பள்ளிக்கூடப் பிள்ளைகளை தண்டிக்கலாமா?

இந்த வாரம் அனுஹாசனின் கண்ணாடி நிகழ்ச்சியில் சீஸனுக்கேற்ற டாப்பிக்.

பள்ளிக் குழந்தைகளுக்கு கார்பொரல் பனிஷ்மெண்ட் சரியா தப்பா என்பது தலைப்பு. வாத்யார்கள் பேச்சில் நிறைய பாசாங்கு இருந்தது. குழந்தைகள் பேச்சில் பெரிய மனிஷத்தனமும், அதிகப் பிரசங்கித்தனமும் இருந்தது. சொல்லிக் கொடுத்துப் பேசுவது மாதிரி பேசுகிறார்கள் குழந்தைகள்.

மனோதத்துவ நிபுணர் ஒருவரும், ஒரு பள்ளியின் முதல்வரும் வந்திருந்தார்கள். முதல்வர் ரொம்ப பிராக்டிகல். டீச்சர் டிரைனிங் முடிச்சதுமே ‘நான் கடவுள்’ என்கிற மாதிரி ஒரு உணர்வு வாத்யார்களுக்கு வந்து விடுகிறது என்றார். மனோதத்துவம் கொஞ்சம் ஏட்டுச் சுரைக்காய் ரகம். என்ன கேட்டாலும்  போனதரம் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார். அவர் படித்ததை எல்லாம் சொன்னாரே ஒழிய அதை டாப்பிக்குடன் இணைக்க ரொம்ப சிரமப்பட்டார்.

பொதுவாக எல்லாரும் பனிஷ்மெண்ட்டுகள் கூடாது என்கிற தொனியிலேயே பேசினார்கள்.

நான் கொஞ்சம் வேறுபடுகிறேன்.

தூக்குதண்டனை கூடாது என்று பேசுகிறவர்களுக்கும் என் பதில் இதேதான். தூக்குதண்டனை கூடாது என்பது ஏற்க முடியாத வாதம். ஃபர்ஸ்ட் டிக்ரீ மர்டருக்கு மட்டும்தான் தூக்குதண்டனை தருகிறார்கள். அதை கூடாது என்று சொல்வது மனிதாபிமானம் என்றால், கொல்லப்பட்டவன் மனிதன் இல்லையா? கொலை செய்வது தப்பு என்று கொன்று சொல்வது இல்லாஜிகல் என்று லாஜிக் பேசுகிறார்கள். யாரிடம் சொல்கிறோமோ அவந்தான் போய்ச் சேர்ந்துவிடப் போகிறானே, அப்புறம் என்ன லாஜிக்? அந்தத் தண்டனையே அவனை விட மற்றவர்களுக்குத்தான். கொலை பண்ணால் தூக்கு என்பது எல்லார் மனசிலும் பதிவாக வேண்டும் என்பதே நோக்கம்.

இல்லை என்று ஆகிவிட்டால், ஹையா… தூக்கு தண்டனை இல்லை என்கிற தைரியத்தில் கொலைகளுக்கான காரணங்கள் ரொம்ப சில்லியாக ஆகிவிடும். லேட் செய்யும் ஹோட்டல் சப்ளையர்கள், ஸ்டாப்பிங்கில் நிறுத்தாத டிரைவர்கள், லாக்டர் வீட்டில் நமக்கு முன்னால் புகுந்தவன், பீர் இல்லை என்று சொன்ன டாஸ்மாக் ஆசாமி என்று தலைகள் உருள ஆரம்பிக்கும். ராத்திரி ஒண்ணுக்குப் போக உட்கார்ந்தால் அங்கே ஒரு தலை இருக்கும்!

பள்ளிக் கூட விஷயமும் அப்படித்தான்.

அடிக்கக் கூடாது என்பது சட்டமும் ஆகி, அது பிள்ளைகளுக்கும் தெரிந்து விட்டால், போச்!

பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள்.

என் பள்ளிக் காலத்தில் கண்ணு ரெண்டை மட்டும் விட்டுட்டு மீதியை உரிச்சாலும் சரி, பய ஒழுங்கா படிக்கணும் என்பார்கள் பெற்றோர். ஆனால் இப்போது தலையில் குட்டினாலே பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்கில் கட்சி சேர்த்துக் கொண்டு கதறக் கதறக் கேள்வி கேட்கிறார்கள்.

இந்த ஜெனெரேஷன் உங்களை மாதிரி இல்லை. இப்ப பிள்ளைகளுக்கு அறிவு நிறைய வளர்ந்திருக்கு என்று ஒரு காரணம் சொல்கிறார்கள். ஜெனெரேஷனுக்கு ஜெனெரேஷன் அறிவோடு, துடுக்கும் வளர்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அந்தக்காலத்தில் ரேடியோ தவிர வேறு டைவர்ஷனே கிடையாது. இன்றைக்கு?

வாத்யார்களில் ஒரு சில சேடிஸ்ட்டுகள் இருக்கலாம். (மொட்டச்சிக்கு வாய்ச்சதெல்லாம்……….. என்று ஒரு அன்பார்லிமெண்ட்ரி பழமொழி உண்டு. அது மாதிரி எனக்கு வாய்த்த எல்லா வாத்யார்களுமே அப்படித்தான்!) அதற்காக இப்படி ஒரு சட்டம் வேண்டாம். அவர்களைத் திருத்தினால் போதும்.

ஒருவேளை சட்டம் போடுவதாக இருந்தால், அது பிள்ளைகளுக்குத் தெரியாமல் கான்ஃபிடென்ஷியல் ஜி.ஓ வாக வருவது உசித்தம். இல்லையென்றால் அவர்களும் சரிப்பட மாட்டார்கள், வாத்யார்களுக்கும் மரியாதை இருக்காது.

Advertisements

11 comments

 1. தூக்குத் தண்டனை விசயத்தில் நானும் உங்க கட்சி தான்.
  தூக்குத் தண்டனை கூடாதுன்னு சொல்றவங்க முன் வைக்குற கருத்து தீர்ப்பு தவறென்றால் திருப்பி பெற முடியாத தண்டனை இது என்பது தான்!.
  ஆனால் நம் நீதிமன்றங்கள் தூக்குத் தண்டனைக்கான தீர்ப்பை அவ்வளவு எளிதில் ஒன்றும் வழங்கி விடுவதில்லை.எனவே இதில் தவறு ஏற்பட வாய்ப்புகள் அரிதே!..
  தல சுஜாதா இதே குழந்தைகளுக்கான தண்டனை பற்றி கற்றதும் பெற்றதுமில் மிக அழகாக எழுதியிருப்பார்.அவர் சொன்னது தான் எனக்கும் சரி எனப் படுகிறது!..நீங்களும் அதையே சொல்கிறீர்கள் இப் பதிவில்.

 2. நல்ல பதிவு!
  விவேக் சொல்கிறார் போல் “தண்டனைகள் கடுமையானா தான் தப்புக்கள் குறையும்”

  ஆனால் ஒரு விஷயம் ” ஐம்பது பேருக்கு முன் நின்று பாடம் நடத்த இவரால் முடியாது” என்று மாணவனுக்கு தெரிந்து விட்டாலே வாத்தியாருக்கு மதிப்பு போய் விடுகிறது.
  என் 19 வருட ஸ்டூடண்ட் சர்வீசில்(ஹி.. ஹி..) இது போல பல பேரைப் பார்த்திருக்கிறேன்

 3. வழக்கம் போல நீங்கள் எழுதிய விதம் நன்றாக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு வாத்தியார்தான் எழுதியிருக்கிறார். மாணவர்களுக்கு பனிஷ்மென்ட் என்பது அடி, தடி, வன்முறை என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. வாத்தியாரிடம் அடி வாங்கி திருந்தியவர்களும் இருக்கிறார்கள், முறுக்கேறி உருப்படாமல் போனவர்களும் இருக்கிறார்கள். பிள்ளைகள் தறுதலைகளாவது பற்றி பெற்றோர்தான் கவலைப்பட வேண்டும். இது ஒரு பெரிய டாபிக். நாலு வரியில் விவரிக்கவோ, ஒரு மணி நேர டி வி நிகழ்ச்சியில் பேசி முடிக்கவோ முடியுமா என்று தெரியவில்லை.

 4. குழந்தைகளை, மாணவர்களை தண்டிப்பதை விட கண்டிப்பதே சிறந்தது என்பது என் கருத்து. எப்படி இருந்தாலும் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் வருமாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டியது அவசியம்.

  “எச்சக்கல பொறுக்கி நாய்ங்களா..” என்று திட்டிய சுலோசனா டீச்சரையும் மறக்க முடியவில்லை. உடல்நலமில்லாத ஒரு சமயத்தில் சிறுவன் என்பதால் தன் சைக்கிளில் ஏற்றி தானே மிதித்து வீடு வரை கொண்டு வந்து விட்ட கன்னையா சாரையும் மறக்க முடியவில்லை.

  மற்றபடி தூக்குதண்டனை அவசியம் தான் என்றாலும் கடும் குற்றம் செய்பவர்களை அந்தக் கால காராக்கிரகத்தில் வைத்தது போல் தனிமைப்படுத்தி, மற்றவர்களுடன் எந்தத் தொடர்பும் ஏற்பட்டு விடாமல் வாழச் செய்து, தான் செய்த தவறுக்கு மனம் வருந்தித் திருந்திப் பின் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதுதான் என் கருத்து.

  இதற்கு மேல் ஏதாவது தண்டனை பற்றிச் சொன்னால் அது மனித உரிமை மீறல் ஆகிவிடும் என்கிறார் சேஷாத்ரி வாத்தியார்
  😦

 5. நம் நாட்டில் நிகழும் குற்றங்கள்:

  A பிரிவு:
  தேசத்துரோகம்,பயங்கரவாதம்,மதக்கலவரம்,கூலிப்படை ஏவிவிட்டு கொலைகள்,பொருளாதார குற்றங்கள்.அரசு/உயர் பொறுப்பில் இருந்துகொண்டு குற்றங்களுக்கு துணைப்போவது,

  B பிரிவு:
  உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்தல்,சொத்துதகராறில் கொலை செய்தல்,கள்ளத்தொடர்பு சம்பந்தப்பட்ட கொலைகள்,வழிப்பறி கொள்ளை கொலைகள்.

  இதில் A பிரிவு குற்றங்களுக்கு நிச்சயமாக மரணதண்டனை தேவை.

  B பிரிவு குற்றங்களுக்கு அதன் தீவிரத்தைப்பொறுத்து ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோ வழங்கவேண்டும்.

 6. பனிரெண்டு வயது வரை உடல் நலம், மன நலம் பேணுவதிலும் விளையாட்டிலும் பயிற்சி பெற வேண்டும். பனிரெண்டு வயதுக்கு மேல் பள்ளிக்கூடம் போனால் போதும் என்ற நிலை வர வேண்டும். பனிரெண்டு வயதிலிருந்து இருபது வயது வரைக்குள் படிக்க வேண்டியதைப் படிக்க முடியும். சற்றே முதிர்ந்த பிள்ளைகளும், உண்மையிலேயே அறிவுள்ள ஆசிரியர்களும் பழகும் நிலையில் எந்த வித தண்டனைக்கும் தேவை இருக்காது. தேவையில்லாமல் நாமே சிக்கலை உருவாக்கிவிட்டு ஐயோ சிக்கல் என்று புலம்புகிறோம் என்று தோன்றுகிறது.

  தண்டனையாவது ம..வது. யார் யாரை தண்டிப்பது?

  (ஆமா, இது என்ன மறுமொழி போடறதுக்குள்ள சிண்டைப் பிடிக்க வைக்குதே?)

 7. கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது என்பதே என் வாதம்.
  அன்பாக அமரவைத்து அறிவால் சிந்திக்க வைத்தால் குழந்தைகள்
  கண்டிப்பாக சரியாகி விடுவார்கள்.
  – சந்திரசேகரன்

 8. //ராத்திரி ஒண்ணுக்குப் போக உட்கார்ந்தால் அங்கே ஒரு தலை இருக்கும்!// சார் நீங்க முழு நேர எழுத்தாளர் ஆக வேண்டும், தங்களிடம் இயல்பாகவே உரைநடை தமிழ் சிறப்பாக வெளிப்படுகிறது.

  //என் பள்ளிக் காலத்தில் கண்ணு ரெண்டை மட்டும் விட்டுட்டு மீதியை உரிச்சாலும் சரி, பய ஒழுங்கா படிக்கணும் என்பார்கள் பெற்றோர். ஆனால் இப்போது// சரி படாது, புள்ளைங்க தாங்காது, ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவை, மாதம் ஒரு முறை கண்டிப்பாக கலந்தாய்வு அவசியம், அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். நடப்பில் பொறுப்பை ஆசிரியர்களிடம் விட்டுவிட்டு பெற்றோர் கலண்டுக்க முடியாது.

  //அந்தக்காலத்தில் ரேடியோ தவிர வேறு டைவர்ஷனே கிடையாது. இன்றைக்கு?// பள்ளியில் இல்லாத நேரத்தில் நிகழ்வது, பெற்றவருகளுக்குதான் பொறுப்பு அதிகம்.

  //ஜெனெரேஷனுக்கு ஜெனெரேஷன் அறிவோடு, துடுக்கும் வளர்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.// குழந்தைகளின் ஆற்றலை நல்லவிதமாக செம்மை படுத்த வேண்டும், இது பெற்றோர் ஆசிரியர் கூட்டுமுயற்சி!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s