், தோட்டக்காரன் புள்ளை எஞ்சிநியர் ஆகக் கூடாது என்பதல்ல பாயிண்ட். எங்கே பார்த்தாலும் எஞ்சிநியர் என்பதுதான் பாயிண்ட்.

 4. Lots of my friends families in Tiruppur, though invariably kids have settled in running Hosiery factories, they were sent to Engineering colleges and padded up with MS at USA (for the sake of it)….

  Short cut to visit foreign lands… stay for a long?

  Many send their kids with their families abroad, but when it comes to advising others they say India is better! Hypocrisy!

 5. உங்கள் பொருமல் புரிகிறது – இருந்தாலும் incompetence..க்கு பிள்ளைகள் பொறுப்பா? யார் பொறுப்பு? நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பெற்றால் தானே எந்தப் பிள்ளைக்கும் பணம் கொடுத்தால் கூட சீட் கிடைக்கும்? அப்படியே சீட் பிடித்தாலும் படிப்பில் வெற்றி பெற்றால் தானே பட்டம் பெற முடியும்? தரக்குறைவு பள்ளிகளின் பேராசையால், பிள்ளைகளின் பொறுப்பு குறைவால் அல்ல என்ற நினைக்கிறேன்.

  யார் வேண்டுமானாலும் படித்து எஞ்சினியர் மருத்துவர் ஆகலாம் என்பது எப்பேற்பட்ட சாதனை! அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே படித்துப் பட்டம் பெறலாம் என்ற நிலை மாற நூறு வருடங்களுக்குக் குறைவாகவே பிடித்திருப்பது பெருமையல்லவா? (நன்றாகப் படித்து மேல்படிப்பு விரும்பும் அதே சமூகத்துப் பெண்களைக் கூட படிக்க விடாத நாட்களை மறக்க முடியுமா?). சமுதாய மாற்றத்துக்கான mass adoption எப்படி வந்தால் என்ன? திறமை தானாகவே சிறக்காவிட்டாலும், திறமையின்மை தானாகவே அடிபட்டுப் போகும். incompetence சிறுபான்மை என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்திய மக்கட்தொகைக்கு per capita engg/med grads கம்மியா அதிகமா?

 6. பெண் பிறந்த உடனேயே திருமணத்துக்குப் பணம் நகை சேர்ப்பது போல் (அல்லது அதற்கு பதில்) , பிள்ளைகள் (ஆ/பெ) பிறந்த உடனேயே படிப்புக்கும் பணம் சேர்க்க வேண்டியது தான். பதினைந்து வருட சேமிப்பில் படிக்க வைக்க முடியாதா? (இந்த விஷயத்தில் நான் vijayashankar சொன்னது போல் – அறிவுரை சொல்வதோடு சரி. not a practitioner 🙂 )

 7. இன்னும் 10 வருடங்களில் நம் வீட்டுக்கு பால் போடுபவர்,பேப்பர் போடுபவர் எல்லாருமே இஞ்சிநீர்ஸ் தான் என்று யாரோ பட்டிமண்டபத்தில் சொன்னங்க. உங்க பதிவு அருமை. குறைவான மார்க் எடுத்த பையனை கூட,கடன் வாங்கியாவது , பொறியியல் படிக்க வைக்க ஆசைப்படும் பேராசை பிடித்த பெற்றோரே இதற்கு காரணம். மக்கு இஞ்சினியர் பரவாயில்லை,மக்கு டாக்டர் ???

 8. அப்பாதுரை சார், தப்பா எடுத்துக்காதீங்க. படிப்பில் ஆர்வமே இல்லாத,எட்டு,ஒம்பது வகுப்புகளில் வார்னிங் பாஸ் கொடுக்கப்பட்டு, பனிரெண்டாம் வகுப்பில் ஐம்பது மார்க் கணக்கில் எடுத்த ஒரு பையனின் பெற்றோர் ஆறு லட்சம் கொடுத்து பொறியியல் வாங்கியுள்ளனர். இந்த பையன் அங்கே எப்படி படிப்பான்?

 9. நாங்க சாப்ட்வேர் maintenance ப்ராஜெக்ட் செய்யும் போது எப்போ பார்த்தாலும் patch அனுப்ப வேண்டி வரும். சில சமயங்களில் patch தப்பா போய் patch உக்கே patch அனுப்ப வேண்டி வரும். அப்போ developers சொல்லிக் கொள்வது நல்ல வேளை நாம டாக்டர்ஸ் இல்லை.
  இங்கே யாரு வேணா engineering medicine பண்ணக் கூடாதா என்று சொல்லுபவர்களுக்கு இதை சொல்ல விரும்புகிறேன். சிறு தவறுகள் பெரும் ஆபத்தில் கொண்டு விடும். தகுதி என்பதில் compromise செய்வது சரி கிடையாது.
  தனியார் கல்லூரிகள் பலவும் அரசியல் புள்ளிகள் கையில். அங்கே seat filling க்காக தான் பாஸ் ஆனா போதும் லட்சத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து சேர்ந்து கொள் என்று மதிப்பெண்ணில் தகுதி குறைப்பு செய்யப்பட்டிருக்கிறதே அன்றி எல்லா தரப்பினருக்கும் வாய்ப்புகள் தந்து விட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அல்ல.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s