மீடியாவுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் வெற்றி!

திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவு வருவதற்கு முன்னாலே ஒரு பிளாக்கர்,

 பொதுத் தேர்தலையே பொங்கல் வைக்கும் ஆளும்கட்சிக்கு

இடைத் தேர்தல் எல்லாம் வடை

 என்று குறள் எழுதியிருந்தார். திருமங்கலம் மாடல் என்று ஒரு ஃப்ரேஸே வழக்குக்கு வந்து விட்டது. இதை மனதில் கொண்டு பார்க்கும் போது தேர்தல் ஆணையத்தின் சாதனை பிரமிப்பூட்டுகிறது. இவ்வளவு அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடந்ததால்தான் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது.

 ஆகவே நமது முதல் பாராட்டு தேர்தல் ஆணையத்திற்கு!

 அடுத்தது மீடியா.

 2ஜி மேட்சில், ஓப்பனிங் பவுலராக ஒன்றிரண்டு மெய்டன் ஓவர்கள்தான் போட்டார் ஜெயலலிதா. ஆனால் ஆங்கில தனியார் சேனல்கள் அனைத்தும் அதிரடி பவுலிங்கைத் தொடர்ந்து ஏகப்பட்ட விக்கட்டுகளை வீழ்த்தினார்கள், இப்போது மேட்சில் ஜெயித்தும் ஆகிவிட்டது!

 நிச்சயமாக 2ஜி ஒரு டாமினண்ட் ஃபேக்டர்.

 கூடவே அனுகூலச் சத்துருக்கள் இருந்ததால் அஜித், விஜய் இரண்டு பேரையும் முறைத்துக் கொண்டார்கள். சினிமா டாமினன்ஸில் சில்லரை வந்தது, ஆனால் கூடவே ரசிகர்களின் வெறுப்பும் வந்தது.

 புது ஆட்சியாளர்கள், போனவர்களிடம் இரண்டு பாடங்கள் கற்றாக வேண்டும்.

 ஊழல் செய்தால் தூக்கி எறியப்படுவோம் என்பது முதல் பாடம். குடும்ப அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பது இரண்டாம் பாடம்.

Advertisements

27 comments

 1. முக்கியமான இன்னொரு அம்சம் பவர் கட் ,சென்னை மக்களுக்கு தெரியாது நாங்கள் படுகின்ட கஷ்டம். டெய்லி மூன்று முதல் நான்கு மணி நேரம் கட்.

  // புது ஆட்சியாளர்கள், போனவர்களிடம் இரண்டு பாடங்கள் கற்றாக வேண்டும்.//

  இரண்டு அல்ல, எல்லாப் பாடம்களும் …..

 2. இந்த இரண்டு பாடமும் ஜெயலலிதா ஏற்கனவே கற்றது தான். ஊழல், மன்னார்குடி குடும்பம் என. கற்றுக் கொள்ள வேண்டியது மக்கள் தான்

 3. //2ஜி மேட்சில், ஓப்பனிங் பவுலராக ஒன்றிரண்டு மெய்டன் ஓவர்கள்தான் போட்டார் ஜெயலலிதா. //
  இன்னொரு என்டிலிருந்து 6 மெய்டன் ஓவர்கள் போட்ட
  சுப்ரமண்யம் சுவாமியை மறக்கலாமா?
  //ஊழல் செய்தால் தூக்கி எறியப்படுவோம் என்பது முதல் பாடம். குடும்ப அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பது இரண்டாம் பாடம்.//
  மூன்றாவது முக்கியமான பாடம்:
  மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து,மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தால் “செம்ம மால் ”
  வெட்டலாம்!
  2014 க்கு முன் இரு அன்னையரும் இணைய வாய்ப்பு உள்ளது!
  “வாலு போயி கத்தி வந்தது டும்! டும்!! டும்!!! “

  1. ஸ்வாமி 12’த் மேன்!! ஏற்கனவே பெரியம்மா சின்னம்மாவை ஃபோன் பண்ணி கங்ராஜுலேட் பண்ணிட்டாங்க, ஆனா இந்த உறவு சேர்ந்து ஊழல் பண்ண இல்லை, சேர்ந்து ஊழலை அழிக்க…. இது இன்னைக்கு நிலவரம், நாளை என்னாகுமோ நானறியேன் பராபரமே!!

 4. மூணாவதாக கற்க வேண்டிய பாடம்: எங்களுக்கு பணம் குடுங்க.. வாங்கிக்கறோம்… ஆனா, பதிலுக்கு ஓட்டு மட்டும் கேட்காதீங்க…

  1. மூர்த்திஜி, தேர்தல் கமிஷன் பணம் தரவே விடல்லை, விட்டிருந்தா போச்… ரிஸல்ட் வேறே மாதிரி இருந்திருக்கும்.

 5. //ஆனா இந்த உறவு சேர்ந்து ஊழல் பண்ண இல்லை, சேர்ந்து ஊழலை அழிக்க//
  நீங்க இதுவரை உங்க ப்ளாக்கில் எழுதின எல்லா ஜோக்குகளையும் ,இந்த ஒரு ஜோக் தூக்கி சாப்டு டுத்து,ஜவஹர் !!!
  😉

 6. Before spectrum corruption, loomed large the power cut and price rise, as ganpat said. People chose her, even after knowing she was herself a matchingly corrupt politician. Because, there r no alternative bfore them.

  This is what I wrote in P Suseela blog, but not loaded.’

  ஆனால் ஊழல் தேர்தலில் முதன்மை வகிக்கவில்லை. ஜெயாவின் தேர்தல் அறிக்கையும் இளவஞ்களை அள்ளி வீசியது. செயாவும் கொடுக்கவேண்டும. எனவே நீங்கள் சொல்வது போல மக்கள் இலவசங்களைத் தள்ளவில்லை. செயா இருமுறைத தன்னை ஆரென்று தமிழ் மக்களுக்குக் காட்டினார். எனினும் அவரைத் தேர்தெடுத்திருக்கிறார்கள் என்றால் மாற்றில்லை என்பதால்.

  கறவை மாடுகள் இல்லாப்பட்சத்தில் காலைமாடுவிடம் பால் கறக்கலாமா என்பது ஒரு நம்பிக்கைதான்.

  பார்போம் எவ்வளவு தூரம் உங்கள் நீங்கள் செயாவின் மீது வைத்த நம்பிக்கை வீன்பூகவில்லை என்று.ஐந்து ஆண்டுகள் கழித்து.

  தினமணி இறுதிவரிகளில் சொல்வதுவே சரி.

  “இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள்

  Jeya and Sasi will loot but perhaps the loot may not b as big as spectrum. Coz specturm was a golden goose, and Jeya could not do it as she was not in centre at the right time.
  No one is a saint and everyone is a sinner. but the one who did not get the chance pretends to be a saint.

  With good literacy rate, poliitical awareness, satisfactory social and economic indices in India, TN of 7 cr Tamils could not produce at lease more than a few choices for Tamil voters. Only one choice, that too, rotten, was presented before them.

  Who is to blame ?

 7. //இது என் நம்பிக்கை//
  எதன் அடிப்படையில் ???
  இன்று வரை ஜெயா ,விஜயகாந்த்தின் பங்களிப்பைப்பற்றி
  மூச்சு விடவில்லை!
  இன்று ஜெயா டிவியில் ஜெ. கூட்டணி தலைவர்கள் ஜெயாவிற்கு வாழ்த்து தெரிவிப்பதை ஒளிபரப்பினார்கள்
  விஜயகாந்த் மிஸ்ஸிங்!!!
  தமிழ்நாடு இன்று கஷ்டப்படும் மின்வெட்டில் ஜெயாவிற்கும் கணிசமான பங்கு உண்டு~
  1991 இல முதல முறையாக ஜெயா பதவி ஏற்றபோது,தமிழ்நாட்டை 25ஆண்டுகளாக பீடித்த துயரம் ஒழிந்துவிட்டது என எண்ணி ஏமாந்த பலரில் நானும் ஒருவன்!
  K and J supplement each other!

  1. விஜயகாந்த் வாழ்த்து தெரிவிக்க வரல்லைன்னா அது யாரு தப்பு? இந்த முறையும் கூட்டணி இல்லாம தனியா விட்டிருந்தா மறுபடியும் அதே மூணாவது இடம்… போதுமா அரசியல்லே? கூட்டணியில இடம் பெற்ற முந்தாநாள் கட்சி கூட மொத்த இடமும் ஜெயிச்சிருக்கு… கம்யூனிஸ்ட்டுங்க என்னைக்கு 10 க்கு 9, 12 க்கு 9 எல்லாம் ஜெயிச்சாங்க? சரத் குமார் கட்சி 2 இடம் எதனால வந்தது? விஜயகாந்தின் பங்களிப்பு உசத்திதான், ஆனா அதுல கெய்ன் பண்ணது யாரு?

   1. 1991 ல் நானும் தான் ஏமாந்தேன்..இன்னும் சொல்லப்போனால், வாழ்க்கையில் (தி) மு.க என்கிற வார்த்தையைக்கூட சொல்லவிரும்பாத என்னை 96ல் திமுகவிற்க்கு ஓட்டே போட வைத்தனர். ஆனால் 2001 ல் வந்த அதிமுக ஆட்சி சமீபத்திய காலங்களில் (அfடெர் 90) நடந்த நல்ல ஆட்சி. நல்ல முதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினை ஜெ.யிடம் பார்க்கமுடிந்தது. மோடி பொன்ற கண்டிப்பான நல்ல நிர்வாகத்தினை தரக்கூடிய ஒரே லேடி ஜெ.தான். 2011ல் கண்டிப்பாக 2001ஐ விட சிறப்பான ஆட்சி தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது…. பார்க்கலாம்.

   2. நன்றி ராமச்சந்திரன், நானும் இப்போதைக்கு அந்த மனநிலையில்தான் இருக்கிறேன்

 8. கூட்டு சேரலை ன்னா ஒட்டு split பண்ணிட்டார்ன்னு பழி!!
  சேர்ந்தா, அவருக்குத்தான் gain அதிகம் ன்னு முடிவு!
  “வாழ்ந்தாலும் ஏசு
  தாழ்ந்தாலும் ஏசு
  வையகம் இதுதானடா”
  என்ற கிருத்துவ பாடல்தான் ஞாபகம் வரது!

  1. கண்பத்.. இது ஜோக்கா இல்லை தவறுதலா எழுதியிருக்கீங்களா, வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் என்பதுதான் பாட்டு. அது மதப் பாடல் இல்லை, சினிமாப்பாட்டு! 🙂

 9. செய்தி 1
  சத்த சபையும் ,தலைவலி செயலகமும்
  மீண்டும் கோட்டைக்கு மாற்றம்.
  600 கோடி செலவு காண்பித்து 100 கோடி செலவில் கட்டப்பட்ட
  உலகத்தின் மிக அவ லட்சணமான கட்டிடமான புதிய தலைமை செயலகத்தின் கதி என்ன?
  இதை எதிர்த்து திமுக போராட்டம்???

  ஆரம்பிச்சுட்டாங்கைய்யா ! ஆரம்பிச்சுட்டாங்கைய்யா !!

  1. புது தலைமைச் செயலகம் கட்டப்பட்டதே பேத்தல். ஒரு ஹிஸ்டாரிக் மான்யுமெண்ட், அதுவும் நல்ல நிலைல இருக்கு, அதுக்கென்ன குறைச்சல்? எதுக்காக புதுக் கட்டிடம்? இன்னும் அஞ்சு வருஷம் இருந்திருந்தா ஹை கோர்ட், ரிப்பன் பில்டிங், சென்னைப் பல்கலைக் கழகம், கிண்டி எஞ்சிநியரிங் காலேஜ் எல்லாத்தையும் மாத்தியிருப்பாங்களோ?

 10. ஆளும் கட்சியின் எதிர்ப்பு காரணமாக, ஒட்டுமொத்த அதிமுக கூட்டணியிலுள்ள எல்லா கட்சிகளும் வெற்றியடைய காரணமாக இருந்திருக்கும்! தேமுதிக தனியாக களமிறங்கியிருக்கும் என்றால் மக்களின் எதிர்வினை வேறு மாதிரி அமைந்திருக்கும். எப்படியும், ஈழம், மீனவர் பிரச்சனைகளால் காங்கிரஸிற்கு நிலைமை இப்படி தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

 11. ம்ம்ம்….
  விட்டுப்போச்சா???

  இப்படித்தான்
  ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
  ஒளவை ஒன்டர் வாட் யூ ஆர்?
  பாடலும் அழ.வள்ளியப்பா எழுதியது என ரொம்ப நாள்
  நம்பிக்கொண்டிருந்தேன்

  அப்புறம் பாருங்க ஜவஹர்!

  //புது தலைமைச் செயலகம் கட்டப்பட்டதே பேத்தல்.//
  ஒத்துக்கிறேன்
  ஆனால் அந்த கட்டிடம் 600கோடி கணக்குகாட்டி கட்டியிருக்காங்க!
  அதை என்ன செய்வது?

  //எதுக்காக புதுக் கட்டிடம்?//
  ஒத்துக்கிறேன்
  ஆனால் ஆரம்பிச்சதே அம்மாதானே !!! மறந்துட்டீங்க போல!
  கி.பி 2005 இல் ராணி மேரி கல்லூரியை இடிக்கறேன்னு
  புறப்பட்டு அடிச்ச கூத்தெல்லாம் மறந்துட்டீங்க போல!

  சென்னை metro ரயில் கதியும் இதுதானோ?

  திமுக வேறு, அரசாங்கம் வேறு, இல்லையா?

  இப்படி ரெண்டு பொண்டாட்டியும் ஒவ்வொரு நரை முடியாக
  கணவன் தலையில் இருந்து போட்டி போட்டுக்கொண்டு பிடுங்கினால் கணவன் தலை என்ன ஆவது?
  அதுதான் என் பயம்!!

  “வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
  வந்ததை நினைத்து அழுகின்றேன்”
  ன்னு நீங்க படறீங்க!

  “வந்ததை நினைத்து அழுகின்றேன்
  வருவதை எண்ணி நடுங்குகிறேன்”
  ன்னு நா பாடறேன்!

  அம்புட்டுத்தேன்!!

 12. அட்டகாசம் ganpat! எழுதுவதை எழுதிவிட்டு அப்புறம் ‘விட்டுப் போச்சா?’ என்ற innocence.. அடடே.. சரவண பவன் டிபன் காபி பெறும்.

  க போய் ஜெ வந்தது டும். களந்தெறியாமல் கல்லெறிவது கை வந்த க என்றாலும், ஜெயும் கவும் ஒரு குட்டையில் ஊறிய ம. (சொன்னவர் காமராஜா?)

  எப்படியோ, இன்னும் ஒண்ணரை வருஷத்துல தமிழ் நாட்டுல ஒவ்வொரு வீட்டுலயும் ரெண்டு ஆடு, நாலு கோழி, ஒரு மாடு இலவசமா வந்துரும்னு சொல்றாங்க. நீங்க அசைவம்னு சொல்லியிருக்கீங்க. நான் எல்லாம் சாப்பிடுவேன், கண்டுக்குங்க.

 13. //ஆனா இந்த உறவு சேர்ந்து ஊழல் பண்ண இல்லை, சேர்ந்து ஊழலை அழிக்க//பாவம் நீங்க, அம்மா சேரத்துடிப்பது அன்டோனியோ மெய்னோ (இப்படி ஒரு பேர் இருப்பதே அம்மா சொல்லித்தான் தெரியும்) கூட, அன்னா ஹசாரேகூட இல்ல. மேலும் அம்மாவின் இந்த உறவு மு.க வை அழிக்கத்தானே தவிர ஊழலை அழிக்க அல்ல. 2Gல இத்தாலி குடும்பத்துக்கும் பங்கு உண்டுன்னு, நா சொல்லல, சு.சாமி சொல்லியிருந்தார்தானே

  1. ஸ்வாமி அவர் கேள்விப்பட்ட விஷயத்தை எல்லாம் உடனே பிரஸ்ல பேசிடுவாரு…. நிஜமா இருந்தா மீடியா டாராக் கிழிச்சிடும்… வெயிட் பண்ணுவோம்!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s