கற்பது கடினம் மறப்பது எளிது

 

 

 

நல்ல விஷயங்கள் கற்கக் கடினமானவை, மறக்க எளியவை. கெட்ட விஷயங்கள் கற்க எளியவை, மறக்கக் கடினமானவை.

விளையாட்டாக ஹாஸ்டல் டே அன்று தம் இழுக்க ஆரம்பித்தால், விட வேண்டும் என்கிற எண்ணம் வரவே இருபது வருஷமாகும். விடுவதற்கு ஐந்து வருஷமாகும். விட்டு ஐந்து வருடத்திற்குள் மறுபடி ஒரு தம் இழுத்தால் திரும்ப பேக் டு ஸ்கொயர் ஒன்!

பிராணாயாமம் செய்வது பழகிப் போக வேண்டுமானால் ஆறு மாதம் ஆகும். இருபத்தோறு நாள் செய்யாமல் இருந்தால் மறந்து போகும்! திரும்ப ஆரம்பிக்க மறுபடி ஆறு மாதம்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், என் ஓவியத் திறமை த்ரீ இடியட்ஸ் படத்து மாதவன் போல சின்ன வயசில் முடக்கப் பட்டது. இரண்டாம் கிளாஸ் படிக்கும் போது கிளாஸ் டீச்சர் அடுத்த கிளாஸ் வாத்யாரைப் பார்த்து ஜொள்ளு விடும் போது ஸ்லேட்டில் சிவாஜி படம் வரைந்து கொண்டிருப்பேன். ஜொள்ளு முடிந்து வந்ததும் பஞ்சவர்ணம் டீச்சர், “என்ன பொம்ம போட்டுகிட்டு இருக்கே? கைய முறிச்சிடுவேன்” என்று விரலில் பிரம்பால் அடிப்பார். வீட்டில், “ஒரு எண்பது பக்கம் நோட்டு பூரா தலை தலையா போட்டு வீணக்கியிருக்கான்” என்று அண்ணன் போட்டுக் கொடுத்து அப்பா, “மூதேவி, நீ உருப்படப் போறதில்லே” என்று சான்றிதழ் தருவார்.

விடாப்பிடியாக அவ்வப்போது படம் போட்டுக் கொண்டே இருப்பேன்.

பள்ளிப் பருவம் கடந்ததும் எல்லாம் மறந்து போயிற்று. சமீபத்தில் நடிகர் சிவகுமாரின் ‘இது ராஜபாட்டை அல்ல’ புத்தகத்தைப் படித்த போது பழைய ஓவிய ஆசை மறுபடி தலை தூக்கிற்று.

அதுதான் மேலே இருக்கும் படம்.

ஓவியக் கலையை இன்னும் முழுசாக அன்லேர்ன் செய்யவில்லை என்று நினைக்கிறேன், சரியா?

23 comments

  1. ரொம்ப அருமையான ஓவியம் வாழ்த்துக்கள்.. மனசில பதிஞ்சது தான் ஓவியமா கையில வரும்னு சொல்லுவாங்க.. மாமி படமா இல்லை நாகப்பட்டினத்துல இருந்த யாரோட படமாவதா?

    பி.கு: பின்னூட்டத்தால் குடும்பத்தில் குழப்பம் வந்தால் சீமாச்சு பொறுப்பில்லை 🙂

  2. உங்க கதைகளுக்கு படமும் நீங்களே போடுங்களேன். (வரைந்துன்னு சொல்லனுமா?)

    ஜெ… ம.செ.. வரிசையில் க.கோ.ஜ. (KGJ)

    DaVinci Code மாதிரி ஒன்னு வரையுங்களேன். ரசிக்கிறோம்.

    காதலா.. காதலா…. கமல் மாதிரி சொல்லனும்னா…

    நீங்க படைப்பாளி.. நாங்க துடைப்பாளி…

  3. அருமை ஜவஹர் சார். ஆனாலும் த்ரிஷாவை வரைந்தது உங்கள் குறும்பு தான் சார் 🙂
    இன்னும் நிறைய ஓவியங்களை எதிர்பார்கிறோம் உங்களிடம். வாழ்த்துக்கள்.

  4. முதலில் பாராட்டுக்கள்
    படம் பிரமாதம்!
    இவர் திஜோனா*
    என நினைக்கிறேன்?
    சரியா?
    (*த்ரிஷாவின் கண்கள்,ஜோதிகாவின் மூக்கு and மீனாவின் வாய்
    உள்ளவருக்கு வேறு என்ன பெயர் சூடுவது?)
    முழு உருவமும் போட்டிருந்தால் மாமியின் செருப்பையும் பார்த்திருக்கலாமோ?

  5. ஊறிக்கொண்டிருந்தது முளாத்து வெளியே வருகிரது. ஸ்ப்ரவுட்ஸ் விசேஷமாயிற்றே. படம் அழகாக இருக்கே. இனி உங்கள் ஓவியத்தையும் யெதிர் பார்க்கலாம். தொடருங்கள்.

  6. சூப்பர். அடுத்து உங்கள் அபிமான தமன்னா படத்தை எதிர்பார்க்கலாமா ? அல்லது இப்போது அனுஷ்காவுக்கு மாறி விட்டீர்களா ?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!