என்ன விலை அழகே?

மஹாபலிபுரம் இருபது வருஷங்களில் ரொம்பவே மாறியிருக்கிறது.

ஈ.ஸி.ஆரில், மஹாபலிபுரத்துக்கு ஆறு கிலோமீட்டர் முன்னால் ஒரு சவுக்குத் தோப்பு. நிறைய தமிழ்ப் படங்களில் ‘என்ன விட்டுடு, என்ன விட்டுடு’ என்று ஆறரைக் கட்டை சுருதியில் அலறியபடி ஓடி ஜாக்கெட் கிழிக்கப்பட்டு குளோசப்பில் பல கதாநாயகிகள் (முதுகைக்) காட்டின இடம் போல இருந்தது. ஆங்காங்கே பல ஈருடல் ஓருயிர்களைப் பார்க்க முடிந்தது. இந்தத் தலைமுறை இளம்பெண்கள் குறித்து கவலை தரும் காட்சிகள் நிறையத் தென்பட்டன.

சுனாமி வந்த போது இயற்கை அகழ்வு செய்த சுப்ரமணியர் கோயிலைப் பார்ப்பதற்காக அங்கே இறங்கினோம். ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். செங்கல் மற்றும் காரை பயன்படுத்திக் கட்டப் பட்டிருக்கிறது. இது ஆறாம் நூற்றாண்டு என்றால் நாகப்பட்டினத்தில் நாங்கள் குடியிருந்த வீடு ஐந்தாம் நூற்றாண்டாக இருக்குமோ?

கர்ப்பக் கிரகத்தில் இருந்த உம்மாச்சி சிலையை புதைபொருள் ஆராய்ச்சித் துறையினர் கொண்டு போய் விட்டதாகச் சொன்னார்கள்.

அஞ்சு ரதம், அர்ச்சுணன் தவம் எல்லாம் முன்னே சாலைக்கு ஓரத்தில் கடல் மண்ணுக்கு நடுவே வேகாத வெய்யிலில் இருந்தது. இப்போது எல்லா இடத்திலும் பார்க் அமைத்து செளக்யமாகப் பார்க்க முடிகிறது  கைடுகள் ரொம்பத் தொல்லை தருவதில்லை. சில கைடுகள் இலவசமாக சில விளக்கங்கள் தருகிறார்கள். வந்திருந்த வெளிநாட்டுப் பெண்கள் யாரின் உடையிலும் உடம்பு தெரியவில்லை. சிலர் குங்குமம் வைத்துக் கொண்டு பூவெல்லாம் வைத்திருந்தார்கள். நம்மூர்ப் பெண்களில் பலரின் உடைகள் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் டைட்டில் போடும் போது தோன்றும் பெண்களை ஞாபகப்படுத்தின.

பலூன் சுடுவதில் ஆர்வம் ஏற்பட்டு என் நண்பர்கள் களமிறங்கினார்கள். என்.ஸி.ஸி யில் துப்பாக்கி சுடுவதில் பரிசெல்லாம் வாங்கியிருக்கும் கங்காதர் நூறு பலூன்களில் எதுவுமே சேதமாகாமல் ரொம்ப நேரம் சுட்டுக் கொண்டிருந்தான்.

“ஸ்பெக்ஸ் போட்டுகிட்டு டிரை பண்ணேன்” என்று ஐடியா கொடுத்தது தப்பாகப் போயிற்று.

குறி இசகு பிசகாகத் தவறி கடைக்காரக் கிழவி பயந்து கள்ளிப் பெட்டிக்குப் பின்னால் பதுங்குகிற அளவுக்குப் போய் விட்டது. இன்னொரு நண்பன் இளவேலு டே அஃப் தி ஜெக்கால் எழுதின ஃப்ரெட்ரிக் ஃபோர்சித் மாதிரி எப்படி குறி பார்ப்பது என்று எனக்கு நுணுக்கமாக விளக்கினான். ஆனால் அவனும் 50% தான் ஸ்கோர் செய்தான். அவன் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்த போது எனக்கு 100% ரிஸல்ட் கிடைத்தது.

“நான் சொன்னதைத்தான் செஞ்சியா? உனக்கு எப்படி கரெக்ட்டா வருது?” என்று ஆச்சரியப்பட்டான்.

“If you know Engineering, you can become an Engineer. If you do not know you can become a consultant ன்னு சொல்வாங்க” என்றேன்.

“நீ வேலையை விட்டுட்டு இப்ப கன்சல்டண்ட்டா இருக்கே இல்லே?” என்றான் அசந்தர்ப்பமாக.

சாலையோரத்தில் நிறைய சிற்பங்கள் செதுக்கிப் போட்டிருக்கிறார்கள். ஒருதரம் கூட என்ன விலை இருக்கும் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தது இல்லை.

“அந்த அனுமார் சிற்பம் என்ன விலை இருக்கும் தெரியுமா?” என்று கேட்ட இளவேலுவிடம் நான் அனுமானித்த விலையைச் சொன்னதும் புரண்டு புரண்டு சிரித்தான்.

“என்ன? பிள்ளையார் சதுர்த்திக்கு விநாயகரும் குடையும் வாங்கிற மாதிரின்னு நினைச்சியா?” என்று நக்கலடித்தான்.

“நீ எவ்ளோ சொல்றே?”

“அதை கடைக்காரங்க கிட்டயே கேளு”

“விலை கேட்டுட்டு வாங்காம வந்தா கோபப்படமாட்டாங்களா?”

“பேரம் படிஞ்சி வாங்கறதுன்னா வாங்கிக்கயேன். உனக்கு வேணாம்ன்னா நான் எடுத்துக்கறேன்”

கொஞ்சம் ரோசமும் தைரியமும் வந்து கடைக்குப் போனேன்.

“அந்த அனுமார் சிலை என்ன விலைங்க?”

“இதுவா?”

“ம்ம்ம்”

“………………………………………….” (வாசகர்கள் யூகிக்கவும்)

திடுக் என்றதை சுதாரித்துக் கொண்டு

“சும்மா இன்ஃபர்மேஷணுக்குத்தான் கேட்டேன்” என்றேன்.

“தெரியும்ங்க. படக்குன்னு வாங்கி டிக்கியில வெச்சிகிட்டு கிளம்புவீங்கன்னு நானும் நினைக்கல்லை. கலை ஆர்வம் இருக்கிறவங்க யாரு, வெறும் விலை ஆர்வம் இருக்கிறவங்க யாருன்னு பார்க்கிறப்பவே தெரியும்ங்க”

“டெய்லி இது மாதிரி ஒண்ணு வித்தாலே ஒரு வருஷத்துல மஹாபலிபுரத்தையே வாங்கிடலாமே”

“டெய்லியெல்லாம் விக்காதுங்க. டீக்கடை மசால்வடை மாதிரி நூத்துக் கணக்கில பண்ணி தாம்பாளத்துல கொட்டி வைக்கிற சமாச்சாரம் இல்லை இது. ஒருநாள்ள ஒரு சிற்பம் செதுக்கவே முடியாது, எப்படி டெய்லி ஒண்ணு விக்கும்?”

நல்ல லாஜிக்!

Advertisements

33 comments

 1. Very Refreshing writeup,Jawaharji !Thanks
  அந்த சிலையின் விலை?
  இப்போ இந்தியாவில் அதை வாங்கிற அளவிற்கு
  வசதி உள்ளவர்கள்
  நம் முன்னாள் முதல்வர் குடும்பத்தினர் மட்டுமே
  என ஊகிக்கிறேன்!
  சரியா?

 2. // இந்தத் தலைமுறை இளம்பெண்கள் குறித்து கவலை தரும் காட்சிகள் நிறையத் தென்பட்டன.//

  // வந்திருந்த வெளிநாட்டுப் பெண்கள் யாரின் உடையிலும் உடம்பு தெரியவில்லை. சிலர் குங்குமம் வைத்துக் கொண்டு பூவெல்லாம் வைத்திருந்தார்கள். நம்மூர்ப் பெண்களில் பலரின் உடைகள் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் டைட்டில் போடும் போது தோன்றும் பெண்களை ஞாபகப்படுத்தின. //

  ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான் சார்…… 😦

  சமுக அக்கறை ……. 🙂 🙂 🙂

 3. வழக்கம்போல சூப்பர்…. ஜவஹர்ஜி…! சிலையை இங்கு பலர் ஏலமெடுப்பது ரசிக்கத் தக்கதாய் இருக்கிறது… அது சரி… சென்ற பதிவுக்கும் இந்தப் பதிவுக்குமுள்ள இடைவெளியைப் பார்க்கும்போது, மகாபலிபுரத்துக்கு, ஏதோ மெகா சீரியலுக்கு கதை வசனம் எழுதப் போயிருந்த மாதிரி தெரியுது…!

 4. Respected Jawahar Sir,

  An event is being organised in chennai from Aug-16th in solidarity with
  Shri.Anna Hazare to demand the withdrawal of Govt’s JokePal(Govt’s
  version of Lokpal bill reads like a cruel joke played on citizens)
  from parliament & to introduce an effective Lokpal bill.Mr.Kalyanam,the last Private secretary to Mahatma Gandhi is starting his indefinite fast for demanding effective lokpal bill.

  Please attend the event and spread news to your friends.
  Venue :
  Surendra Builders,#153,Lattice Bridge Road, Thiruvanmiyur,Chennai-41.

  Anna Hazaare has also requested all citizens to switch off lights(If
  we are lucky to get power supply) from 8 PM – 9 PM on Independence Day
  to demand an effective LokPal.

  Request you to please spread news to your friends.
  Thanks,
  Venkat

 5. மாமல்லனின் பெருமை சொல்லும் மகா பலி புறம்,
  போட்டோக்கள் அருமை எட்டு வருடங்களுக்கு முன்பு அங்கு சென்றுள்ளேன், இந்த வருடம் செல்ல ஆசையாய் உள்ளது,

  இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

 6. ப்பூ!! வெறும் இரண்டரை லட்சம்தானா?
  இதற்கா தலிவா நான் உன்னையும் உன் குடும்பத்தையும்
  குறிப்பிட்டேன்!!.
  இரண்டரை லட்சம் என்றால் உன் பக்கத்து வீடு தோட்டக்காரன் கூட வாங்கிவிடுவானே!!
  உன் “புகழுக்கு” தீராத களங்கம் ஏற்படுத்திய என்னை ‘மன்னித்து விட்டேன்’ என
  இரண்டு வார்த்தைகள் சொல்வாயா?!!!

 7. சுனாமிக்கு முந்தைய சுப்ரமணியரின் நிலையைப் பற்றி curious.. சுனாமியால் என்ன ஆச்சு கோவிலுக்கு? சுவாரசியமாகத் தொடங்கிவிட்டு கப்பென்று நகர்ந்துவிட்டீர்களே?

  அனுமார் சிலை, கலையா? ம்ம்ம்ம். ஓகே.

  ஒரு பேச்சுக்கு கலையென்றே கொண்டாலும், வாங்கி எங்கே வைப்பது? வீட்டு வாசலிலா, ஹாலிலா, பெட்ரூமிலா? நிறைய கேள்வி கேட்டு, பக்தி குறுக்கே வந்து, கடைசியில் பத்து ரூபாய்க்குப் படம் வாங்கி பூஜைரூமில் மாட்டிவிடத் தோன்றும். அனுமார் என்று தெரியாத, ‘அட! நெஞ்சைப்ப பிளந்து நிற்கும் குரங்கு.. குரங்கின் இதயத்தில் மனிதன்!’ என்று டார்வின் தன கண்ணோட்டத்தோடு பார்க்கிற யாராவது இதைக் கலையென்று இரண்டரை லட்சம் கொடுத்து வாங்கி ம்யூசியத்தில் வைக்கலாம்.

 8. //“If you know Engineering, you can become an Engineer. If you do not know you can become a consultant ன்னு சொல்வாங்க” //
  And
  “”if you don’t even become a consultant, it means that you own a construction company “”
  ஹிஹி – ஜோக் இல்ல சார், துபாய்ல அதுதான் நிலமை!!

 9. // டீக்கடை மசால்வடை மாதிரி நூத்துக் கணக்கில பண்ணி தாம்பாளத்துல கொட்டி வைக்கிற சமாச்சாரம் இல்லை இது. ஒருநாள்ள ஒரு சிற்பம் செதுக்கவே முடியாது, எப்படி டெய்லி ஒண்ணு விக்கும்?”

  //

  🙂

 10. மகாவலிபுரம் மீண்டும் என் கண்களுக்கு விருந்தானது
  இந்த அழகிய ஆக்கத்தினால் நன்றி உங்களுக்கு .வாழ்த்துக்கள்
  மென்மேலும் அழகிய ஆக்கங்களைப் பதிவிட .

 11. // Jawahar | 11:10 மு.பகல் இல் ஆகஸ்ட் 13, 2011 | பதில்

  வாங்க ராஜா, எங்கே ரொம்ப நாளா காணோம்?//

  ஆமா சார். இப்போ புதிய நாடு. புதிய வாழ்க்கை. புதிய அனுபவங்கள். 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s