குமுதமும் நானும்

நான் பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்த காலத்தில், பத்திரிகை உலகின் கவர்ச்சிக் கன்னி குமுதம்.

 வீட்டில் குமுதம் வாங்க மாட்டார்கள். விகடன் மட்டும்தான். பக்கத்து வீட்டு சரோஜா மாமியிடம் லோக்கல் லைப்ரரி புத்தகத்துக்கு பண்ட மாற்றாக குமுதம் என்று எம்.ஓ.யு சைன் செய்திருந்தேன். வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்து படித்து விட்டு அப்படியே கொடுத்து விடுவேன்.

 “அட்டையில் எப்பவுமே பொம்பளை படம்தான்” என்று விமரிசித்தவர்கள் கூட வாசன் கடை வழியாகப் போகிற போது அங்கே தொங்கும் குமுதத்தைப் பார்த்து ஜொள்ளு விடுவதைப் பார்த்திருக்கிறேன். உத்ராவின் புகைப்படங்கள் ரொம்ப ஸ்பெஷல். அந்தப் பளப்பளா ஆர்ட் பேப்பரில், வண்ணத்தில் பிச்சைக்காரியாக இருந்தால் கூட கவர்ச்சியாக இருக்கும்படி எடுக்க அவருக்குத் தெரியும்.

 அப்போது குமுதம் விலை நாலணா. அந்த விலையில் அவ்வளவு ரிச்சான பத்திரிகை வேறு கிடையவே கிடையாது.

 விமர்சனங்களைப் பார்த்து முகம் சுளிக்கிற குணமே கிடையாது.

 பிரபலங்கள் திட்டினால் அதை அப்படியே போட்டு விடுவார்கள். ஒரு பிரபல டைரக்டர், “ஒரு நடிகையின் கட்டை விரலைப் படமாகப் போட்டு இது யார் விரல் என்று கேட்கிறார்கள். வாசகர்களுக்கு விரல் சூப்பித்தனமான ரசனையை வளர்க்கிறது இந்தப் பத்திரிகை” என்று காட்டமாக விமர்சித்திருந்தார். அதை அப்படியே வெளியிட்டு, அதே பக்கத்தில் ஒரு நடிகையின் முதுகைப் போட்டு இது எந்த நடிகையின் முதுகு? என்று புதிரும் போட்டிருந்தார்கள்.

 வாசகர் கடிதத்தில் நையாண்டியாக எழுதப்படும் கடிதங்களுக்கு முன்னுரிமை! அந்த சூத்திரம் தெரிந்ததால்தான் என் எழுத்துலக வாழ்க்கை(!) குமுதம் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் ஆரம்பித்தது.

 அரசு பதில்களில் சினிமா, இலக்கியம், அரசியல், ஏ ஜோக் என்று ஒரு சுவையான கலவை இருந்தது. சில சமயம் எஸ்.ஏ.பி (அண்ணாமலை, ரங்கராஜன், சுந்தரேசன் என்கிற மாதிரி தெரிந்தாலும் அவரேதான் மொத்த பதில்களும் எழுதுபவர் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார்) அவர்களின் பதில்கள் யோசிக்க வைக்கும்.

 கலைவாணருக்கு சிலை வைத்திருக்கிறார்கள், சிவாஜிக்கு ஏன் வைக்கவில்லை என்று ஒரு வாசகர் கேட்ட போது, அவருக்கு ஒரு சிலை வைத்தால் போதாது, ஒன்பது வைக்க வேண்டியிருக்கும் என்று பதில் சொல்லியிருந்தார்.

 அவர் சொல்லும் ஏ ஜோக்குகள் கூட கொஞ்சம் சிந்திக்க வைக்கிற மாதிரிதான் இருக்கும். வெளிநாட்டு ஹோட்டல்களில் பெண் வெயிட்டர்கள் உண்டு. (இப்போது நம்மூரிலும் ஆரம்பித்து விட்டார்கள்) மார்பில் பெயரைக் குத்திக் கொண்டு வந்த பெண் வெயிட்டரிடம் ஒருத்தர் கேட்டாராம், “பேஷ், இன்னொண்ணுக்கு என்ன பேர் வெச்சிருக்கே?”

 எழுத்தாளர் சாவி பத்திரிகை ஆரம்பிக்கும் போது என்.எல்.பி ஃபார்முலாவில் குமுதத்தை காபியிங் எக்ஸலன்ஸ் முறையில் அப்படியே பின் பற்றினார். ரங்கராஜன், புனிதன், சுந்தரேசன் மாதிரி அவருடைய ஆஸ்தான எழுத்தாளர்களும் சாவியில் மட்டுமே எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதில் அவருக்கு நிறைய ஏமாற்றமும், கோபமும்! துரதிஷ்டவசமாக அவருக்குப் பின் அந்தப் பத்திரிகை வரவே இல்லை.

 என் முதல் ஒருபக்கக் கதை பிரசுரமானதில் ஊக்கமடைந்து நிறைய ஒருபக்கக் கதைகள் எழுதினேன். முதல் சிறுகதை வந்தது சாவி இதழில் என்றாலும், என் கதை எழுதும் திறனைத் தீட்டியது குமுதம்தான்.

 அண்ணாமலைக்குப் பிறகு குமுதம் நிறைய மாறி விட்டது.

 மூன்று பக்க சிறுகதைகள் போடுவதே இல்லை என்கிற கொள்கையில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஒருபக்கக் கதைகள் கூட 180 வார்த்தைகள் கூட இல்லாமல் குறுக்கப்பட்டு விட்டன. அரசு பதில்களில் இருந்த ஃபார்முலா அப்படியே இருக்கிறது, ஆனாலும் ஏதோ குறைகிறது. சினிமா செய்திகளில் கூட ரங்கராஜன் (லைட்ஸ் ஆன் வினோத்) கடைசி லைன் பஞ்ச் வைத்து ஒரு புதுமை பண்ணிக் கொண்டிருந்தார். அது மிஸ்ஸிங்.

 ஒருவேளை இந்த மாற்றங்கள் இந்த ஜெனெரேஷனுக்கான அப்டேஷன்களாக இருக்கலாம்.

 இந்த ஜெனெரேஷனுக்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் இருக்கிறதா?

Advertisements

17 comments

 1. குமுதத்தில் 38-ம் பக்க மூலை, வெயிட் வெங்கம்மா இன்னும் பல மறக்க முடியாத பகுதிகள். தற்சமய குமுதத்தை ரஸிக்க முடியலை

 2. அநத காலத்து குமுதத்திடம் ஒரு குறும்புததனம் இருந்தது. எழுதியிருக்கும் மேட்டரை படித்தவுடன் வாசகனிடம் கண்டிப்பாக ஒரு ரியாக்ஷன் வருமாறு இருக்கும். ஆனால் இப்போது? ம்ஹீம்

 3. ரயில் பயணத்தில் ஓசு குமுதம் வாங்கிப் படித்தேன்.எஸ்.ஏ.பி காலத்து அரசு கேள்வி பதிலின் நளினங்கள் இல்லையென்பது கண்கூடு.ஜொள்ளுப்பத்திரிகை தரம் கூட இல்லை.குமுதத்துக்குள்ளும் அரசியல் பூந்துகிச்சென இணைய தகவல்கள் சொல்கின்றன.

 4. இந்த ஜெனெரேஷனுக்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் இருக்கிறதா?”
  இருக்கிறது. ஆனால் குமுதம் பத்திரிக்கையா?

  அதைத்தான் நானும் கேள்வியாகக் கேட்டிருந்தேன். அன்று இருந்த “குமுதம்” வேறு. இன்றைக்கு இருக்கும் “குமுத்தம்” வேறு. அன்று வாசகர்கள் வளர்ந்து எழுத்தாளர்கள் ஆனார்கள். இன்று எழுத்தாளர்களுக்கே அங்கு வேலையில்லையே. இது வளர்ச்சியா? வீழ்ச்சியா? காலத்தின் கோலமா?

 5. “இந்த ஜெனெரேஷனுக்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் இருக்கிறதா?”

  kandipa iruku, but inga kolla vilaila vikkiranga……

 6. குமுதம்,விகடன் இரண்டும் நாலணா காலத்தில் தான் நானும் படிக்க ஆரம்பித்தேன்.

  அப்பொழுது ராமையா,எஸ்.ஏ.பி,ரங்கராஜன், எல்லொரும் எழுதிக் கொண்டிருந்தார்கள்.முள்ரியின்
  டயரி.,அப்பொது பிரபலம்.
  ஜெ……ஒவியங்கள்.. ம்ம்ம் போட வைத்த நேரம். காலப்போக்கில் குமுதத்தின் கிசுகிசுக்கள், அரசியம் தலையங்கம் எல்லாமே சுவை கூட்டினாலும்,
  பிரகு எதோ ஒன்ரு மிஸ்ஸிங்க்.
  இப்பொழ்து குமுதம் கடைனிலைக்குப் போய்விட்டது.
  கல்கியும், விகடனும் ஒகே.
  கல்கி இன்னும் அதே பாதையில் போய்க் கொண்டிருக்கிறது.
  சுவாரஸ்யமான பதிவு.

 7. //இந்த ஜெனெரேஷனுக்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் இருக்கிறதா?// சந்தேகம் தான், இந்த காலத்தில் நேரம் கிடைப்பது அரிது, smart phone யுகம், இணையத்தை ஒரு சுற்று சுற்றி வந்தாலே ஒரு அளவிற்கு விசயம் தெரிந்து விடுகிறது.

  1. மன்னிக்கவும், நான் அப்படிப் பிளான் பண்ணி எழுதுவதில்லை. வாசகர்கள் பலமுறை குறிப்பிட்டு நான் நிர்பந்தமாக நிறைய மாற்றிக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் சில சமயம் குருபக்தி வேலை செய்கிறது, என்ன செய்ய?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s