அவன் வருவதற்குள்…

ஆச்சரியமாக இருந்தது, அவன் இன்னும் வரவில்லை. மூன்றாவது ரவுண்டைச் சாப்பிட்டு முடித்து விட்டேன்.

நிச்சயமாக வரவில்லையா என்று தெரிந்து கொள்ள அறையை விட்டு வெளியில் வந்தேன். ஹால் முழுக்கப் பார்வையை ஓட்டினேன். எங்கேயும் அவன் இல்லை. ஒருவேளை பெட்ரூமில் இருக்கிறானோ? பெட்ரூமுக்குள் எட்டிப் பார்த்தேன். அங்கேயும் இல்லை. டாய்லெட் கதவு வெளிப்பக்கம் தாழிட்டிருந்தது, அங்கே இருக்கவும் சான்ஸ் இல்லை. பால்கனி, முன் வராண்டா… ம்ஹூம்.

என்ன ஆயிற்று அவனுக்கு இன்றைக்கு?

என்னவோ ஆகட்டும், சனியன் வராமல் இருந்தால் சரி.  இன்னும் ஒரு ரவுண்ட் மிச்சம் இருக்கிறது. தொல்லையில்லாமல் சாப்பிடலாம். மறுபடி என் அறைக்குள் நுழைந்தேன். பாக்கி விஸ்கியை கிளாஸில் ஊற்றினேன். கழுத்துவரை சோடாவால் நிறைத்து மூன்று ஐஸ்கட்டிகளை லாவகமாக சூடான எண்ணையில் பஜ்ஜி போடுவது மாதிரிப் போட்டேன். சின்ன கடக் புடக் ஓசையுடன் ஐஸ் கரைய ஆரம்பித்தது. கொப்புளம் கொப்புளமாக சோடாவின் கார்பன் டை ஆக்ஸைடு மேலேறி வெளியேறக் காத்திருந்தேன்.

சாப்பிட்ட மூணு ரவுன்டில் ஒன்றுமே ஏறவில்லை. வயிற்றில் ஏற்பட்ட ஒரு சின்ன காந்தலைத் தவிர வேறு எஃபக்ட்டே இல்லை. அவன் வந்துவிடுவானோ என்கிற பயம் காரணமாக இருக்கலாம். நாலாவதை இரண்டே கல்ப்பில் அடித்தேன். ஒரு பிடி காராபூந்தியை அள்ளி வாயில் போட்டேன்.

சில வினாடிகள்தான்.

உலகம் மெதுவாகத் தளர்ந்தது. லைட் வெளிச்சம் ஃபோட்டோ டெவலப் செய்கிற ரூம் மாதிரி மங்கலாயிற்று. டிவியில் வரும் மொக்கை ஃபிகர்கள் த்ரிஷாவாகவும், தமன்னாவாகவும் தெரிந்தார்கள். மனசுக்குள் டம்சிக்குட் டக்கும் டம்சிக்குட் டக்கும் என்று பீட். டொய்டோடட் டையூம் என்று அதற்குப் பொருத்தமான பாஸை வாய் முணுமுணுத்தது. பாட்டெழுத வேண்டும் போல இருந்தது. சந்தம் ஆறாகத் துள்ளி வந்து, ஆறாகத் துள்ளித் துள்ளிச் சந்தம் வாராதோ, ஏழாகப் பின்னிப் பின்னிச் சிந்துப் பாடாதோ என்று பல்லவி எழுதினேன். அதை நானே இசையமைப்பாளனாக ‘எக்ஸலண்ட்’ என்று பாராட்டினேன். அடுத்து, பாடக நான் அதைப் பாட ஆரம்பித்த போது,

“வந்துட்டேன்” என்று சொல்லிக் கொண்டு அவன் வந்துவிட்டான்.

போச்சு, இனிமேல் இடைஞ்சல்தான்.

“என்ன இன்னைக்கு ஒரு ரவுண்ட் ஜாஸ்தியாயிடிச்சு?” என்றான்.

எங்கிருந்து பார்க்கிறான்?

“உனக்கு ஸைஃபர் மார்க், நான் சாப்பிட்டது பியர்” என்றேன் பலஹீனமாக.

“எப்படி? சோடா கலந்து ஐஸ் போட்டு பியரா?”

“ஆமாம், பியரை அப்படிச் சாப்பிட்டால்தான் எனக்குப் பிடிக்கும்”

“அப்படியா? எங்கே முன்றுரையரையனார் சொல்லு பார்ப்போம்”

“அவன் ஒரு ஃபூல்.. அவன் எழுதினதைப் படிச்சிட்டு என்கிட்ட டெஸ்ட் பண்றியா?”

“அவன் ஃபூலாவே இருக்கட்டும், நீ சொல்லு பார்ப்போம்”

“முண்டுழையழையனார்”

“இன்னொருதரம் சொல்லு”

“ஏன் ஒருதரமாவது தப்பாச் சொல்வேன்னு பாத்தியா, முண்டுழைஎழவனார்”

“இப்ப சரியா இருக்கு”

“என்ன கிண்டலா? அது சரி, நான் சாப்பிட்டது பியர் இல்லைன்னு எப்படித் தெரியும்? ஐஸ் சோடா எல்லாத்தையும் ஒளிச்சி வெச்சிட்டு எதிர்ல ஒரு பீர் பாட்டில் வேறே வெச்சிருக்கேன்?”

“ஸிம்பிள் மை டியர் வாட்ஸன், நீ சரக்கு வாங்கற எந்தக் கடைலயும் பியர் ஸ்டாக் இல்லை”

“அதெப்படி உனக்குத் தெரியும்?”

“உனக்கே தெரியும் போது எனக்குத் தெரியாதா?”

“அதென்ன உனக்கே?”

“ஒரு குடிகாரனுக்குத் தெரிஞ்ச விஷயம் எனக்குத் தெரியாதா?”

“நான் குடிக்கிறவந்தான், ஆனா குடிகாரன் இல்லை”

“இப்ப ஆயிட்டே”

“எப்புடி?”

“குறைஞ்சது இன்னொரு ஆளாவது இருந்தாப் பரவாயில்லை, நீ தனியாவே குடிக்கிறியே?”

“அதான் நீ இருக்கியே”

“தினம் மூணு ரவுண்ட்தான் சாப்பிடுவே, இன்னைக்கு நாலாவது.. இப்படியே போனா ஆறு ரவுண்ட் சாப்ட்டாத்தான் ஏறும்ன்னு ஆயிடும்”

“நீ இன்னைக்கு லேட்”

“மணி என்ன? காலைல பதினோறு மணி.. குடிகாரந்தான் காலைலயே சரக்கு அடிப்பான்”

”சரி அப்படியே இருந்துட்டுப் போறேன், அதனால யாருக்கு என்ன நஷ்டம்?”

“உனக்குப் பிரியமானவங்களைக் கொஞ்சம் நினைச்சிப் பார்”

“பிரியமானவங்கன்னா யாரு? முதல்லே பிரியம்ன்னா என்ன”

“நீ செத்தா யாரும் அழமாட்டாங்களா?”

“செத்தா அழறதுக்கு ஆள் இருக்கு”

“அப்ப அவங்க பிரியமானவங்கதானே?”

“அடப் போடா, லாரில அடிபட்டு செத்துப் போன பிச்சைக்காரனைப் பார்த்துக் கூட ரோட்ல நாலு பேர் அழறாங்க, அவங்கள்ளாம் பிரியத்துலயா அழறாங்க, எந்தச் சாவும் மனசை ஒரு உலுக்கு உலுக்கும்”

“உனக்கு ஏன் இப்ப விரக்தி? பொண்டாட்டி பிள்ளை எல்லாம் பிரியமாத்தானே இருக்காங்க?”

“அதான் கேட்டேன், பிரியம்ன்னா என்ன?”

“நீ நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறாங்களே, அது பிரியம் இல்லையா?”

“நல்லா இருக்கணும்ன்னு நினக்கிறதெல்லாம் ஒரு பிரியமா? அது அடிப்படைல எல்லா மனிஷன்கிட்டயும் இருக்கு”

“சரி அப்ப நீ சொல்லு, பிரியம்ன்னா என்ன?”

“அப்படி எதுவுமே கிடையாது”

“சரிடா, உலகம் பிரியம்ன்னு சொல்ற விஷயத்தை உன் பார்வைல சொல்லு”

“பிரியம்ங்கிறது டிப்பெண்டன்ஸ். இரண்டு பேர் பிரியமா இருக்காங்கன்னா அதுல யாரோ ஒருத்தர் டிப்பெண்டண்ட். ஒரு ஸ்டேஜில அந்த டிப்பெண்டண்ட் இடிப்பெண்டண்ட் ஆயிடறாங்க. இரண்டு பேரும் இண்டிப்பெண்டண்ட் ஆனப்புறம் பிரியம் இருக்காது”

“தப்பு”

“என்ன தப்பு?”

“டிப்பெண்டென்ஸ்லதான் ஆரம்பிக்குது, அடுத்த ஸ்டேஜ் இண்டிப்பெண்டன்ஸ்ன்கிறதும் சரிதான். ஆனா அதோட கதை முடியறது இல்லை. அடுத்தது இண்டர்டிப்பெண்டன்ஸ்”

“சாரி மிஸ்டர். இதெல்லாம் வீட்டுக்குப் பிரயோஜனப்படாது. அதெல்லாம் புரஃபஷனல் அட்மாஸ்ஃபியர்ல”

“அப்டீன்னு யார் சொன்னது?”

“ஏய்.. அதெல்லாம் பல டிபார்ட்மெண்ட்கள் ஒண்ணொண்ணும் ஒரு தனி கம்பார்ட்மெண்ட்டா இயங்கக் கூடாதுங்கிறதுக்காக சொன்னதுடா. குடிச்சா எனக்கு ஷிவ் கேரா, ஸ்டீஃபன் கோவே எல்லாம் மறந்துடும்ன்னு நினைச்சியா?”

“மறக்காது, குடிச்சதும் நீ ஃபிராய்ட், எட்வர்ட் டி போனோ, ஜேகே எல்லாரையும் விட புத்திசாலி ஆயிடறே, ஆனா ஒரு சாதாரண மனிஷனா சைஃபர் ஆயிடறே”

“என்ன சாதாரணம், என்ன சைஃபர்?”

“நீ குடிச்சி உடம்பைக் கெடுத்துக்கிறதில யாருக்கும் நஷ்டம் இல்லைங்கிறே?”

“ஆமாம்.. நான் செத்தா யாருக்கும் நஷ்டமில்லை”

“செத்தா செத்தான்னு அதையே சொல்லிகிட்டு இருக்கியே, நீ என்ன ஃப்யூஸ் ப்ளோ ஆகிற மாதிரி சப்பக்குன்னு உசிர் போய்டும்ன்னு நினைச்சியா? அதெல்லாம் ஆரோக்யமானவனுக்குத்தான். ”

”ஏன், எனக்கு என்ன ஆகும்?”

”உன்மாதிரி ஆசாமிகளை ஐ.சி.யு வில வெச்சி இருக்குமா போகுமான்னு தெரியாம உடம்பில சூடு மட்டும்தான் இருக்கும், சுரணை இருக்காது”

“நீ வீணா பயமுறுத்தறே”

“இல்லை, ஆல்கஹால் உடம்புக்குள்ள போனதும் முதல்லே கிட்னி ரத்தத்தில இருக்கிற ஆல்கஹாலை எடுக்கிற வேலையைத்தான் பார்க்குது. எப்படியாவது எல்லா ஆல்கஹாலையும் பிரிச்சிடணும்ன்னு அது கஷ்டப்படுது. அப்படிப் பண்ணும் போது அது வழக்கமா செய்கிற ரத்த சுத்தியைப் பண்றதில்லை. அசுத்தங்களும், ஃப்ளூயிட்டும் ஏறிகிட்டே போகுது. அசுத்தம் ஏற ஏற ஆல்கஹால் இல்லாத போதும் கிட்னி ஓவர்லோட் ஆகுது. பிரிக்காத ஃப்ளூயிட் எல்லாம் சளியா நுரையீரல்ல கட்டுது”

“இல்லை, நீ எக்ஜாஜிரேட் பண்றே”

“இல்லவே இல்லை. ஒருவழியா ஆல்கஹாலைப் பிரிச்சிட்டு அது ரெகுலர் வேலையை ஆரம்பிக்கும் போது நீ அடுத்தநாள் குடிக்க ஆரம்பிச்சிடறே…”

“ஃபாரின்ல எத்தனையோ பேர் குடிக்கறாங்க, அவங்கள்ளாம்….”

“அவங்க எல்லாம் போதை வர்ர வரைக்கும் குடிக்கிறது இல்லை. டூ ட்ரிங்க்ஸ்ன்னு அவங்க சொல்றது ரெண்டு ஸ்மால். ஒரு சின்ன கிர்ர், அப்புறம் பசி. அவ்ளதான் சாப்ட்டுட்டு படுத்துடுவாங்க.”

“இல்லை போதைக்குக் குடிக்கிறவங்க நிறையப் பேர் இருக்காங்க”

“அவங்கள்ளாம் வாரத்தில ஒருநாளாவது ஆல்கஹால் ஹாலிடே தர்ராங்க. குறைஞ்சது அந்த ஒருநாள்ள கிட்னி பெண்டிங் வொர்க்கை எல்லாம் முடிச்சிடும். நீதான் டொண்ட்டி ஃபோர் பை செவன் குடிச்சிகிட்டே இருக்கியே!”

“அப்ப.. அப்ப… என்ன ஆகும்?”

“என்ன ஆகும்? ஆஸ்பத்திரிக்குப் போவே. சாகவும் மாட்டே பிழைக்கவும் மாட்டே. தினம் பதினஞ்சாயிரம் பணம் கட்டிகிட்டே இருப்பே. ஒரு ஸ்டேஜில உன்னைச் சேர்ந்தவங்க தொடர்ந்து பணம் செலவு பண்றதை ரிகன்ஸிடர் கூடப் பண்ணலாம். அட பணத்தை விடு அவங்களுக்கு அவ்வளவு டென்ஷன், அலைச்சல், ஆஃபிசுக்கு லீவு, ஷிஃப்ட்டு போட்டு யார் யாரோ ராத்திரி பார்த்துகிட்டு…. இந்தக் கஷ்டத்தை அவங்களுக்குத் தர உனக்கு என்ன உரிமை இருக்கு, அவங்கள்ளாம் இண்டிப்பெண்டண்ட்தானே?”

கண்மூடி யோசிக்க ஆரம்பித்தேன்.

“யோசனை பண்ணு, நான் நாளைக்கு வர்ரேன்”

சட்டென்று கண்ணைத் திறந்தேன். அவனைக் காணவில்லை.
வாசற்கதவு உள்ளே தாழிட்டிருந்தது.

Advertisements

27 comments

 1. இதைத்தான் நம்ம நடிகர்திலகம் சொன்னாரு..

  “போதை வந்த போது.. புத்தியில்லையே…
  புத்தி வந்த போது.. நண்பரில்லையே….

  நாளை முதல் குடிக்க மாட்டேன்.. சத்தியமடி தங்கம்..

  இன்னி ராத்திரிக்குத் தூங்க வேணூம்.. போட்டுக்குறேன்.. கொஞ்சம்…”

  நீங்க எழுதற ஸ்டைல் நல்லாருக்கு .. வழக்கம்போலே..

 2. இனிமே குடிக்க கூடாது என்று குடித்த மறுநாள் ஞானோதயம் வரும் , அப்புறம் பழைய குருடி கதை தான் .

 3. என் தம்பிக்கும் மைதுனருகும் நடந்த சம்பவங்கள் தொகுப்பு
  உங்கள் எழுத்து மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

 4. பாவங்க எங்களை மாதிரி ஆளுங்க. டோஸ்ட் பண்றதுக்கு மட்டும் செம்பையின் க்ளாஸ் எடுத்த கைகள்…

  அவன் என்ன மனசாட்சியா? 🙂

 5. நீழங்க ஸொள்ழ்றது சுத்தமா புரிலா. நான் நேத்திக்கு வாந்து பட்ச்சிட்டு கமெண்ட் போட்றேன். இன்னா சர்யா வாத்யாரே! -;))

 6. உங்களுக்கு ரஜினியை பிடிக்காமல்
  இருக்கலாம். ஆனால் அதை சொல்ல
  நீங்கள் தேர்ந்தெடுத்த நேரமும்,
  முறையும் சரி இல்லை.

  1. யார் சொன்னது எனக்கு ரஜினியைப் பிடிக்காது என்று? பிடிக்காமல் போகிற அளவுக்கு அவர் என்ன தப்பு செய்தார்? இதற்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்?

 7. //உங்களுக்கு ரஜினியை பிடிக்காமல்
  இருக்கலாம். ஆனால் அதை சொல்ல
  நீங்கள் தேர்ந்தெடுத்த நேரமும்,
  முறையும் சரி இல்லை.//
  யப்பா! என்னமா கோத்து உடறாங்க! வாத்யாரே! நீ உடாத! நல்லா கலக்கினே இரு!

  1. சாரி அப்பாதுரை, நான் உங்களை உயர்ந்த இடத்தில வெச்சிருக்கேன், நீங்களும் இப்படீன்னா எனக்கு புத்திசாலிகளைப் பத்தின நம்பிக்கையே போய்டும்… தைரியம் புத்திசாலிகளோட அடையாளம்

 8. //மனசுக்குள் டம்சிக்குட் டக்கும் டம்சிக்குட் டக்கும் என்று பீட். டொய்டோடட் டையூம் என்று அதற்குப் பொருத்தமான பாஸை வாய் முணுமுணுத்தது.//
  தெய்வமே……. நீங்க எங்கேயோ போயிட்டீங்க….. 😉
  என்னால முடியல……!!
  பேசாம நான் எழுதுறத நிறுத்திடலாமுன்னு இருக்கேன்!!!

  நீங்க மியூசிக் போடுவீங்கன்னு தெரியும். ஆனா எழுத்துல கூட இப்படி மியூசிக்ல பின்னி பெடலெடுப்பீங்கன்னு இப்பதான் தெரியும்.

  அப்புறம்….

  //“இல்லை, ஆல்கஹால் உடம்புக்குள்ள போனதும் முதல்லே கிட்னி ரத்தத்தில இருக்கிற ஆல்கஹாலை எடுக்கிற வேலையைத்தான் பார்க்குது. எப்படியாவது எல்லா ஆல்கஹாலையும் பிரிச்சிடணும்ன்னு அது கஷ்டப்படுது. அப்படிப் பண்ணும் போது அது வழக்கமா செய்கிற ரத்த சுத்தியைப் பண்றதில்லை. அசுத்தங்களும், ஃப்ளூயிட்டும் ஏறிகிட்டே போகுது. அசுத்தம் ஏற ஏற ஆல்கஹால் இல்லாத போதும் கிட்னி ஓவர்லோட் ஆகுது. பிரிக்காத ஃப்ளூயிட் எல்லாம் சளியா நுரையீரல்ல கட்டுது”//

  இது சூப்பர் தல……!

  நாம தண்ணீர் நெறைய குடிக்காதபோதுகூட சிறுநீரகம் செய்ய வேண்டிய வேலைய கல்லீரல் (லிவர்) மேல தூக்கிப்போட்டுட்டு அது ஹாயா உக்காந்துக்குதாம். அதனாலயும் உடல் பருமன் வருதுன்னு ஒரு தியரி இருக்கு! அது பத்தி விரிவா ஒரு பதிவ போடுறேன் சீக்கிரம்…….

  நன்றி,
  பத்மஹரி.
  http://padmahari.wordpress.com

 9. வழக்கம் போல அருமை. நானெல்லாம் என்னைக்கோ ஒரு நாள் நண்பர்களுடன் பீர் சாப்பிடற ஆள். சாப்பிட கூடாதுன்னு இல்ல. காபி மாதிரி டேஸ்டா இல்ல.

 10. //பியர், பீர், புனைவு, போதை, விஸ்கி. —-
  இது ரொம்ப நல்ல வரிசை. தனியா ரூம் போட்டு யோசிச்சிங்களோ?

 11. யாத்ரிகன் சார்: இது ரஜினிக்கு மட்டும் இல்ல, யாரு குடிச்சாலும் இந்த நிலைமை தான்.
  என் பிரண்டு சொன்னான், “அவ்ளோ பணம் இருக்குற தலைவரே இவ்ளோ கஷ்டப்பட்டு, சிங்கப்பூர் போய் தான் பொழச்சு வந்துருகாறு, நாம எல்லாம் எந்த மூலைக்கு”.
  சொன்னது மட்டும் இல்ல, இப்போ ரொம்ப கம்மியாதான் குடிக்கிறான்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s